படத்தொகுப்பு - வால்டர் முர்ச்

தமிழில்: ஜிப்ஸி - தீஷா

ஒரு காட்சியை படத்தொகுப்பு செய்வதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள் 

 முதலில் நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், அசையும் படத்தில் பிம்பங்களைத் தொகுப்பதற்கு கணக்கிலடங்காத வழிகள் உள்ளன. எல்லா வழிமுறைகளிலும் இதுவே வழக்கம்: கைகளால் செயல்படும் முறை, இயந்திரம் அல்லது மின்னணுவியல் என எந்த அமைப்பில் நீங்கள் படத்தொகுப்பு செய்கிறீர்கள் என்பது இதில் முக்கியமில்லை.  
  
ஒரு காட்சி இரண்டே ஷாட்களில் படம்பிடிக்கப்பட்டிருந்தால்- ஒவ்வொன்றும் இரண்டு வெவ்வேறு கேமரா நிலைகளிலிருந்து காட்சிப்படுத்தப்பட்டவை, உதாரணத்திற்கு ஏ மற்றும் பி என்று சொல்லலாம் – நீங்கள் ஒன்று அல்லது மற்றொன்று அல்லது இரண்டையும் சேர்த்து தேர்ந்தெடுக்கலாம். முடிவில் இந்த இரண்டு ஷாட்களையும் நீங்கள் குறைந்தபட்சம் நான்கு வகையில் உபயோகப்படுத்த முடியும் : A, B, A+B மற்றும் B+A. எப்படியிருந்தாலும் ஷாட்களின் எண்ணிக்கையைவிட அதை உபயோகப்படுத்தும் வகையின் எண்ணிக்கை அதிகமாகவே கிடைக்கும் – மற்றும் இயக்குனர் ஒரு காட்சிக்கு குறைந்தபட்சம் இருபத்தைந்து ஷாட்களைப் படம்பிடிக்கக்கூடும் – இதிலிருந்து கிடைக்கும் சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கை உடனடியாக வானியல் எண்களாக (astronomical numbers) மாறும். இது ஒரு வரையறைக்குள் அடங்கும். C = (e x n!) -1. இயக்குனர் அந்த காட்சிக்காக எடுக்கப்பட்ட அனைத்து ஷாட்களும் (n)ஐப் பயன்படுத்தி அதைப் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை C என்றாகிறது. e ட்ரான்சிடண்டல் எண்ணைக் குறிக்கும். நாம் உயர்நிலைப் பள்ளியில் பார்த்த மர்மமான எண் போன்றது e. மற்றும் அந்த (n) ஐ அடுத்து இருக்கும் ஆச்சரியக்குறி (இந்த ஒரு தருணத்தில்தான் கணிதம் உணர்ச்சிவசப்படும் இடம். !) அது ஃபேக்டோரியல் எண்ணைக் குறிக்கிறது. அதாவது நீங்கள் கேள்வியில் இருக்கும் அந்த எண்ணையும் சேர்த்து, அனைத்து எண்களையும் ஒன்றாகப் பெருக்கலாம் என்று அர்த்தம். 

உதாரணத்திற்கு, எண் நான்கின் ஃபேக்டோரியலான: 1 * 2*3*4=24, எண் ஆறின் ஃபேக்டோரியலான: 1*2*3*4*5*6= 720, ஆகையால் நீங்கள் பார்க்கும் முடிவுகள் மிகவும் சீக்கிரமாக பெரிதாகிவிட்டது. எண் இருபத்தைந்தின் ஃபேக்டோரியல் ஒரு பெரிய எண், பதினைந்து பில்லியன் பில்லியன் மில்லியன் போன்று பெரியதான எண் – பதினைந்தைத் தொடர்ந்து இருபத்தைந்து பூஜ்யங்கள். அந்த எண்ணுடன் e -யைப் பெருக்குங்கள், உங்களுக்குத் தோராயமாக நாற்பதைத் தொடர்ந்து இருபத்துநான்கு பூஜ்யங்கள் கிடைக்கும். அந்த எண்ணுடன் -1 கழியுங்கள். ஆதலால் ஒரு காட்சி வெறும் இருபத்தைந்து ஷாட்களினால் ஆனது எனில், தோராயமாக 39,999,999,999,999,999,999,999,999 வழிகளில் படத்தொகுப்பு செய்யமுடியும். மைல்களில் இது காணக்கூடிய பிரபஞ்சத்தின் சுற்றளவு இருபத்தைந்து மடங்கு ஆகும். 

