ஸ்பைக் லீ: சமூகப் பேரழிவின் சஞ்சலப்படுத்தும் உண்மை

அன்னா ஹார்ட்நெல்
தமிழில்: சா. தேவதாஸ்

இந்த அமெரிக்க அய்க்கிய நாடுகளின் வளைகுடா கடற்கரையோரமாய் வாழும் மக்கள், மறு நிர்மாணம் செய்யவும் புதுப்பித்துக்கொள்ளவும் உயிர்த்திருக்கவும் இன்று தம் தினசரிப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

-when the Levees Broke : A Requiem in Four Acts – படத்தின் சமர்ப்பண வரிகள்

Spike Lee will skip the Oscars to protest all-white nominations - The Verge

அறிமுகம்

காத்ரீனா புயலினால் அதியற்புதமாய் எடுத்துக்காட்டப்பட்ட சமூகப் பேரழிவின் சஞ்சலப்படுத்தும் உண்மைகளுக்கு ஸ்பைக் லீயின் இதிகாச ஆவணப்படம் சாட்சியமாய் உள்ளது. அல்கோரின் An Inconvenient Truth (2006) பருவநிலை மாற்றத்தின் பேரழிவு மிரட்டலை பிடிவாதமான குருட்டுத்தனத்துடன் வரவேற்கப்பட்டதை கவனத்துக்குக் கொண்டுவர, ஸ்பைக் லீயின் when the Levees Broke: A requiem in Four Acts (2006) காத்ரீனா புயலுக்கும் அதற்குப் பிந்தைய பேரழிவுக்கும் இட்டுச் சென்ற, சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த குருட்டுப் புள்ளிகளின் சிக்கலான வலைப்பின்னலைச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய பிரக்ஞையைச் சுற்றி ஊசலாடிய இவ்வுண்மைகள், ஆகஸ்டு 2005இன் அணை உடைப்புகளால் அம்பலப்படுத்தப்பட்டதுடன் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டதுமான, இன (ம) பொருளியல் சார்ந்த குடியுரிமையிழப்பின் பேரழிவைக் கட்டமைத்தன. பார்வைக்கு இயற்கைப் பேரழிவாகத் தொடங்கியது, உயிர்த்திருத்தலின் விளிம்புகளில் ஏற்கனவே நிலவுகின்றவற்றிற்குச் சற்றும் பொருந்தாத வீதாச்சாரத்தில், அனைத்துமே மனிதர் சார்ந்த ஒன்றாக சீக்கிரமே வெளிக்காட்டியது. மூழ்கிக் கொண்டிருந்த நகரில் கைவிடப்பட்டவர்கள் மிகுதியும் கருப்பின ஏழைகள் என்பது மட்டுமல்ல, தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதிலும் அவற்றைத் திரும்பிக்கோருவதிலும் அதிகபட்ச சிக்கல்களை எதிர்கொண்டிருப்பவர்களும் அவர்களே. பேரழிவுகள் சமூக சமதளப்படுத்துபவை என்றும் தொன்மத்தை விலக்கி, தான் பாதுகாக்கத் தெரிவு செய்யும் தொகுதிகளில் தேசிய அரசாங்கங்கள், தேர்ந்தெடுப்பதில் காட்டும் பாத்திரத்தை தெளிவாக எடுத்துக்காட்டிற்று. அமெரிக்காவில் இனம் (ம) வர்க்கம் குறித்து மட்டுமல்லாமல், பிரிவினையும் சமத்துவமின்மையும் அதிகரித்து வருகின்ற உலகில் தேசிய அடையாளத்தின் வரம்புகள் குறித்தும் லீயின் ஆவணப்படம் சஞ்சலப்படுத்தும் உண்மைகளை இவ்வாறு எழுப்புகிறது. லீயின் படத்தின் மையமான சஞ்சலப்படுத்தும் உண்மைகளில் ஒன்றான பருவநிலை மாற்றம், தேசிய எல்லைகளின் எதேச்சையான தன்மைக்கும் இவ்வெல்லைகள் வழங்கிடும்/ வழங்கிடாத பாதுகாப்புகளுக்கும் அழுத்தமாய் சாட்சியம் கூறுகிறது. 

Watch When the Levees Broke: A Requiem in Four Acts | Prime Video

இப்புயலால் பாதிக்கப்பட்டவர்கள் “அகதிகளல்லர்” (ம) அப்படி அவர்களை அழைக்கக் கூடாது எனப் பிரதான பாத்திரங்கள் பலரது வாயிலாக அடிக்கடி வற்புறுத்துவதை காட்சிப்படுத்தி, இப்படம் இவ்வரம்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், இக்குரல்கள் அதிகப்படியாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. (ம) குறிப்பான விதத்தில் கருப்பு அமெரிக்கா, அமெரிக்க தேசிய அடையாளத்தின் வெளிப்புற எல்லையில் தங்கியிருக்கிறது என்னும் நீடித்த உணர்வுடன் பார்வையாளரை விட்டுச் செல்லுகிறது என்னும் உணர்வுள்ளது. 9/11 சூழல்களுக்குப் பின்னர், அமெரிக்க இஸ்லாமிய (ம) அரபு மக்களின் தர்மசங்கடங்களை விவரிப்பதற்காக வோன் ஹடாப் பயன்படுத்தும் தொடரில் குறிப்பிடுவதனால், ஆஃப்ரோ – அமெரிக்கர், குறிப்பாக லூஸியானாவின் crescent City-இல் வசிப்போர், “முழுதாய் அமெரிக்கரில்லை”, என்னும் கருத்தினை விலக்குவதில் தோற்றுப்போகிறது.

படத்தின் சமர்ப்பண வாசகத்தில் குறிப்பிடப்படும் “இந்த அமெரிக்க அய்க்கிய நாடுகள்” (ம) ஒருமையிலிருந்து பன்மைக்கு, உறுதியான சார்பை அடையும் நுட்பமான ஆனால் ஆற்றல்மிகு உருமாற்றத்தை அடையாளப்படுத்தி, தேசியக் குடியுரிமையின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்புகள், உரிமைகள் பெற்றுள்ள ஒரு சிலர் தவிர அனைவருக்குமே கிட்டாதவை என்கின்ற மிகவும் சஞ்சலப்படுத்தும் பிரதேசமாக லீயின் படம் இவ்வாறு எழுகின்றது. ஆஃப்ரோ அமெரிக்கக் குடிமையுரிமை இழப்பின் நீண்ட வரலாறு – இன (ம) வர்க்கக் காழ்ப்புணர்வின் முரட்டு முனை மீது பெரும் மக்கள் தொகையினரை நிறுத்தி – உள்ளடக்குதல் (ம) வெளியேற்றுதலின் தேசிய நாடகத்தை துலக்கிக்காட்டுவதில் அமெரிக்கக் கருப்பு மக்கள் தொகை மையக்கதாபாத்திரம் வகிக்கிறது என்று அர்த்தப்படுத்துகிறது. “கருப்பன்” (ம) “அமெரிக்கன்” என்னும் தொடர்களை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தி When the Levees Broke படத்தில் வரும் உடையாடல்களைப் பின் தொடர்ந்து இக்கட்டுரை இவ்வாதங்களை துருவி ஆராய்கிறது. எனினும் கிடைப்பது, எளிமையான கருப்பு/வெள்ளை இருமையினை விடவும், மிகவும் சிக்கலானதாயுள்ளது. நிறையவே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, மேலதிகமான கருப்பின மக்களால் அனுபவிக்கப்பட்ட, புயலுக்குப் பிந்தைய புறக்கணிப்பில் ஏழை – வெள்ளையர் பகிர்ந்துகொள்கின்றனர். மேலும், லூஸியானாவின் பிரெஞ்சும் ஸ்பானிய கடந்த காலங்களும் சேர்ந்து, அமெரிக்காவின் எஞ்சிய வரலாற்றிலிருந்து மிக வேறுபட்ட ஒன்றினை வழங்குகின்றன. குறிப்பாக, நியூ ஆர்லியன்ஸ், அய்ரோப்பிய (ம) மேற்கு ஆஃப்பிரிக்க பண்பாட்டினால் அழுத்தமாக அடையாளப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இம்மாநிலம் அரசாங்கத்தின் குடியேற்றமாக செயல்படுகிறது என ஒரு விமர்சகர் குறிப்பிடுவது, அமெரிக்காவுக்குள்ளேயான லூஸியானாவின் விடாப்பிடியான “அந்நியத்தன்மையை” வற்புறுத்துகிறது. லூஸியானாவின் இராணுவ “ஆக்கிரமிப்பு” (ம) அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பு ஆகியவற்றிற்கிடையே தயக்கத்துடன் இணைகோடுகளை வரைகின்ற, மாநில நபரின் இன்னொரு சாட்சியத்தின் தர்க்கத்தால் இவ்வுணர்வு வலுப்படுகிறது. 

