தொடர்-1: ஹிட்ச்காக் & த்ரூபோ


இப்போதெல்லாம், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் படைப்புகள் உலகம் முழுவதும் போற்றப்படுகின்றன. தற்போது மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கிற திரைப்படங்களான Rear Window மற்றும் Vertigo அல்லது North by Northwest வாயிலாக அவரது கலையை இப்போதுதான் கண்டறிந்த இளைஞர்கள், அவரின் கெளரவம் எப்போதுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை.


ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில், ஹிட்ச்காக் அவரது படைப்பாற்றல் மற்றும் பிரபலத்தன்மையின் உச்சத்தில் இருந்தார். நிச்சயமாக, ஆறு அல்லது ஏழுஆண்டுகளில் தயாரிப்பாளர் டேவிட் ஓ.செல்ஸ்னிக், ஹிட்ச்காக்குடன் இணைந்து உருவாக்கிய ரெபேக்கா, நொட்டோரியஸ், ஸ்பெல்பவுண்ட் மற்றும் தி பாரடைன் கேஸ் போன்ற படங்களுக்குச் செய்த புத்திசாலித்தனமான விளம்பரங்களின் காரணமாகவும் ஹிட்ச்காக் பிரபலமானார். ஐம்பதுகளின் நடுவில் ஆல்பிரெட் ஹிட்ச்காக் வழங்கிய தொலைக்காட்சித் தொடர் வழியாகவும், அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமர்சகர்கள் அவரது வணிக வெற்றித்திரைப்படங்களை அருள்நோக்குடன் விமர்சனம் செய்வதன் மூலமாகவும், ஒவ்வொரு புதிய படத்தையும் இகழ்ந்து,குறைத்து மதிப்பிடுவதன் வாயிலாகவும் லஞ்சமாக பணம் செலுத்தச் செய்தனர்.
 
1962-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் Jules and Jim திரைப்படத்தை அறிமுகப்படுத்துவதற்காகச் சென்றபொழுது, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் என்னிடம் இதே கேள்விகளைக் கேட்டதைக் கவனித்தேன்: ”காஹியர்ஸ் து சினிமாவின் விமர்சகர்கள் ஏன் ஹிட்ச்காக்கை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்? அவர் பணக்காரர், வெற்றிகரமானவர். ஆனால் அவரது திரைப்படங்களுக்கு எந்தப் பொருளும் இல்லை.” ரியர் விண்டோவை நான் வானம் அளவிற்குப் பாராட்டிய ஒரு நேர்காணலின்போது, அமெரிக்க விமர்சகர் என்னை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒரு கருத்து தெரிவித்தார், “நீங்கள் ரியர் விண்டோவை நேசிக்கிறீர்கள்,ஏனென்றால், நியூயார்க்கிற்கு அந்தியரான உங்களுக்கு க்ரீன்விச் கிராமத்தைப் பற்றி எதுவுமே தெரியாது.” இந்த அபத்தமான கூற்றுக்கு, ”ரியர் விண்டோ கிரீன்விச் கிராமத்தைப் பற்றியது அல்ல, இது சினிமா பற்றிய படம், மற்றும் எனக்கும் சினிமா தெரியும்.” என்று பதிலளித்தேன்.
 
நான் பாரிஸுக்குத் திரும்பியதும், இந்த வார்த்தைப் பரிமாற்றத்தால் இன்னும் கலக்கமடைந்தேன். ஒரு விமர்சகராக என் கடந்தகால வாழ்க்கையிலிருந்து,காஹியர்ஸ் து சினிமாவின் பொதுவான இளம் எழுத்தாளர்கள் அனைவரையும், சமாதானப்படுத்த வேண்டிய அவசியத்தை நான் இன்னும் உணர்ந்தேன். ஹிட்ச்காக், விளம்பரத்திற்கான அவரது மேதை சல்வடார் டாலியால் மட்டுமே சமப்படுத்தப்பட்டது, நீண்டகாலமாக அமெரிக்க அறிவுசார் வட்டாரங்களில் அவர்(ஹிட்ச்காக்) பலியாக்கப்பட்டார். ஏனென்றால் நேர்காணல் செய்பவர்களுக்கு அவர் நகைப்பூட்டுகிற விதத்தில் பதிலளித்ததாலும், அவர்களின் கேள்விகளைக் கேலி செய்யும் நடைமுறையை வேண்டுமென்றே கொண்டிருந்ததும், வெளிப்படையாகவே தெரிந்தது.


அவரது திரைப்படங்களை ஆராய்ந்ததில், அவர் தன் சக பணியாளர்களை விட,தனது கலையின் திறன் பற்றி அதிகம் சிந்தித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரு முறையான கேள்விகளுக்கு அவர் முதல்முறையாகத் தீவிரமாக பதிலளிக்க ஒப்புக்கொண்டால், இதன் விளைவாக வரும் ஆவணம்,ஹிட்ச்காக்கினை அமெரிக்க விமர்சகர்கள்
அணுகும் முறையை இது மாற்றியமைக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.

இப்புத்தகம் எல்லாம் அதைப்பற்றியதுதான். தீர்மானமாக முடிவுசெய்யும் ஆற்றல் உள்ள, இதழாசிரியருக்குரிய அனுபவம் கொண்ட, ஹெலன் ஸ்காட்டின் உதவியுடன் இப்புத்தகம் பொறுமையாகத் தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாக, எங்கள் புத்தகம் இப்பலனை அடைந்தது என்று தைரியமாகக் கூறுவேன். எவ்வாறாயினும், இது வெளியிடப்பட்ட நேரத்தில், ஒரு இளம் அமெரிக்கத் திரைப்படப் பேராசிரியர் “உங்கள் மோசமான படத்தைவிட, இந்த புத்தகம் அமெரிக்காவில் உங்கள் நற்பெயருக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.” என்று கணித்தார்.

அது நடக்கும்போது, சார்லஸ் தாமஸ் சாமுவேல்ஸ் தவறாகப் புரிந்துகொண்டது தெரிந்தது. ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகத்திற்கிடமின்றி அவர் வேறு காரணங்களுக்காகத்தான் தற்கொலை செய்துகொண்டார். உண்மையில், 1968 முதல் அமெரிக்க விமர்சகர்கள் ஹிட்ச்காக்கின் படைப்புகளை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளத் துவங்கினர். இன்று, சைக்கோ போன்ற ஒரு திரைப்படம், ஒரு உன்னதமாக, செவ்வியல் திரைப்படமாகக் கருதப்படுகிறது. மற்றும் இளம் திரைப்பட ஆர்வலர்கள் அவரது வெற்றி, செல்வம், புகழ் ஆகியவற்றைப் பற்றி முணுமுணுக்காமல் ஹிட்ச்காக்கை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

1962 ஆகஸ்ட்-ல் ஹிட்ச்காக்குடன் நடத்திய இந்த உரையாடலை நாங்கள் பதிவுசெய்துகொண்டிருந்தபோது, அவரது நாற்பத்தெட்டாவது படத்தின் வேலைகள், திபேர்ட்ஸின் இறுதி படத்தொகுப்பு நடந்துகொண்டிருந்தன. நாடாக்களைப் படியெடுத்து புகைப்படங்களைச் சேகரிக்க எங்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. இந்தக் காலகட்டத்தில் நான் ஹிட்ச்காக்கைச் சந்தித்தபோதெல்லாம், நான் ‘ஹிட்ச்புக்’ என்று அழைக்கப்பட்ட புத்தகத்தைப் புதுப்பிக்குமாறு அவரிடம் கேள்விகள் கேட்பேன். ஆகையால், இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1967-ன் இறுதியில் வெளியிடப்பட்டது. அவரது ஐம்பதாவது படமான Tom Curtain -உடன் இது முடிகிறது.தற்போதைய பதிப்பின் இறுதிப் பகுதியில், Topaz, Frenzy (அவரது கடைசி வெற்றியின் உறவு), Family Plot மற்றும் இறுதியாக The Short Night (அவர்தயாரித்துக்கொண்டிருந்த & தொடர்ந்து திருத்திக்கொண்டிருந்த திரைக்கதை) போன்ற படங்கள் குறித்தும் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் கூடுதல்அத்தியாயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையைச் சொன்னால், ஹிட்ச்காக்கின் ஆரோக்கியமும், மன உறுதியும் மோசமடைந்து வருவதை, அவருடன் இருக்கும் முழு பரிவாரங்களும் அறிந்திருந்தன, இந்நிலையில் அவரது ஐம்பத்து நான்காவது படம் உருவாவது கேள்விக்குறியாக இருந்தது. ஹிட்ச்காக் போன்ற மனிதனின் விஷயத்தில், அவரது வேலைகளின் மூலமாகவும், அவரது வேலைகளுக்காகவும் வாழ்ந்தவர், தனது செயல்பாட்டை நிறுத்துவது மரண தண்டனைக்கு ஒப்பாகும். இதை மற்ற எல்லோரைவிடவும், அவர் நன்கு அறிந்திருந்தார், இதனால்தான் அவரது வாழ்க்கையின் கடைசி நான்கு ஆண்டுகள் மிகவும் சோகமாக இருந்தன.

