ஹிட்ச்காக் & த்ரூபோ – 4

த்ரூபோ: தி லாட்ஜர் (The Lodger), உங்கள் முதல் முக்கியமான திரைப்பட முயற்சி என்று நான் நம்புகிறேன்.

ஹிட்ச்காக்: அது மற்றொரு கதை. தி லாட்ஜர்-தான் முதல் உண்மையான “ஹிட்ச்காக் திரைப்படம்”. திருமதி. பெல்லோக் லென்டெஸின் நாவலான தி லாட்ஜரை அடிப்படையாகக் கொண்ட ’ஹு இஸ் ஹி? (Who Is He?)’ என்றொரு நாடகத்தைப் பார்த்தேன். வீட்டு உரிமையாளருக்கும், அவரது வீட்டில் குடியிருப்பவருக்கும் இடையே நிகழும் சம்பவங்களின் படி இக்கதை அமைக்கப்பட்டிருந்தது. புதிதாக வீட்டிற்குக் குடிவந்தவர் ஜாக் தி ரிப்பர் போன்று தொடர் கொலைகளைச் செய்யக்கூடிய சீரியல் கில்லரா? இல்லையா? என்பதைக் காண வீட்டு உரிமையாளர் ஆச்சரியத்தோடு செயல்படுகிறார். நான் கதையை முற்றிலும் அவளது பார்வையிலிருந்து மிக எளிமையாக நடத்திச்சென்றேன். அப்போதிருந்தே இரண்டு அல்லது மூன்று ரீமேக்குகள் இந்தக் கதையை வைத்து எடுக்கப்பட்டன, ஆனால் அவை மிகவும் விரிவானவை. 

Image result for The lodger shooting spot hitchcock

த்ரூபோ: உண்மையில், கதாநாயகன் குற்றமற்றவர், அப்பாவி. அவர் ஜாக் தி ரிப்பர் (சீரியல் கில்லர்) அல்ல. 

ஹிட்ச்காக்: அதுதான் சிரமம். முன்னணிக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த இவொர் அவெல்லா (lvor Avella) அப்போது மிகப்பெரிய நட்சத்திர நடிகர். இங்கிலாந்தில் மேட்னி சிலை எனும் அளவிற்கு பகற்காட்சிகளில் அவரது படங்கள் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகரை, கதாநாயகனாக நடிக்கவைக்கிறபொழுது, இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நட்சத்திர நடிகர் கதாநாயகான நடிக்கையில், படத்தில் அவர் நிச்சயம் வில்லனாகயிருக்க முடியாது என்று பார்வையாளர்கள் முன்பே ஊகிக்கிறார்கள். எனவே, இதனால் பெரும்பாலும் கதையின் மையம் பாதிக்கப்படுகிறது. 

த்ரூபோ: நான் சேகரித்த விஷயங்களின் படி, கதாநாயகன், ஜாக் தி ரிப்பராக (சீரியல் கில்லராக) மாற, நீங்கள் விரும்பியிருக்கிறீர்களல்லவா?

ஹிட்ச்காக்: அவசியமில்லை. ஆனால், இம்மாதிரியான ஒரு கதையில், அதிகம் பரிச்சயமில்லாத நடிகர் இரவில் புறப்பட்டு வெளியே செல்வதை நான் விரும்பியிருக்கலாம், அதனால், அவர் ஒரு சீரியல் கில்லர் அல்ல, என்று நிச்சயமாக நாம் ஒருபோதும் அறியமாட்டோம். ஆனால், அதே கதாபாத்திரத்தில் ஒரு பெரிய நட்சத்திர நடிகர் நடிக்கிறபொழுது, ”அதை அவர் செய்யமாட்டார்” என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திர நடிகர் எனும் அந்தஸ்தத்துக்குரியவர் மோசமான தகாத செயல்களில் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கை பார்வையாளர்களிடம் உள்ளது. எனவே, ஒரு பெரிய நட்சத்திரத்தை இம்மாதிரியான கதைகளில் கதாநாயகனாக நடிக்க வைக்கிறபொழுது, நாம் பார்வையாளர்களிடத்தில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக உச்சரிக்கிறோம்: “அவர் ஒரு நிரபராதி”.

