அடக்கம் இல்லைன்னா, அட்ரஸ் இல்லை!

செந்தில் நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளவர். அவரை அண்மையில் பேட்டி கண்டோம்.

கேள்வி: திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தினை நிரந்தரமாகப் பிடித்து வைத்திருக்கிறீர்களே! இதன் ரகசியம் என்ன?

அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே ...

பதில்: இதுக்குக் காரணம் என்னோட தனிப்பாணிதான். எனக்குனு ஒரு தனிப்பாதையை வகுத்து வச்சுக்கிட்டு இருக்கேன். நான் பெருமைப்படுகிறதா நினைக்க வேண்டாம். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் பார்க்கிற வகையில் என் பாணியை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நடிப்பு தத்ரூபமா இருக்கணும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

இன்னொரு விஷயம், இந்த ஃபீல்டுல திறமை மட்டும் இருந்தா காலந்தள்ள முடியாதுங்கறது என்னோட கருத்து. மரியாதை, அடக்கம், நல்ல ஒழுக்கம் இதெல்லாம் இருந்தாத்தான் நிலைச்சு நிக்கமுடியும். எவ்வளவுதான் நாம பெரிய நடிகனா உசந்துகிட்டு போனாலும் அடக்கம், பணிவு தேவை. இது இல்லேன்னா, நம்ம இடத்துக்கு வேற ஒருத்தர் வந்துடுவாரு. அது மட்டுமில்ல நம்பளையும் ‘அட்ரஸ்’ இல்லாம ஆக்கிடுவாங்க…

இந்த விஷயங்கள நான் எப்பவும் மறக்கிறது இல்ல!

கேள்வி: நடிப்பிலேயும் சரி, ரேட்டை வாங்கிறதிலேயும் சரி. ரொம்ப கறாராகவும், கரெக்டாகவும் நடந்துக்கறீங்கன்னு உங்களைப் பத்தி ஒரு கருத்து இருக்கிறதை ஏத்துக்கிறீங்களா?

பதில்: நிச்சயமா என்னால ஏத்துக்க முடியாது.

ஏன்னா, நடிப்பிலே வேணா, சரியா, நல்லமுறையில் செய்வேன். ஆனா என் ரேட்டைப் பொறுத்தவரைக்கும் கறாராகவும், கரெக்டாகவும் இருக்கிறதில்லை. எவ்வளவோ பேர்கிட்ட ஏமாந்திருக்கேன். குறைச்சுகூட வாங்கியிருக்கேன்.

அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே ...

கேள்வி: கவுண்டமணி – செந்தில் காம்பினேஷன் ஒரு சில படங்களில் தொடர்கிறது. சில படங்களில் தனித்தனியாக நடிக்கிறீர்கள். இது பற்றி?

பதில்: ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரே பாணியைப் பின்பற்றினா வெறுப்பு தட்டிடும்! அதுக்காகத்தான் வேற ஒண்ணும் இல்ல. சில படங்கள்ல சேர்ந்து நடிக்கிறோம். சில படங்கள்ல தனித்தனியா நடிக்கிறோம். 

கேள்வி: சிறந்த சிரிப்பு நடிகர் என்று பெயர் எடுத்துவிட்டீர்கள். இனிமேல், கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குநர் என்று ஏதாவது ஒன்றில் நுழைய திட்டம் இருக்கிறதா?

பதில்: எந்தத் திட்டமும் எங்கிட்ட இல்ல. என் தலையெழுத்து அப்படி இருந்தா நடக்கும். அவ்வளவுதான். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதுமாதிரி மனுஷன் மனசு ஒரு குரங்கு மாதிரி. அதனால் நான் வேற இடத்துக்கு தாவுவேணான்னு எனக்கே தெரியல.

ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். என் விதிப்படிதான் எல்லாமே நடக்கும்.

கேள்வி: விதிமேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள், சாஸ்திரம், சகுனம் பார்ப்பது உண்மையா?

பதில்: அதெல்லாம் இல்ல சார். சாமியைக் கும்பிடறதோட சரி. வேற எதுவும் பார்க்கிறது இல்லை.