1980, மே 2 அன்று, அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, பெவர்லி ஹில்ஸில் உள்ள சாண்டா மோனிகா பவுல்வர்டில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் ஒரு பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. ஒரு வருடம் முன்பு, இதே தேவாலயத்தில் ஜீன் ரெனொயருக்கு பிரியாவிடை நடந்தது. ஜீன் ரெனொயரின் சவப்பெட்டி பலிபீடத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வீதிகளில் உள்ள மக்களும்கூட கலந்துகொண்டனர்.


ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரை, இது வேறுபட்டது. சவப்பெட்டி என எதுவும் இல்லை – அது அறியப்படாத இலக்கிற்கு அகற்றப்பட்டது. தந்தி மூலம் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், யுனிவர்சல் ஸ்டுடியோவின் பாதுகாப்பு ஆட்களால் சோதனை செய்யப்பட்டனர். காவல்துறையினர் கூட்டத்தை வெளியேவே நிறுத்தி வைத்திருந்தனர். அதுவொரு பயந்த மனிதனின் அடக்கம், யார் யாரை மிரட்டுகிறார்கள், இது அவரது வேலைக்கு உதவாது என்பதால், தன் இளம்பருவத்திலிருந்தே, சூழ்நிலையின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு, தன்னைத்தானே பயிற்றுவித்துக்கொண்ட ஒரு மனிதன். அந்த மனிதன் இறந்துவிட்டான், ஆனால் ஒரு ஃப்லிம்மேக்கராக அவர் இறக்கவில்லை. அவரது படங்களுக்கு, அன்பான கவனிப்பு கொடுத்து, ஒரு பிரத்யேக ஆர்வம் மற்றும் விதிவிலக்கான தொழில்நுட்பத்தேர்ச்சிக்குள், ஆழமான உணர்ச்சிகள் மறைக்கப்பட்டுள்ள விதம், உலகெங்கிலும் பரவுவதற்கும், புதிய படத் தயாரிப்புகளுடன் போட்டியிடுவதற்கும், காலத்தின்சோதனையை மீறுவதற்கும், மற்றும் ஜீன் கோக்டோவின் மார்செல் ப்ரூஸ்டின் பிம்பத்தை உறுதிப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ளது: ”இறந்த வீரர்களின்மணிக்கட்டில் உள்ள கைக்கடிகாரங்களைப் போல, அவரது பணி தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது.”
-          ஃப்ரான்சிஸ் த்ரூபோ


அறிமுகம்:
 
நாங்கள் பனிக்கட்டியை உடைத்ததிலிருந்துதான் இதெல்லாம் துவங்கியது.
 
1955ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இது நடந்தது, ஆல்பிரெட் ஹிட்ச்காக் Cote d'Azur-ல் To Catch a Thief படத்திற்கான லொகேஷன் ஷுட்டிங்கை முடித்ததும்,ஜோன்வில்லில் உள்ள செயிண்ட் – மாரிஸ் ஸ்டுடியோவுக்கு படத்தின் பின் ஒத்திசைவுக்காக வந்திருந்தார். என் நண்பர் க்ளாட் சோப்ராலும், நானும் காஹியர்ஸ் து சினிமாவுக்காக அவரைப் பேட்டியெடுக்க, அங்கு செல்ல முடிவுசெய்தோம். சிக்கலான கேள்விகளின் நீண்ட பட்டியல் மற்றும் கடன் வாங்கிய டேப் ரெக்கார்டருடன் நாங்கள் ஆயுதம் ஏந்திய படைவீரர்கள் போல அதிக உற்சாகத்துடன் முன்னேறினோம். ஓன்வில்லில் நாங்கள் pitch-black ஆடிட்டோரியத்திற்கு அனுப்பப்பட்டோம். ஒரு மோட்டார் படகில் கேரி கிராண்ட் மற்றும் பிரிஜிட் ஆபர் ஆகியோரைத் திரையில் loop போல இயக்கித் தொடர்ந்துகாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இருட்டில் எங்களை ஹிட்ச்காக்கிற்கு அறிமுகம் செய்துகொண்டோம், அவர் முற்றத்தின் குறுக்கேயுள்ள, ஸ்டுடியோ பாரில்எங்களைக் காத்திருக்கும்படி மரியாதையாகவே சொன்னார்.
 திரைப்படப் பைத்தியங்களான நாங்கள், ஹிட்ச்காக்கின் சமீபத்திய படைப்பைப் பற்றிய அளித்த சுருக்கமான முன்னோட்டத்தில் சிலிர்ப்படைந்தோம், நாங்கள் பகல் ஒளிரும் கண்ணைக்கூசும் வண்ணம் வெளிப்பட்டோம், உண்மையில் உற்சாகத்துடன் வெடித்தோம். எங்கள் விவாதத்தின் சூட்டில், முற்றத்தின் நடுவில் இருந்த இருண்ட சாம்பல் குளத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோம். ஒரு படி மேலே சென்று நாங்கள் ஒரு மெல்லிய அடுக்குபனிக்குள் இறங்கினோம்,பனியின் மெல்லிய அடுக்கில் தரையிறங்கினோம், அது உடனடியாக
வழியை உண்டாக்கியது. சில நொடிகளில் நாங்கள் உறைபனி நீரில் ஒரு குளத்தில் மூழ்கி அதிர்ச்சியான நிலையில் இருந்தோம்.

நான் வெற்றுக் குரலில் சாப்ரோலிடம், ”டேப் ரெக்கார்டர் என்ன ஆனது?” என்று கேட்டேன். அவன் மெதுவாக இடது கையை உயர்த்தி, அப்பொருளைக் காற்றில்அசைத்துக் காண்பித்து பதிலளித்தான். கண்ணீர் ஓடைபோல, தண்ணீர் மங்கலாக எல்லா பக்கங்களிலிருந்தும் வெளியேறியது. சாய்வான படுகையைச் சுற்றித்தடுமாறினோம், மையத்திற்கு வலதுபுறமாகச் சரியாமல், எங்களால் விளிம்பை அடையமுடியவில்லை. ஹிட்ச்காக் திரைப்படத்திலிருந்து நேராக வெளியேறும்சூழ்நிலையில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். இறுதியில், தரும சிந்தையுள்ள பார்வையாளரின் உதவியுடன், நாங்கள் கெட்டியான நிலத்தை அடைய முடிந்தது.
 

அப்போது அந்த வழியாகச் சென்ற wardrobe mistress, ஒரு ஆடை அறைக்கு அவளைப் பின் தொடர்ந்து வருமாறு அழைத்தார். அங்கு நாங்கள் எங்கள் ஆடைகளைக் கழற்றி உலர
வைக்கலாம். அவருடைய கருணைக்காக, நாங்கள் நன்றி தெரிவிக்க முயன்றபோது, அவர் ஒரு வணிகரீதியிலான வழியில், ”ஒரு வாழ்க்கையை உருவாக்க என்ன வழி’ நீங்கள் Riftfi-யின் எக்ஸ்ட்ராக்களா?” என்று கேட்டார். ஆனால், நாங்கள் நிரூபர்கள் என்பதை அறிந்ததும், அவர் எல்லா ஆர்வத்தையும் இழந்து, அங்கிருந்து வெளியேறும்படிக் கூறினார்.
 
சில நிமிடங்கள் கழித்து, இன்னும் அதே நனைந்த ஈரத்துடன், குளிரால் நடுங்கியபடி, நாங்கள் பாருக்குச் சென்றோம். அங்கு ஹிட்ச்காக் எங்களுக்காகக் காத்திருந்தார். அவர் சும்மா வெறுமனே எங்களைப் பார்த்தார், எங்கள் தோற்றத்தைப் பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல், அன்று மாலையே ஹொட்டல் பிளாசா அதீனியில் மற்றொரு சந்திப்பை நட்போடு ஏற்பாடுசெய்தார். ஒரு வருடம் கழித்து, தனது பாரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எங்களைக் கண்டுகொண்டவுடன், ஹிட்ச்காக் இறுதியாக இந்தச் சம்பவத்தை ஒப்புக்கொண்டார், “ஜென்டில்மேன், ஒவ்வொரு முறையும், ஒரு ஜோடி ஐஸ் க்யூப்ஸ் ஒரு கிளாஸ் விஸ்கியில் ஒன்றாகக் க்ளிங் என்று மோதிக்கொள்வதைப் பார்க்கும்பொழுது, உங்கள் இருவரின் ஞாபகமும் வருகிறது.” என்றார்.
 
பின்னர், அவர் தனது சொந்த முறையின் மூலம் கதையை அழகுபடுத்தியதைக் கற்றுக்கொண்டோம். ஹிட்ச்காக் பதிப்பின்படி, சாப்ரோல் ஒரு பாதிரியாராக உடையணிந்தும், நான் ஒரு காவலர் சீருடையை அணிந்தவாறும் நேர்காணலுக்குத் திரும்பியிருந்தோம்.  
 
