தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்பட்ட 15 இந்தியத் திரைப்படங்கள்

தமிழில்: தீஷா
கெளரவ் அரோரா
 
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிற சினிமாக்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் பாலிவுட் சினிமாவானது உலகளவிலேயே மிகப்பெரும் திரைப்படத்துறையாக விளங்குகிறது. அத்திரைப்படங்களில் வெற்றி, தோல்வி, சராசரி என்ற நிலைகளைக் கடந்து., மக்களிடம் சென்று சேராத வண்ணம் வேண்டுமென்றே தடுக்கப்பட்ட படங்களும் உண்டு. தைரியமான மொழி, நயநாகரீகமற்ற காட்சிகளைக் கொண்டிருத்தல், பாலின கருத்துக்களைக் கொண்டிருத்தல், காஷ்மீர் பிரச்சனைகள், மதம், இவற்றிலெல்லாம் ஈடுபடுத்திக்கொண்ட படங்களென இவைகள் காரணம் காட்டப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

 சினிமா ஆர்வலர்கள் வறவிடக்கூடாத, ஆனால் தணிக்கைக்குழுவால் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.    Bandit Queen (1994) பண்டிட் க்யூன், ’தாக்குதல்’, ‘ கீழ்மைத்தனமான காட்சிகள்’, ‘நாகரீகமற்றமுறை’ போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன, இது இந்திய தணிக்கைக்குழுவிற்கு நேராக நின்று, அவற்றின் பழைமைவாதத்தை நகைப்பதுபோல் உள்ளது. இந்தப் படத்தின் மையமும் அதையே உரைக்கிறது. பூலான் தேவியின் வாழ்க்கையை அடியொற்றி, சேகர் கபூரால் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம், நிர்வாணம், தவறான வசைமொழிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் கொண்டிருப்பதால், தணிக்கைக்குழுவால் நிச்சயமாக இதனை ஜீரணிக்கமுடியாது தடை செய்தது.

 25 years after 'Bandit Queen', Phoolan Devi's story to return as a web  series - Republic World

2.    Fire (1996)
 
தீபா மேத்தாவின் உலகளாவிய பார்வையும், அதனை வெளிப்படுத்தியிருக்கிற விதமும் இத்திரைப்படம் மூலம் பலரால் அங்கீகரிக்கப்பட்டது. பல சர்ச்சைகளுக்கும் உள்ளானது. ஃபையர் திரைப்படம் உலக அளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றாலும், இத்திரைப்படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிற கதையின் மூலமாக இந்தியாவில் சிவசேனா போன்ற இந்துக்குழுக்களை ஈர்ப்பதில் தோற்றுப்போனது. 

Before Ek Ladki Ko Dekha Toh Aisa Laga,' Deepa Mehta's Fire dared to  explore a lesbian theme

காரணம், இந்துக் குடும்பத்தில் இரண்டு பெண்கள் தங்களுக்குள் லெஸ்பியன் உறவு வைத்துக்கொள்வதைப் பற்றி இப்படம் பேசுகிறது. இந்தப் படத்தில் நடித்தமைக்காக நந்திதா தாஸும், ஷபானா ஆஸ்மியும், இயக்குனரான தீபா மேத்தாவும் கொலைமிரட்டல்களுக்கு ஆளானார்கள். இறுதியாக மத்திய தணிக்கைக்குழு இத்திரைப்படத்தை தடைசெய்ததுடன் இச்சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி கிடைத்தது.
 
 3.    Kama Sutra - A Tale Of Love (1996)”வெளிப்படையான”, “நியாயமற்ற”, “ஒழுக்கமற்ற” காட்சிகளை இந்நாட்டின் பார்வையாளர்களுக்கு காண்பிக்கவே “காமசூத்ரா” என்கிற படம் எடுக்கப்பட்டிருப்பதாக தணிக்கைக்குழு பெருங்கோபம் கொண்டது. அதன் பாசாங்குத்தனமான நடவடிக்கைக்கு “Kama Sutra - A Tale Of Love” திரைப்படம் ஆளானது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்கு காதலர்களைப் பற்றிச் சித்தரிக்கப்பட்ட படமே, மீரா நாயர் எடுத்த காமசூத்ரா. வழக்கம்போல விமர்சன ரீதியாக பலராலும் கவனிக்கப்பட்டு வெற்றிபெற்றாலும், தணிக்கைக்குழுவின் முன் தோல்வி கண்டு உடனடியாக தடைசெய்யப்பட்டது. 