காத்ரினாவுக்குப் பிந்தைய விளைவை அளவிடுவதில், இனத்தின் கூடவே வர்க்கமும் தேசமும் முக்கிய திசைவழிகளென லீயின் படம் அழுத்தம் தருவது ஆய்வுக்கு முக்கியமானது. கருப்பின மத்திய வர்க்க உறுப்பினராக, மக்கள் உரிமைகள் இயக்கத்தின் உச்சத்தில் பிறந்த லீ, தற்சார்பான முதலாளித்துவ தொழில் முனைவோர் உணர்வை வெளிப்படையாக வளர்த்தெடுத்து (ம) பொருளாதார ரீதியில் நலிந்த கருப்பர் சேரிகளில், அப்பட்டமான வன்முறையில்லை என்றாலும், அதிருப்தியை தூண்டுபவற்றை ஆக்கியதற்காக, கண்டிக்கப்பட்டிருக்கிறார். இனம், வர்க்கம் குறித்த லீ யின் அணுகுமுறை (ம) அமெரிக்க தேசிய அடையாளத்திற்குள் இவ்வகைமைகள் நுழைவது என்பன இவ்வாறு விரிவான சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. வர்க்கம், இனம் (ம) தேச வகைமைகள் மீது பளிச்சிடும் ஒளிவெள்ளத்தை வீசிய நிகழ்வான, காத்ரினா குறித்த அவரது 2006 ஆம் ஆண்டின் பிரதிநிதித்துவப்படுத்தல், அவரது திரைப்படமாக்கலை எளிய வாசிப்பாக்குவதை சவாலுக்குள்ளாக்கி, அவரது ஒட்டுமொத்த படைப்பைப் புதிதாய் நோக்கிட, நம்மை வரவேற்கின்றது. Levees படத்தின் தொடர்ச்சியாக 2010-இல் லீ உருவாக்கிய If God is willing and Du creek Don’t Rise, முந்தயது போன்றே, தேசிய அடையாளத்தின் மீதான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. எனது கவனக்குவிப்பு முந்தைய ஆவணப்படத்தின் மீதுதான் லீயின் உருவாக்கத்தில் ஒரு சாதனையாக அது அங்கீகரிக்கப்படும் என்பதற்காக மட்டுமல்ல – வளர்ந்துவரும் காத்ரினா பிரதிநிதித்துவப்படுத்துதலில் அதன் தாக்கம் பெரியது – அது சில குறிப்பிட்ட கதையாடல்களையும் அழகியல் போக்குகளையும் ஏற்படுத்தி, If God is willing உள்ளிட்ட பிந்தையவை, ஒன்று பின்பற்றிச் செல்லவேண்டும் (அ) அழிக்க வேண்டும் என்றாக்கியது. 

லீ எடுத்த 2006 ஆம் ஆண்டுப் படத்தின் மைய நிகழ்வு நியூ ஆர்லியன்ஸ் அணைகளின் உடைப்பு எனில், நுட்பமானதும் ஆனால் பரவியிருந்ததுமான, “அமெரிக்கா” என்னும் கருத்தினை கலைத்துப்போடுவதை நோக்கிச் சுட்டிக்காட்டும் அதன் மைய சமிக்ஞை என்பேன். ஸ்பைக் லீயின் சொந்த இன அரசியல் ஆவியை எழுப்பி இச்சாத்தியப்பாட்டை இக்கட்டுரை திறந்துவிடுகிறது. அவரது முந்தைய படங்களுக்கு வழிகாட்டியுள்ளதாகத் தோன்றிடும் பல யூகங்கள், காத்ரினாவினால் தூக்கி எறியப்பட்ட, தனிச்சிறப்பான சிக்கல் வாய்ந்த இன ஆற்றல்களைத் துருவி ஆராய்ந்திடும் அவரது விருப்பத்தால் நொறுக்கப்படுகின்றன என்று கூறுகின்றது. பாதி வழியிலும் அடிமை நிலையிலும் இருந்த அமெரிக்காவின் ஆரம்பங்களை நினைவுகூரும் புலம்பெயர்தல், சிதறிப்போதல், குடிபெயர்தல் குறித்த சொல்லாடலுக்கு இவ்வியக்க ஆற்றல் வழிவகை செய்கிறது. காத்ரினாவால் வெளியேற்றப்பட்டவர்களை “அகதிகள்” என முத்திரை குத்தப்பட்டதற்கான ஆரம்பகட்ட எதிர்ப்புகளிலிருந்து பயணத்தைத் தொடங்கும் லீயின் படைப்பை சூழலில் வைத்துப் பார்க்கிறது. இக்கட்டுரையின் பிரதான பகுதி. காத்ரினாவும், கொடூரமாய்த் தொடர்ந்து வந்த ரீடா புயலும் ஒளி வெள்ளத்தில் எறிந்த சஞ்சலப்படுத்தும் உண்மைகளை விரிவாக ஆராய்வதற்கான ஆரம்பப் புள்ளியை, Levees இப்படியாக முன்வைக்கிறது. முன்னதாக, புலம்பெயர்ந்து வாழ்பவர்களுடனான ஆஃப்பிரிக்க – அமெரிக்க பிணைப்புகளின் முக்கியத்துவத்தை அவ்வளவாக எடுத்துக்காட்டவில்லை என லீ குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் இப்படம் முக்கோண நிலை வணிகத்தால் ஏற்பட்ட சிதறலை நோக்கிய சமிக்ஞைகளாக மட்டுமல்லாமல், பரந்துபட்ட பின்காலணித்துவ உலகின் திசையிலான பார்வைகளாகவும் உள்ளது. அமெரிக்காவின் அந்நிய சாகசங்களின் மோதல்களில் சிக்கியவர்களின் கூடவே, பருவநிலை மாற்ற விளைவுகளால் உலகெங்கிலும் சிதறிக்கிடக்கும், வளர்ந்துவரும் நாடுகளின் ஆயிரக்கணக்கானோருடனும், காத்ரினாவினால் பாதிக்கப்பட்டவர்கள் லீயால் வீசப்பட்டிருக்கின்றனர். 

When the Levees Broke | Facing History and Ourselves

ஸ்பைக் லீயும் அசலான தன்மையில் சொல்லடுக்கும்

ஓர் இயக்குனராக லீ, சமூகக் கடப்பாட்டுணர்வால் உந்தப்பட்டவராக நீண்டகாலமாகத் தன்னைக் கருதியுள்ளார் – வெளிப்படையாக ”அரசியல்” படங்கள் எடுக்கவேண்டும் என்னும் அவரது திரும்பத் திரும்ப வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆசையில் அது வெளிப்பாடு காணும் – வெறுமனே “உண்மையைச் சொல்வதில்” எழும் அரசியல் அது – என அடிக்கடி அவர் உணர்த்துகிறார். வஹ்னீமா லுபியானோ “ஸ்பைக்லீ சொல்லாடல்” என்றழைப்பதான, “உண்மையைச் சொல்லும்” கடப்பாடு, திறன்மிக்க விளம்பர இயந்திரத்தின் எடையைத் தன்னுடன் சுமக்கின்றது. இந்த இயந்திரமும் இதனைச் சூழ்ந்துள்ள உரையாடல்களும், லீயின் அரசியலை பொதுவாக நிபந்தனைக்குள்ளாக்குவதாகத் தோன்றும் இரட்டை அதிகாரத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க “மைய நீரோட்ட”த்தின் இன வாதத்தினை ஆய்வுசெய்ய வேண்டிய அவசியம் - அதே வேளையில் இம்மைய நீரோட்டத்தினை கருப்பு அமெரிக்காவுக்குக் கோரிக்கொள்ளும் சமிக்ஞையுடன் கூடவே – இதுவே அந்த இரட்டை அதிகாரம். 