அந்த நீர்வாழ் தொடர்புக்குப் பின், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஹிட்ச்காக்கின் வேலைகள் பற்றிய தொடர்ச்சியான கேள்விகளை வைத்துக்கொண்டு, மீண்டும் அவரை அணுக முயற்சிகளை மேற்கொண்டேன். அசரீரி வாக்கு பற்றிய ஓடிபஸின் ஆலோசனையைப் பின்பற்ற என்னைத் தூண்டியது என்னவென்றால், ஒரு திரைப்படப் படைப்பாளியாக எனது சொந்த முயற்சிகள், அடுத்தடுத்த ஆண்டுகளில், ஹிட்ச்காக்கினது பங்களிப்பின் விதிவிலக்கான முக்கியத்துவத்தைப் பற்றியும், மற்றும் திரை ஊடகத்தில் பணிபுரியும்அனைவருக்கும் அதன் குறிப்பிட்ட மதிப்பு என, எனக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கிரேட் பிரிட்டனில் அவரது மெளனத்திரைப்படங்கள் முதல் ஹாலிவுட்டில் அவரது தற்போதைய வண்ணப்படங்கள் வரை ஹிட்ச்காக் எனும் இயக்குநர் பற்றிய ஆய்வு, ஒரு கண்டுபிடிப்புக்கான பலனளிக்கும் ஆதாரமாகும்.


ஹிட்ச்காக்கின் வேலைகளில், ஒரு ஃப்லிம்மேக்கர் தனது சொந்த பல பிரச்னைகளுக்கு விடைகாண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எல்லாவற்றிலும் மிக அடிப்படையான கேள்விஉட்பட, முற்றிலும் காட்சி வழிமுறைகளால் ஒருவரை எவ்வாறு வெளிப்படுத்துவது? ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் இந்த வேலையைத் துவக்குகிற ஆசிரியராகவோ, அல்லது நீங்கள் விரும்பினால் தூண்டுபவராகவோ நான் இல்லை.


இந்தப் புத்தகம் அடிப்படையில் ஒரு இதழியல்(பத்திரிக்கை) வேலை, ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் ஐம்பது மணி நேர மிக நீண்ட நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டபோது இது சாத்தியமானது. 1962-ஆம் ஆண்டு நான் திரு. ஹிட்ச்காக்கிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் தனது தொழில் வாழ்க்கையை, காலவரிசைப்படி மட்டுமே தொகுத்த ஐநூறு கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா? என்று அதில் கேட்டிருந்தேன். மேலும் நமது கலந்துரையாடல் பின்வருவனவற்றைக் கையாள வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தேன்:

அவையாவன:

(அ) ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் நீங்கள் கவனித்த/ எதிர்கொண்ட சூழ்நிலைகள்.
(ஆ) திரைக்கதைகளின் தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு
(இ) ஒவ்வொரு படத்திலும் இயக்குநருக்கான குறிப்பிட்ட பிரச்னைகள்
(ஈ) ஒவ்வொரு படத்துக்கும் தனது ஆரம்ப எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடைய வணிக மற்றும் கலை முடிவுகளைப் பற்றிய ஹிட்ச்காக்கின் சொந்த மதிப்பீடு.
 
ஹிட்ச்காக் தனது ஒப்பந்தத்தைத் தந்தி செய்தார். இப்போது கடைசியாக ஒரு தடை இருந்தது, மொழித் தடை, நான் நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு திரைப்பட அலுவலகத்தில் எனதுநண்பர் ஹெலன் ஸ்காட் பக்கம் திரும்பினேன். பிரான்சில் வளர்க்கப்பட்ட ஒரு அமெரிக்கர், சினிமா சொற்களஞ்சியத்தில் முழுமையான தேர்ச்சி, அவரது முடிவெடுக்கும் திறன் மற்றும் விதிவிலக்கான மனித குணங்கள், இந்தத் திட்டத்திற்கான சிறந்த கூட்டாளியாக அவரை ஆக்கியது.
 
ஹிட்ச்காக்கின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13 அன்று நாங்கள் ஹாலிவுட்டுக்கு வந்தோம். தினமும் காலையில் அவர் எங்களை பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலிலிருந்து அழைத்துக் கொண்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவில் உள்ள தனது அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்வார். நாங்கள் ஒவ்வொருவரும் மைக்ரோஃபோன் அணிந்திருந்தோம், அடுத்த அறையில் ஒரு ஒலிபொறியாளர் எங்கள் குரல்களைப் பதிவுசெய்ததால், நாங்கள் தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை எங்கள் தொடர் உரையாடலைத் தொடர்ந்தோம்.நாங்கள் மதிய உணவு வழியாகப் பேசும்போது ஒரு சாதனைப் பதிவை எட்டுகிறோம்.


ஒரு சமத்காரமாய் பேசுகிற கதைசொல்லி, அவரது பொழுதுபோக்கு நேர்காணல்களுக்காகக் குறிப்பிடப்படுபவர், ஹிட்ச்காக் வடிவத்திற்கு உண்மையாகத் தொடங்கினார்,தொடர்ச்சியான வேடிக்கையான நிகழ்வுகளுடன் எங்களுக்கு விருந்தளிக்கிறார். மூன்றாம் நாளில் தான் அவர் தனது தொழில்வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பேசுவதில் நிதானமாகவும் சிந்தனையுடனும் ஆனார். சாதனைகள் மற்றும் தோல்விகளைப் பற்றிய அவரது மதிப்பீடு உண்மையிலேயே சுயவிமர்சனமானது, மேலும் அவரது சந்தேகங்கள்,விரக்திகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அவரது கணக்கு முற்றிலும் நேர்மையானது. விவாதங்கள் சூடுபிடிக்கும்பொழுதும், பேச்சுக்கள் முன்னேறும்போதும், ஹிட்ச்காக்கின் பொது உருவத்திற்கும் (மக்கள் மத்தியில் அவருக்கிருக்கிற பொதுவான பிம்பம்) மற்றும் அவரது உண்மையான சுயத்திற்கும் இடையேயான குறிப்பிடத்தக்க வேறுபாடு வெளிவந்தது. சுய – உடைமை மாறாமல் மற்றும் பெரும்பாலும் இழிந்த மேற்பரப்பின் கீழ் ஆழமாகப் பாதிக்கப்படக்கூடிய, உணர்ச்சிமிக்க, மற்றும் உணர்ச்சி வயப்பட்ட மனிதர், தனது பார்வையாளர்களுக்கு அவர் கடத்தும் உணர்ச்சிகளைக் குறிப்பிட்ட தீவிரத்துடன் உணர்கிறார்.
 
பயத்தைப் படமாக்குவதில் சிறந்துவிளங்கும் மனிதன். ஆனால், உண்மையில் அவர் மிகவும் பயப்படக்கூடிய நபராக இருக்கிறார். அவரது ஆளுமையின் இந்த பண்பு அவரது வெற்றியை நேரடியாகப் பாதிக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை தனது முழு வாழ்க்கையிலும் அவர் உணர்ந்திருக்கிறார், அவர்கள் (நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ….) சிறிதளவு காலம் கழித்தல், அல்லது பிரமை,சலன சித்தம், வேலையின் நேர்மையை ஆபத்துக்குள்ளாக்கும், இவையனைத்தும் ஒரு இயக்குனருக்கு பல இடையூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எந்த நடிகரும் கேள்வி கேட்காத இயக்குனராக மாறுவதற்கும், ஒருவரின் சொந்தத் தயாரிப்பாளராக மாறுவதற்கும், தொழில்நுட்ப வல்லுனர்களை விட, நுட்பங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும், சிறந்தவகையில் ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்வது எவ்வளவு சிறந்தது?
 

பார்வையாளர்களுடன் தங்க, ஹிட்ச்காக் குழந்தைப் பருவத்தின் அனைத்து வலுவான உணர்ச்சிகளையும் மீண்டும் எழுப்புவதன்மூலம் வெல்லத் துவங்கினார். hide-and-seekவிளையாட்டின் பதட்டங்களையும் சிலிர்ப்பையும் பார்வையாளர்கள் ஹிட்ச்காக்கின் படைப்பில் மீண்டும் பெறமுடியும், அல்லது கண் தெரியாதவன் பாதி முகத்தை மறைத்தவாறு தோன்றுவது, கற்பனையின் தந்திரத்தால், அலமாரியின் மீது மறைக்கப்பட்ட பொம்மை படிப்படியாக ஒரு மர்மமான மற்றும் அச்சுறுத்தும் வடிவத்தைப் பெறுதல் போன்ற அந்த இரவுகளின் பயங்கரவாதம். இவையனைத்தும் நம்மை சஸ்பென்ஸுக்குக் கொண்டுவருகின்றன. இது ஹிட்ச்காக்கின் தேர்ச்சியை ஒப்புக்கொள்பவர்களிடையே கூட, பொதுவாக இது அதிசயமான காட்சியின் ஒரு சிறிய வடிவமாகக் கருதப்படுகிறது. சொல்லப்போனால், உண்மையிலேயே அது அதிசயத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
 
எளிமையாக, சஸ்பென்ஸ் என்பது ஒரு படத்தின் கதைசொல்லல் (விவரிப்புப்) பொருளின் நாடகமாக்கல் அம்சம், அல்லது நீங்கள் விரும்பினால், டிரமாட்டிக் சூழ்நிலைகளின்சாத்தியமான மிகத்தீவிரமான விளக்கக்காட்சி. இங்கே ஒரு நிகழ்வு: ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு வண்டியில் ஏறி, ரயிலைப் பிடிப்பதற்காக ஸ்டேஷனுக்கு ஓட்டுகிறான். சராசரியான படத்தில் இதுவொரு சாதாரண காட்சி. இப்போது அந்த மனிதன், வண்டியில் ஏறும்போது, தனது கைக்கடிகாரத்தைப் பார்த்து, ”அட கடவுளே! என்னால் அந்த ட்ரெய்னைப் பிடிக்க முடியாது!” என்று உரக்கக் கத்துகிறான். இப்போது, அந்த முழு சவாரியுமே தூய சஸ்பென்ஸின் வரிசையாக மாறும். ஒவ்வொரு சிவப்பு விளக்கு,போக்குவரத்து சிக்னல், ஓட்டுனர் கியர்களை மாற்றுதல் அல்லது பிரேக்கில் கால்களை வைத்தல், மற்றும் நிலையத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு காவலரும் காட்சியில்உணர்ச்சியின் தாக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது.
 
