எனக்கு என் படம்தான் முக்கியம், அதுக்காக எது வேணும்னாலும் செய்வேன்



ஸ்ரீதரை அறிமுகப்படுத்திய வீனஸ் பிக்சர்ஸ் ரத்னம் அவர்களின் மகன் மணிரத்னம், சுஜாதா பிலிம்ஸ் அதிபர் ஜி.வெங்கடேஸ்வரனின் தம்பி மணிரத்னம் திரையுலகில் இயக்குநராக பரிமளிக்க என்ன பாடுபட்டார் என்பதை தெளிவுபடுத்திக் கூறிய பேட்டி…

“பாரதிராஜா, ராஜ்கண்ணு, பாலசந்தர் சார் எவ்வளவோ பேரை பார்த்தோம். பல நடிகர்களையும் போய் பார்த்தோம். எதையாவது யாரையாவது Convince பண்ணிடலாங்கற நம்பிக்கையில் நான் ட்ரை பண்ணினேன். ஸ்ரீராமுடன் சேர்ந்து ட்ரை பண்ணேன்…”

யாருமே உதவி செய்யவோ, சிலர் உள்ளே அனுமதித்து பேசவோ கூட முன்வராத நிலையில்-
கோபம்தான் அதிகமாக வந்தது, அப்ப நான் ஒரு லிஸ்ட் தயார் பண்ணினேன்… Revenge List… பழிவாங்க பட்டியல் தயாரித்தேன். என்னைக்காவது நான் பெரிய ஆளா – பேசப்படற ஆளா வந்தா…”

ஆவேசமும், ஆத்திரமும் ஒருங்கிணைந்து அயராது உழைத்து, தென்னகத் திரையுலகில் தனி சிம்மாசனம் அமைத்து வெற்றிக்கோலோச்சி வருபவர் மணிரத்னம். அவரிடம் கேட்ட கேள்வி:

“உங்க படங்கள்லே – வரதராஜ முதலியார் உங்களை ரொம்பவும் பாதிச்சிருக்கார். ‘உணரு’வில் கொஞ்சம் ட்ரை பண்ணி, கொஞ்சம் கூடViolent ஆகி, “பகல் நிலவு” உடையாராகி, அதன் முழு உருவில் வேலு நாயகராகி, அந்த Full Exploitation-க்குப் பிறகு ‘அக்னி நட்சத்திரத்’திலே ஜி. உமாபதி, ‘தளபதி’யில் மீண்டும் பிறவி எடுத்திருக்கிறார். ஏன் அப்படி?”

கொஞ்ச யோசிக்க நேரம் எடுத்துக்கொள்வது, மணிரத்னம் ஒரு நீண்ட விளக்கத்திற்கு ஆயத்தம் ஆகிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Image result for Mani ratnam old look"


இதோ மணிரத்னத்தின் பதில்:

“உணரு”வில் அந்த சாயல் இருந்ததா சொல்ல முடியாது. ‘பகல் நில’விலே ஒரு கேரக்டர் Form ஆயிடுச்சு. நம்ப படங்கள்லே நிறைய வில்லன்களைப் பார்த்திருக்கோம். அசோகன், நம்பியார், வீரப்பன் போன்றவர்கள். அதே மாதிரி வில்லத்தனம், அவங்க ஆயிரம் படத்திலே பண்ணினாலும் அதை Similarity-ன்னு சொல்லமாட்டோம். ஏன்னா நாம் Accept பண்ணிக்கிட்டோம். ஒருமுறை வேஷ்டி கட்டிக்கிட்டு, ஒரு சாதாரண, சராசரி மனிதன், கெட்ட காரியங்களைப் பண்றான்னு காட்டினா… அதே மாதிரி இன்னொரு படத்திலே பார்த்தவுடன் Similarity, சாயல்னு குதிக்கிறோம். குத்திக் காட்டுறோம். நம்ப தமிழ்நாட்டிலே இருக்கிற நடமாடுகிற ஒரு Earthy Person அப்படீன்னா உடனே இப்படி ஒரு பிரச்னை வந்துடுது. என்னைப் பொறுத்தவரை Under world பத்தி படம் பண்ணனும்னா அதை Realistic-ஆ பண்ணனும்னு நெனைச்சா இந்த Problem Face பண்ணியாகணும். இப்படி சொல்லுவாங்கண்ணும் தெரியும். என்னால முடிஞ்ச வரைக்கும் Lot of Variations, மாறுபாடு காட்ட முயற்சி பண்ணியிருக்கேன். இதையே ஒரு சூட்டு கோட்டு போட்டு, வெளிநாட்டு கார்லே வந்து இறங்கற மாதிரி காட்டியிருந்தா யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாங்க. சொல்லட்டும்… It won’t affect the film, any way.