கேள்வி: உங்களுடைய ரசிகர்கள் பற்றி:
பதில்: நிறைய பேர் இருக்காங்க சார். நிறைய கடிதங்கள் எழுதிக்கிட்டு இருக்காங்க. இவுங்கள கவனிக்கணும்னுதான் ரெண்டு அஸிஸ்டண்டுகளை வச்சுருக்கேன்.

கேள்வி: ஹீரோவுக்கு பெண் ரசிகைகள் இருப்பதுபோல உங்களுக்கும் உண்டா?

பதில்: என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? நிச்சயமா அவுங்களும் கடிதம் எழுதத்தான் செய்யறாங்க.

கேள்வி: ‘விக்’ இல்லாத செந்திலா பிரபலமாயிட்டு இப்பவெல்லாம் ‘விக்’ உள்ள செந்திலா மாறிட்டது ஏன்?

பதில்: ‘விக்’ இல்லாத செந்திலா அறிமுகமானது என்னவோ உண்மைதான்! ஆனா, அதுக்காக ஹீரோவுக்கு தம்பியா நடிக்கணும்னா, ‘விக்’ வச்சுதானே சார் ஆகணும். இல்லைன்னா தத்ரூபமா இருக்காது. அத்தோடயில்லாம ‘விக்’ வச்சுக்கிற செந்திலை இப்ப ரசிகர்கள் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க. படமும் நூறு நாள தாண்டுது.

கேள்வி: பொதுவா, கவுண்டமணியோட நடிக்கும்போது, உங்களை அமாவாசத் தலையா, கருப்பா, குள்ளா அப்படின்னு ‘இழிவான வார்த்தைகளால் பேசுவது உங்கள் ‘இமேஜை’ பாதிப்பதில்லையா’?

Goundamani and Senthil duo to return in Karagattakaran 2 after ...

பதில்: இதுல இமேஜ் என்ன இருக்கு சார்…? ஜனங்க ரசிக்கிறாங்க.. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஸ்டைல்! அந்த வகையில் கவுண்டமணி அவருடைய ஸ்டைல ஃபாலோ பண்றாரு. அவ்வளவுதான்.!

கேள்வி: மத்தவங்களை சிரிக்க வைக்கும் நடிகர்கள் சொந்த வாழ்வில் சோகமாகத்தான் இருப்பார்கள் – என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: நிச்சயமா என்னால ஏத்துக்க முடியாது. எந்த மனுசனுக்கு சோகம் இல்ல. எந்த மனுசனுக்கு சந்தோஷம் இல்ல? ரெண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

என்னைக்கேட்டா ஒரு நடிகன் தன்னோட நிலையை உணர்ந்து, பழச மறக்காம, எந்தவித கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாம இருந்தா, அவனை சோகம் எதுவும் செஞ்சுடாது.

பணம் புகழ் வந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு, அடியோட மாறினா, சிரிப்பு நடிகன் மட்டும் இல்ல எந்த நடிகணுமே சொந்த வாழ்க்கையில சந்தோஷமா இருக்க முடியாது.

கேள்வி: சமூக சேவை செய்வதுண்டா?

பதில்: யாருக்கும் தெரியாம செய்யறதுதான் உண்மையான சமூகத்தொண்டு. நான் என் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு விளம்பரம் இல்லாம செஞ்சுகிட்டு வர்றேன். குறிப்பா கல்விக்குத்தான் முதலிடம் தர்றேன்!

கேள்வி: இன்றைய திரையுலக சிரிப்புகள் – பெரும்பாலும் இரட்டை அர்த்த தொனியில் இருக்கிறதே…

பதில்: நான் அந்தமாதிரி வசனங்களை பேசறதும் இல்லை. அப்படி நடிக்கிறதும் இல்லை. அப்படி வந்தாலும் அதை கட் பண்ணிக்குவேன். என் படத்தை குடும்பத்தோட பார்க்க வர்றாங்க. அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி இப்படி எந்த வயசா இருந்தாலும் என்னோட நடிப்பை ரசிக்கணும். அதுக்குத்தான் நான் இப்படி ஒரு பாலிஸியை வச்சுக்கிறேன்.