Watch: 'Kama Sutra' trailer beats 'Fifty Shades of Grey' to become the 3rd  most watched trailer of all time on YouTube
 
 4.) Urf Professor (2000) தணிக்கைக்கு இரையான தொடர் படங்களின் வரிசையில் அடுத்து இணைவது பங்கஜ் அத்வானியின் இயக்கத்தில் உருவான Urf Professor. மனோஜ் பஹ்வா, அந்த்ரா மலி, ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம். கதாநாயகனின் வெற்றிபெற்ற லாட்டரிச் சீட்டு தொலைந்துபோவதும், அதற்குப் பின்னாண குழப்பங்களும், கார் பயணங்களைப் பின்தொடர்ந்து இத்திரைப்படம் Dark comedy எனும் வகைமைக்குள் எடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் வசைச் சொற்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதும், கொச்சையான காட்சிகளும் இந்த நகைச்சுவைப் படத்தில் இருப்பதாகக் கருதிய தணிக்கைக்குழு இப்படத்திற்கு தடைவிதித்தது.

12 Banned Bollywood Films You Should Watch 

5.) The Pink Mirror (2003)

பரிட்சார்த்த முயற்சிகளின் அடிப்படையில் வெளியாகிற திரைப்படங்கள் பெரும்பாலும், பாலினம் தொடர்பாக படமெடுக்கவே நினைக்கின்றனர்.  இன்றளவும் அது குறித்து ஆராய்வதுதான் பரிட்சார்த்த முயற்சிகளின் விதிமுறையாக இருக்கிறது. ஸ்ரீதர் ரங்கையனின் திரைப்படமும், அவற்றில் ஒன்று. The Pink Mirror திரைப்படம் திருநங்கையர்களின் பாலியல் வாழ்க்கை குறித்து முன்வைக்கிறார். இரு திருநங்கைகளுக்குள், ஒரு பால் உறவு வைத்துக்கொள்கிற ஆண் இவர்களைக் கொண்டே கதை நகர்கிறது. சந்தேகத்திற்கிடமின்றி இந்தப் படத்தில் “ கீழ்த்தரமான, நாகரீகமற்ற காட்சிகள்” இருப்பதாகக் கூறி தணிக்கைக்குழு இத்திரைப்படத்திற்கு தடை விதித்தது. இருப்பினும், உலகம் முழுவதும் நடக்கிற திரைப்பட விழாக்களில் பலரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் திரட்டியிருக்கிற படமாகவும் விளங்குகிறது The Pink Mirror.

The Pink Mirror – The Better India
 
6.) Paanch (2003)
 
அனுராக் காஷ்யப்பின் paanch திரைப்படம், தணிக்கைக்குழுவின் கோபத்தை அதிகமாக சந்திக்கவேண்டியிருந்தது. 1997ல் ஜோஷி அப்யங்கரின் தொடர்கொலைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த த்ரில்லர் படத்தில் அதிகமான வன்முறைக்காட்சிகளும், அதற்கு துணைபோகிற வசைமொழிகளும், போதை மருந்துவிவகாரங்களும் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தன. இதனால் தணிக்கைக்குழு இத்திரைப்படத்தை தடை செய்ததில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனாலும், இப்படம் திருட்டு விசிடியிலாவது வெளியாகும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

Popular Videos - Paanch - YouTube
 
7.) Black Friday (2004)
 
இது, எஸ் ஹீசைன் எழுதிய மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் நிகழ்வுகளை உண்மைக் கதைகளாக எழுதிய Black Friday என்ற புத்தகத்தின் மேலோட்டமான தழுவலில் எடுக்கப்பட்ட படம். அனுராக் காஷ்யப்பின் இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடுவதில் பல இருண்மைகளைத் தோற்றுவிக்கும் என எடுத்துக்கொண்டனர். 1993 மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட வழக்கு விசாரணை முடியும் வரை  மும்பை உயர்நீதிமன்றம் இப்படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தது.
 