பிம்பத்தின் வெளிப்படையான தெளிவும், நம்பத்தகுந்த சக்தியும், பார்வையாளர்களுக்குக் காரணங்களை ஏற்படுத்தாது. ”அவரது அவசரம் என்ன? ஏன் அடுத்த ரயிலில் அவர் பயணம் செய்யக்கூடாது?” திரையில் வெறித்தனமான பிம்பங்களால் உருவாக்கப்பட்ட பதற்றத்தினால், நடவடிக்கையின் அவசரம் ஒருபோதும் கேள்விகேட்கப்படாது.வெளிப்படையாக, நாடகமயமாக்கலுக்கான இந்த வலியுறுத்தல் ‘தன்னிச்சையாக’ தவிர்க்கமுடியாது, மற்றும் ஹிட்ச்காக்கின் கலை துல்லியமாக, ‘தன்னிச்சையாக’ திணிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், இது சில நேரங்களில் இதன் நம்பத்தகாத தன்மையைப் பற்றி, எதிர்ப்பாளர்கள் புகார் செய்ய வழிவகுக்கிறது. ஹிட்ச்காக் தனக்கு நம்பத்தகுந்தவற்றின் மீது அக்கறையில்லை என்று கூறிக்கொண்டாலும், உண்மை என்னவென்றால், அவர் அரிதாகவே நம்பமுடியாத தன்மையைக் கொண்டுவருகிறார். அவர் என்ன செய்கிறார், விளைவு, குறிப்பிடும்படியான தற்செயல் நிகழ்வுகளைச் சுற்றியுள்ள Plot-ஐ கட்டுப்படுத்துவதாகும், இது அவருக்கு முதன்மைச் சூழ்நிலையை வழங்குகிறது.அப்போதிருந்து அவரது ட்ரீட்மெண்டானது (சிகிச்சை) நாடகீயத்திற்கு அதிகபட்ச பதற்றம் மற்றும் நம்பகத்தன்மையை அளிப்பதை உள்ளடக்கியது, அவர் தாங்கொண்ணாத்துயரை நோக்கிக் கட்டமைக்கும்பொழுது, கயிறுகளை எப்போதும் இறுக்கமாக இழுக்கிறார். பின்னர் அவர் உடனடியாக, திடீரென்று அவற்றை விட்டுவிட, அவற்றை விரைவாகப் பிரிப்பதற்குக் கதையை அனுமதிக்கிறார். பொதுவாக ஒரு படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகள், அதன் “சலுகை பெற்ற தருணங்கள்”, அந்த சிறப்பம்சங்கள் பார்வையாளர்களின் நினைவில் நீடித்திருக்கும். ஆனால், ஹிட்ச்காக் ஒவ்வொரு காட்சியும், ஒரு ”சலுகை பெற்ற தருணம்” ஆக இருக்க விரும்புகிறார். மேலும் அவரது வாழ்க்கை முழுவதும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இடைவெளிகளோ குறைபாடுகளோ இல்லாத படங்களை அடைவதை நோக்கியே இயக்கப்பட்டன. பார்வையாளர்களின் தடையற்ற கவனத்தைக் கட்டாயப்படுத்துவதற்கும், உணர்ச்சியை உருவாக்குவதற்கும் பின்னர் உணர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், முழுவதும் பதற்றத்தை நிலைநிறுத்துவதற்கும்,இந்த உறுதியே ஹிட்ச்காக்கின் படங்களை முற்றிலும் தனிப்பட்டதாகவும், மற்றும் எல்லோருக்கானதாகவும் ஆக்குகிறது. அதேவேளையில், இப்படங்கள் யாரும் பார்த்துப் பின்பற்றமுடியாத, இவரது படங்களைப் போலச் செய்யமுடியாத தன்மையையும் கொண்டிருக்கிறது.  
 

கதையின் முக்கியமான பத்திகளில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்ல; அவரது ஒற்றை மனதுடனான நோக்கம், விளக்கம், வெளிப்பாடு மற்றும் பெரும்பாலானபடங்களில் பொதுவாக நிகழாத அனைத்துக் காட்சிகளிலும் இது பிரதிபலிக்கிறது. இரண்டு முக்கியக் காட்சிகளை இணைக்க உதவும் ஒரு அத்தியாயம் கூட, ஒருபோதும் பொதுவாக இருக்காது, ஏனென்றால் ஹிட்ச்காக்கிற்கு ‘சாதாரணமான’வற்றின் மீது வெறுப்பாகயிருக்கிறது. உதாரணமாக, ஒரு நபர் சட்டச்சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டுள்ளார், ஆனால் நிரபராதி, தனது வழக்கை ஒரு வழக்கறிஞரிடம் எடுத்துச்செல்வது நமக்குத் தெரிகிறது. இது அன்றாடம் சந்திக்கிற சாதாரண நிலைமையாக இருக்கும். இதே காட்சியை ஹிட்ச்காக் கையாண்டால், வக்கீல் சந்தேகம் கொண்டவராகவும், ஈடுபடத் தயங்குவதாகவும் தோன்றும். அல்லது ஹிட்ச்காக்கின் The Wrong man திரைப்படத்தைப் போலவே, தனது வருங்காலவாடிக்கையாளருக்கு இந்த வகையான சட்டப்பணிகளில் போதிய அனுபவம் இல்லை என்றும், இந்த வழக்குக்கு சரியான மனிதராக அவர் இல்லை என்றும் எச்சரித்த பின்னரே ஒப்புக்கொள்ளலாம்.
 
இந்தக் குழப்பமான குறிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயம், பீதி சார்ந்த உணர்வு மற்றும் பதட்டம், இந்தச் சாதாரண சூழ்நிலையைச் சாத்தியமான நாடகத்துடன் முதலீடு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையின் மற்றொரு விளக்கம், ஒரு இளைஞன், தன் காதலியைத் தனது தாய்க்கு அறிமுகப்படுத்தும் வழக்கமான காட்சிக்குச் சாதாரண திருப்பம் இயற்கையாகவே, அந்த பெண், அந்த வயதான தாயைப் பிரியப்படுத்த ஆர்வமாக உள்ளார், அவர் ஒரு நாள் தனது மாமியார் ஆகலாம். அவளுடைய காதலனின் நிதானமான விதத்திற்கு முரண்பாடாக, அவள் தெளிவாக மற்றும் பதைபதைப்புடன் இருக்கிறாள். மகனின் அறிமுகப்படுத்தும் சடங்கு ஆஃப்ஸ்க்ரீனில் பின்னணியில் மறைந்து வருவதால், பார்வையாளர்கள் அந்தப் பெண்ணை வெறித்துப் பார்க்கும்போது பெண்ணின் வெளிப்பாட்டில் ஒரு மாற்றம் வருவதைக் காண்பார்கள், சினிபில்களுக்கு மிகவும் பரிச்சயமான அந்த முற்றிலும் ஹிட்ச்காக்கியன் தோற்றத்துடன் அவளை அளவிடுவார்கள். இளம்பெண்ணின் உள் கொந்தளிப்பு பின்வாங்கல் சார்ந்த சிறிய அசைவால் குறிக்கப்படுகிறது. இங்கே மீண்டும் ஒரு எளிய தோற்றத்தின் மூலம், சித்தரிப்பதில் சிறந்து விளங்கும் அவர், ஆதிக்கம் செலுத்தும் தாய்மார்களில் ஒருவரை உருவாக்குகிறார்.
இந்தக் கட்டத்தில் இருந்து, படத்தில் உள்ள குடும்பக் காட்சிகள் அனைத்தும், உணர்ச்சிப்பூர்வமாக மற்றும் தளராத முரண்பாட்டுடன் சாட்டப்படுகிறது, ஒவ்வொரு விவரமும் புதுமைஏதுமற்ற திரையைத் தவிர்ப்பதற்கான ஹிட்ச்காக்கின் உறுதியைப் பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸை உருவாக்கும் கலை என்பது, பார்வையாளர்களை உள்ளடக்கிய கலையாகவும் இருக்கிறது. இதனால் பார்வையாளர்கள் உண்மையிலேயே படத்தின் பங்கேற்பாளர்கள் ஆகிறார்கள்.
 