இங்கே நிச்சயமாக ஒரு முரண்பாடு நிலவுகின்றது, ஆனால், மிக முக்கியமாக மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட ஆஃப்ரோ – அமெரிக்கச் சிந்தனையாளர்களின் நீண்ட வரிசையில் – அமெரிக்க லட்சாதிபதிக் கனவில் கருப்பு அமெரிக்கரை உள்ளடக்க வேண்டும் எனத் தேசத்திற்குச் சவால்விட்டன அவர்தம் துயரக்கதைகள். அது நீடித்திருக்கவைக்கப்பட்டுள்ளது. எனினும், மேலதிகமாக கிங்கிற்கு முரண்பட்டதாக, முற்றிலும் ஒருங்கிணைந்த பார்வை சார்ந்ததாக இல்லாதபோதும், மால்கம் எக்ஸின் வாழ்க்கையிலிருந்தும் ஒரு படிப்பினையை லீ எடுத்துக்கொள்கிறார்- இவ்வகையில் தன் சித்தாந்த நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார். கிங்கும் மால்கம் எக்ஸிம் குறியீட்டு ரீதியில் ஆதரித்த ஒருங்கிணைந்த (ம) கருப்பு தேசியவாத நிலைகள் லீயின் கலைவெளிப்பாட்டில் ஒருங்கிணைகின்றன – இக்”கனவிலா”ன ஆஃப்ரோ – அமெரிக்க பங்கேற்பு, கருப்பராக இருக்கும் அவசியத்தின் தகுதிப்பாடு உடையதாக இருக்க வேண்டும். லீ யின் அசலான தன்மை குறித்த சொல்லடுக்கு யதார்த்தத்தின் சம்பிரதாயங்களைச் சார்ந்திருக்கிறது- “அது இருப்பதைப் போன்றே சொல்லுதல்” என்று அவர் அடிக்கடி கூறிக்கொள்வதை பிரதிபலித்திடும் சம்பிரதாயங்கள் அவை. நிலை இதுவாயின், இது ஆவணப்பட வகையை மேற்கொள்வதில், லீ யின் திரைப்படமாக்கம் உண்மையாகவே தனக்குரியதை வந்து சேர்ந்திருக்கிறது.

Spike Lee Applauds Cannes Shutdown Amid Coronavirus | IndieWire

ஆவணப்படங்கள் தம்மளவிலே பெரிதும் கட்டமைக்கப்பட்டவை என்னும் உண்மையைப் பார்வையாளர்கள் உணர்ந்திருக்க, நேரடி சாட்சிய வடிவில் “உண்மைக்கானா” குறுக்கீடு செய்யப்படாது வழங்கும் திறனை இப்பிரிவு பெற்றிருக்கிறது என்னும் உணர்வு பரவலாயிருக்கிறது. (ம) இப்பிரிவின் “அதிகாரபூர்வ” ஒளிவட்டம் கச்சிதமாய் இருக்கிறது. 1991 இல் எழுதுகின்ற லூபியானோ, இன ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் லீயிடம் சாராம்சவாதம் இருப்பதாகக் குற்றம் சுமத்துகிறார். அவரது நன்கறியப்பட்ட படங்கள், குறிப்பாக , Do the Right Thing (1989), குறிப்பாக கருப்பின மக்களின் (ம) பொதுவாக இன உறவுகளின் “உண்மை”யை வெளிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டன என்கிறார். அமெரிக்க வரலாற்றில் இனரீதியில் மிக மின்னேற்றம் பெற்ற பேரழிவை ஆவணப்பட வடிவில் கைப்பற்றுகின்ற, லீயின் 2006ஆம் ஆண்டு முயற்சி – யதார்த்த முறைகளில் நிச்சயமாக மிக “யதார்த்த”மானதே – படத்தின் ஆற்றல் பொதிந்த, குறைத்துச் சுருக்கிடும் நிகழ்ச்சித் திட்டத்தின் பால் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கவேண்டும். எனினும் அசலான தன்மையின் சொல்லடுக்கு, லீயின் காத்ரீனா புயல் குறித்த விவரிப்பில் பெரிதும் இல்லை when the Levees Broke இன் சம்பிரதாயமானதும் மையக்கருத்து சார்ந்ததுமான அம்சங்களை பலவழிகளில் எதிர்நோக்கிய, அவரது 1997 ஆவணப்படம் Four Little Girlsஇல் இருந்தது போலவே, 1963-இல் அலபாமாவின் பிர்மிங்காமிலுள்ள 16வது வீதி பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நான்கு ஆஃப்ரோ – அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகளைக் கொன்று, மக்கள் உரிமைகள் இயக்கத்திற்கான குவிமையமாக மாறிய, குண்டுவீச்சைப் பரிசீலிக்கிறது Four little Girls. Levees படம் முழுவதும் மேலதிகமாக “பேசுகின்ற தலைகளின்” வடிவத்தை லீ வற்புறுத்தி இருப்பது – நெகிழ்வுத்தன்மையற்றது (ம) காலாவதியானது என ஆவணப்படக்காரர்களாலும் அறிஞர்களாலும் இப்போது வழக்கமாக ஒதுக்கித்தள்ளப்படும் வடிவம், ஆனால் லீயின் படத்தில், காத்ரினா புயலில் பிழைத்தவர்களின் சொல்லப்படாத கதைகளை, வெற்றிகரமாகச் சட்டகமிட்டு, வழிவகை செய்து, அதிகாரம் பெறவைத்தது – Four Little Girls படத்திலும் பிரதான அம்சமாயிருக்கிறது. லீயின் முந்தைய ஆவணப்பட முயற்சி இதுபோலவே ஆஃப்ரோ – அமெரிக்க குடிமையுரிமை இழப்பையும் நீண்ட கால அரசாங்கப் புறக்கணிப்பையும் வெளிப்படுத்துகிறது ஆனால் அதனுடைய “பேசுகின்ற தலைகளின்” வடிவம் (ம) தேசிய அடையாளத்தை குறித்து பிரஜைகள் வெளிப்படுத்துகின்ற தெளிவான ஊசலாட்டம், ஒரே தன்மைத்தானதை அல்லாமல், மக்கள் உரிமைகள் வரலாற்றிலான இம்மாபெரும் நிகழ்வு குறித்த சிக்கலானதும் முரண்மிக்கதுமான உருவச்சித்திரத்தை வழங்குகின்றது. 

இவ்விரு ஆவணப்படங்களுக்குக்கிடையேயான ஒப்புமைகள் இருக்க, லீயின் இரு முக்கியமான, ஆனால் சர்ச்சைக்குரிய கதைப் படங்களான Do the Right thing (ம) Malcolm X (1992) என்பவற்றை இப்போது பரிசீலிக்கலாம். ஓர் இயக்குநராக அவரது புகழுக்கு முக்கிய பங்கு வகித்தவை இப்படங்கள். லீயின் தீவிரப்போக்கிலான வர்க்க ஆற்றல் இயக்கத்தின் மீதான விமர்சன பூர்வமான சொல்லாடலுக்கு Do the Right Thing பெரிதும் காரணமாயிருக்க, அமெரிக்க அடையாளம் (ம) கருப்பு தேசியவாத அரசியல் உடனான லீயின் உறவுநிலை மீதமைந்தன மால்கம் எக்ஸின் வாசிப்புகள். ஒரு சேரப் பார்க்கையில் அவை இரண்டும் சேர்ந்து, இனம், வர்க்கம் (ம) தேசம் குறித்த லீயின் கலைத்துவ ஈடுபாட்டின் மீது கணிசமான வெளிச்சத்தை வீசுகின்றன. அவ்விரு படங்களின் முக்கிய அம்சங்களினது சுருக்கமான பார்வையில், லீயின் திரைப்பட ஆக்கத்திலுள்ள, அரைபாதி சாராம்சவாதப் போக்குகளின் மீதான விமர்சனாபூர்வ அழுத்தம், 1997 (ம) 2006 ஆவணப்பட பங்களிப்புகளுக்கு முன்னரே, தேவைப்படும் தகுதியைச் சுட்டிக்காட்டுகிறது. 