இரண்டாவது பாய்ண்ட் என்னன்னா refining Something- எதையாவது சீர்படுத்துவது ஒன்றுண்டு. ‘பகல் நில’விலே இருந்ததை விட ‘நாயக’னிலே அதை refine பண்ணியிருக்கேன். அதையே Main-ஆ வெச்சு பண்ணியிருக்கேன். As you say, அதை total exploitation-ன்னு சொல்ல முடியாது… இன்னும் அந்த கேரக்டரை refine பண்ணலாம்னு எனக்கு பட்டுது… 

“தளபதி”யிலே இருக்கிற பாத்திரப் படைப்பிலே – முதலிலேயே தீர்மானித்த Variation (வித்தியாசம்) என்னான்னா ‘நாயக’னிலே நாயகர் ஒரு determinant man. எதையும் சமாளிக்கும் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவன் மனைவியோட சாவை அவனால் சமாளிக்க முடியும். மகனோட சாவை தாங்கிக்க முடியும். மகளோட பிரிவை அவனால் ஜீரணிச்சுக்க முடியும். His Own Death-ஐயும் அவனாலே Handle பண்ண முடியும். Very strong character. Whereas, ‘தளபதி’யிலே வர்ற பாத்திரம், நாயகனை விட நிறைய மனித தன்மையைச் சேர்த்திருக்கேன். அவனுக்குள்ளே பலவீனம் இருக்கு. அவனுக்குள்ளே குற்றவுணர்வு இருக்கு. அவன் ஒப்புக்கொள்கிறான். ‘உன்னளவுக்கு என்னாலே இருக்க முடியாது’. இன்னும் கொஞ்சம் ரத்தமும் சதையும் கலந்து, இயற்கையாக படைச்சிருக்கேன். That refinement is enough for me to show the Differentiation. இதைத் தாண்டினா, Similar-ன்னு சொன்னா… அதைப்பத்தி நான் கவலைப்படலே.” வெளித்தோற்றத்தை விட உள்ளுணர்வைத்தான் பெரிசா நினைக்கிறேன்.


Image result for Mani ratnam old look"

“நாயகனிலே இருந்த Nobility ’தளபதி’யிலே இருக்குன்னு நினைக்கறீங்களா?”

“Correct… அதைத்தான் செஞ்சிருக்கேன்.. நாயகனிலே ரொம்ப Clear Character. தளபதியிலே ஒரு Grey Tone இருக்கு. அந்தாளோட Weakness இருக்கு… சின்ன Meanness இருக்கு. அவன் தப்பு பண்றான். There are more shades of Realism. தளபதியிலே நாயகனிலிருந்த Glorification-ஐ குறைச்சிருக்கேன். நம்ப கண் முன்னே தெரிகிற சாதாரண மனுஷனா காட்டியிருக்கேன்.”

நீண்ட விளக்கத்திற்குப் பிறகு, மற்றொரு கோணத்தில் கேள்வி எழுப்பக் கருதினோம்.

“குதிரைகள் உங்க படங்களிலே தவிர்க்க முடியாத, தவிர்க்க விரும்பாத Back Drop, பின்னணியாக இருக்கிறது. ‘பகல நில’விலே stud Farm. ’இதய கோயி’லிலே பாட்டின் பின்னணியில் குதிரைகள்… நாயகன்லயும் இருக்கு. அக்னி நட்சத்திரத்திலே சண்டைக் காட்சியில் குதிரைகள். இப்போ தளபதியிலே காதல் காட்சியிலும் குதிரை! குதிரை இளமை, வேகம், செக்ஸ் இவற்றின் குறியீடாகச் சொல்லலாம். அந்த முறையிலே Symbolic ஆக இதைப் பயன்படுத்தறீங்களா?”

“குதிரை Sex Symbol-ன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது. Symbolic ஆக அதை அமைக்கலே. எனக்கு குதிரைகளைப் பிடிக்கும். வேகமா நகர்ற கேமராவிலே, Speeding Horses ஒரு அழகான Visual-ஆக அமையும். அதைத்தான் காட்டியிருக்கேன். இன்னும் அதைக்கூட முழுசா காட்டலேன்னு நினைக்கறேன்” என்று சிரித்துக் கொண்டே கூற, நமக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது. (Wait for some horse shots!)

“உங்க படங்கள்லே மழைக்காட்சிகள் Repeated ஆக இடம்பெறுது. தளபதியிலேருந்து பின்னோக்கிப் பார்த்தால் Almost எல்லா படத்திலேயும் மழையிலே நனைவாங்க… பாடுவாங்க… சண்டை போடுவாங்க… பெரிய சீன் கூட மழையிலே நடக்குது… மழை உங்களுக்கு ஒரு Obession! பீம்சிங் படங்கள்லே ரயில் போற காட்சி தப்பாம இடம்பெறும்… Sentiment. அதுமாதிரி Conspicuouse-ஆ இடம்பெற மழையும் Sentiment-தானா?

“மழை ஒரு Dramatic Element. அதை சந்தோஷத்துக்கும் உபயோகிக்கலாம். Conflict, சோகம், Confrontation! பல வகையிலே அதைப் பயன்படுத்தலாம். இந்த மாதிரி பல விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். மழைதான்நம்ப கண்ணுக்குத் தெரியுது. காற்றைப் பயன்படுத்தியிருக்கேன். All these add a lot of feel to it. இயற்கையின் கோரமான காற்று, மென்மையான மழை, அழகான மலை, வெயில், அமைதியான இரவு எல்லாமே part of the film தொடர்ந்து அதை Use பண்ணத்தான் போகிறேன்.”

“பாடல்கள் உங்கள் படங்களிலே ஒரு Plus Point. இளையராஜா இருக்கறதனாலேயே அப்படி அமைஞ்சிடறதா சொல்ல முடியாது. அவரை Inspire பண்ணினாத்தான் இவ்வளவு இயல்பாக காட்சியோடு ஒட்டிய பாடல்கள் பிறக்க முடியும். காட்சி எடுத்தபின் அதற்கு re-recording பண்ணிய மாதிரி, அவ்வளவு உணர்ச்சி மாற்றங்களை, Transformation of theme கூட பாடல் காட்சிகளிலே பார்க்கிறோம். எப்படி அது…? இசையறிவு உங்களுக்கு இருப்பதாக கொள்ளலாமா, Being a alumnus from KalakShethra”.