த்ரூபோ: உங்களுக்குத் தெரியும், அந்தக் கேள்விக்கான பதிலை பொதுமக்களுக்கு வழங்கத்தவறிய ஒரு முடிவை நீங்கள் கருத்தில் கொள்வதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 
ஹிட்ச்காக்: இதைப் பொறுத்தவரையில், உங்கள் சஸ்பென்ஸ் இந்தக் கேள்விகளையெல்லாம் சுற்றியிருந்தால்: “அவன் ஜாக் தி ரிப்பரா? இல்லையா?” என்ற கேள்விக்கு, “ஆம், அவர் ஜாக் தி ரிப்பர்தான்.” என்று பதிலளிப்பீர்கள், இதிலிருந்து நீங்கள் ஒரு சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை இது வியத்தகு தருணங்கள் அல்ல. ஆனால், நாங்கள் வேறு திசையில் சென்று அவர் ஜாக் தி ரிப்பர் அல்ல என்று காட்டினோம். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு Suspicion(1941) படம் எடுத்தபொழுது, கேரி கிராண்டுடன் (Cary Grant) இதேபோன்றதொரு பிரச்சினையைச் சந்தித்தேன். கேரி கிராண்ட் ஒரு கொலைகாரனாக இருக்க முடியாது. 

த்ரூபோ: அவர் மறுத்துவிட்டாரா?

ஹிட்ச்காக்: இல்லை., அவசியமில்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் நிச்சயமாக மறுத்துவிட்டிருப்பார்கள். ஜெர்மனியில் எனது காலகட்டத்தைத் துவக்கி வைத்த முதல் படம் தி லாட்ஜர் (The Lodger). இந்தப் படத்திற்கான முழு அணுகுமுறையும் என்னுடன் இயல்பாக இருந்தது. இந்தப் படத்தில்தான் எனது பாணியை முதன்முதலாக பயிற்சிசெய்தேன். உண்மையில், கிட்டத்தட்ட ’தி லாட்ஜர்’-தான் எனது முதல் படம் என்று நீங்கள் சொல்லலாம். 

த்ரூபோ: காட்சியியல் ரீதியாக புதிய புனைவுகளை மிகச்சிறந்த வகையில் வெளிப்படுத்திய படம். நான் அதை மிகவும் ரசித்தேன். 

ஹிட்ச்காக்: உண்மையில், நான் ஒரு தூய்மையான கதையை எடுத்துக்கொண்டேன், முதல்முறையாக, முற்றிலும் காட்சியியல் அடிப்படையில் கதைசொல்லலை முன்வைத்தேன், சொல்லவேண்டிய விஷயங்களைக் காட்சிரீதியாக வெளிப்படுத்த முயன்றேன். லண்டனில், ஒரு குளிர்கால பிற்பகலில் பதினைந்து நிமிடங்கள் எடுத்தோம், சுமார் ஐந்து – இருபதுக்குத் துவங்கினோம், பொன்னிற கேசங்களைக் கொண்ட ஒரு பெண், வீறிட்டுக் கத்திக்கொண்டிருக்கும் அப்பெண்ணின் முகத்தை நெருக்கமாகக் காண்பிப்பதிலிருந்து காட்சியைத் திறந்தோம். நான் அதை ஒளிப்பதிவு (காட்சியமைப்பு) செய்த விதம், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஒரு கண்ணாடித் தாளை எடுத்து, அந்த இளம்பெண்ணின் தலையைச் சுற்றிலும், கேமராச் சட்டகத்தை நிரப்பும்வரை அவளுடைய தலைமுடி பிரகாசிக்கும் வண்ணம் நிரப்பியிருந்தேன். அவளுடைய பிரகாசிக்கும் கூந்தலால் தாக்கப்படுவதற்காக நாங்கள் பின்னாலிருந்து கண்ணாடியை எரித்தோம். பின்பு, இன்றிரவு, கோல்டன் கர்ல்ஸ், என்ற இசை நாடகத்தை விளம்பரப்படுத்தும் மின்சார அடையாளத்தின் பிரதிபலிப்பு தண்ணீரில் ஒளிரும் வகையில் வெளிப்படுவதை அடுத்த ஷாட்டில் காண்பித்தோம். இளம்பெண் நீரில் மூழ்கிவிட்டாள், பின்பு அவள் நீரிலிருந்து வெளியேற்றப்பட்டு கரைக்கு இழுத்துக்கொண்டுவரப்படுகிறாள். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு உடன் நிற்பவர்கள் திகிலடைந்த பார்வை, இங்கு ஒரு கொலைச்செயல் நிகழ்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. காட்சியினுள் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள், பின்னர் பத்திரிக்கையாளர்கள் வருகின்றனர். செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் தொலைபேசியை நோக்கி நகரும்பொழுது கேமராவும் அவரைப் பின்தொடர்கிறது. அவர் ஒரு உள்ளூர் நிரூபர் அல்ல, ஆனால் அவர் ஒரு கம்பி சேவை (wireservice) அலுவலர், அம்மனிதர் தனது அலுவலகத்தைத் தொலைபேசியில் அழைக்கிறார். அந்தக் கொலைச் செய்தி பத்திரிக்கைகளில் பிரசுரமாவதும், பின்பு அது நகரத்தின் மக்களைச் சென்றடைவதையும் காட்சியாகக் காண்பிக்கிறோம். செய்தி அந்நகரம் முழுவதும் பரவுகிறது. 