Films that were banned for political reasons
 
8.) parzania (2005)

Parzania, குஜராத் கலவரத்தின் காயங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. எதிர்மறையான பின்னடைவுகளையும், பாராட்டுக்களையும் சம அளவில் பெற்ற திரைப்படம் இதுதான். 2002ஆம் வருடத்தைய குஜராத் கலவரத்தில்  Azhar எனும் சிறுவன் தொலைந்துபோவதும், அதைச் சுற்றிய சம்பவங்களுமாக இத்திரைப்படத்தின் சிறந்த மையக்கரு எடுக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கிற விதத்தில் கச்சிதமான சினிமாவின் உன்னதத்தை அடைந்திருப்பதன் வாயிலாக தேசியவிருதும் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் கடுமையாக தடைசெய்யப்பட்டபோது, குஜராத்தில் திரைப்படம் வெளியாக இந்த விருதுகள் எல்லாம் போதாது, என்று அரசியல் கட்சிகள் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.
 
Parzania - Disney+ Hotstar
 
9.) Sins (2005)
 
கேரள மதகுரு, குணமிக்க ஒரு பெண்மீது ஆசைப்பட்டு, அவளுடன் உடலுறவும் வைத்துக்கொள்கிறார், இக்கதைதான் பாலுணர்வெழும்பும் பயணமாக sins படத்தில் இருக்கிறது. நாம் வாழ்கிற சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற விதிமுறைகளின் மூலம் நிகழ்கிற தொல்லைகளையும், இச்சைகளையும், தடைகளின் மூலம் இத்திரைப்படம் நிரப்பியிருக்கிறது. கத்தோலிக்கர்களால் இப்படம் விரும்பப்படவில்லை. கத்தோலிக்கத்தை எதிர்மறையான ஒளியின் மூலம் இப்படம் பரப்புவதாக அவர்கள் நினைத்தனர். தணிக்கைக்குழுவும் அவ்வாறே நினைத்ததன் விளைவால், மற்றும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த நிர்வாணக் காட்சிகள், விவாதங்கள் முதலானவைகளால் இப்படம் இன்றுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.
 
Bollywood Movies Based On True Stories | Bollywood Movies Based On True  Events | Namo Movie - Filmibeat
 
10.) water (2005)
 
இந்திய விதவையொருத்தியின் இருண்மையான வாழ்க்கையைக் களமாகக் கொண்டிருப்பதால் தீபா மேத்தாவின் water திரைப்படம் எண்ணற்ற பல சர்ச்சைகளுக்குள்ளானது. வாரனாசி ஆசிரமம் ஒன்றில் நடப்பதாக இக்கதை விரிகிறது. இப்படத்திற்கான கதையை எழுதியிருப்பவர் வேறு யாருமல்ல, அனுராக் காஷ்யப்தான். இப்படத்தில் கைக்கொண்டிருக்கிற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளான ”பெண் வெறுப்பு”, ”சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைத்தல்” போன்ற விஷயங்களெல்லாம் தணிக்கைக்குழுவினரால் ஏதோ வேற்றுகிரகவாசி மீண்டும் தணிக்கைக்குழுவிற்குள் வந்துவிட்டதுபோல் நினைத்தனர்.
 
Water movie review & film summary (2006) | Roger Ebert
 
11.) firaaq (2008)
 
குஜராத் கலவரத்தை அடியொற்றி எடுக்கப்பட்ட அடுத்த திரைப்படம் firaaq. கலவரத்தின் போது நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களை வைத்தே இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்து – முஸ்லிம் உணர்வுகளை நந்திதா தாஸ் புண்படுத்துவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டதோடு, உடனடியாக இப்படம் தடைசெய்யப்பட்டது. ஆனாலும், இதன் மிகப்பெரும் சாதனையாகக் கருதுவது இப்படத்தின் உண்மைத்தன்மையால் வெளியீட்டுத் தேதியைக் கண்டது. இதன் பின்னர், பலராலும் பாராட்டப்பட்ட விமர்சனங்களும், எதிர்வினைகளும், மக்களின் விருப்பத்தையும் இப்படம் பெற்றது.
 