“என்னைப் பொறுத்தவரை Music-லே Knowledge, Training எதுவுமே இல்லை. என்னோட Strength, பலமே அதுதான்.”

“Because of your Modesty or…?”

“No modesty. Honestly. என்னுடைய Music Sense ரொம்ப கம்மி.”

“So நீங்க இசையமைப்பாளரை முழுமையா நம்பி ஒப்படைச்சுடறீங்க?”

“இல்லை நான் என்னுடைய Judgement-ஐ நம்பி, கதையும் Situationனும் என்கிட்ட தெளிவா இருக்கு. அந்த சூழ்நிலைக்கு இளையராஜாவால் பிரமாதமாக எதையோ தரமுடிகிறது. Brilliant, indeed அது நமக்கு சரிப்படலேன்னா, கேட்டா அவர் நாலைஞ்சு வித்தியாசமான ட்யூன்களை கொடுக்கிறார்… கொடுக்க முடியுது அவராலே… Very Fast., கொட்டிக் கிடக்கிறதிலே நம்ம என்ன பொறுக்கிக்கறோங்கறதிலேதான் இருக்கு”,

“சினிமாவிலே நுழையறதுக்காக என்ன பயிற்சி எடுத்து இருப்பீங்க. நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வர்லே… பாலசந்தர் சார் Freshஆக சினிமாவுக்கு வந்தார்… அவருக்குக் கூட Abundant Stage experience, நாடக அனுபவம் இருந்தது. நீங்க, நம்மளாலே, Script Detailedஆக பண்ண முடியுங்கற ஒரே asset-ஐ வெச்சுக்கிட்டு டைரக்டராயிடலாம்னு நெனைச்சீங்களா?”

“ஒண்ணு தெளிவாக தெரியும். டைரக்டரா வரணும்னு அசிஸ்டண்ட் டைரக்டரா வந்து, கொஞ்ச கொஞ்சமா டைரக்டர் தகுதிக்கு வரணும். இல்லே. ஒரு Script பண்ணி, கதாசிரியரா வந்து டைரக்டராகணும். என்னாலே அசிஸ்டண்டா வந்து… நோ… ஏற்கனவே படிப்பை முடிச்ச, வேலையெல்லாம் பார்த்து அப்புறமா எடுத்த முடிவு இது. திரும்பவும் ஒரு அஞ்சு வருஷம் வீணடிக்க.. எனக்கு முடியாது. பொறுமை இல்லே. அதனாலே நான் Short Cut எடுத்தேன்”

“அதற்காக உங்களை எப்படி equip பண்ணீங்க?”

கேள்வி அவரை சென்றடையவில்லை என்று தோன்றியது… அவரது சிறிது நேர மெளனம் அதைத் தெளிவுபடுத்தியது. எனவே கேள்வியை மாற்றிக் கேட்கிறோம்.

Image result for Mani ratnam old look"

“அதாவது வெறும் Asthetic Sense மட்டும் இருந்தாலே டைரக்டராக முடியும்… இல்லே அதுக்கு Technical Knowledge-ம் அவசியம்னு நெனைக்கிறீங்களா?”

“நம்ப ஊர்லே ஒரு கதை சொல்லத் தெரியணும்… அதுக்கப்புறம் தான் டெக்னிக் எல்லாம். எனக்கு குருதத்தோட படம் பிடிச்சுது. அந்த Standard அடையணும்னு நெனைச்சேன். அந்த Style of Cutting பிடிச்சுது; அந்த Camera Movement பிடிச்சுது. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு பிடிச்சதுதானே என்னாலே reflect பண்ணமுடியும். அதை மாதிரி எனக்கு என்னென்ன பிடிக்காதோ, அதையெல்லாம் நான் தவிர்க்க முயற்சி பண்றேன். நான் இவ்வளவு படம் பார்த்ததில்லே, எனக்கு இந்தாளு இப்படி act பண்ணினது பிடிக்கல்லேன்னு வெச்சுக்குங்க. I make sure that King of thing Doesn’t come in my film. ஒரு நல்ல படத்திலேருந்து என்ன கத்துக்க முடியுமோ, அதைப்போல, அதை விட அதிகமாகவே ஒரு மோசமான படத்திலேருந்தும் கத்துக்க முடியும்.

“எனக்கு சுத்தமா சினிமா தெரியாது… அப்போ ஒண்ணுமே தெரியாது. படம் பார்க்கும்போது, படம் நல்லா இல்லேன்னா, எனக்கு ஒண்ணும் தெரியல்லேன்னாலும் இதை விட என்னாலே நல்லா எடுக்க முடியும்னு தோணும்.

“நான் யார்கிட்டேயும் அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்க்கலே. அதனாலே, யாரும் என் படத்திலே தப்பு கண்டுபிடிக்கக் கூடாது. Grammar- தெரியாம எடுத்துட்டான். தப்பு தப்பா எடுத்துட்டான்னு யாரும் சொல்லக்கூடாதுன்னு… I am very Conscious. சர்வ ஜாக்கிரதையா இருக்கேன்.