முதலில், அந்தச் செய்தியானது, கம்பி-சேவை இயந்திரத்தில் தட்டச்சு செய்யப்படுவதால், அதிலிருந்து சம்பவம் தொடர்பான சில வாக்கியங்களை நம்மால் படிக்கமுடிகிறது. பின்னர் அது டெலிடைப்(teletypes)களுக்கு அனுப்பப்படுகிறது. க்ளப்புகளில் உள்ளவர்கள் அந்தச் செய்தியைப் படிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என்று கற்றுக்கொள்கிறார்கள். பின்னர் வானொலி அறிவிப்பு ஒன்று இது தொடர்பாக ஒலிபரப்பாகிறது. உங்களுக்குத் தெரியும், இறுதியாக இது டைம்ஸ் சதுக்கத்தில் உள்ளதுபோல, ஒரு மின்சார செய்திப் பலகையில் நகர்கிறது. ஒவ்வொரு முறையும், கொலை சம்பந்தமாக, படிப்படியாகக் கூடுதல் தகவல்களைத் தருகிறோம், இதன் மூலம் நீங்கள் குற்றத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். 
அந்த மனிதன் பெண்களை மட்டுமே கொலை செய்கிறான். அதுவும் எப்போதும் அழகான, இளம் பொன்னிறமான கூந்தலைக் கொண்ட பெண்கள். அம்மனிதன், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும், தவறாமல் இளம் பெண்களைத் தாக்குகிறான். இன்றுவரை, அவன் எத்தனை பெண்களைக் கொன்றிருக்கிறான், அவனது நோக்கங்கள் குறித்த ஊகம். அவர் ஒரு கருப்பு அங்கி அணிந்துகொண்டும், கருப்புப் பையைச் சுமந்தவாறும் சென்றுவருகிறார். அந்தப் பையில் என்ன இருக்கிறது? 

தகவல் தொடர்பிற்கான அனைத்து வெவ்வேறு வழிகளிலும், கொலைச்செயல் குறித்த தகவல்கள் பரவத் துவங்குகின்றன. இறுதியாக மாலை செய்தித்தாள்கள் வீதிகளில் வினியோகிக்கப்படுகின்றன. இப்போது நாம், இச்சம்பவம், பல்வேறு நபர்கள் மீது செலுத்தியிருக்கிற பாதிப்பின் விளைவுகளைக் காட்டுகிறோம். அழகான கூந்தல்களைக் கொண்ட பெண்கள் பயந்துபோகிறார்கள். கரிய முடிகளைக் கொண்ட இளம்பெண்கள் சிரிக்கிறார்கள். அழகு நிலையங்களிலும் அல்லது வீட்டிற்குச் செல்லும் நபர்களிடையேயும் இதற்கான எதிர்வினைகளைப் பார்க்கிறோம். சில பொன்னிற கூந்தல் கொண்ட பெண்கள், கருமையான சுருட்டை முடிகளைத் திருடி, அவற்றைத் தன் தொப்பிகளின் கீழே மறைத்துக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு, தனக்குக் கரிய சுருட்டைமுடி இருப்பதுபோலத் தோன்றவேண்டுமென்பதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். 