காட்சியின் இந்தப் பகுதியில், ஃப்லிம்மேக்கிங் என்பது இயக்குனருக்கும் அவரது படத்திற்கும் இடையிலான இரட்டை இடைவெளி அல்ல, அது பார்வையாளர்களையும் கூட சேர்த்து விளையாட வேண்டிய மூன்று வழி விளையாட்டு. திரைப்படச் சூழலில், Tom Thumb-ன் வெள்ளை கூழாங்கற்கள், அல்லது லிட்டில் ரெட் ரைடிங்-ஹூட் காடுகளின் வழியே நடப்பது போன்ற சஸ்பென்ஸ்கள், உணர்ச்சிகளை உயர்த்தவும், இதயத் துடிப்பை வேகமாக்கச் செய்ய உதவும், ஒரு கவிதாபூர்வமான வழிமுறையாகும்.
சஸ்பென்ஸில் நிபுணத்துவம் பெற்றதற்காக ஹிட்ச்காக்கைக் கடிந்துகொள்வது என்பது, ஃப்லிம்மேக்கர்களில் மிகக்குறைவான சலிப்புத்தன்மை ஏற்படுத்துவதற்காக அவர்மீது குற்றம்சாட்டுவது போன்றது;  இது, ஒரு காதலர் தனது சொந்த மகிழ்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அதைத் தனது கூட்டாளருடன் பகிர்ந்துகொள்ள வலியுறுத்துவதால்,அந்தக் காதலரைக் குறைகூறுவதற்கு ஒப்பாகும். 


ஹிட்ச்காக் சினிமாவின் இயல்பு என்னவென்றால், அரபுப் பார்வையாளர் தனது வேர்க்கடலையின் மேல் ஓட்டைப் பிரிக்க மறந்துவிடுவார், பிரெஞ்சுக்காரர் தன் பக்கத்துஇருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பொருட்படுத்துவதில்லை, இத்தாலியர் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை படம் முடியும்வரையில் நிறுத்துகிறார்,தன்னிச்சையாகத் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பவர்கள் இருமலைத் தவிர்ப்பர், ஸ்வீடர்கள் காதலிப்பதற்குச் சற்று இடைவெளி கொடுக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்ச்காக்கின் சினிமா இவ்வாறாக பார்வையாளர்களை முழுமையாக உள்வாங்கும் அம்சங்களைக் கொண்டது.
 
ஹிட்ச்காக் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுனராக உலகளவில் ஒப்புக்கொள்ளப்படுகிறார்; அவரது எதிர்ப்பாளர்கள் கூட, அவருக்கு அளிக்கப்பட்ட இப்பட்டத்தைவிருப்பத்துடன் ஒத்துக்கொள்கிறார்கள். ஆயினும் கூட, ஒரு காட்சியின் தேர்வு, அதன் கட்டுமானம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் யாவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன,மற்றும் உண்மையில், அது அந்த நுட்பத்தைச் சார்ந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லையா?
 
அனைத்துக் கலைஞர்களும் கோபித்துக்கொள்பவர்களாகவும், உள்ளடக்கத்திலிருந்து வடிவத்தைப் பிரிப்பதற்கான முக்கியமான போக்கில் சரியாகவும் இருக்கிறார்கள்.ஹிட்ச்காக்கிற்குப் பயன்படுத்தும்போது, இந்த நடைமுறை குறிப்பாக நியாயமற்றது, எரிக் ரோஹ்மர் மற்றும் க்ளாட் சாப்ரோல் ஆகியோர் தங்கள் புத்தகத்தில் சுருக்கமாக சுட்டிக்காட்டியுள்ளபடி, *ஒரு எளிய கதைசொல்லி, அல்லது வெறுமனே அழகுணர்ச்சி சார்ந்தவர் மட்டுமல்ல ஹிட்ச்காக், சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த வடிவத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். அநேகமாய், ஃப்லிம் மேக்கர்களில் இந்த விஷயத்தில் அவருடன் ஒப்பிடப்படக்கூடியவர்கள் மரியாதைக்குரிய முர்னாவ் மற்றும் ஐசென்ஸ்டீன்மட்டுமே. இங்கே, வெறுமனே வடிவம் மட்டும் இல்லை. உள்ளடக்கத்தை அழகுபடுத்துங்கள், ஆனால் உண்மையில் அதை உருவாக்குங்கள்.”
ஃப்லிம் மேக்கிங் கலையில் மாஸ்டராகத் திகழ்வது கடினம், இது பெரும்பாலும் பல மற்றும் முரண்பாடான திறமைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. பல புத்திசாலித்தனமான அல்லதுமிகவும் திறமையானவர்கள் இயக்கும் முயற்சிகள் தோல்வியுற்றதற்கான காரணம் என்னவென்றால், பகுப்பாய்வு மற்றும் தொகுத்தல் என ஒரே நேரத்தில் வேலைசெய்யும் மனம் மட்டுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு, வெட்டுதல் மற்றும் மாண்டேஜ் ஆகியவற்றின் உள்ளார்ந்த கண்ணிகளின் பிரமைகளிலிருந்து வெளியேற முடியும். ஒரு இயக்குனருக்கு,எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், அவரது திரைப்படத்தை உருவாக்கும்போது அவர் அதன் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். உண்மையில், இது எல்லா இறப்புகளுக்கும் மிகவும் பொதுவான காரணம்.
 
ஒரு படத்தின் ஒவ்வொரு வெட்டும், மூன்று முதல் பத்து வினாடிகள் வரை நீடிக்கும், இது பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் தகவல். இந்தத் தகவல் தெளிவற்றதாகவோ அல்லது புரிந்துகொள்ள முடியாததாகவோ இருக்கிறது, ஏனென்றால் இயக்குனரின் நோக்கங்கள் துவங்குவதற்குத் தெளிவற்றதாக இருந்தன, அல்லது அவற்றைத் தெளிவாகக் கூறும் திறன் அவருக்கு இல்லை. தெளிவு அவ்வளவு முக்கியமா? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இது மிக முக்கியமான பண்பு என்று மட்டுமே என்னால் கூற முடியும். இதை விளக்குவதன் வாயிலாக, இங்கே ஒரு பொதுவான உதாரணம்:”இந்தக் கட்டத்தில், பாலச்சோவ், அவர் கனடியனால் ஏமாற்றப்பட்டார் என்பதைப் புரிந்துகொண்டு,பென்சனைப் பார்க்கச் சென்றார், அவர்கள் டோல்மோசெப்பைத் தொடர்புகொண்டு அவர்களுக்கிடையில் கொள்ளையைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று முன்மொழிந்தனர் etc, etc…”
 
நூற்றுக்கணக்கான படங்களில் இந்த உரையாடல், அல்லது இதுபோன்ற தொனி கொண்ட வசனங்கள், திரையில் நடக்கிற நடவடிக்கைகள் குறித்து அலட்சியமாக, அல்லது மோசமாக, அல்லது குழப்பத்துடன் உங்களை விட்டுச்செல்கிறது. பாலச்சோவ், கனடின், பென்சன் மற்றும் டோல்மோசெஃப் பற்றி கதாசிரியர்கள் அனைத்தையும்அறிந்திருக்கும்பொழுது, பார்வையாளரான நீங்கள், சினிமாவின் அந்த முக்கியமான விதியின் காரணமாக முற்றிலும் குழப்பமடைகிறீர்கள்:
 
காட்டுவதற்குப் பதிலாக, உரையாடல் அல்லது வசனத்தின் மூலம் சொற்களைப் பிரயோகித்து என்ன கூறப்பட்டாலும் அது பார்வையாளர்களைச் சென்று சேர்வதில்லை. ஹிட்ச்காக்எல்லாவற்றையும் முற்றிலும் காட்சிகளின் மூலம் வெளிப்படுத்துவதையே தேர்ந்தெடுப்பதால், அவருக்குப் பெயர்களினால் எந்தப் பயனும் இல்லை. பாலச்சோவ், கனடின், பென்சன் மற்றும் டோல்மாச்செஃப்.
 
ஹிட்ச்காக் மீது அடிக்கடி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று என்னவென்றால், தெளிவுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில் உள்ள உள்ளார்ந்த எளிமைப்படுத்தல், அவரது சினிமா வரம்பை கிட்டத்தட்ட குழந்தைத்தனமான கருத்துக்களுக்கு மட்டுப்படுத்துகிறது. அவரது கதாபாத்திரங்களின் எண்ணங்களை படமாக்குவதற்கும், உரையாடலை நாடாமல் அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்வதற்கும் அவரின் தனித்துவமான திறனின் காரணமாக, அவர் எனது சிந்தனை முறைக்கு, ஒரு யதார்த்தமான இயக்குனர்.
 
ஹிட்ச்காக் ஒரு யதார்த்தவாதியா? சினிமாவில், மேடையில் இருப்பது போல, உரையாடல் பகுதிகள் கதாபாத்திரங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகின்றன, ஆனால் நிஜவாழ்க்கையில், மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் விஷயங்களில் எதிர்வினையாற்றுவதும், அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் மற்றும் என்ன உணர்கிறார்களோ அதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் அறிவோம். இரவு உணவு மற்றும் காக்டெய்ல் விருந்துகள் போன்ற நிகழ்வுகளில் அல்லது முன்பே அறிமுகமானவர்களுக்கிடையில் நிகழ்கிற எந்தவொரு சாதாரண சந்திப்பிலும் இது குறிப்பாக உண்மை. இதுபோன்ற எந்தவொரு கூட்டத்தையும் நாம் கவனித்தால்,விருந்தினர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படும் சொற்கள் மேலோட்டமானவை மற்றும் மிகவும் அர்த்தமற்றவை என்பது தெளிவாகிறது, அதேசமயம் அத்தியாவசியம் வேறு இடங்களில் உள்ளது; அவர்களது கண்களைப் படிப்பதன் மூலம், உண்மையிலேயே அவர்களின் மனதில் என்னயிருக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
 

இந்தச் சூழலைக் கற்பனை செய்துபாருங்கள். ஒரு வரவேற்பரையில் கவனிப்பாளராகயிருக்கிற நான், அங்கு திரு. ஒய்யைப் பார்க்கிறேன், அவர் தனது மனைவியுடன்ஸ்காட்லாந்தில் கழித்த சமீபத்திய விடுமுறை பற்றி மூன்று பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகத்தைக் கவனமாகப் பார்ப்பதன் மூலம், அவர் ஒருபோதும் திருமதி.எக்ஸின் கால்களிலிருந்து கண்களை எடுக்கவில்லை என்பதை நான் கவனிக்கிறேன். இப்போது நான், பள்ளியில் தனது குழந்தைகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிற திருமதி. எக்ஸின் இடத்திற்குச் செல்கிறேன். ஆனால், அவளோ மிஸ் இசட்டை ஓரப்பார்வையில் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கிறேன். மிஸ் இஸட்டின் குளிர்ந்த முகம் மற்றும் இளமையான பெண்ணிற்குரிய தோற்றத்தின் ஒவ்வொரு விவரத்தையும் பார்வையால் அளக்கிறாள்.
 
