Article 15: தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சக்திவாய்ந்த ஆய்வு

நந்தினி ராம்நாத் & ஷில்பா ஜம்கந்திகர்

இஸ்லாமிய எதிர்ப்பு பற்றி ஆராய்ந்த சின்ஹாவின் முந்தைய படம் ’முல்க்’ ஒரு தலைப்புச் செய்தியின் தரம் கொண்டது. அந்தப் படம் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஒரு அரிய நேர்மையுடன் சமன் செய்தது. முக்கியமாக article-15 இல் சினிமா, அரசியல்வாதிகளின் கருத்துக்களை நொறுக்குவதில் மேலும் ஒருபடி அதிகம் முன்சென்று விவரிக்கிறது. சின்ஹா மற்றும் கெளரவ் சோலங்கியின் திரைக்கதை, பார்வையாளர்களைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகள் மற்றும் சமீபத்திய அட்டூழியங்களின் கற்பனையான பதிப்புகள் (குஜராத்தில் உனா, வடக்கு முழுவதும் நிகழ்த்தப்பட்ட விசாரணையற்ற கொலைகள்) பற்றிய விவாதங்கள் உள்ளன. இவைஅனைத்தும் வழக்கமாக தணிக்கைத்துறை நீக்கச் சொல்வதுபோல் அல்லாமல் மத்தியத் திரைப்பட தணிக்கையால் அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியானது.

வார்த்தைகள் போதுமானதாக இல்லை என்று தோன்றும்போது, காட்சிகள் சமன்படுத்துகின்றன. தலித்துகள் குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள்; மரங்களில் ஆடும் உடல்களை களைக்கின்றனர்; பி.ஆர்.அம்பேத்கர் தனது சமூகத்தின்போராட்டங்களைப் பார்த்துத் தவித்தார். இவையாவும் காட்சிகளாக அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

திரைப்படத்தின் தலைப்பு பாகுபாட்டைத் தடுக்கும் அரசியலமைப்பு விதிகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் கேமராவின் முன் இழுக்கப்படுகின்றன. அதன் ஆன்மா மறைந்துவிட்டதாகத் தோன்றும்போது, இரண்டு தலித் நடுவயதுசிறுமிகளைக் கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்ததையும், மூன்றாவது சிறுமி காணாமல் போனதையும் விசாரிக்கும் பொறுப்பான காவல்துறை அதிகாரி, வழக்கு சம்பந்தப்பட்ட பக்கங்களை அச்சிட்டு நிலையத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டுகிறார்.

போலீஸ் அதிகாரி அயன் (ஆயுஷ்மான் குர்ரானா) தனது புதிய மாவட்டத்தில் படைகளின் பொறுப்பை ஏற்க உத்தரபிரதேசத்தின் கிராமப்புறத்திற்குச் செல்லும்போது மற்றொரு புத்தகம் அவருக்கு வழிகாட்டுகிறது. புக்கோலிக் என்பதன் வரையறையாகத் தோன்றும் கிராமப்புறங்களில் அவரது தூதர் கூச்சலிடுகையில், ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா அவரது பக்கத்திலேயே உள்ளது. அயன் ஒரு கணம் உணர்தலின் விளிம்பில் இருக்கிறார். பக்கம் 7-இல் இந்தியாவின், சாதி அமைப்பு உயிருடன் இருப்பதோடு, அது இன்னும் மிகக் கீழானவர்களாக நினைப்பவர்களின் பற்களை உதைக்கிறது.


130 நிமிட திரைப்படம், அயன் தனது காரின் ஜன்னலுக்கு அப்பால் சொல்லமுடியாத வன்முறை என்பதை நினைவூட்டுகிறது. இரண்டு தலித் சிறுமிகள் ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். (உத்தரபிரதேசத்தில் படோன் கொலைகளின் ஒற்றுமை), அவர்களது நண்பரைக் காணவில்லை. ஒப்பந்தக்காரர் ஒரு சந்தேக நபர், அரசியல் அதிகாரத்திற்கு செல்லும் வழியில் ஒரு தலைவர் தலைமையிலான ஒரு மத அமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அயனின் அணியில் பரம்பரை சமூக ஒழுங்கில் உள்ள ஆண்கள் - தங்கள் வழியில் பணியாற்றிய பட்டியல் சாதியினரின் உறுப்பினர்கள் மற்றும் பார்ப்பனன் மற்றும் தாகூர்ஸ் ஆகியோர் இந்த துயரத்தைத் தூண்டுகிறார்கள். அவர்கள் அனைவரும் அயனின் பக்கத்தில் இல்லை. சாதி அமைப்பு சமூக நல்லிணக்கத்திற்காக பராமரிக்கப்படவேண்டிய ஒரு நுட்பமான சமநிலையை அடிப்படையாகக் கொண்டது என்று ஆதிக்க சாதி போலீஸ்காரர் என்ற முறையில் அயனை எச்சரிக்கிறார் மனோஜ்பஹ்வா.