“எப்படி அந்த Knowledge உங்களுக்கு கெடைச்சுதுன்னுதான் கேக்கிறோம்” இடைமறித்துக் கேட்டோம்.

“ஒண்ணு மத்த சினிமாங்க பார்த்து. ரெண்டு கொஞ்சம் படிச்சு. மூணு நெறைய தப்பு பண்ணி… இது என்னோட முதல் படம். கொஞ்சம் தப்பு வந்துடுச்சு மன்னிச்சுக்குங்கன்னு சொல்ல முடியாது. No one is tolerant in theatre. தப்பை மன்னிக்க யாரும் தயாரா இருக்க மாட்டாங்க. சிலசமயம் தப்பு பண்ணித்தான் Correct பண்ணிக்க முடியும். விழுந்தாத்தான் நடக்க முடியும். தண்ணியிலே இறங்கினாத்தான் நீச்சல் கத்துக்க முடியும். இன்னும் நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. நீங்க சொல்றீங்க நெறைய மழை வருது… குதிரை ஓடுதுன்னு”- என்று நம்மை ஒரு ‘குத்து’ குத்துகிறார் மணிரத்னம்.
”By nature, நீங்க, Soft Spoken. உங்க Thoughts, Sentiments எல்லாமே ரொம்ப எளிமையா இருக்கு. ஒரு சாதாரண அம்பாசிடர் கார்லே போறீங்க. Not a Rover. சின்ன வீட்டிலே குடியிருக்கீங்க. Not Palatial Bungalow. Simple மனைவி… Spartan Life. ஆனா படங்களிலே ரொம்ப Colossal-ஆ நினைக்கிறீங்க. செய்றீங்க. எல்லாவற்றையும் பெரிசா, பூதாகரமா செய்யணும்னு.”

“ஒரு உதாரணம் காட்டுங்க, Single out?.”

“நாயகன்லே கூட கமல்ஹாசன் Group அந்த பங்களாவுக்குள் நுழைந்து, அழிச்சாட்டியம் பண்றதை - ஒரு உதாரணமா சொல்லலாம்.

“அந்தக் காட்சியிலே Impactதான் ரொம்ப முக்கியம். அதை Colossal-ன்னு சொல்ல முடியாது. இருபத்து நாலு மாடி கட்டிடத்திலேருந்து கீழே தூக்கி எறியப்படறதை அப்படிக் கொஞ்சம் பெரிய அளவிலே காட்டினாதான் அந்த திகைப்பு, த்ரில் இருக்க முடியும். கோபக்கார பசங்க கொஞ்சம் பேரு ஒரு பங்களாவிலே நுழைஞ்சு… அழிச்சாட்டியம் பண்றதுன்னு சொன்னீங்க இல்லே… அப்படி ஒரு Impression ஏற்படுத்தணும்னா அதை அப்படித்தான் எடுத்தாகணும். இது ரொம்ப Simple-ஆ பண்ணனுமா, Effectiveஆ பண்ணனுமான்னு நான் யோசிக்கிறதில்லே. No Choice, No alternative. Effective-ஆ, Forceஆ பண்ணி ஆகணும். ஏன்னா அது அவ்வளவு முக்கியமான காட்சி. பிரம்மாண்டமா பண்ணமாட்டேன். அதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சாதாரண Action Scene-ஐ விட அதிலே கொறைச்சலாத்தான் செலவு பண்ணியிருக்கேன். என்னோட Framing, Visuals இவைதான் அப்படி பிரமிக்க வைக்குது. Colosalன்னு தோணவைக்குதுன்னா I can’t Help it. அதிலே எனக்கு பெருமையும் கூட.”

மீண்டும் வாய்விட்டு சிரிக்கும்படி அமைந்தது அவருடைய பேச்சு. Who says he Doesn’t have the sense of humour!

“பலபேர் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிற ஒரு கேள்வியை – குறையா காணுகிற ஒரு விஷயத்தை- இப்போ கேட்கலாம்னு நினைக்கிறோம். நாயகன்லே சில காட்சிகள்லே, அக்னி நட்சத்திரத்திலே முழுக்க முழுக்க… அதையே அஞ்சலியிலும், இப்போ தளபதியிலேயும் Lighting ஒரு Characterஆக இருக்கு. ஒரு Distortion கலந்த emotion அதனாலே ஏற்படுத்தவா?”

“அப்படீன்னு நான் நினைக்கலே.”
“People are made to be aware of the lighting. என்னுடைய குற்றச்சாட்டு இதுதான். சாதாரணமாக ஒருத்தன் பேசிக்கிட்டிருக்கிற காட்சியிலே, பின்னாலே ஒருத்தன் நடந்து போகக்கூடாதுன்னு சொல்றோம். இந்த Distraction-ஐ மனசிலே வெச்சுதான் அப்படி சொல்றோம். அதே மாதிரிதான் வெளிச்சம். எங்கே அதிகமா இருக்குதோ அங்கேதான் நாம பார்க்கிறோம். That is, the centre of attention. உங்க படங்கள்லே, ஒரு கதாபாத்திரத்தின் முகத்திலே இல்லாத வெளிச்சம் பக்கத்திலே இருக்கிற ஒரு பாத்திரத்தின் மேலே இருக்கும்போது, அந்த பாத்திரம் நம்பளை Distract பண்ணுது”