Firaaq Full Movie | Naseeruddin Shah, Nawazuddin Siddiqui, Tisca Chopra |  Political Thriller - YouTube
 
12.) Gandu (2010)

இத்திரைப்படத்திற்கு “காண்டு” என்று பெயர் வைத்திருப்பதன் வாயிலாக வேறு ஏதேனும் நீங்கள் எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள். பெங்காலிப் படமான இதில் ராப் இசை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிர்வாணக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிற இப்படம் வண்ணங்களைத் தவிர்த்து கருப்பு – வெள்ளையாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. ”இந்தியர்களின் உணர்வுகளுக்கு நிந்தனை செய்யும்” வகையில் இப்படம் அமைந்திருக்கிறது என்ற காரணத்தோடு இப்படம் தடைசெய்யப்பட்டது.

Bengali film 'Gandu' leaked online
 
13.) Inshallah, football (2010)
   
காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஒருநாளில் தான் மிகப்பெரிய கால்பந்து வீரனாக வரவேண்டுமென்ற ஆசையில் வெளிநாட்டிற்குச் செல்ல நினைப்பதும், அதற்கு வருகிற இன்னல்களுமாக இது ஒரு ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தனது தந்தை ஒரு போராளியாக இருந்ததாக, குற்றம் சுமத்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவனுக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கிற குடிமக்களும், கிளர்ச்சியாளர்களும், போராளிகளும் எவ்வாறெல்லாம் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை பரவலாக தெரியப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவருவதே இந்த ஆவணப்படத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், காஷ்மீர் பிரச்சனை எனும் உணர்வயமான பொருளைப் பற்றி பேசியதன் காரணமாக இந்நோக்கம் தணிக்கைக்குழுவால் தோற்கடிக்கப்பட்டது.

Inshallah Football: Amazon.in: Ashvin Kumar: Movies & TV Shows
 
14.) Dazed in Doon (2010)
 
Doon என்ற பள்ளி இந்தியாவிலேயே அதிகமாக மிகுந்த மரியோதையோடு பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பள்ளி ரத்னா பதக் ஷாவின் Dazed in Doon என்ற திரைப்படம் மூலமாக பல பிரச்சனைகளைச் சந்தித்தது. ரத்னா பதக் ஷா எடுத்த படத்தில் மிகச்சிறப்பு வாய்ந்த இப்பள்ளியில் ஒரு சிறுவன் படிக்கிறான், என்பதுபோல கதை அமைக்கப்பட்டிருந்தது. இதை அந்தக் கல்விக்கூடம் வேடிக்கைபார்க்கவில்லை. இதைப் பற்றியதான கதையில் தன் பள்ளிக்கூடத்தின் பெயரும் அடிபடுவதால் தன் பள்ளிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என எண்ணியும், பழமையான இந்தப் பள்ளியின் வரலாறு பாதிக்கப்படும் என்று கருதி இப்படம் வெளியிட அனுமதிக்கவில்லை.

Ashvin Kumar: Dazed in Doon
 
 15.) Unfreedom (2015)

தடை செய்யப்பட்ட இந்தியப் படங்கள் என்ற இந்த நீண்ட பட்டியலில் அண்மையில் இணைந்துகொண்ட படம் தான் Unfreedom. த்ரில்லர் வகைமையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், லெஸ்பியன் காதல் வாழ்க்கையானது, இஸ்லாமிய வன்முறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டிருப்பதை இப்படம் வேறொரு கோணத்தில் அணுகுகிறது. இரண்டு முக்கிய கருத்தாளமிக்க மையங்கள் இப்படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், இதில் இடம்பெறுகிற நிர்வாணக் காட்சிகளும், இரண்டு பெண்கள் காதல் செய்வதையும் சீரணித்துக்கொள்ள முடியாத தணிக்கைக்குழு தடை விதித்தது. ”இயற்கைக்கு மாறான உணர்வுகளைத் தூண்டும்” காட்சியமைப்புகளைக் கொண்டிருப்பதாக இப்படம் பற்றிய அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. இதனால் இந்தியாவின் சில மாநிலங்களைத் தவிர்த்து இப்படம் பரவலாக வெளியிட இயலாமல் போனது.
 
Unfreedom movie review: Once banned, now released from its prison by  Netflix - movie reviews - Hindustan Times

நன்றி: scoopwhoop