குமுத் மிஸ்ரா இப்போது போலீஸ் சீருடையை அணிந்த ஒரு துப்புறவாளரின் மகனாக, நுணுக்கமான நடிப்பிற்கு மாறுகிறார். முகமது ஜீஷன் அய்யூப் நிஷாத் என்ற சிறிய ஆனால் தாக்கமான பாத்திரத்தை வகிக்கிறார். அவர் ஒரு கவர்ச்சியான தலித் புரட்சியாளர், அவர் பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மாதிரியாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திரைப்படத்தின் ஒவ்வொரு உரையாடலையும் சாதி வழிநடத்துகிறது. மேலும் சில நேரங்களில் சிரிப்பிற்காக விளையாடப்படுகிறது. ஒரு சிறந்த காட்சியில், அயன் தனது குழு உறுப்பினர்களைத் தங்கள் சாதி இணைப்புகளை வெளிப்படுத்தும்படிகேட்கிறார். உட் சாதியினரிடையே கூட சாதியின் படிநிலை ஆழமாக இயங்குகிறது என்பதை நிரூபிக்கவே, அவர் அப்படிச் செய்கிறார்.


காணாமல்போன மூன்றாவது பெண்ணைக் கண்டுபிடிக்க அயன் கிராமப்புறங்களில் விசாரிக்க, சாக்கடையிலும் சகதியிலும் இறங்கி தேடுகிறார். படத்தில் ஒரு இதயத்தைத் தூண்டும் காட்சி ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஒரு சாக்கடைக்குள் இறங்குவதைக் காட்டுகிறது - ஒருவன் அவனது பிறப்பின் பெயரால் மற்ற மனித கழிவுகளைச் சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது ஏன் என்பதில், அயன் கடைசியாக தனது பதில்களைப் பெறுகிறார். மற்றும் அவர் இதேபோன்ற புதைகுழியில் இறங்கும்போது, அதை உணர்கிறார்.

சொற்பொழிவு செய்யும் இடங்கள் அனைத்தும் நேர்த்தியாக இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும்போது, சினிமாவின் பிரதான சாதி சித்தரிப்புகளிலிருந்து விடுபட்ட ஒரு மூல சக்தியை படம் கருக்கொள்கிறது. திரைக்கதை அதன் கருத்தைவெளிப்படுத்த பல உணர்ச்சிகளைத் தொட்டாலும், சாதி அமைப்பின் விமர்சனமே இறுதியில் தனித்து நிற்கிறது.

அயனின் கதாநாயக பிம்பம் article -15 பெரும்பகுதியைக் குறிக்கும் அப்பட்டமான யதார்த்தத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அயனின் ஜெல் நிறைந்த தலைமுடி மற்றும் அவிழ்க்கப்படாத உடைகள் அவரை ஒரு உன்னதமான இந்திதிரைப்பட ஹீரோவாகக் காட்டுகின்றன. குர்ரானா பெரும்பாலும் சீரியோகாமிக் கதாபாத்திரங்கள் அல்லது காதல் கதாபாத்திரங்களில் நடித்தவர். அவரது நடிப்பு ஒரு ஈர்க்கப்பட்ட தேர்வாகும். மேலும் மெலிதான இடுப்பு நடிகர், சுத்த குரல்பண்பேற்றம் அதிகாரத்தைக் கட்டளையிடும் காட்சிகளில் சிறப்பாக செயல்படுகிறது.

article -15 தலித்துகளை அடிபணிய வைக்கும், மிருகத்தனமான அமைப்பைப் பற்றிச் சரியாகக் கூறவில்லை. நம்ப முடியாத பகுதிகள் தலைப்புச் செய்திகளை எதிரொலிக்கும் தருணங்களைச் சமன் செய்கின்றன.