“அது Different School. நீங்க நிக்கிற போது, பின்னாலே வேறே ஆட்கள் நகரக்கூடாதுன்னு சொல்றது ஒரு விதமான School. அவ்வளவுதான். ஆனா என் படத்திலே பத்து பதினஞ்சு பேர், அப்படி இப்படி Cross பண்றதை பார்த்திருப்பீங்க”
“அதை நீங்க purposeful-ஆ பண்றீங்க… Inviting. நீங்க சொல்றமாதிரி பின்னாலே இருக்கிறவங்களும் நிப்பாங்க, நடப்பாங்க. அதனாலே Cutting விஷயங்களிலேயும் உங்களுக்கு Problems வராது. ஆனா-”

“listen இப்போ படத்திலே ஒரே ஒரு எடத்திலே நீங்க சொல்றமாதிரி, Lighting இருந்தா அது Distract பண்ணனும்.. Disturb பண்ணனும். ஆனா படம் முழுக்க அப்படியே இருந்தா அதை Distractionன்னு Cheap-ஆ சொல்லக்கூடாது. That is the style. என்னைப்பொறுத்தவரையிலே – ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் visual-ஆ வித்தியாசம் இருந்தா எனக்குப் பிடிக்கும். Cleanஆ Straightஆ பழைய பாணியிலே செய்யறதுதான் சரின்னா என்னால ஒத்துக்கமுடியாது. நான் தப்பு பண்ணலாம்; ஆனா டிரை பண்ணனும்னு நினைக்கிறேன்.

“ ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் கதையிலே மட்டும் வித்தியாசம் காட்டுறதோட நிறுத்திக்காம, தோற்றத்திலே வித்தியாசம் காட்டறேன். இசையிலே வித்தியாசம் காட்டுறேன்”
“மெளன ராகம் எடுக்கும்போது அது ஒரு வீட்டுக்குள்ளே நடக்கற கதை, Mostly. அதனாலே Visual Monotony வரக்கூடாதுன்னு, Smooth Style-ல பண்ணினோம். அதுக்கு அடுத்து ‘அக்னி நட்சத்திரம்’ முற்றிலும் மாறுபட்டது. Pop Film. இளைஞர்களுக்காக – Fast Phased, Slightly futuristic Look. இசையிலும் அதைப்பார்க்கலாம். காட்சி அமைப்பிலே, எடிட்டிங்கிலே, பாத்திரப் படைப்பு, எல்லாத்திலேயும் அது இருக்கும். அதே மாதிரி போட்டோகிராஃபியிலேயும் ஒரு மாறுதல் காட்டினோம்.

”இப்படி Different-ஆ பண்ணினதாலேயே எல்லார் கண்ணிலேயும் பட்டுது. Everybody was willing to comment. அக்னி நட்சத்திரம் நாங்க பண்ண ஆரம்பிக்கும்போது நிறைய பேர் குறை சொன்னாங்க. பிரசாத்திலே நாங்க Rush ப் ஓட்டு பார்க்கும்போது ஆபரேட்டர் கீழே வந்து என்னசார் படம் எடுத்திருக்கீங்க… இப்படி Focusலே இல்லாத மாதிரி Blurஆ… ஆபரேட்டர்காரங்களுக்கு கெட்டபேரு வாங்கித் தருவீங்கபோலிருக்கு…’ன்னு ஒரேயடியா கத்திட்டு போயிட்டாரு.

“இந்த மாதிரி வித்தியாசமா பண்ணும்போது, கொஞ்சம் பயம் resistance இருக்கும். ஆனால், அதைத்தாண்டி அதை பார்வையாளர்கள் ஒத்துக்கிட்டாங்கன்னா-”
“No, முயற்சி பண்றதுன்னு வந்தா… Towards Betterment ஆகத்தான் பண்ணலாம். இப்படி” என்று முடிப்பதற்குள் சற்று சூடேறிய மணிரத்னம்.

“நீங்களும் நானும் வித்தியாசமான லெவல்லே இருந்து சினிமாவை பார்க்கிறோம். நாம ஒரே கருத்துகொண்டவங்களா இருக்க முடியாது. ஓ.கே?” என்று மீண்டும் மெர்குரி இறங்கி-

“ஒரு படத்திலே இருக்கிற Close upஐ தூக்கி இன்னொரு படத்திலே போடலாம்னா அது Waste. அப்படீன்னா போட்டோகிராஃபிங்கிறது Photo Record பன்ற மிஷின் – டேப் ரிக்கார்டர் மாதிரி ஆயிடுது. அதிலேயும் ஒரு கதை சொல்லணும்னு நெனைச்சா, அது படத்திற்குப் படம் வித்தியாசப்பட்டுத்தான் இருக்கணும். இந்தப் படத்திற்கு இருக்கிற Mood”

மணிரத்னம் சொல்லவந்த அந்த விஷயத்தை மேலும் elaborate பண்ண வேண்டாமென்று முடிவுசெய்தவர் போல்-
“ஏன் நாம Rerecording music போடறோம். ஏன்னா அது ஒரு mood கொடுக்குதுன்னு. அதை மாதிரி visuals கூட ஒரு moodஐ கொடுத்தாகணும். அக்னி நட்சத்திரத்துக்கு ஜாலி மூட் தேவைப்பட்டது. அதை ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஒத்துக்கலேங்கறதுக்காக அதை செய்யாமெ இருக்கிறதோ, ஒத்துக்கிட்டாங்கன்னு அதையே செய்துக்கிட்டிருக்கிறதோ என்னோட nature அல்ல. I am going to try as many visual kinds as possible.”