அவரது இயல்பான சாராம்சவாதம் ஒரு புறமிருக்க, இனவாத அசலான தன்மையில் லீயின் சொல்லடுக்கு பிரச்சனைக்குரியதாக உணர்த்திடும் ஒன்று, அது எதனை எதிர்த்து உணர்த்துகிறதோ அந்த மையநீரோட்டச் சொல்லாடலால் மீட்டுக்கொள்ளும் வகையில் அகலத் திறந்திருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, Do the Right Thing இல் தோன்றிடும், கருப்பு பொருளியல் சுதந்திரத்திற்கான சமிக்ஞைகள் (ம) மேலும் கருப்பு முதலாளிகள் (ம) தொழில்முனைவோர்களுக்கான அவசியம் லீயின் வற்புறுத்தலில் விரவியிருக்கும் ஆனால் அமெரிக்கப் புராட்டஸ்டண்ட் பணி நெறியின் தீவிர வெளிப்பாட்டுக்கும் குறைவானதாக இவையுள்ளன என்கிறார் லூபியானோ எதிர் – பண்பாட்டு வாய்ப்புகள் இல்லாமல் உள்ளன என்பது அவரது விமர்சனம். இவ்வகையில் உள்ளடக்கும் சொல்லடுக்கும் பிரிவினைச் சொல்லடுக்கும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம்.

மால்கம் எக்ஸின் வாழ்க்கையினை லீ ஆக்கியுள்ள திரைக்கதையில் இப்புதிர் தெளிவாக வெளிப்படுகிறது. Do the Right Thing போலவே, இப்படம் இனவெறியைத் தூண்டுகிறது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது உண்மையாகவே இனவாத அரசியலில் தீவிர நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர்த்ததற்காகவும் அப்படத்தைவிட இன்னும் அதிகமாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. (ஆஃப்பிரிக்கா தழுவிய” “தீவிர” அரசியலுக்குப் பதிலாக “பாதுகாப்பான” (இஸ்லாமிய) மதத்தை எடுத்துக்காட்டியதற்காகவும் கருப்பினச் சமுதாயத்திற்கு “நடைமுறைத் தீர்வுகள்” வழங்குவதற்குப் பதிலாக பண்பாட்டுத் திருவுருவை உருவாக்கியதற்காகவும் மால்கம் எக்ஸ் படத்தை cineaste (1993) கண்டித்தது. மால்கம் எக்ஸின் தீவிர பங்களிப்பை லீ “விற்றுவிட்டார்”, பலியிட்டுவிட்டார் என்பதன் அடிப்படையிலான எதிர்வினைகளே இப்படி ஒன்றிணைகின்றன. 

http://s3.birthmoviesdeath.com/images/made/malcolm-x-movie-poster2_1200_1620_81_s.jpg

மால்கம் எக்ஸ் படத்தின் நாடக பூர்வத் தொடக்கம், அமெரிக்கக் கொடி X வடிவில் எரிவதாக அமைகிறது. அமெரிக்க அரசியல் வீரர்களின் வரிசைக்குள் மால்கம் எக்ஸை சேர்ப்பதற்கான தாமதித்த வக்காலத்தாகவே இப்படத்தின் “சாதுர்யமான எடுத்துரைப்பு தந்திரத்”தை டோட் பாய்ட் விமர்சிக்கிறார்….

பார்வையாளரால் முழுதாக விழங்கக்கூடிய எளிய “செய்திகளை” எந்தப்படமும் முன்வைக்கவில்லை. மால்கம் எக்ஸ் வாழ்க்கைச் சித்திரம், அமெரிக்கக் கொடியால் உருமாற்றப்படும் “X” னை சித்தரிக்கின்றது. கொடி சமமாகவே உருமாற்றப்படுகிறது. நெருப்பின் ஞானஸ்தானத்தால் “X” ஆல் இரு அம்சங்களும் ஒன்று மற்றதின் மீது வினைபுரிந்து, மால்கம் எக்ஸீக்கும் “அமெரிக்கா”வுக்கும் இடையே போட்டிமிக்க உறவு நிலையை நிறுத்துகின்றன. நாட்டின் ப்ராட்டஸ்டண்ட் வேலை நெறியை Do the Right Thing ஊசலாட்டத்துடனேயே அங்கீகரிப்பதுபோல, Do the Right thing படத்தின் “செய்தி”யை ஒரு முழக்கமாக வடித்தெடுத்துவிடுகிறார் லூபியானோ. இப்படி “வண்மையான மனிதர் உழைக்கின்றனர், தம் குடும்பங்களைக் காக்கின்றனர்”, ஆனால், லீயால் நடிக்கப்படும் படத்தின் மையப்பாத்திரம் மூக்கி, ஒரு பெற்றோர் என்ற விதத்தில் தெளிவாகப் புறக்கணிக்கப்படுவதாக இருக்கிறது, இத்தாலிய – அமெரிக்க ரின் பீட்ஸா கடையாக தரப்படும் வாழமுடியாத ஊதியத்தால், ஒரு ஜீவிதத்தைத் தேடும் அப்பாத்திரத்தின் முயற்சி தடுக்கப்படுகிறது. கருப்பர்களான அண்டைவீட்டார் மத்தியில் சாலின் “Pizza Plantatim”, படத்தில் பரவியுள்ள பொருளீயல் காலனியாதிக்கத்திற்கான மிக இயல்பான உதாரணமாகும். Do the Right Thing இல் அனைத்துப் பொருளியல் வாய்ப்புகளும் கருப்பின மக்களின் கைகளிலிருந்து, சேரியைத் தாண்டியுள்ள “அந்நிய” வங்கிகளுக்கு பிரித்தனுப்பப்படுகின்றன. “உண்மையான மனிதரி”ன் செயல்பாட்டை தடுப்பதற்காக இயங்கும் ஒடுக்குமுறை அமைப்புகளை இப்படம் கச்சிதமாக கைப்பற்றிவிடுகிறது.

 லைன் என்பவரைப் பொறுத்தமட்டில், காலனித்துவ உறவுகள் – கருப்பு அதிகார அரசியல், தொடர்பாக, Do the right thing, உள்ளடக்குதலின் கருப்பு தேசியவாதத்தின் வரம்புகளைத் தாண்டிச்செல்கிறது ஆனால் அப்படத்திற்கு பிறகு வந்த “எந்தவொரு லீயின் படமும் தீவிர அரசியல் பார்வைக்கு அருகில் வரவில்லை.” மால்கம் எக்ஸ் விட்டுச் சென்ற மிகத்தீவிர அம்சங்களை மால்கம் எக்ஸ் வாழ்க்கைச் சித்திரம் தவிர்த்து விடுகிறது என்கிறார் அவர். இனம் (ம) வர்க்கப்போராட்டத்தின் மிக அபாயகரமான பிரதேசத்தைவிடவும், “பாதுகாப்பான மதவியல் நிலத்திலேயே மால்கம் எக்ஸை நிறுத்த விரும்பிய அவரது பழமைவாத விளக்கவுரயாளர்கள் வரிசையிலேயே” லீயின் படம் நிற்கின்றது என்கிறார் மாரபிள். எனினும், அரசியலிலிருந்து மதத்தை காப்புறுதி செய்திடும் மாரபிளின் முயற்சி ஏற்க முடியாதது, குறிப்பாக ஆஃப்ரோ – அமெரிக்கச் சூழலில், 9/11-க்குப் பிறகு இன்னும் முடியாதது. அமெரிக்க அரசியல் ஆளும் அமைப்பின் பார்வையில் அப்போது, கருப்பு அமெரிக்காவுக்கு, இஸ்லாம் என்ன செய்ய இயலும் என்னும் மால்கமிடம், உருக்கொண்டுவந்த உணர்வு “பாதுகாப்பானாதாக” இருப்பது அரிதே அது அவருடைய இன – வர்க்கப்போராட்ட உணர்வுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்தது. மால்கம் எக்ஸின் வாழ்க்கை பற்றிய லீ யின் திரைவடிவம், இன – வர்க்கப் போராட்டத்தை மையப்படுத்துவதில் தோற்றுவிடுகிறது எனில் – இது விவாதிக்க வேண்டியது – காத்ரினா புயலின் விளக்கத்தில் அதனையே கூற இயலாது. 