இப்படத்தின் கதாநாயகனாக நடித்த, ஆயுஷ்மான் குர்ரானா உடன் ஒரு நடிகராக அவரது பொறுப்புகள் சார்ந்து கேள்வி பதில்:

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ”அந்ததுன்” மற்றும் “பதாய் ஹோ” போன்ற வெற்றிகரமான படங்களுடன் தனது கனவினை அனுபவித்து வருகிறார்.

தனது முந்தைய பேட்டியில், சரியான திரைக்கதையைத் தேர்ந்தெடுப்பது தன்னுடைய மிகப்பெரிய திறமை என்று குர்ரானா கூறினார். குர்ரானா தனது அடுத்தபடமான “article -15” இல், உத்திரப் பிரதேசத்தின் கிராமப்புறத்தில், இன்றளவும் நிலவுகிற சாதியக் கொடுமைகளின் சாட்சியாக, இரு இளம் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலைசெய்தது மற்றும் தொலைந்துபோன ஒரு பெண்ணைத் தேடிக்கண்டடையும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஏன் நான், article -15 படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன், ஏன் இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றியும், மையநீரோட்ட சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களும் கூட ஏன் இதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படைப்புகளில் நடிக்க வேண்டும் என்பது குறித்து குர்ரானா அளித்த பேட்டி:

“Article 15” படத்தில் எப்படி இணைந்தீர்கள்?

சாதி பாகுபாடு குறித்த படத்தில் நடிக்க நான் எப்போதும் விரும்பினேன். நான் சண்டிகரில் நாடகக்குழுக்களில் நடித்துக் கொண்டிருந்தேன். நாடகக்குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தேன். பல பகுதிகளுக்குச் சென்று நாடகம் போடுவோம். அப்படி நாங்கள் போடுகிற பெரும்பாலான நாடகங்கள் சமூகப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். இதெல்லாம் ஒரு காலத்திற்கு முன்பு. சமீபத்தில் நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதன் பெயர்: “India Untouched: Stories of a People Apart”. படைப்பு சார்ந்து இந்த வரிகளில் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இந்தத் தலைப்பு உணர்த்துகிற கதைசார்ந்து ஏதாவது படைப்புகளில் பங்காற்ற வேண்டும் என்று தோன்றியது. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக அதைச் செய்வேன் என்று நினைக்கவில்லை.
”முல்க்” திரைப்படத்தைப் பார்த்தபிறகு, நான் திரு அனுபவ் சின்ஹாவை அணுகினேன். அப்போது அவர் என்னை ஒரு ரொமாண்டிக் காமெடி படத்திற்கு அழைத்திருந்தார். நாங்கள் எல்லா வகையான விஷயங்களப் பற்றியும் பேச ஆரம்பித்தோம். அவர் “Article 15”-ற்கான முதல் வரைவை எழுதி முடித்திருந்தார். இதுபோன்ற படத்தில் நடிக்க எனக்கு உண்மையிலேயே ஆர்வம் இருப்பதாக அவரிடம் சொன்னேன். நாங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இருவருமே உற்சாகமானோம். ஏனென்றால், இதுபோன்ற ஒரு கதையில் நான் ஆர்வம் காட்டுவேன் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.


ஆகவே, உயர் நட்சத்திரங்கள் (சிறந்த நடிகர்கள்) இதுபோன்ற படங்களில் ஆர்வம் காட்டினால் மட்டுமே சாதி பாகுபாடு போன்ற தலைப்புகள் குறித்து ஆராய்வார்கள் என்று சொல்கிறீர்களா? இல்லையேல், அனுபவ் சின்ஹா உங்களுடன் ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தை எடுப்பதற்குத்தான் தயாராகயிருந்தாரல்லவா…