உங்கள் பேனாவை ஒரு நிமிடம் என்னிடம் கொடுங்கள். நாங்கள் ஒருபோதும் அதைச் சரியாகப் பெறமுடியவில்லை என்றாலும், ஒரு காட்சியை (ஒரு ஷாட்டை) உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். லண்டனின் சிறிய செய்தி வேனின் பின்புறத்தைக் காட்டினேன். அந்த வேனின் இரு பின்புற சன்னல்களும் நீள்வட்ட வடிவில் அதாவது முட்டை வடிவில் இருக்கும். வேனின் முன்பக்கத்தில் டிரைவரும் அவரது துணையும் என இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர். சன்னல்களின் வழியாக அந்த இரு மனிதர்களின் தலையின் உச்சிப்பாகம் மட்டும் தெரியும். அவற்றைப் பார்க்கிறீர்கள். வேன் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கமாக அசைந்து செல்லும்பொழுது, அந்த வேனைப் பார்க்கையில், இரண்டு கண்களைக் கொண்ட ஒரு முகமும், அதில் கருவிழிகள் அசைவது போன்ற தோற்றமும் உண்டாகும். துரதிர்ஷ்டவசமாக, அது பலனளிக்கவில்லை. 

இப்போது நாம் வீட்டிலுள்ள ஒரு பெண்ணைப் பின் தொடர்கிறோம். அவ்வீட்டில் அவளது குடும்பமும், ஸ்காட்லாண்ட் யார்டில் இருந்து வந்திருக்கக்கூடிய அவளது காதலனும் இருக்கிறார்கள், அவர்கள் அவரைச் சீண்டி விளையாடுகிறார்கள், “நீங்கள் ஏன் இன்னும் ஜாக் தி ரிப்பரைக் கைது செய்யவில்லை?” என்று அவர்கள் சிறிது நேரம் கிண்டல் செய்கிறார்கள், சிரிக்கிறார்கள். விளக்குகள் மங்கலாகிவருவதால், அந்தச் சூழ்நிலை மாறுகிறது. அப்போது அம்மா, தன் கணவனிடம் திரும்பி, “எரிவாயு தீர்ந்துகொண்டே போகிறது. தயவுசெய்து மீட்டரில் ஒரு ஷில்லிங் வைக்கமுடியுமா?” என்கிறாள். 

Image result for the lodger movie hitchcock

இப்போது எல்லாயிடங்களிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அப்போது யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. அம்மா, கதவைத் திறப்பதற்காகச் செல்கிறார். இப்போது காட்சியில் விரைவாக ஒரு கட் (Cut) நிகழ்ந்து, மீட்டருக்குள் ஷில்லிங் போடப்படுவதை விரைவான இடைவெட்டுக் காட்சியாகக் காண்பிக்கிறோம். இப்போது அடுத்த ஷாட் மீண்டும் அம்மாவிற்குத் திரும்புகிறது. அம்மா கதவைத் திறக்கிறாள், விளக்குகள் எரியத் துவங்குகின்றன. கருப்பு அங்கியில் ஒரு நபர் எதிரே நிற்கிறார், ”வாடகைக்கு அறைகள் விடப்படுகின்றன” என்று பொருள்படும் அடையாளப் பலகையை அந்நபர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, இத்திரைப்படம் துவங்கி முதல் பதினைந்து நிமிடங்கள் வரையிலும், நான் கதாநாயகனைக் காட்சிக்குள் கொண்டுவரவில்லை. அவர்கள், அந்நபர் தங்கப்போகிற அறையைக் காட்டுகிறார்கள். இப்போது, தந்தை, உரத்த சப்தத்துடன் நாற்காலியில் இருந்து விழுகிறார். புதிதாக வந்திருப்பவர், இந்த சந்தத்தால் பாதிக்கப்படவில்லை, எந்தப் பதட்டமும் அடையவில்லை. இதனால் அவர் மற்றவர்களுக்குச் சந்தேகமான நபராகத் தோன்றுகிறார். அவரது அறைக்குள், அந்நபர் குறுக்கும் நெடுக்குமாக அலைகிறார். 