Spike Lee becomes first black Cannes jury head - BBC News

மேலும், Do the right thing இன் முதலாளித்துவம் குறித்த ஆய்வு, அமெரிக்கப் புராட்டஸ்டண்ட் பணி நெறியுடனான லீயின் காதல் விவகாரத்தின் தடயங்களைக் கொண்டிருப்பின், தனிநபர் வாதத்தின் பொருளாதாரம் மீதான பாராட்டின் படிவு. When the Levees Broke இல் காத்ரினாவின் விவரிப்பில் கணிசமானதாய் சிக்கலாக இருக்கிறது. நியூ ஆர்லியன்ஸின் ஏழையரைக் கடுமையாகத் தாக்கிய பேரிடர் என்ற வகையில், தொன்மத்தன்மையதான ”அமெரிக்கக் கனவின்” தோல்விகளை, வலுவாக வெளிக்காட்டியது காத்ரினா. “ஆவேச அதிருப்தியின்” மென்பூச்சுமானத்தைக் காட்டிக்கொண்டே, கூட்டு நிறுவன அதிகார அமைப்புடன் சமாதானம் செய்துகொள்கின்றன லீயின் படங்கள்” என்பது லைனின் விமர்சனக் குறிப்பு. ஆனால் பிரச்சனைகள் இருப்பினும் ஏழையரைத் தண்டித்து, செல்வந்தருக்கு வெகுமதியளிக்கும் சமூகத்தினை கடுமையாக விமர்சிக்கும் ஆவணப்படமாக இது இருக்கிறது. 

அவரது ஆவணப்படம், “உண்மையைக் கூறுவதாக” கூறிக்கொள்ள இயலாது, ஏனெனில், வெவ்வேறு திசைகளில் பேசுகின்ற குரல்களின் கூட்டத்தை அது பிரக்ஞைபூர்வமாய் எடுத்துக்காட்டுகிறது. லீயின் இன அரசியல் விவாதங்களில் பயன்படுத்தப்படுகின்ற இனம் சார்ந்த அசலான தன்மையின் சொல்லடுக்கு, நியூ ஆர்லியன்ஸின் இனவேறுபாடுகளில் சிலவற்றைப் பிரதிபலித்திடும் படத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் இல்லை. அமெரிக்க அடையாளத்தின் பிரதேசங்களை, உள்ளூருக்கும் உலகத்திற்குமிடையே எங்கோ ஓரிடத்திற்கு மாற்றுவதில்தான் Levees உருமாற்றத்தை கோருவதாக இருக்கிறது. அவ்வாறு செய்வதன் வாயிலாக, தேசிய அடையாள வரம்புகளை நொறுங்கிடும் ஒரு புள்ளிவரை நீட்டிக்கின்றது என்பதை அடுத்து விவரிக்கிறேன்.  

காத்ரினாவின் “அகதிகள்”

லெவீஸ், நான்கு அங்கங்களிலான ஓர் இரங்கற்பா : ஒரு தேசியக் கனவின் சாத்தியமான மரணத்தை தயக்கத்துடன் உணர்த்துகையில், இறந்தோருக்கு அது அஞ்சலி செலுத்துகிறது. முதல் அங்கம், புயலுக்கும் அதன் தாக்கத்திற்குமான களனை அமைத்திட, இரண்டாம் அங்கம், நீரில் மூழ்கிய நகரின் விண்வெளிக்காட்சிகளுடன் ஆரம்பிக்கின்றது. சுவாரஸ்யமான வகையில், இரண்டாம் அங்கம் தொடங்கிய சில நிமிடங்களில் கனத்த பிரித்தானிய குரலுடன் அறிக்கையிடும் பிபிஸி செய்தி வருகிறது “பெரும்பாலானவர்களாகக் கருதப்படும் ஏழையரும், அமெரிக்காவின் அடித்தட்டு மக்கள், மானுடப் புயலாக மாறியிருப்பதற்குப் பலியானோர்” என்கிறது. கூட்டாட்சி அரசாங்கம் தனது மிகவும் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பினர்களை கைவிட்டிருக்கிறது என்று ஆற்றலுடன் கூறிடும் படத்திற்கான மேடையை “அந்நிய” ஒலிப்பு செய்துவிடுகிறது. நியூ ஆர்லியன்ஸ் என்பது அதிக குற்ற வீதங்களால் நாசமாவது, செயல்படாத அரசுப்பள்ளி அமைப்புடையது., தேசிய சராசரியைவிடவும் மிகக் கீழான கூலிகளுடையது, மற்றும் இவற்றால் ஒவ்வொரு அமெரிக்க நகரினை விடவும் இருமடங்கு வறுமை விகிதமுடையது என்னும் உண்மை படமுழுவதும் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறது. ஆஃப்ரோ – அமெரிக்க “அடித்தள வர்க்க” உருவாக்கத்தின் பின்னுள்ள சமூகக்காரணிகளை லீ நேராக நோக்குகிறார். அவரது முந்தைய படங்களில் தனி நபர் சார்ந்த தன்மையிலான புராட்டஸ்டண்ட் பணி நெறி உயர்த்திக்காட்டப்பட இந்த, “அடித்தளவர்க்கம்” நழுவிப் போனது.

Convention center-க்கு வெளியே, அமெரிக்கக் கொடி உடுத்தி ஒரு கருப்புப் பெண் காத்திருப்பதான, இப்போது திருவுருவப் படிமமாயுள்ளதை இப்படம் காட்டுகின்றது. அமெரிக்காவிலான பரந்துபட்ட ஆஃப்ரோ – அமெரிக்க அனுபவத்தின் சூழலில் இப்படிமத்தை வாசிக்காது இருப்பது கடினமாகும் உடனடியாக கால – வெளி – இருப்பிடத்தைத் தாண்டிடும் வறுமையுணர்வை கொடியால் உடுத்தப்பட்டுள்ள முகம் கைப்பற்றுகிறது. அமெரிக்காவுக்கும், ஸ்பைக் லீயின் வாழ்க்கைச் சித்திரத்தின் “X”க்குமிடையேயான ஒருமைப்பாடு எழுகின்ற தீப்பிழம்புகளை ஞாபகப்படுத்திடும் சித்திரம் அது. நியூ ஆர்லியன்ஸின் Convention Centre-க்கு வெளியே அமர்ந்திருக்கும் இப்பெண்ணுக்கு, கொடி வெளிப்படையாக ஆறுதலின் ஊற்றாகச் செயல்பட்டாலும், அவளது வேதனையின் ஊற்றையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மால்கம் எக்ஸின் ஆரம்பக் காட்சியினை விடவும் இந்த நிழற்படம் நிரடுகிறது, கேள்வி கேட்கிறது (ம) கருப்புக்கும் தேசிய ஆடைக்குமிடையிலான உறவைத் துண்டித்திடும் சாத்தியமிருக்கிறது. எனினும், இக்குறிப்பு நேர்மைத்தன்மைக்குத் தொலைதூரத்தது. லெவீஸ் முழுவதிலும் “கருப்பு” (ம) “அமெரிக்க” என்னும் தொடர்கள் பிரிவினைக்கு மிரட்டல் விடுக்க, பிணைப்பு அடிக்கடி உறுதிப்படுத்துகிறது. 