Image result for Mani ratnam old look"

ஒரு பெரிய திடமான கருத்து எண்ணம் அவருடைய அழுத்தமான பேச்சில் வெளிப்படுகிறது.

அவரை எப்படி நம் வழிக்கு இழுப்பது என்று புரியாமல் கொஞ்சநேரம் குழம்புகிறோம். ஓ.கே… இப்படிக் கேட்போமே…

“சார். நடிப்பைப் பற்றி சொல்லும்போது, இயற்கையாக, இயல்பாக நாம் எப்படி பேசுவோமோ, செய்வோமோ அதே மாதிரி செய்வதை best acting சிறந்த நடிப்பு என்கிறோம். பார்க்கிறதை, பார்க்கிற மாதிரி கொடுப்பதுதானே Best Photography என்று சொல்ல வேண்டும்?

“பார்க்கிற மாதிரி நூறு படம் வருதுல்லே சார். Let me be different. ஏன் என்னையும் அவங்களை மாதிரி இருக்க Compel பண்றீங்க. You are thrusting too much on me” என்று சொல்லி சிரித்ததனால் மணிரத்னம் அதை real senseல் எடுத்துக்கொண்டார் என்று கருதவேண்டியிருக்கிறது.

“ஒரு குறிப்பிட்ட சீனுக்கு ஒரு குறிப்பிட்ட Costume போடச்சொல்வேன். ஏன் நம்ப வித்தியாச இசையைப் போடுகிறோம். Because it creates a mood. சில காட்சிகளில் சில Particular costumes தேர்ந்தெடுக்கிறோம். சில ஆர்ட்டிஸ்ட் என்னை கேக்கறதுண்டு ‘ஏன் சார்.. நான் அழப்போறேன்னு தெரியுமா? ஏன் சார் இந்த ட்ரஸ் போட்டுக்கணும்?ன்னு. ‘இல்லே… எந்த டிரஸ் வேணும்னா போட்டுக்கிட்டு அழலாம். ஆனா இது இப்படிப்பட்ட காட்சி, அதனோட mood-ஐ எப்படியெல்லாம் create பண்ண முடியுமோ, அப்படியெல்லாம் செய்து பார்க்கணுமேன்னுதான். ஒண்ணு Lighting. இன்னொண்ணு Colours which we use. இன்னொண்ணு நாம் பயன்படுத்துகிற music, cutting கூட Mood create பண்ணலாம்.

“இந்தக் கேள்விக்கு நீங்க ஏன் Elaborateஆக பதில் சொல்லணும்னா நிறைய வாசகர்கள் மட்டுமில்லே, சினிமாத்துறையிலேயே நிறைய பேர் இதே கேள்வியை கேக்குறாங்க. அதாவது ஒரு Photography மோசமா இருந்துட்டாலே, ‘என்னப்பா, மணிரத்னம் மாதிரி எடுத்துட்டு வந்துட்டே’ன்னு கேக்கற அளவுக்கு நீங்க பாதிச்சிருக்கீங்க. அதை, அந்த Image-ஐ, rather accusation you have to wash out. Come out with a better answer, please.”

“எதிர்ப்பு நிறைய இருக்கு. அது ஒளிப்பதிவாளருங்க கிட்டேயிருந்தே வர்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அது இருக்கும், அசாதரணமான எதற்கும் அந்த எதிர்ப்பு, resistance இருக்கும்.”

“அது நம்ம மெட்ராஸ் தியேட்டர்ஸ்லே”, சொல்ல விடவில்லை இயக்குனர். சொல்லக்கூட ஒன்றை சொல்லிவிடப்போகிறோமோ என்ற அவசரத்தோடு குறுக்கிட்டு,

“எனக்குத் தெரியும் நீங்க என்ன கேட்கப்போறீங்கன்னு. மெட்ராஸ் தியேட்டர்ஸை விட வெளியூரிலே இருக்கிற தியேட்டர்ஸ் Betterஆ இருக்கு. சிட்டியிலே பாதிக்கு மேலே useless தியேட்டர்ஸ்.”
இது ஒரு Blind excuse. Industryயிலே இந்த மாதிரி ரொம்ப காலமா சொல்லிண்டு இருக்காங்க. காமெடி சீன் கட் பண்ணக்கூடாது. இண்டர்வெல் முடிஞ்சு காமெடிதான் ஆரம்பிக்கணும். சினிமாஸ்கோப்புன்னா க்ளோசப், பைத்தியக்காரத்தனமான Rules சொல்றாங்க. Rulesஐ நாம மதிக்கணும்தான். அது கரெக்டா இருந்தா. ஆனா, There is no rule that cannot be broken at all. மத்தவங்க பண்றாங்கறத்துக்காக, இது Universal Practice, என்கிறதுக்காகவே எதையும் பண்ண நான் தயாரா இல்லே” என்று சொல்கிறார்.