Walter Murch and the 'Rule of Six' – Film Editing - Video & Filmmaker  magazineVideo & Filmmaker magazine

ஒருவேளை ஒரு காட்சிக்கு 59 ஷாட்கள் உங்களிடம் இருந்தால், அதுவொரு இயல்புக்கு மாறான விஷயம் இல்லை. இது உங்கள் காட்சிகளை அமைப்பதற்கு பல சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள திறனுடையது. இது எப்படியானது என்றால், மொத்த பிரபஞ்சத்திற்குமான மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் போன்றது. நான் படத்தொகுப்பு செய்த சில சண்டைக்காட்சிகளில் ஒரு சீக்வென்ஸில் மொத்தமாக 250 ஷாட்கள் இருக்கும். ஆதலால், உங்களால் அது எத்தனை வகையான சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கமுடியும் – 88-ஐத் தொடர்ந்து திடமாக 91பக்க பூஜ்யங்கள் இருக்கும். 

இப்போது இந்த பெரும்பான்மையான பதிப்புகள், ஒரு தேவையற்ற விஷயமாக இருக்கலாம். இதுவொரு பழைய கதையைப் போன்றது. மில்லியன் கணக்கான சிம்பன்சிகள், மில்லியன் டைப் ரைட்டரில் தாங்கள் செய்த தேவையற்ற விஷயங்களைப் பதித்து வைத்ததுபோல, அவை எந்தவொரு அர்த்தத்தையும் கொண்டிருக்காது. மற்றொரு கையில் ஒரு சிறிய எண்ணான, நாற்பதைத் தொடர்ந்து இருபத்து நான்கு பூஜ்யம் கொண்ட எண் கூட அந்த சிறு சதவீதத்தில் (திறன்கொண்ட பதிப்புகள்) பெரிய எண்ணாகத் தோன்றும். ஒவ்வொரு குவாட்ரலைனிலும் ஏதோவொரு பதிப்பு அர்த்தத்தை ஏற்படுத்தினால், அவை மீதம் நாற்பது மில்லியன் சாத்தியக்கூறுகளைக் கொண்டதாக இருக்கும், அதுவும் ஒரு காட்சிக்கு. மற்றும் திரையரங்கில் வெளியாகும் படம் நூறு காட்சிகளைக் கொண்டிருக்கும். அவை தொடர்ந்து அசல் திரைக்கதையிலிருந்து வெவ்வேறு வரிசையில் மீண்டும் தொகுக்கப்படுகிறது. 

ஒவ்வொரு படத்தொகுப்பாளருக்கும் அவரது ப்ராஜக்டைத் துவங்கும்பொழுது அடிவயிற்றில் ஒரு வினோதமான உணர்வு ஏற்படும் அதுதான் அங்கீகாரம் – தெரிந்தோ தெரியாமலோ – அதிகப்படியான எண்ணிக்கையில் அவர் தேர்ந்தெடுக்கும் முடிவுகள் மற்றும் அவர்கள் சந்திக்க நேரிடும் விஷயங்கள். ஒரு படத்தொகுப்பை தானியங்கி சதுரங்க விளையாட்டைப்போல மாற்றமுடியாது, அது சாத்தியமானதல்ல, தானியங்கி சதுரங்க விளையாட்டில் பல்வேறுபட்ட தேர்வுகள், நீங்கள் காயை நகர்த்துவதற்கு முன்பே கணித்து வைத்திருக்கிறது. ஆனால், படத்தொகுப்பில் சாத்தியக்கூறுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆக, மின்னணு படத்தொகுப்பானது, பழமையான இயந்திரவியல் படத்தொகுப்பு முறையைவிட, மிகவும் அதிகமான வழிகளில் உங்களை வானியல் எண்களுடன் வேகமாக ஈடுபட உதவும்.