”கருப்பு” (ம) “அமெரிக்க” என்பவற்றிற்கிடையிலான உறவுநிலை குறித்த பிரச்சனை, லீயின் படங்களின் மையமாக மட்டுமின்றி, அடிமை நிலையிலிருந்தான ஆஃப்ரோ அமெரிக்க அரசியலிலும் மிகுதியாகவே இருந்துள்ளது. புகழ்பெற்ற விதத்தில், அடையாளத்தின் இந்தத் தருமசங்கட நிலைக்கு “இரட்டைப் பிரக்ஞை” என 1903 இல் டபிள்யூ இ பி து போய்ஸால் பெயரிடப்பட்டது இனம் (ம) தேசம் என்னும் இரட்டைக் கோரிக்கைகளும் அமெரிக்காவின் நீடித்துவரும் யதார்த்தங்களும், தேசிய வாழ்வின் மத்தியிலிருந்து கருப்பு அமெரிக்கா நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்தன என்றார் அவர். காத்ரினா புயலால் பெரிதும் வெளியேற்றப்பட்ட ஆஃப்ரோ – அமெரிக்கரை ஊடகம் “அகதிகள்” எனத் தவறாகப் பெயரிட்டது. அமெரிக்கக் கருப்பரின் குடிமையுரிமை வெளிப்படையான கேள்வியாக இருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட நீடித்த “பிரச்சனை”யின் விஷயமாக இல்லாவிடினும் பங்களித்துவிட்டது.

காத்ரினாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களைக் கொள்ளையர்கள் என்றும், “குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள்” என்று கூட சித்தரித்த ஊடக – பீதியூட்டும் கதைகளை அங்கங்கள் இரண்டும் மூன்றும் விரிவாய்ப் பேசுகின்றன, மர்மத்தை அவிழ்க்கின்றன. இவர்களைத் “தேடிக்காப்பாற்றுவதை” விடவும் சட்டம் ஒழுங்குக்கு உள்ளாக்க வற்புறுத்தின அக்கதைகள் வறுமையின் காட்சிகளை வசீகரப்படுத்தின, விவகாரப்படுத்தின. “கருப்பு அடித்தளவர்க்கத்”தின் சுரண்டும் படிமங்களுக்கு எதிர்நிலையில் உரையாடல்களை முன்வைத்து, காத்ரினாவினால் பாதிக்கப்பட்டோரை “மதிப்பு வாய்ந்த” அமெரிக்கக் குடிமக்களாக புனர்வாழ்வு அளிக்க வற்புறுத்தினார் லீ. ஆனால் பேட்டி காணப்பட்டவர்களில், வணக்கத்திற்குரிய அல் ஷார்ப்டன் உள்ளிட்டோர், புயலால் பாதிக்கப்பட்டோர் வரி செலுத்தக் ‘கூடியவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது தேசிய புராட்டஸ்டண்ட் பணி நெறி என்னும் சுய – உதவி சித்தாந்தத்துடன் கைகோர்த்துக் கொள்வதாகும். இவ்வாறாக, கருப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறுமைப்பட்ட ஆஃப்ரோ – அமெரிக்கருக்கும் இடையேயான சிக்கலான உறவுப்பிரச்சனை எழுகின்றது.

வேலை (ம) “தகுதிநிலை” என்பவற்றிற்கிடையிலான தொடர்பு – (ம) அரசு நல்வாழ்வு (ம) இழிநிலை – வீட்டு உரிமைக்கு அழுத்தம் வருவதன் வாயிலாக படத்துடன் இணைக்கப்படுகிறது. ‘அவ்வீடுகளைப் பெற்றிட கருப்பர்கள் என்ன பாடுபடவேண்டியிருந்தது. ”நியூ ஆர்லியன்ஸை ஏதோ நல்வாழ்வு அரசாகத் தோற்றமளித்திட அவர்கள் முயன்றனர். ஒன்பதாம் வார்டிலுள்ளோர், அவர்களில் பாதிக்கும் மேலானோர், 60% பேர் தம் வீடுகளை வைத்திருந்தனர்”, எனப் பின்னுரையில் இடம்பெறுகின்ற, பேட்டி காணப்பட்டவரின் வாசகம் பதிவு செய்கிறது. கருப்பினையும் அரசிடம் மீதான சார்ந்திருத்தலையும் பிணைத்திடும் இனவாதச் சொல்லாடலை இந்தச் சொல்லடுக்கு சரியாகவே நிராகரித்துவிடுகிறது ஆனால் அவர்களுக்கு உத்தரவாதமளித்திடும் காப்பீட்டு நிறுவனங்களும் கூட்டாட்சி அரசாங்கமும், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பது இங்கு நிரடுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், காற்றினால் ஏற்பட்ட இழப்புக்கே இழப்பீடு, நீரினால் ஏற்பட்ட இழப்புக்கு அல்ல எனக்கைவிரித்துவிட்டன காப்பீட்டு நிறுவனங்கள்.

இந்நிலையில், லெவீஸ் “தற்சார்பினை” தேசியப் பண்பாக உயர்த்திப்பிடிக்கிறது - பொருளியல் சுதந்திரத்தின் வடிவில் – இருப்பினும் தொடர்ச்சியாக அதனைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இன – வர்க்கக் காழ்ப்புணர்வு “கனவு” என்றழைக்கப்படுவதை, சிலபேர் தவிர்த்து, அனைவருக்கும் நிராகரிக்கின்றது. சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தைவிடவும் மிகுதியானது மானுட உயிரிழப்பும், அதன் விளைவும். Do the Right thing-இல் செய்தது போலவே, இங்கும் லீ, சொத்துரிமைகளை விடவும் மானுட உரிமைக்கொடிகளை உயர்த்திப் பிடிக்கின்றார்.

http://www.thevinylbridge.com/wp-content/uploads/2013/07/On-the-set-of-Do-the-Right-Thing.jpg

மனித உரிமைகள் தொடர்பான இச்சமிக்ஞை, அமெரிக்காவை சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உயர்த்தி, ஆஃப்ரோ – அமெரிக்கருக்கான நீதி அதன் எல்லைகளுக்கு அப்பால் இருக்கக்கூடும் என்கிறது. காத்ரினாவால் பாதிக்கப்பட்டோரை “அகதிகள்” என ஊடகமும் பிறரும் அழைத்தது ஆத்திரத்தை மூட்டிவிட, கிராலென் பி. பாங்க்ஸ் என்பவர் நம்பமுடியாதவராக வினவுகிறார் படத்தில் – “புயல்வந்ததும் எங்கள் குடிமை உரிமையினையும் தூக்கி எறிந்து விட்டதா? இனிமேல் நாங்கள் அமெரிக்கப் பிரஜைகள் இல்லையா? என்ன அக்கிரமம் இது? அகதிகள் – அப்படித்தான் மக்கள் என எண்ணினேன் நாடற்றவரை, வேறிடம் இல்லாதவரை.”

After the storm : Black Intellectuals Explore the Meaning of Hurricane Katrina / Ed by David Dante Troutt நூலின் முகப்பு வாசகமாக வரும் வரிகள் இங்கே குறிப்பிடத்தக்கது
“நான் ஒரு “அகதி”யில்லை, நான் இங்கே தப்பிவரவில்லை… நாங்கள் அகதிகளல்லர். நீ உன் தலையை உயர்த்து, நாமெல்லாம் அமெரிக்கப் பிரஜைகள், அது குறித்து நீ பெருமைப்படு. நம்மில் அதிகமானோர் வரிகட்டுகின்ற, நேர்மையான, கடின உழைப்பாளிகள். நான் அப்படியானவன். நானெப்போது இன்னொரு தேசத்திலிருந்து வந்தேன்? படகுகளில் வந்தவர்களை, அங்கே பதுங்கிச் சென்றவர்களை அப்படித்தான் மக்கள் அழைத்தனர். நான் உயிர்பிழைத்திருப்பவன். “காத்ரினாவில் தப்பிப்பிழைத்திருப்பவர்கள்” என்று அவர்களை அழைக்க வேண்டும்.”

நாடற்றவரைக் கடுமையாகத் தண்டித்திடும் நாட்டில், அகதிகளுடன் அடையாளங்காண்பதில் என்ன சமூக நன்மை கிடைத்துவிடும்?
               