வெளிப்படையாக, இந்தக் காட்சியின் பொருள்/அர்த்தம் உரையாடலில் இல்லை, இது நிச்சயம் வழக்கமானதாகும், ஆனால் இந்த மக்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்? திரு.ஒய்,திருமதி. எக்ஸின் மீது உடல்ரீதியாக ஈர்க்கப்படுகிறார் என்பதையும், ஆனால், திருமதி எக்ஸ், மிஸ் இசட்டின் மீது பொறாமைப்படுவதையும் நான் பார்த்தேன்.
 
ஹாலிவுட் முதல் சினிசிட்டா வரை ஹிட்ச்காக்கைத் தவிர, வேறு எந்த திரைப்பட இயக்குனரும் அந்தக் காட்சியின் மனித யதார்த்தத்தை, நான் விவரித்ததுபோல உண்மையாகப் படம்பிடிக்க முடியாது. இன்னும் கடந்த நாற்பது ஆண்டுகளாக, அவரது ஒவ்வொரு படமும் இதுபோன்ற பல காட்சிகளைக் கொண்டுள்ளது, உரையாடலுக்கும், பிம்பத்திற்கும் இடையிலான பண் இசைவுத் திறம் விதி, முற்றிலும் காட்சியியல் ரீதியான வழிமுறைகளால் தத்ரூபமான(டிரமாடிக்) விளைவை அடைகிறது. ஹிட்ச்காக் நேரடியாகக் காட்சிப்படுத்திப் படம் எடுப்பதில், கிட்டத்தட்ட அவரோடு எவரையும் ஒப்பிடமுடியாதளவிற்கு தனித்துவமானவர், அதாவது, சந்தேகம், பொறாமை, பிறர் நலன் கண்டு எரிச்சல் மற்றும் ஆசை போன்ற நெருக்கமான உணர்ச்சிகளைக் கடத்துவதற்கு அது சார்ந்த விளக்கமளிக்கும் உரையாடலை நாடுவதில்லை. மற்றும் இங்கே ஒரு முரண்பாடு உள்ளது: இயக்குனர், தனது படைப்பின் எளிமை மற்றும் தெளிவு மூலம், உலகளாவிய பார்வையாளர்களை மிகவும் அணுகக்கூடியவர், மனிதர்களிடையே நிலவும் அதிக சிக்கலான மற்றும் நுட்பமான உறவுநிலைகளைப் படமாக்குவதில் சிறந்துவிளங்கும் இயக்குனராகவும் உள்ளார்.
 
அமெரிக்காவில், ஃப்லிம் டைரக்‌ஷன் சார்ந்த கலையின் சிறந்த முன்னேற்றங்கள், 1908 மற்றும் 1930க்கு இடைப்பட்ட காலங்களில் அடையப்பட்டன, இதில் முதன்மையாக டி.டபிள்யூ.கிரிஃபித்தைக் குறிப்பிடலாம். இவரைப் பாதித்த, மெளனத் திரைகளில் (மெளனத் திரைப்படங்களில்) கோலோச்சியவர்களில் பெரும்பாலோர், இப்போது, அவர்களில் வான்ஸ்ட்ரோஹெய்ம், ஐசென்ஸ்டீன், முர்னாவ் மற்றும் லூபிட்ச் ஆகியோர் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் உயிருடன் இருக்கிறார்கள், ஆனால் வேலை செய்யவில்லை. 1930-க்குப் பிறகு திரைப்பட ஊடகத்திற்குள் நுழைந்த அமெரிக்கர்கள், கிரிஃபித் திறந்துவைத்த வரம்பற்ற திறனைப் பிராண்டிவிட்டார்கள் என்ற உண்மையைக் கருத்தில்கொண்டு, சினிமாவில் ஒலியின் வருகையிலிருந்து ஆர்ஸன் வெல்லஸைத் தவிர்த்து, சிறந்த காட்சி உணர்திறனை எவரும் கொண்டுவரவில்லை என்ற முடிவுக்கு வருவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல என்று நான் நம்புகிறேன்.
 
சினிமா, விதியின் சில திருப்பங்களால், ஒரே இரவில் ஒலித்தடத்தை இழந்து, மீண்டும் 1895 மற்றும் 1930க்கு இடைப்பட்ட மெளனத் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவின் கலையாகமாறினால், இந்தத் துறையில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள், புதிய வேலைகளை எடுக்கவும், புதிய நுட்பங்களைப் பரிசோதிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அர்த்தத்தில், 1966 ஹாலிவுட்டில், கிரிஃபித் ரகசியங்களின் வாரிசுகளாக ஹோவர்ட் ஹாக்ஸ், ஹான் ஃபோர்டு மற்றும் ஆல்பிரெட் ஹிட்ச்காக் மட்டுமே என்று தோன்றுகிறது. ஒரு அதிசயம், அவர்கள் திரையில் இருந்து ஓய்வுபெறும்போது அந்த மரபு உயிர்வாழுமா?
 
ஐரோப்பிய சினிபில்லிஸ், மற்றும் குறிப்பாக பிரெஞ்சுக்காரர்கள் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கை ஒரு ”திரைப்பட ஆசிரியர்” என்று கருதுவது பற்றி பல அமெரிக்கர்கள் ஆச்சரியப்படுவதை நான் அறிவேன், இங்மார் பெர்க்மன், ஃபெடரிகோ ஃபெலினி, லூயிஸ் புனுவல் அல்லது ஜீன் லுக் கோதார்த் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்ற பொருளில் சொல்கிறேன். கடந்து இருபது ஆண்டுகளாக ஹாலிவுட்டில் கெளரவத்தை அனுபவித்த மற்றவர்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கர்கள் ஹிட்ச்காக்கின் பெயரை எதிர்க்கும்போது,நியூயார்க் விமர்சகர்கள் மற்றும் அவர்களின் பாரிஸிய சகாக்களின் பார்வையில் தெளிவாக வேறுபாடு உள்ளது, பெரிய ஹாலிவுட் பெயர்களில், ஆஸ்கர் “சேகரிப்பாளர்கள்”,சந்தேகத்திற்கிடமின்றி பல திறமையான நபர்கள் உள்ளனர்.
 
இன்னும், அவர்கள் விவிலிய இசைப்பாடலிலிருந்து, மேற்கத்திய உளவியலுக்கு மாறும்போது, அல்லது ஒரு போர்க் காவியங்களிலிருந்து நடத்தைமுறை சார்ந்த நகைச்சுவைக்குமாறும்போது, எளிய கைவினைஞர்களைத் தவிர வேறு எந்தப் பார்வையில் நாம் அவர்களைப் பார்க்கமுடியும், வழிமுறைகளை நிறைவேற்றுவது, அன்றைய வணிக ரீதியானபோக்குகளுக்கு ஏற்ப கடமைகளுக்குள் விழுவது? இந்த மோஷன் பிக்சர் இயக்குனர்களுக்கும் தியேட்டரில் உள்ள அவர்களது தோழர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் ஏன் நிறுவ வேண்டும்? ஒரு ஆண்டில், அல்லது ஆண்டு முழுவதும், இவர்கள் இதேபோன்ற ஒரு முறையைப் பின்பற்றிப் பழக்கப்பட்டிருக்கிறார்கள், டென்னிசி வில்லியம்ஸின் சமீபத்திய தழுவலில் பணிபுரியும்போது, வில்லியன் இங்கெ, நாடகத்தின் திரைப்பதிப்பிலிருந்து ஒரு இர்வின் ஷா சிறந்த விற்பனைக்குச் செல்லமுடியுமா?
 
”திரைப்பட ஆசிரியரைப்” போலல்லாமல், வாழ்க்கையின் மீது, மக்களின் மீது, பணம் மற்றும் அவரது வேலையின்பாலுள்ள காதலினால், இந்த ஆண்கள் வெறும் நிகழ்ச்சி – வணிகவல்லுனர்கள், எளிய தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆனால் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களா? போன்றவை குறித்த தனது சொந்தக் கருத்துக்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையினால், அவர் தூண்டப்படுகிறார். கட்டுப்படுத்துவதில் அவர்களின் விடாமுயற்சி, அசாதாரணமான சிறிய பகுதிக்கு தங்கள் சாத்தியக்கூறுகள், ஹாலிவுட் ஸ்டுடியோக்களால் வழங்கப்பட்டிருப்பினும், அவை வெற்றி மதிப்பைப் பெறுவதில் சில சந்தேகங்களையும் அனுமதிக்கிறது. அவர்களின் பணி உண்மையில் எதைக் கொண்டுள்ளது?
 