“உங்க படங்களோட தயாரிப்புச் செலவு ரொம்ப அதிகம். அதிலே Latent expenditure கண்ணுக்குத் தெரியாத, திரையிலே காணமுடியாத செலவு ரொம்ப அதிகம்னு சொல்லப்படுது…”

Image result for Mani ratnam old look"

“இது ரொம்ப மோசமான குற்றச்சாட்டு. யாருடைய பணமாயிருந்தாலும் வீணாக்குறது எனக்குப் பிடிக்காது. என்ன ஷூட்டிங் பண்றதுன்னு தெரியாமே, இல்லே முடிவு பண்ணாமே Locationலே வந்து வேஸ்ட் பண்றது கிடையாது. இது Profession. பணத்தை முதலீடு செய்றவங்களும், வாங்கறவங்களும்தான் ‘அதிகமா செலவு பண்றியே’ன்னு என்னை குத்தம் சொல்லணும், நீங்க எப்படி சொல்லலாம்? ஏன் சொல்றீங்க?- by நீங்க, I mean, மத்தவங்க” மீண்டும் மெர்குரி ஏறியதோ?

“உதாரணமா, லொகேஷன்ல So many people waiting just for nothing… இந்த மாதிரி”

“நான் Detailed Script உடன் Shooting போறேன். அங்கே Wait பண்ணலாம், எதையாவது எதிர்பார்த்து… நல்ல lighting, setting sun… இப்படி சீனோட impact அதிகப்படுத்தற எதையாவது எதிர்பார்த்து wait பண்ணுவேன். மத்தபடி காத்திருப்பதில்லை. பெரிய பெரிய Lavish set-ஐ காட்டினாதான் செலவுன்னு இல்லே. ஒரு சேரி செட் போட அதைவிடக்கூட அதிகமா செலவாகலாம். சினிமா பற்றி நல்லா விஷயம் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் அதெல்லாம் புரியும். சாதாரண ஆளுங்க ‘சேரிதானே, என்ன செலவு பண்ணியிருக்கப் போறான்’னு ஈஸியா சொல்லிடுவாங்க. Grandeurனாலே இல்லே, Impact மூலமாதான் அந்த expenditure நியாயப்படுத்தறேன், every bit.”

மற்றொரு விஷயத்திற்கு வருவோம்.

“முதல் படத்திலிருந்து எடிட்டர்ஸ், இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர் எல்லோருமே ஒரு யூனிட்டா இருக்கீங்க. இந்த கேமராமேனை மட்டும் மாத்திக்கிட்டே இருக்கீங்களே. ஒரு கேமராமேனுக்கு ஒரு style இருக்கும். அதனாலே இந்தப் படத்திற்கு இந்த ஸ்டைல் வேணும், அதுக்கு இந்த கேமராமேனை பயன்படுத்தலாம்னு நினைக்கிறீங்களா?

“அதெல்லாம் இல்லே. நல்ல கேமராமேன் இருக்கணும்னு மட்டும்தான் நெனைக்கிறேன்.” ஒரே வாக்கியத்தில் அவர் சொன்ன பதில் திருப்திகரமானதாகப் படாததால்,

“உங்க படங்களோடு போட்டோகிராஃபியிலுள்ள அழகு, Varietyக்கு இன்னார்தான் காரணம்னு ஒருத்தரும் உரிமை கொண்டாடக் கூடாதுங்கிற, may be selfish motiveஓட இந்த மாற்றம் அமையுதுன்னு நெனைக்கலாமா?” என்று கேட்கிறோம்.

எதிர்பார்ப்புக்கு மாறாக பலமாக சிரிக்கிறார், மணிரத்னம். 

Industryயிலே ஒரு டைரக்டர், ஒரு கேமராமேன்னு பழக்கமாயிடுச்சு. எனக்கு அதிலே நம்பிக்கையில்லை. அப்படி தொடர்ந்து பண்ணினா ரெண்டுபேரும் Stale ஆகறதுக்கு Chances இருக்கு. ஏதாவது ஒரு Difficult Point வந்துதுன்னா – இதுக்கு முன்னாடி செய்த அதே டெக்னிக்கை எங்களை அறியாமலேயே repeat பண்ணதோணும். ஒரு கேமராமேன் ஒரு டைரக்டரோட வேலை செய்யறது நிச்சயமா எந்த டைரக்டருக்கும் நல்லதில்லே”

Image result for Mani ratnam old look"

“மத்த இயக்குனர்கள் என்ன நெனைக்கிறாங்கன்னா, ஒரு காட்சியை அவர் இப்படி எடுக்கணும்னு நெனைக்கும்போது, அதை அப்படியே கேமராமேன், எடுத்துக் கொடுக்கமுடியும். Much of Rapport இருக்கலாமில்லையா? ஒரு Shot-ஐப் பத்தி சொன்னதுமே கேமராமேன் ஒரு Frame வெச்சுக் காட்டினா, டைரக்டர் கேமரா வழியே பார்த்தா, அவர் நெனச்சாமாதிரி அப்படியே”

“ஆ.. அதுதான் எனக்கு வேண்டாம், நான் நெனைக்கிற மாதிரி என் கேமராமேன் நினைக்கக்கூடாது. நான் நினைக்கிறது, முன்னாலே பண்ணினது, இப்படித்தான் பண்ணுவேன்னு ஒரு Presumptionக்கு வர்றது, அது எனக்கு வேண்டாம் சார்.”

“நீங்க முன்னாலே செஞ்சதை, நெனச்சதை, செய்யக்கூடாது. நெனைக்கக் கூடாதுன்னு”

Image result for Mani ratnam old look"


“Exactly” – சிரிப்பு

இன்னொரு கோணத்தில் கேள்வி திரும்புகிறது.

“Why you go for stars… ஏன் புதுமுகங்களை அறிமுகப்படுத்தக் கூடாது?”