அந்நாட்களில், எங்களால் திரைப்படத்தில் ஒலியைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நான் ஒரு தட்டு கண்ணாடித் தளத்தை வைத்திருந்தேன், இதன் மூலம் லாட்ஜர் (புதிதாகக் குடிவந்தவர்) முன்னும் பின்னுமாக நகர்வதை நீங்கள் பார்க்க முடிந்தது, கீழேயுள்ள சரவிளக்கும் அந்நபருடன் சேர்ந்து நகர்வதால், அந்நபர் குறுக்கும் நெடுக்குமாக அலைவது சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கீழேயிருந்து பார்க்கிறபொழுது, சரவிளக்கு அசைவதும், அறையில் லாட்ஜர் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், ஒரே சட்டகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இயற்கையாகவே, இந்தக் காட்சி சாதனங்களில் பல இன்று முற்றிலும் மிதமிஞ்சியதாகவும், பயன்படுத்த ஏற்கத்தகாத வகையிலும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், அதற்குப் பதிலாக நாம் ஒலி விளைவுகளைப் (sound effects) பயன்படுத்துகிறோம். மாடிப்படிக்கட்டுகளில் ஒருவர் ஏறிவரும்பொழுது ஏற்படுகிற ஒலி/சப்தங்கள் மற்றும் பல. 

Image result for the lodger movie hitchcock

த்ரூபோ: எப்படியிருந்தாலும், உங்கள் சமீபத்திய திரைப்படங்களில், சிறப்பு விளைவுகள் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போதெல்லாம் நீங்கள் காட்சியில் ஒரு உணர்ச்சியை உணர்த்த வேண்டியபோது மட்டுமே ஒரு விளைவைப் (Effect) பயன்படுத்துகிறீர்கள், அதே நேரத்தில் கடந்த காலத் திரைப்படங்களில் ஸ்பெஷல் எபெக்ட்களை நீங்கள் வேடிக்கைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால், அவற்றை வேடிக்கைக்காக மட்டுமே வைத்திருந்தீர்கள். இப்போது நீங்கள் கண்ணாடித்தளம் வழியாக ஒருவர் நடப்பதைக் காண்பிப்பீர்கள் என்று நான் கற்பனை செய்யமுடியவில்லை. 

ஹிட்ச்காக்: அதுதான் என் பாணியின் (ஸ்டைலின்) மாற்றம். இன்று நான் வெறுமனே அசைந்தாடுகிற அந்தச் சரவிளக்கை மட்டுமே காட்சிப்படுத்துவேன். 

த்ரூபோ: நான் இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், உங்கள் திரைப்படங்களில் ஏராளமான, அவசியமற்ற விளைவுகள் (எபெக்ட்ஸ்) இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். மாறாக, உங்கள் கேமரா வேலைகள் அதாவது ஒளிப்பதிவு வேலைகள் கண்களுக்குப் புலப்படாத தன்மையில் தோன்றுவதாக நான் நம்புகிறேன். பல திரைப்படங்களிலும், காட்சியில் கேமராவை சாத்தியமில்லாத இடத்தில் வைத்துப் படம்பிடிப்பதன் மூலம் இயக்குனர் ஹிட்ச்காக் தனக்கான ஸ்டைலை (அல்லது Hitchcock’s Touch) வழங்க முயற்சிக்கிறார். நான் இதை நினைவில் வைத்திருக்கிறேன், உதாரணமாக, பிரிட்டிஷ் இயக்குனர் லீ தாம்சன் (Lee Thompson). அவரது ஹிட்ச்காக்கியன் திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஒன்றில், நட்சத்திரம் (கதாநாயகன்) குளிர்சாதன பெட்டியிலிருந்து ஏதோவொன்றை எடுக்கச் செல்கிறது. அதைப் போதுமான விந்தையான அளவில் காட்சிப்படுத்த, கேமரா குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே, பின்புறத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து காட்சி பதிவாகிறது. ஒருவேளை நீங்கள் இந்தக் காட்சியை எடுத்தால், இந்த வழியில்தான் காட்சியைப் படம்பிடிப்பீர்களா?