நான் அப்படித்தான் நினைக்கிறேன். கலை ஒரு சிற்றலை அல்லது இடையூறை உருவாக்க வேண்டும். அது சமுதாயத்தினைக் கண்ணாடி போல பிரதிபலிக்க வேண்டும். அது தவிர, இதுபோன்ற படங்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது மிக முக்கியம், எனவே அது ஒரு உயர் நட்சத்திரத்தால் (முக்கிய நடிகரால்) செய்யப்படவில்லையென்றால், அந்த நோக்கம் நிறைவேறாது. எனவே மீண்டும் மீண்டும் திரைப்பட விழாக்களில்தான் இதுபோன்ற படங்கள் திரையிடப்படும். திரைப்பட விழாக்களுக்கு வருகிற பார்வையாளர்களைக் கவனியுங்கள். அங்கு சாமான்ய மக்கள் அதிகளவில் வருவதில்லை. எல்லா மக்களும் திரைப்பட விழாக்களுக்கு வருவதில்லை. ஏற்கனவே சாதி பாகுபாடு சார்ந்த புரிதலை அடைந்தவர்கள், சமூக அவலங்கள் சார்ந்த பிரச்னைகளைத் தெரிந்தவர்கள், அத்தகைய வெளிச்சம் உடையவர்கள்தான் திரைப்பட விழாக்களுக்கு வருகிறார்கள். நாம் அவர்களுக்கே மீண்டும் மீண்டும் இத்திரைப்படங்களைத் திரையிடுகிறோம். ஆனால், மிக முக்கியமாக இதுபோன்ற படங்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது முக்கியம். எனவே, அது முக்கிய நடிகர் நடிக்கிறபொழுது நிறைவேறுகிறது.

ஒரு முக்கிய நடிகரை படத்தில் வைத்திருப்பதைத் தவிர, இதுபோன்ற விஷயத்தைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டுசெல்வதற்கு நீங்கள் வேறு என்ன செய்ய வேண்டும்?

கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும் திரையிடல்கள் நடத்துவது அனுபவ் சின்ஹாவின் யோசனையாக இருந்தது. கிராமப்புறங்களில் திரையரங்குகள் கூட இல்லை. அவர்களால் இப்படத்தைப் பார்க்கமுடியாது என்ற காரணத்திற்காகவே, திரையிடல் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று நினைத்தார். சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கும் கிராமத்தினரிடையேயும் திரையிடல்களை ஏற்பாடு செய்ய விரும்பினார். நிச்சயமாக நாம் அதைச் செய்யமுடியும். நகர்ப்புற இந்தியர்கள் மக்கள் தொகையில் வெறும் 20% மட்டுமே உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில்தான் சாதி பாகுபாடு அதிகமாக உள்ளது. அங்கு உரையாடல்கள் நிகழ்த்துவதும், இதுபோன்ற படங்களைக் கொண்டுசேர்ப்பதும்தான் முக்கியம். இந்தப் படம் ஒரு வெளிநாட்டவரின் பார்வையில் சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் படித்து வளர்ந்தவர், அத்தகைய ஒரு கிராமப்புறத்தில் பணிசெய்ய மாற்றப்படுகிறார். மேலும் இதுபோன்ற விஷயங்கள் 2019ஆம் ஆண்டிலும் இன்னும் நடக்கிறது என்று அதிர்ச்சியடைகிறார்.

பெரும்பாலான இந்தியர்கள், நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி, சாதி வாதத்தைக் கண்டிருக்கிறார்களா? எதிர்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவையெல்லாம் இந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்த பாங்கினை வடிவமைத்ததா?

நீங்கள் சமூகத்தைத் தீவிரமாகக் கவனிப்பவராக இருந்தால், இந்த விஷயங்களை நீங்கள் கவனிப்பீர்கள். வீட்டில் வேலை செய்பவர்களுக்காகவும், தங்களுக்காகவும் தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்துகிற ஒரே சமூகம் நாம்தான். நாம் ஒருபோதும் அவர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இது நம் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அது நம்மிடமிருந்து எப்போது விட்டு விலகிச்செல்லும் என்று நமக்கே தெரியாது. நாம் இந்தியாவில் வாழும் வெவ்வேறு நாடுகள் – இரண்டு பாதிகளும் ஒரே பக்கத்தில் இல்லை.

இந்தியா சாதியைப் பார்க்கும் பார்வை குறித்து படம் என்ன சொல்கிறது? பார்வைக்கு ஒரு முடிவு இருக்கிறதா?