அவர்கள் ஒரு காட்சியை அமைத்து, நடிகர்களை அந்த அமைப்பினுள் நிறுத்திவிட்டு, அந்தக் காட்சியை முழுவதுமாகப் படமாக்கத் துவங்குகிறார்கள், இது கணிசமாக உரையாடலாகும், ஆறு அல்லது எட்டு வழிகளில் படப்பிடிப்புக் கோணத்தை வேறுபடுத்துவதன் மூலம், முன்பக்கத்திலிருந்து, பக்கவாட்டிலிருந்து, உயர் கோணத்திலிருந்து மற்றும்இதுபோல பல கோணத்திலிருந்து படம்பிடிக்கலாம், பின்னர், இந்தமுறையை அவர்கள் அதை மீண்டும் செய்கிறார்கள், ஃபோகஸ் மாறுபடும், அடுத்தகட்டமாக முழுக்காட்சியையும் படமாக்குவது, முதலில் ஒரு ஃபுல் ஷாட் பயன்படுத்தி, பின்பு மீடியம் ஷாட், இறுதியாக க்ளோஸ் அப் ஷாட். ஒட்டுமொத்தமாக ஹாலிவுட்டின் சிறந்த இயக்குனர்கள், அவர்களின் நற்பெயருக்குத் தகுதியற்றவர்கள் அல்ல என்பதை இது குறிக்கவில்லை. கொடுக்க வேண்டிய இடத்தில் வரவு வைக்கப்படும், அவர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சிறப்பு உள்ளது,அவர்கள் விதிவிலக்காக ஏதாவது நன்றாகச் செய்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் நட்சத்திரங்களிடமிருந்து ஒரு சிறந்த ஃபெர்பார்மன்ஸைப் பெறுவதில் சிறந்து விளங்குகிறார்கள்,மற்றவர்கள் புதிய நடிகர்களின் திறமைகளைக்கூட. வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் திறன் பெற்றிருக்கிறார்கள். சில இயக்குநர்கள் புத்திசாலித்தனமான கதைசொல்லிகள்,மற்றும் சிலர் கதையை மேம்படுத்தியதற்காகக் குறிப்பிடத்தக்க பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். ஒரு சிலர் போர் காட்சிகளைப் படமாக்குவதில் சிறந்தவர்கள், மற்றவர்கள் நெருக்கமான நகைச்சுவை வகைத் திரைப்படங்களைக் கையாள்வதில் சாமர்த்தியத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஹிட்ச்காக், என் சிந்தனை வழியில், மற்ற இயக்குனர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார், ஏனென்றால் அவர் மற்ற எல்லோரையும்விட முழுமையான ஃப்லிம்மேக்கராக உள்ளார். அவர் சினிமாவின் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கையாள்வதில் மட்டும் நிபுணர் அல்ல, ஒவ்வொரு பிம்பத்திலும், ஒவ்வொரு ஷாட்டிலும், ஒவ்வொரு காட்சியிலும் சிறந்துவிளங்கும் ஆல்ரவுண்ட்- நிபுணர். திரைக்கதையின் கட்டுமாணம், போட்டோகிராஃபி, வெட்டுதல் (படத்தொகுப்பு) மற்றும் ஒலித் தடம் (Sound Track) ஆகியவற்றில் அவர் சூத்திரதாரி,எல்லாவற்றிலும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டவர், எதையும் திறமையாகக் கையாளக்கூடியவர், நமக்கு முன்பே தெரிந்தபடி, விளம்பரத்தில் நிபுணர்!
அவர் தனது படங்களின் அனைத்துக் கூறுகளின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு கட்டத்திலும், அவரது தனிப்பட்ட கருத்துக்களை அடையாள முத்திரை குத்துவதாலும், ஹிட்ச்காக் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளார். படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இது இன்னாருடைய படம் என்றுபார்வையாளர்களால் அடையாளப்படுத்தப்படுவது ஒரு சில இயக்குனர்களுக்கே நடக்கிறது. ஏனென்றால், அவர்களது படங்களில், சினிமாவை அணுகுவதில் தனக்கென உள்ள பிரத்யேக பாணியின் வாயிலாகத் திரையில் கையொப்பத்தைப் பதிக்கிறார்கள். படம் துவங்கியவுடன் அதன் திரை கையொப்பத்தை அடையாளம்காணமுடிந்தவர்களில், ஹிட்ச்காக் சந்தேகத்திற்கிடமின்றி, இன்று அடிவானத்தில் உள்ள சில திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
சஸ்பென்ஸ் காட்சிகள் மட்டுமே எந்த வகையிலும் ஹிட்ச்காக்கின் படைப்புரிமைக்கான குறிப்புகள் அல்ல. இரண்டு நபர்களுக்கிடையேயான உரையாடலை உள்ளடக்கிய ஒருகாட்சியில், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் தோற்றத்தைக் கையாளும் தனித்துவமான வழியில், மற்றும் அவர்களது உரையாடலை மெளனமான இடை நிறுத்தங்களுடன்,எளிமைப்படுத்தப்பட்ட குறிபாலுணர்த்தும் சைகைகளால், சட்டகத்தின் வியத்தகு தரத்தினாலும் அளவிடலாம். இதுபோன்ற காட்சிகளின் வாயிலாகவும் அவரது பாணியைக்கண்டுணர முடியும்.
 
இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று ஆதிக்கம் செலுத்துகிறது, அதிகமாகக் காதலிக்கிறது அல்லது மற்றதை அதிகமாகப் பொறாமைப்படுத்துகிறது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தும் கலை, ஹிட்ச்காக்கியன் என்பது தெளிவாக உள்ளது. இது உரையாடலின் உதவியை நாடாமல், ஒரு குறிப்பிட்ட டிரமாட்டிக் மனநிலையை உருவாக்கும் கலை, இறுதியாக,நமது சொந்த உணர்திறனின் தளத்தில், ஒரு உணர்ச்சியிலிருந்து இன்னொரு உணர்ச்சிக்கு நம்மை வழிநடத்தும் கலை,
ஹிட்ச்காக்கின் படைப்புகளுக்கு ‘முழுமையானது’ என்ற சொற்பிரயோகத்தை நான் பயன்படுத்தினால், அதற்கான காரணம், அதில் ஆராய்ச்சி மற்றும் புதுமை, ஸ்தூலமான மற்றும்சுருக்கமான உணர்வு, தீவிரமான நாடகத்தின் உணர்வு மற்றும் நகைச்சுவையின் நுட்பமான வியாபாரக்குறி என இரண்டையும் நான் காண்கிறேன். உலகமுழுதும் சென்றடைந்த வில்லியம் வைலரின் பென்ஹர் போன்று மற்றும் கென்னத் ஆங்கரின் ஃபயர்வொர்க்ஸ் போன்ற ரகசியமான படம், போன்று ஹிட்ச்காக்கின் படங்கள் ஒரே நேரத்தில் வணிகரீதியானவையாகவும் சோதனைக்குரியதாகவும் இருந்தன.
சைக்கோ என்பது உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களை அணி திரட்டிய படம்; இருப்பினும், மூர்க்கத்தனமான மற்றும் தடுக்கவியலாத உரிமத்தில், இது துணிச்சலான16மி.மீ-ஐவிட மிக அதிகமாக செல்கிறது. youthful avant-garde ஃப்லிம்மேக்கர்களின் கட்டுரைகள் எப்படியோ தணிக்கைகளைக் கடந்ததில்லை. North by Northwest படத்தில் பயன்படுத்தப்பட்ட சில மினியேச்சர்களும், தி பேர்ட்ஸ் படத்தில் உள்ள சில ஸ்பெஷல் எபெக்ட்ஸ்களும் பரிசோதனை சினிமாவிற்கான அனைத்து கவிதைச் சுவையையும் கொண்டிருக்கின்றன, அவை Jiri Trnka தனது கைப்பாவையால் (பப்பட்ஸ்) சாத்தியமாக்குகிறார், மேலும் நார்மன் மெக்லாரன் தனது நான்கு நிமிட சிறிய காட்சிகளை, நேரடியாக படத்தில் வடிவமைக்கிறார்.
 
ஒரு இயக்குனர், மேற்கத்திய பாணியில் உருவாக்க முயற்சிக்கும்போது, அவர் ஜான் ஃபோர்டைப் பற்றி அவசியம் யோசிக்கத் தேவையில்லை, ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் ரவுல் வால்ஷ் ஆகியோரால் இந்த வகையிலான சமமான திரைப்படங்கள் உள்ளன. ஆனால், அவரே ஒரு த்ரில்லர் அல்லது சஸ்பென்ஸ் படத்தை உருவாக்கத் திட்டமிட்டால், ஹிட்ச்காக்கின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றை அவர் வாழவைக்க விரும்புகிறார் என்பது அவரது இதயத்தில் இருக்குமென்பதில், நீங்கள் உறுதியாக இருக்கலாம். சமீபத்திய ஆண்டுகளில்,வெர்டிகோ, நார்த் பை நார்த் வெஸ்ட் மற்றும் சைக்கோ போன்ற திரைப்படங்களின் எண்ணற்ற சாயல்களைக் காணலாம்; அது ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இல்லாவிட்டாலும்,ஹிட்ச்காக்கின் வேலைகள் உலக சினிமாவை நீண்ட காலமாக பாதித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆழ்மனப்பான்மையின் பிரஸ்தாபம், பாணி அல்லது கருப்பொருளைத் தாங்கியிருத்தல், பெரும்பாலும் நன்மை பயக்கும், எப்போதாவது மோசமாக அறிவுறுத்தப்படும், இந்த செல்வாக்கு, ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்ட திரைப்பட இயக்குனர்களின் படைப்புகளில் பிரதிபலிக்கிறது.
 