ஹிட்ச்காக்: நிச்சயமாக இல்லை. அது, தீப்பிழம்பின் பின்னால் கேமராவை வைத்து, அந்த நெருப்பின் கணப்பு வழியாகக் காட்சியைப் படம்பிடிப்பது போன்றது.  

த்ரூபோ: தி லாட்ஜரின் இறுதிக் காட்சியில், கதாநாயகனுக்குக் கைவிலங்கிடப்பட்டபொழுது, அவன் தாக்கிக் கொலை செய்யப்படப் போகிறான் என்பதைக் காட்சி அறிவுறுத்துகிறது.

ஹிட்ச்காக்: ஆம், அவன் தடுப்புக் கம்பிகளின் மீது ஏறமுயன்றபோது அப்படி நடக்கிறது. உளவியல்ரீதியாக, நிச்சயமாக, கைவிலங்குகள் குறித்த யோசனை, ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஏதோவொன்றோடு பிணைக்கப்பட்டுள்ளது… இது பற்றிவழிபடுவதின் ஏதோவொரு பகுதியில் உள்ளது. இல்லையா?

த்ரூபோ: எனக்குத் தெரியவில்லை, ஆனால் உங்கள் திரைப்படங்களில் கைவிலங்குகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு வழி இருப்பதை நான் கவனித்தேன். 

ஹிட்ச்காக்: சரி, மக்கள் கைவிலங்கிடப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவதைக் காட்ட விரும்புகிற செய்தித்தாள்களின் வழியைப் பாருங்கள். 


Image result for the lodger movie hitchcock

த்ரூபோ: உண்மை. சொல்லப்போனால், சில நேரங்களில் அவர்கள் கைவிலங்குகளை ஒரு வெள்ளைக் கோடுடன் வட்டமிடுகிறார்கள். 

ஹிட்ச்காக்: நியூயார்க் பங்குச்சந்தையின் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டபொழுது, செய்தித்தாள்களில் அதைக் காட்டிய விதம் எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஒரு கறுப்பினத்தவருடன் கைவிலங்கு இடப்பட்டார். பின்னர் நான் அதை எனது தி தர்ட்டி நெய்ன் ஸ்டெப்ஸ் (The Thirty-nine Steps – 1935) படத்தில் பயன்படுத்தினேன். 

Image result for the 39 steps hitchcock
Figure 1 THE 39 STEPS

த்ரூபோ: ஆம், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் கைவிலங்கால் இணைக்கப்பட்டிருப்பார்கள். நிச்சயமாகக் கைவிலங்குகள் மிகவும் உறுதியானவை – சுதந்திரத்தை இழந்துவிட்டதை அதி உடனடியாக உணர்த்தும் அடையாளமாக இருக்கின்றன.
 
ஹிட்ச்காக்: இங்கு ஒரு பாலியல் தாத்பரியமும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பாரிஸில் உள்ள துணை அருங்காட்சியகத்தை (Vice Museum) நான் பார்வையிட்டபோது, கட்டுப்பாடுகளின் மூலம் பாலியல் துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்ததற்குக் கணிசமான சான்றுகள் இருப்பதை நான் கவனித்தேன். நீங்கள் எப்போதாவது அங்கு செல்ல முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக அவர்களிடம் கத்திகள், கில்லட்டின் (தலை வெட்டும் இயந்திரம்) மற்றும் அனைத்து வகையான தகவல்களும் உள்ளன. சரி, போகட்டும், தி லாட்ஜர் படத்தில் வருகிற கைவிலங்கு தொடர்பான காட்சிகளுக்குத் திரும்பிச் செல்வோம். ஒரு நாள் முழுவதும் கைவிலங்கிடப்பட்டு, அந்நாள் முழுவதும் அதிலேயே செலவழித்து, அந்நாளில் அவர் ஓடும் அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி வெளிப்படையாகச் சொல்லும் ஒரு மனிதனைப் பற்றி எழுதியிருந்த ஜெர்மன் புத்தகம் ஒன்றினால் இந்த யோசனையில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈர்க்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். 