நிறைய நகர்ப்புற இந்தியர்கள் இது (சாதி பாகுபாடு) நடக்கும் என்று நம்பவில்லை. இதெல்லாம் ஒரு காலத்தில், அல்லது கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள். இப்போது அதுபோன்ற கொடுமைகள் நடப்பதில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, அது ஒவ்வொரு நாளும் நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செயல்முறை பற்றி பேசமுடியுமா?

இந்தப் படத்தை 32 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கினோம். ஒரு இயக்குனராக தனக்கு என்ன வேண்டும் என்பது சின்ஹாவுக்குத் தெரியும். படத்தை எப்படி படத்தொகுப்பு செய்ய வேண்டும்? படத்தின் கருத்து, மையம் மற்றும் கதை போன்றவற்றைத் தெளிவாக வைத்திருந்தார். சினிமோட்டோகிராஃபியில் மந்திர நேரம் என்று ஒரு நாளின் குறிப்பிட்ட பொழுதுகளை வரையறுப்பார்கள். அதாவது அதிகாலை நேரம் மற்றும் மாலை சூரியன் மறையும் நேரம், மாயாஜாலமான பொழுது என்று திரைப்படப் படப்பிடிப்பில் ஒரு வழமை உள்ளது. Article 15 படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும், மந்திர நேரம் என்று சொல்லப்படுகிற இந்நேரத்தில்தான் நடந்தது. அதிகாலை நேரம் மற்றும் சூரியன் மறையும் மாலை நேரத்திற்குப்பின் படப்பிடிப்பு நடக்கும். உடல் ரீதியாகக் கடினமான படப்பிடிப்பு அல்ல. ஆனால் கதையின் மையம் மிகவும் இருண்மையாக இருந்தது. மேலும் இதுபோன்ற படப்பிடிப்பில் கலந்துகொள்வது எனக்கு இதுவே முதல்முறை. எனவே படப்பிடிப்பில் அது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அது என் முகத்தில் பிரதிபலித்தது. அதுவே படத்தில் என் மனநிலையையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.


இதற்கு முன்பு “ட்ரீம் கேர்ள்” என்ற படத்தில் நடித்தேன். ஆனால் நான் இதில் நுழைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடித்திருந்தேன். எனவே அப்படத்தின் படப்பிடிப்பு சூழலிலிருந்து வெளியேறி இதில் முழுமனதாக ஈடுபடுவதில் இரட்டைநிலை இருந்தது. ஓம் பிரகாஷ் வால்மீகியின் “ஜூதன்” என்ற புத்தகத்தை சின்ஹா எனக்குப் பரிசாக அளித்திருந்தார்.

நகைச்சுவைப் படமாக உருவாகிக்கொண்டிருந்த “ட்ரீம் கேர்ள்” படப்பிடிப்பில் நான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். பிறகு நான் அவரிடம் (சின்ஹா) சொன்னேன், ”நான் ஒரு நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், இந்தப் புத்தகம் என்னுள் இருளை நிரப்புகிறது. அந்த இருட்டை உணர்த்துகிறது. என்னால் இப்படிப் படம்பிடிக்க முடியாது.”
இதுபோன்ற ஒரு படத்தை நீங்கள் ஒருபோதும் செய்யவில்லை என்று சொல்கிறீர்கள். எனவே, படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது நீங்கள் தயங்கினீர்களா?
ஆராயப்பட வேண்டிய கருத்துக்களை ஆராய நான் விரும்பினேன். இந்தப் படம் ஒரு மாறுபாடு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெற்ற மூன்று அல்லது நான்கு பெரிய வெற்றிகள் ”Article 15” போன்ற இருண்ட தொனியைக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க எனக்குத் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தன. வணிக ரீதியிலான லாபங்களைப் பற்றி நான் இங்கு சிந்திக்கவில்லை. இது ஒரு கலைஞனாக பொறுப்புணர்வு எனும் உணர்ச்சியிலிருந்து வருகிறது. படம் இப்போது பெரிய வரம்பைப் பெறும், பரவலான மக்களைச் சென்றடையும், அதுகுறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும், ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு படங்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு படம் செய்ய விரும்புகிறேன். வழக்கமான ஓட்டத்தில் ஒரு இடையூறு ஏற்பட வேண்டும்.