“My contribution is my film. படத்தைப் பொறுத்தவரை நான் ரொம்ப Greedy. நான் இந்தப் படத்துக்கு இவங்க சரியா இருக்கும்னு தான் போடறேன். அவங்களை நம்ம படத்திலே போட்டு பெரிய ஸ்டார் ஆக்கி, அந்த பெருமையைத் தட்டிகிட்டு போயிடணும்னு எல்லாம் ஆசை இல்லே.”

“தளபதியிலே ரஜினி வைச்சு ஒரு படம் பண்ண நெனைச்சீங்களா? கதாபாத்திரம் ரஜினிதான் பண்ணனும்னு அவரைப் போட்டீங்களா?”

“இல்லே. இது ரெண்டு விதமாகவும் வரும். தளபதி விஷயத்திலே ரஜினியை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு Decide பண்ணினேன். ரஜினியை வெச்சு என்னவெல்லாம் Type பண்ணலாம்னு யோசிச்சேன். நாயகனும் அப்படித்தான். கமலை வெச்சு படம் பண்ண, ‘நாயகன், கதையை தயார் பண்ணினேன். அக்னி நட்சத்திரத்திலே ‘The other way, கதையை வெச்சு, பொருத்தமான Stars போட்டேன்.

“ஒரு ஸ்டாரை வெச்சு படம் பண்ணும்போது especially ரஜினிகாந்த் அவங்க ஆடியன்ஸை Ignore பன்றது முட்டாள்தனம்னு நெனைக்கிறேன். அவங்களுக்குன்னு பல ரசிகருங்க இருக்காங்க. அவங்களுக்கு சில எதிர்பார்ப்புங்க இருக்கு. அதே நேரத்திலே, அதுக்கு முழுமை Bind ஆவறதோ, Bend ஆவறதோ கூட தப்பு” அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

“நான் ரஜினிகாந்த் Kind படம் பண்றேன்னு இறங்கக் கூடாது. அதை மாதிரி அவரை என்னோட ‘அஞ்சலி’ மாதிரி ஒரு படத்திலே நடிக்க வைக்கக்கூடாது.” என்று மேலும் அதே பாய்ண்டை விளக்குகிறார்.

“அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி மூணுபேரையும் அவங்க இமேஜைத் தாண்டி, அவர்களைக் கொண்டுவர்றது கஷ்டம்னு முன்னே ஒரு தடவை சொல்லியிருக்கீங்க.

Image result for Mani ratnam old look"

“அவங்க மூணுபேரும் சூப்பர் ஸ்டார்ஸ். அவங்களுக்கு Script பண்றது கொஞ்சம் கஷ்டம். வித்தியாச Script பண்றதை சொல்றேன். அவங்ககிட்டேயிருந்து Emotion, டான்ஸ், சண்ட இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகள். All in all category. அந்த மாதிரி எவ்வளவு கதை பண்ணமுடியும். கதாபாத்திரத்தை வெச்சு ஒரு படம் பண்றதைவிட, சூப்பர் ஸ்டாருக்கு கதை பண்றது ரொம்ப கஷ்டம்.

“நீங்க கூட படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது Why you shut away from media எந்த செய்தியோ, படமோ, ரிப்போர்டிங்கோ வெளிவரக்கூடாதுன்னு ஏன் நெனைக்கிறீங்க? ரஜினிகாந்த், கமலை வெச்சு படம் பண்ணும்போது, நீங்க குறிப்பிட்ட மாதிரி அவங்க ரசிகருங்களுக்கு பத்திரிகைகங்ககிட்டே சில எதிர்பார்ப்பு இருக்கு.. அதை செய்யவிடாமல் எங்களை ஏன் தடுக்கிறீங்க?”

“எனக்கு என் படத்தை கரெக்டா project பண்ணனும்னு ஆசை. Half Baked Information பரவறது பிடிக்கலே. என் Rushesஐ கூட நடிகருங்களுக்கோ, தயாரிப்பாளருக்கோ கூட காட்டமாட்டேன். அப்படி இருக்கும்போது உங்க பத்திரிகைங்க விரும்புதுங்கறதுக்காக I can’t let out Informations. உங்களுக்கு உங்க magazine எப்படி முக்கியமோ, அப்படி எனக்கு என் படம்தான் முக்கியம். பெரிய காவியம் பண்றேன், காட்ட மாட்டேன்னு அல்ல. அதை உங்களுக்கு, To the Best of its Potential காட்டணும்னு ஆசைப்படறேன்.

“அத்தோட நான் ஒரு படத்தை முடிக்க ஆறு மாசம் ஆகுது. ரொம்ப முன்னாடியிருந்து செய்திகள் வர ஆரம்பிச்சா Interest குறைஞ்சுக்கிட்டே போகும். அதை முழுசா Hold பண்ணி, Marketing ஆரம்பிக்கணும்னு நெனைக்கிற நேரத்திலே வெளியே விடறேன். படத்துக்கு அது Help பண்ணாது. படத்துக்கு Help பன்ற எதையும் நான் செய்வேன்.”

இருபக்கமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாமே தவிர யார் யாரையும் Convince பண்ணிவிட முடியாது என்ற உணர்வில் அதை இத்துடன் நிறுத்திக்கொக்ண்டோம்.
இதற்குப் பிறகு பேசிய விஷயங்கள் Off the record – “பிரசுரத்திற்கல்ல” என்பதால் THE END.

நன்றி: பிலிமாலயா டிசம்பர் 1991