Related image
Figure 2 Leo Perutz

த்ரூபோ: அது, லியோ பெருட்ஸ் (Leo Perutz) எழுதிய ஃப்ரம் நெய்ன் டூ நெய்ன் (From Nine to Nine) புத்தகமாக இருக்குமா? 1927ஆம் ஆண்டில் முர்னாவ் அதன் திரை பதிப்பைச் செய்ய ஆர்வமாக இருந்தார் என்று நம்புகிறேன். 

ஹிட்ச்காக்: ஆம், அந்தப் புத்தகமாக இருக்கலாம். 

Image result for Nine to Nine by Leon Perutz 

த்ரூபோ: கைவிலங்கிடப்பட்ட மனிதன், கம்பி வேலிகளில் சிக்கி, கூடியிருந்தவர்களின் இடிபாடுகளுக்கு ஆளாகி, அவர்களால் தண்டிக்கப்பட்டு பின்பு அதற்கு எதிராக, சிலரால் அம்மனிதர் ஆதரிக்கப்படும் காட்சியில், நீங்கள் கிறிஸ்துவின் உருவத்தைத் தூண்ட முயற்சித்தீர்களா?

Image result for the lodger
Figure 3 The Lodger

ஹிட்ச்காக்: மக்கள் அவரைத் தூக்க முயற்சிக்கும்போது, அவரது கைகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனவா? யதார்த்தமாகவே, அந்த எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

த்ரூபோ: இவையனைத்தும் தி லாட்ஜர் (The Lodger)தான், உண்மையிலேயே உங்கள் முதல் ஹிட்ச்காக்கியன் திரைப்படம் என்ற உண்மையைச் சேர்க்கிறது, முதன்மையாக இந்தக் கருப்பொருளின் மூலம், உங்கள் பிற்காலத்தைய ஏறக்குறைய எல்லா படங்களிலும் நிகழ்ந்திருக்கிறது: அவர் நிரபராதி (அப்பாவி), எனினும் அவர் செய்யாத குற்றத்திற்காகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். 

 ஹிட்ச்காக்: ஏனென்றால், அப்பாவியான மனிதன் குற்றம் சாட்டப்படுகிறான் என்ற கருப்பொருள் பார்வையாளர்களுக்கு ’அதிக ஆபத்து’ எனும் உணர்வை அளிக்கிறது. ஓடிக்கொண்டிருக்கிற உண்மையான குற்றவாளியைக் காட்டிலும், அந்த நிரபராதியுடன் (அப்பாவியுடன்) தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதென்பது பார்வையாளர்களுக்கு எளிதானது. நான் எப்போதுமே பார்வையாளர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். 

த்ரூபோ: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது இரகசியங்களின் மீதான பார்வையாளர்களின் மோகத்தைத் திருப்திப்படுத்தும் ஒரு கருப்பொருள், அதே நேரத்தில் கதாபாத்திரத்துடன் தங்களை அடையாளம் காணவும், பொருத்திப்பார்க்கவும் அனுமதிக்கிறது. உங்கள் படைப்புகளில் பெரும்பாலானவை, சாதாரண சூழ்நிலைக்கு வெளியே அதாவது அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்ட (அசாதாரண சூழ்நிலையில் ஈடுபடுத்திக்கொள்கிற) ஒரு சாதாரண மனிதனைப் பற்றியதாகவே இருக்கிறது. 
தி லாட்ஜர் (The Lodger) தான் நீங்கள் திரையில் தோன்றிய முதல் படம் அல்லவா?

Image result for The lodger  hitchcock appearance
Figure 4 தி லாட்ஜர் திரைப்படத்தில், ஆல்பிரெட் ஹிட்ச்காக் தோன்றும் காட்சி.