மற்றவர்களில், Henri Verneuil (Any Number Can Win), Alain Resnais (MurieL, La Guerre Est Finie), Philippe de Broca (That Man from Rio),Orson Welles (The Stranger), Vincente Minnelli (Undercurrent), Henri-Georges Clouzot (Diabolique), Lee Thompson (Cape Fear), Rene Clement (Purple Noon, The Day and the Hour), Mark Robson (The Prize), Edward Dmytryk (Mirage), Robert Wise (House on Telegraph Hill, The Haunting), Ted Tetzlaff (The Window), Robert Aldrich (Baby Jane), Akira Kurosawa (High and Low), William Wyler (The Collector), Otto Preminger (Bunny Lake Is Missing), Roman Polanski (Repulsion), Claude Autant-Lara (Enough Rope, Over Here), Ingmar Bergman (The Virgin Spring), William Castle (Homicide), Claude Chabrol (The Cousins, The Third Lover, MarieChantal contre le Dr. Ka), Alain Robbe-Grillet (L'Immortelle), Paul Paviot (Portrait Robot), Richard Quine (Liaisons Secretes),' Anatole Litvak (Five Miles to Midnight), Stanley Donen (Arabesque, Charade), Andre Delvaux (L'Homme au Crane Rase), Francois Truffaut (Fahrenheit 451),இதில் ஜேம்ஸ் பாண்ட் தொடரைக் குறிப்பிடவில்லை, இது ஹிட்ச்காக்கின் அனைத்து வேலைகளின் தோராயமான கேலிச்சித்திரத்தைத் (சுருக்கமான பிரதிபலிப்பு) தவிர வேறொன்றுமில்லை, குறிப்பாக North by Northwest படத்தில், ஜேம்ஸ் பாண்ட் பாணியைப் பார்க்கமுடியும்.
 
அபாயகரமான போற்றுதலுக்கு இங்கே எந்தக் கேள்வியும் இல்லை, ஹிட்ச்காக்கின் அனைத்து வேலைகளும் சரியானவை மற்றும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை என்று நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால், அவரது சாதனைகள் இப்போது வரை, மிகக்குறைவாக மதிப்பிடப்பட்ட நிலையில், ஹிட்ச்காக்கிற்கு அவர் தகுதியான முன்னணி பதவியை வழங்குவதற்கான சரியான நேரம் இது என்று நினைக்கிறேன். அப்போதுதான் அவருடைய படைப்புகளை மதிப்பீடு செய்ய நாம் உள்ளே செல்ல முடியும்; உண்மையில், தொடர்ந்து வரும் பக்கங்களில் அவரது சொந்த விமர்சனக் கருத்துக்கள் அத்தகைய புறநிலை ஆய்வுக்கான தொனியை அமைக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய லேடி வனிஷஸின் இளமை மற்றும் உற்சாகமான வீரியத்தில் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள், பிரிட்டிஷ் விமர்சகர்கள் இத்தகைய தன்னார்வ நாடுகடத்தலுக்கு ஒருபோதும்மன்னிக்கவில்லை. 
 

காலப்போக்கில் நிகழ்ந்த அவசியமான விளைவுகளுக்கு வருத்தப்பட வேண்டுமா, அவற்றைத் திரும்பிப் பார்ப்பது, அதற்காக விசனப்படுவது பயனற்றதல்லவா? தி லேடிவேனிஷஸின் திறமையான, இளம் ஹிட்ச்காக், ஜேம்ஸ் ஸ்டீவர்டின் உணர்ச்சிகளைப் படம்பிடித்திருக்க முடியாது, இது வேலையின் முதிர்ச்சி மற்றும் காதல் மற்றும் இறப்புக்கு இடையிலான உறவுநிலை குறித்த பாடல் வர்ணனை.
 
ஃப்லிம் க்வார்டர்லியில் வெளியிடப்பட்ட ஒரு விமர்சனக் கட்டுரையில் சார்லஸ் ஹிகாம், ஹிட்ச்காக்கை ”நடைமுறைக் கோமாளி, தந்திரமான மற்றும் உலகியலுக்குத் தக்கவாறு நடக்கிற இழிந்தவர்.” என்று விவரிக்கிறார். அவரது “நாசீசிஸத்தையும், அதன் இணக்கமான குளுமையையும்” மற்றும் ”கருணையற்ற கேலிக்கூத்துகளையும்” குறிப்பிடுகிறார். ஹிகாமின் கூற்றுப்படி, ஹிட்ச்காக்கிறகு ”உலகைப் பற்றிய கடுமையான அவமதிப்பு” உள்ளது, மேலும் அவரது திறமை, ”அவர் ஒரு அழிவுகரமான கருத்தைத் தெரிவிக்கும்போது மிகவும் சிறப்பாகக் காட்டப்படுகிறது.” அவர் (ஹிட்ச்காக்) ஒரு முக்கியமான விடயத்தை எழுப்பினாலும், ஹிட்ச்காக்கின் நேர்மையையும், வாழ்க்கையைப் பற்றிய அவரது தீவிர அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்குவதில் திரு. ஹிகாம் நிச்சயம் தவறாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
 
ஒரு வலிமையான நபர் உண்மையிலேயே இழிந்தவராக இருக்கலாம், அதேநேரத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த இயல்பில், வெறுப்பு மனப்பான்மை என்பது வெறுமனே முன்னால்கொண்டுவரப்படுகிறது. வான் ஸ்ட்ரோஹெய்ம் தனது ஆழ்ந்த மனோபாவங்களை மறைப்பதற்காக, வெறுப்பு மனப்பான்மையைப் (இழிந்த தன்மையைப்) பயன்படுத்துகிறார்;ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் விஷயத்தில், அவரது அவநம்பிக்கையை மறைக்க உதவும் முகப்பில் இது உள்ளது.
 

லூயிஸ் ஃபெர்டினாண்ட் செலின், மக்களை இரு பிரிவுகளாகப் பிரித்தார், தன் திறமைகளை வெளிக்காண்பிக்க விரும்புகிறவர்கள் (கண்காட்சியாளர்கள்) மற்றும் அவற்றைஉற்றுப்பார்ப்பவர்கள் (பார்வையாளர்கள்); இதில் ஆல்பிரெட் ஹிட்ச்காக் பிந்தைய வகையைச் சேர்ந்தவர். அவர் வாழ்க்கையில் ஈடுபடவில்லை; அவர் வெறுமனே அதைக்குறித்துச் சிந்திக்கிறார். ஹடாரி போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது, ஹோவர்ட் ஹாக்ஸ், வேட்டை மற்றும் சினிமா மீதான இரட்டை ஆர்வத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார். ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் வாழ்க்கையில் ஒரு ஆர்வம் மட்டுமே உள்ளது, இது ரியர் விண்டோவின் மீதான தார்மீக (ஒழுக்கவியல் சார்ந்த) தாக்குதலுக்கு அவர் அளித்த பதிலில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.”எதுவுமில்லை”, அவர் சொன்னார், “நான் அந்தப் படத்தை எடுப்பதை தடுத்திருக்கலாம், ஏனென்றால் சினிமா மீதான என் காதல் எந்தஒழுக்கத்தைவிடவும் வலிமையானது.” ஹிட்ச்காக்கின் சினிமா மெனக்கெட்டு உயர்த்தப்படவேண்டிய அவசியமில்லை என்றாலும், அது அழகு மற்றும் தூய்மை பற்றிய மனிதனின் இழிவைக் கண்டிக்கும், திகிலூட்டும் உளத் தெளிவு மூலம் மட்டுமே அது நம்மை எப்போதும் வளமாக்குகிறது.
 
இங்க்மர் பெர்க்மானின் சகாப்தத்தில், சினிமா ஒரு கலை வடிவம், இலக்கியத்திற்கு இணையானது போன்ற கருத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டால், ஹிட்ச்காக் அதற்குஉரிமையானவர் என்று நான் பரிந்துரைக்கிறேன் – மற்றும் காஃப்கா, தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் போ போன்ற பதட்டமான கலைஞர்களிடையே, ஏன் அவரை வகைப்படுத்த வேண்டும்?தங்கள் சொந்த சந்தேகங்களின் வெளிச்சத்தில், பதட்டத்தின் இந்தக் கலைஞர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை நமக்குக் காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது;அவர்களின் நோக்கம், அவர்களை வேட்டையாடும் கவலைகளை/ பதட்டங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வதுதான். தெரிந்தோ, தெரியாமலோ இது நம்மைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு வழி, எல்லாவற்றிற்கும் மேலாக இது எந்தவொரு கலைப்படைப்பின் அடிப்படை நோக்கமாகும்.