இரவு வானம்: பிளாக்கர்ஸ் - கவுண்டமணி ...

கேள்வி: உங்களுடைய பொழுதுபோக்கு…?

பதில்: நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீட்டில் உள்ள சிறிய வேலைகளைக் கவனிப்பது இவற்றில் கவனம் செலுத்துவேன்.

கேள்வி: நகைச்சுவை நடிகர் என்கிற முறையில் ஒரு ஜோக் சொல்லுங்கள்?

பதில்: சிரிப்ப விடுங்க- கொஞ்சம் சீரியஸான ஒரு விஷயத்தைச் சொல்றேன்.

புலவர் ஒளைவையார்… அவுங்க இந்துங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா அவுங்க தந்த ஆத்திச்சூடி எல்லா மதத்துக்கும் பொருந்தும்.
எப்படீன்னா… ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்- இது முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் – இது கிறிஸ்துவர்களுக்கும் பொருந்தும்.
சரிதானே…!

-பனையபுரத்தான்.

நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ் 1/08/1990

சிரிப்பு ஒரு டானிக்…
-கவுண்டமணி

கவுண்டமணி, தான் சிரிப்பு வானத்தில் நிலாவாக, உலா வருவதை விலாவாரியாக விவரிக்கிறார்…

கேள்வி: சினிமா உலகத்தில் சிரிப்பு நடிகர்களின் நிலை…?

AVM Productions on Twitter: "Veteran actor #Goundamani celebrates ...

பதில்: மக்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்…

கேள்வி: உங்களின் ப்ளஸ் – மைனஸ்…?

பதில்: படம் நல்லா ஓடினா அதுவே ப்ளஸ்…

சரியா ஓடலைன்னா அதுவே மைனஸ்…

கேள்வி: இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசி வாங்கும் கைதட்டல் தேவையா…?

பதில்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை நான் வெறுக்கிறேன்… என்னுடைய படங்களில் அப்படி அர்த்தமுள்ள வசனமெல்லாம் இன்னைக்கு வரைக்கும் இருந்ததில்லை. நான் மட்டுமில்லை. ஜனங்கள் நல்லதைத்தான் விரும்புறாங்க… ரெட்டை வசனங்களை வெறுக்குறாங்க… வெறுப்பாங்க இதுதான் உண்மை…

Birthday special: 12 rare photos of Tamil comedian Goundamani- The ...

கேள்வி: சிரிப்பு என்பது என்ன?

பதில்: சிரிப்பு என்பது என்னைப்பொருத்தவரைக்கும் ஒரு ஆரோக்கிய டானிக். அவ்வளவுதான். மனுஷன் எத்தனையோ கவலைகளையும் சோகங்களையும் சுமந்துகிட்டு சினிமா தியேட்டருக்குள் வந்து உட்கார்கிறான்.

அவன் உட்கார்ந்து இருக்கிற ரெண்டு மணி நேரத்துல.. ஒரு பத்து நிமிஷமாவது மனம் விட்டு வாய்விட்டு சிரிச்சா அதுவே எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி.
சோகம்.. சண்டை… காதல்.. பாட்டு… சிரிப்பு… இதெல்லாம் சேர்ந்துதான் சினிமா… மக்களை மகிழ்விக்கக்கூடிய ஆரோக்கியப்படத்தக்க டானிக்கா ‘சிரிப்பு’ இருப்பதில் எனக்கு நிறைய சந்தோஷம்…

Birthday special: 12 rare photos of Tamil comedian Goundamani- The ...

கேள்வி: ஷூட்டிங்கில் நடந்த காரமான சம்பவம் ஏதாவது…?

பதில்: உண்டு! ஒருநாள் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கும்போது சாயங்காலமாயிடுச்சு… உடனே பிரேக் விட்டாங்க… அப்போ எல்லாருக்கும் ‘மிக்சர்’ கொடுத்தாங்க… அது பயங்கரகாரம்!...

-திருவாரூரான்.

நன்றி: பொம்மை ஏப்ரல் 1993