ஹிட்ச்காக்: ஆம். அது சரி. நான் ஒரு செய்தியறையில் அமர்ந்திருந்தேன்.*

த்ரூபோ: உங்களது ஒவ்வொரு படத்திலும், நீங்கள் திரையில் தோன்றுகிறீர்கள். நீங்கள் இதை ஏமாற்றுவதற்காக/ வேடிக்கைக்காகச் செய்தீர்களா? இதுவொரு மூட-நம்பிக்கையா? அல்லது எளிமையாக, போதுமான கூடுதல் ஆட்கள் இல்லை என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்தீர்களா?

ஹிட்ச்காக்: இது நிச்சயமாக பயனைக் குறிக்கோளாகக் கொண்டதே; நாங்கள் திரை (ஃப்ரேம்) இடத்தை நிரப்ப வேண்டியிருந்தது. பின்னர் அதுவே ஒரு மூட நம்பிக்கை மற்றும் இறுதியில் அது ஒரு ஏமாற்றுத்தனமாக/ வேடிக்கையாக மாறியது. ஆனால், இப்போது இது மிகவும் தொந்தரவாக இருக்கிறது, மேலும் முதல் ஐந்து நிமிடங்களுக்குள் என்னைத் திரையில் காண்பித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஏனென்றால், இதனால் மக்கள் திரைப்படத்தின் மீதமுள்ள பகுதிகளை எந்தவித கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். 

Image result for The lodger  hitchcock appearance

Related image

*ஹிட்ச்காக், இதே படத்தின் பிற்பாதியிலும் தோன்றுவதை நாம் அடையாளம் காணமுடியும். கதாநாயகன் எல்வோர் நோவெல்லா காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, தூக்கப்படும்பொழுது, கூடிநின்று வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களில் ஒருவராக ஹிட்ச்காக் தோன்றுகிறார். ஒரு தொப்பி அணிந்தவாறு, கம்பி வேலியின் மீது சாய்ந்தபடி ஹிட்ச்காக் நிற்பதை நாம் புகைப்படத்தில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

த்ரூபோ: தி லாட்ஜர் (The Lodger) மிகப்பெரிய வெற்றிப்படம் என்று எனக்குப் புரிகிறது. 

ஹிட்ச்காக்: இது முதலில், வினியோக நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அவர்களின் விளம்பரத்துறைத் தலைவருக்கும் திரையிட்டுக் காட்டப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்த்தபின்னர், முதலாளியிடம் தங்கள் அறிக்கையை அளித்தனர்: ”அதைக் காட்ட இயலாது. மிகவும் மோசமானது. படம் பயங்கரமாக இருக்கிறது.” 

இரண்டு நாட்களுக்குப் பிறகு மூத்த தலைமை அதிகாரி அதைப் பார்க்க ஸ்டுடியோவுக்கு வந்தார். அவர் வரும்போது நேரம் இரண்டு முப்பது மணி. திருமதி.ஹிட்ச்காக்காலும் என்னாலும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வரையில் ஸ்டுடியோவில் காத்திருக்க முடியவில்லை, எனவே அங்கிருந்து வெளியேறி ஒன்றரை மணிநேரம் லண்டனின் தெருக்களில் நடந்தோம். இறுதியாக, நாங்கள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு திரும்பிச் சென்றோம். எங்கள் உல்லாச நடை ஊர்வலம் ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுவரும் என்றும், ஸ்டுடியோவில் உள்ள அனைவருமே இதற்காக எங்களைச் சூழ்ந்துகொண்டு நற்செய்தி கூறுவார்கள் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், அவர்கள் சொன்னது: “முதலாளி இது பயங்கரமானது என்று கூறுகிறார்.” மேலும் அவர்கள் படத்தை அலமாரியில் வைத்துவிட்டு, நோவெல்லோவின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில், செய்யப்பட்ட முன்பதிவுகளை ரத்துசெய்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் படத்தைப் பற்றி இன்னொரு கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டு, படத்தில் சில மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்தனர். நான் இரண்டாவதைச் செய்ய ஒத்துக்கொண்டேன். படம் திரையிடப்படத் துவங்கிய கூடிய விரைவிலேயே, அது இன்றுவரை, உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் என்ற பாராட்டைப் பெற்றது. 

தொடரும்…