ஆஃப்ரோ – அமெரிக்க அரசியல் என்னும் பாரிய சூழலில், கருப்பர் உரிமைகளுக்கான மார்டின் லூதர் கிங்கின் வாதங்கள், மக்கள் உரிமைகளின் ஆரம்ப கட்டங்களில், தேசிய எல்லைகளுக்குள்ளாகவே அமைந்தன. இதற்கு முரணான வகையில், “நான் அமெரிக்கனில்லை, அமெரிக்கமயமாதலால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் கருப்பின மக்களில் நானொருவன்” என்றார் மால்கம். ஆனால், அவரது இறுதிக்காலத்தில் கிங் செய்ததைப்போன்றே, மனித உரிமைகள் பற்றிப் பேசத்தொடங்கிவிட்டார். மால்கம் எக்ஸ் (ம) மார்டின் லூதர் கிங் இருவரது பார்வைநிலைகளும், அவர்களின் இறப்புக் காலத்தில், அவர்தம் ஆரம்பநிலை அழுத்தங்களான, “பிரிவினை” (ம) “உள்ளடக்குதல்” என்பவற்றை விஞ்சியிருந்தன இவ்விரண்டு மரபுகளின் நிழல்களில் பிரக்ஞைபூர்வமாக இயங்கிடும் ஸ்பைக் லீ, லெவீஸில் இவ்விரட்டையைத் தாண்டி சமிக்ஞை செய்திருக்கிறார் என்பது அடுத்த கவனக்குவிப்புப் பெறும். 

லூஸியானாவின் “படையெடுப்பு”

கூட்டாட்சி அரசாங்கத்தின் தோல்விகளின் காரணமான கவனிப்பில், தேசிய அடையாளக் கருத்துக்களை உயிர்ப்பிக்க முயலும் படத்தின் சொல்லடுக்கு, கூடவே ஈராக்குடனான அமெரிக்க யுத்தம் குறித்த குறிப்புக்களை எழச்செய்கிறது. புஷ் நிர்வாகத்தின் செல்வாக்கைப் பொறுத்தவரை பெரும்பாலான விமர்சகர்கள், காத்ரினா பெரியதொரு திருப்பு முனையாயிருந்தது என இப்போது ஒத்துக்கொள்கின்றனர் – புயல் சேதத்தை அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை என்னும் விமர்சனம், குறிப்பாக, இராக் யுத்தத்திற்கு எதிராக மக்கள் அபிப்ராயத்தைத் திரட்டிவிட்டது. புயல் பாதித்த பகுதிகளைச் சென்றடைய அரசாங்கத்துருப்புகளுக்கு 5 நாட்கள் பிடித்தன என்று லெவீஸ் படத்தில் வரும் குறிப்புகள், கூட்டாட்சி அரசாங்கத்தின் சாமர்த்தியமின்மையை மட்டுமின்றி, அரசுத்துருப்புகள் பல இராக்கில் நிலைகொண்டுள்ளன என்னும் உண்மையையும் வெளிப்படுத்துகிறது. இது, அமெரிக்கா தலைமையிலான இராக் படையெடுப்பை விமர்சிப்பதற்குப் பதிலாக, படத்தின் இத்தருணங்கள், உயர்வடிவிலான தேசபக்தியைக் கோருவதாக ஆகிவிடுகின்றன.

அத்துடன் அமெரிக்காவிலிருந்த இராக் பிரஜைகள் ஜனவரி 2005 ஆம் ஆண்டில் தம் தேசியத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட காத்ரீனாவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு பிழைத்தவர்களோ, ஏப்ரல் 2006 நியூ ஆர்லியன்ஸின் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இழந்தனர். வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தை விடவும், “தேசக்கட்டுமானத்தின்” கட்டளைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அதிகக்கடப்பாடு கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.

பின்னுரையில், அமைச்சர் ஆட்ரே மேஸன், பார்பரா புஷ்ஷிடம் சொல்லடுக்காகப் பின்வரும் கேள்வியைக் கேட்கிறார் “உங்கள் மகன் எப்படி இன்னொருவரின் வீட்டுக்குள் போகலாம், தன்னுடைய வீட்டில் அவனால் செய்யமுடியாததை எப்படி அங்கே செய்யலாம்? இன்னொருவரின் இல்லம் தூய்மையடைய வேண்டுமானால், நீங்கள் உங்கள் இல்லத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்”.
“இராக்கில் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன” என்னும் உண்மையை மேஸன் குறிப்பிடுகையில், அவர் குறிப்பிடுவது அமெரிக்க உயிர்களை மட்டும் என்று தோன்றவில்லை. இந்த அளவைப்படி, உள்நாட்டின் திறமையின்மை, வெளிநாட்டிலான திறமையின்மையை பிரதிபலிக்கின்றது ஆனால் இராக் துருப்புகளின் உயிரழப்பு அமெரிக்கத் துப்புகளின் உயிரிழப்புக்குச் சமமாக வைக்கப்படுகிறது. லீ இன்னொரு விஷயத்தையும் கவனக்குவிப்புச் செய்கிறார். “உலகெல்லாம் போய்வந்து ஒவ்வொருவருக்கும் உதவ முடிகிறது நம்மால், ஆனால் அமெரிக்கக் கண்டத்தின் சொந்த பிரஜைகளுக்கு உதவச் செல்வதற்கு மட்டும் படை வீரர்களுக்கு ஐந்து நாட்கள் ஆவது மட்டும் ஏன்?” இது, ஆசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட இடத்திற்கு அமெரிக்க வீரர்கள் இரு தினங்களில் வந்து உதவியதை வைத்து எழுப்பப்பட்டது.

அமெரிக்காவின் அந்நிய சாகசங்கள் தொடர்பான அரிய குறிப்புகள் இரண்டாம் அங்கத்தில் இடம்பெறுகின்றன. கூட்டாட்சி அரசாங்கம் லூஸியானாவைக் கைப்பற்றியிருப்பதைப் பேசுகின்ற நியூ ஆர்லியன்ஸ் நகர்மன்ற உறுப்பினர் சிந்தியா ஹெட்கே – மோர்ரெல், அதே மூச்சில் இராக் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். தேசக்காவல்படை, பிற மாநிலப் போலீஸாரெல்லாம் சேர்ந்து “ஆயுதந்தாங்கிய, ஆக்கிரமிக்கப்பட்ட நகரி”ன் சூழலை, மக்கள் எவ்விதம் உணர்ந்தனர் எனப்பேசுகிறார் “நாம் போய் படையெடுக்கும் எந்தவொரு நகரிலும் மக்களை நடத்துவது போன்றே நடத்தினர் என்பதை என்னால் நம்பாது இருக்க இயலவில்லை… கொஸோவா (அ) வேறெங்கிலும்… இராக்கியர் அப்படித்தான் சில வேளைகளில் உணர்வார்கள் என யூகிக்கிறேன்.” சுவையான விதத்தில், இத்தருணத்தைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற ஷார்ப்டனின் வாசகம் அமெரிக்கத் துருப்புகள் “வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு ஜனநாயகத்தை சீர் செய்து தர, உள்நாட்டிலுள்ளவர்களுக்கோ ஒன்றுமில்லை.”

இந்த அந்நியத்தமை கணப்பொழுதை விடவும் கூடுதலானது என லெவீஸ் உணர்த்துகிறது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் வறுமைப்பட்டவர்கள், தேசத்தின் எஞ்சியோருடன் ஒப்பிடப்படுகின்றனர் வரலாற்றாளர் டக்ளஸ் பிரிங்ளேயைப் பொறுத்தமட்டில், லூஸியானா, “அநேகமாக ஒரு குடியேற்றத்தைப் போல்” நடத்தப்படுகிறது. இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும் இடமாக கூட்டாட்சி அரசாங்கத்தில் கருதப்படுகிறது” , நியூ ஆர்லியன்ஸை கூட்டாட்சி அரசாங்கம் புறக்கணித்திட இனம் மட்டும் காரணமில்லை என்பதையும் லீ-யின் படம் வற்புறுத்துகிறது.

லூஸியானா மாநிலத்துக்கு எந்தவொரு வெகுமதியும் தராமலேயே, கூட்டாட்சி அரசாங்கம் அதனிடம் பெறுவது ஆழ்கடல் எண்ணெயும், இயற்கை வாயுவும், இன்னொன்று முன்னர் வெள்ளத்திற்குத் தடுப்பாக இருந்த நன்செய் நிலங்கள் சுருங்கிவருகின்றன. இதையும் தடுப்பதில்லை அரசாங்கம். நன்செய் நிலங்களின் பரப்பு சுருங்கிவருவதற்குப் பிரதான காரணம், எண்ணெய் (ம) வாயு உள்கட்டுமானங்களின் விரிவான நிர்மாணப்பணிகளே. அடுத்த விஷயம் பருவ நிலைமாற்றம். காத்ரினாவின் பின்னுள்ள காரணிகளுள் ஒன்று அது என்பது படத்தில் உணர்த்தப்படுகிறது.

“The Rising Tide” என்னும் காத்ரினா குறித்த நூலில் மைக் டைட்வெல் குறிப்பிடுகிறார் : “அமெரிக்கா முழுவதுமே உண்மையில், ஒட்டுமொத்த புவிக்கோளமே – சிதிலமடைந்ததும் போதுமானதாயில்லாததுமான அணைகளின் பின்னேயான தாழ்நிலம்போல் இருக்கிறது தண்ணீர் துரிதமாய் உயர்கின்றது.”

உடைமை இழப்புக்கு எதிராக தேசிய அடையாளத்தை வற்புறுத்துவது பயனுள்ள செயல் தந்திரமாயிருக்கையில், அமெரிக்கக் குடிமையுரிமைச் சலுகையிலிருந்து விலக்கப்பட்டோருடனான அடையாளப்படுத்தல், பேரழிவின் தோன்றுவாய்களை முழுதாக ஆய்ந்திட வழிவகுக்கும். அமெரிக்க இரட்டை கோபுரங்களின் தகர்ப்பை எப்படி அமெரிக்கர்கள் நோக்கினரோ, அப்படியே நியூ ஆர்லியன்ஸின் துயரத்தை நோக்கினால், அதேவிதமாக செயல்பட்டிட நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள் என்று சார்லஸ் மக்கேல் லெவீஸ் படத்தில் கூறுவார். ஆனால் 9/11 பாதிப்புக்காளானவர்கள் “அதிக அமெரிக்க”ராயிற்றே… இந்த உணர்வு, உலகில் பரந்துபட்ட பாத்திரம் வகிக்கும் அமெரிக்காவிடமிருந்து பிரிக்கமுடியாதது.
ஒருகாலத்தில் அடிமை துறைமுகமாயிருந்த நியூ ஆர்லியன்ஸ், இன்னும் இணக்கமான கிரியோல் பண்பாடும் கறாரான கருப்பு / வெள்ளி இருமையும் சேர்ந்து வடிவமைத்த நகரின் முரண்பாடுகளினது அடையாளங் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிட்டதில் பிந்தையதன் படி, நியூ ஆர்லியன்ஸ் என்பது சாராம்சத்தில் “அமெரிக்க” நகரம் இருப்பினும், ஆண்டு தோறும் மார்டிகிராஸில் நிகழும் தனிச்சிறப்பான பண்பாட்டு நிகழ்ச்சிகளும், வாராந்திர அணிவகுப்புகளும், அமெரிக்காவுக்குள்ளேயான நியூ ஆர்லியன்ஸின் தனிச்சிறப்பான தன்மை தெரியவரும்.
Spike Lee turns cameras on New Orleans | Spike Lee | The Guardian


காத்ரினாவின் தாக்குதலில் அமெரிக்காவெங்கும் சிதறிப்போன குடும்பத்தினரைப் பற்றி கினா மோண்ட்டரை அங்கம் இரண்டில் இப்படிப் பேசுகிறார் “நாங்கள் ஏலம் விடப்படுவதற்குக் காத்திருந்தது போன்றதான தொன்மையான ஞாபகமாக அதனை உணர்ந்தேன்.” இன்னொரு புறம், பாதிக்கப்பட்டவர்கள் “பார்வையை இழந்தனர், சப்தத்தை இழந்தனர், நேசித்தவர்களின் உணர்வை இழந்தனர்.” ஒரு விதத்தில், அடிமை நிலையில் இருந்த துக்க உணர்வு, பீறிக்கொண்டு பாய்கிறது.

“கருப்பரின் கற்பனையில் அடிமைநிலை (ம) புயல்களை ஒன்றிணைக்கும் மையக்கருத்துக்களுள் ஒன்று, கரடுமுரடான, எதிர்க்கின்ற புவிப்பரப்பிலெல்லாம் கருப்பர்கள் அதிர்ச்சியூட்டும் தன்மையில் சிதறிப்போனது. மிகவும் விரோதமான நிலைமைகளில் கருப்பர்கள், சமுதாயங்களை அமைத்துள்ளனர் “ என்கிறார் மைக்கேல் எரிக் டைசன்.

When the Levees Broke: A Requiem in Four Acts TV Review

முடிவுரை: “அமெரிக்கா”வை உருமாற்றுதல்

தேசியப் பேரிடர் ஒன்றில் கருப்பு அமெரிக்கர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாயுள்ளனர். தேசிய சித்தாந்தத்துடன் இயங்கும் அரசு, உட்புறத்தார் – வெளிப்புறத்தாருக்கிடையிலான எல்லைகளைக் கண்காணிக்கிறது. அரசு எந்திரம், “உரியவராயில்லாதிருப்பதன் தோற்றுவாயை அடயாளப்படுத்த இயலும் (ம) உரியவராயில்லாதிருப்பதை அரைபாதி நிரந்தர அரசாக உருவாக்கிக்கொள்ளவும் இயலும்” (can signify the source of non – belonging as a quasi – permanentstate) என ஜீடித் பட்லர் குறிப்பிட்டிருப்பது இங்கு பொருந்தும்… இவ்வகையில், ஆஃப்ரோ – அமெரிக்க ஏழைகள் (ம) அமெரிக்க குடிமையுரிமை பாதுகாப்புகளுக்கு இடையிலான உறவுநிலை உறுதியற்றது என்பதுடன், “அமெரிக்கா”வின் புவியியல் இருப்பையும் அப்படிச் சித்தரிக்கிறது இந்த ஆவணப்படம்.

லூஸியானா, குறிப்பாக நியூ ஆர்லியன்ஸ், இந்த ஒன்றியத்திற்குள்ளேயான உடைப்பாக எழுகின்றது. இன, பொருளியல் (ம) புவியியல் விளிம்புநிலைப்படுத்தலின் சுமையை எடுத்துச்செல்வதாக இருக்கிறது அது. சொல்லடுக்கு ரீதியில் தேசத்தை வலுப்படுத்தும் அம்சங்கள் இங்கே சுமையாகின்றன. நீதி, தேசத்தின் எல்லைகளுக்குள்ளே தங்கியுள்ளது என்ற மாயையினையும் உடைத்துப் போடுகிறது. எனினும், படத்தின் சமர்ப்பணவாசகம் அர்த்தப்படுத்துவது போல, லீ கட்டுடைப்பை நாடாமல், “மறு நிர்மாணம், உயிர்த்திருத்தல் (ம) புதுப்பித்துக்கொள்ளலுக்கான போராட்டத்தை “ நாடுகிறார்.

Spike Lee Explains Why He Helmed a Killers 'Land of the Free' Music Video |  Billboard | Billboard

இவ்வகையில், “லெவீஸை” உருமாற்றிடுகின்ற சினிமாவாக வாசிக்கமுடியும் – “இன்னும் முழுநிறைவான ஒன்றிய”த்தின் சாத்தியப்பாட்டினை அது நிராகரிக்கவில்லை. ஆனால் படத்திலுள்ள பல மின்னோட்டங்கள், அதன் எல்லைகளைத்தாண்டிய உருமாற்றத்திற்குத் திறந்துள்ள ஒன்றியமாயிருக்கும் அது என்றுணர்த்துகின்றன. நியூ ஆர்லியன்ஸ் மறைத்து வைத்துள்ள சிக்கலான உலக மரபு, அதனை ஒரேவேளையில் அமெரிக்காவுக்குள் தனிச்சிறப்பு மிக்கதாகவும், சாராம்சத்தில் அமெரிக்கனாகவும் ஆக்குகின்றது என லெவீஸ் உணர்த்துகிறது. நிச்சயமாக ஆஃப்ரோ – அமெரிக்கப் பண்பாடு நீண்டகாலமாக இவ்விருமையின் சுமையைத் தாங்கியுள்ளது.

------------- -----------
African American Review 
Vol. 45 no. ½ (spring / summer 2012)
இதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்.

-------------------------------- ---------------------