காட்சியியல் சித்திரங்கள்



How to Make a Storyboard - Birdman Storyboard - StudioBinder
நீங்கள் ஒரு திரைப்பட இயக்குனராக இருந்தால் உங்கள் வேலையில் மிகப்பெரிய பகுதி திரைப்படம் சார்ந்து உங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கிற ஐடியாக்களை, காட்சிகளை,கருத்துக்களை எப்படி வெற்றிகரமாகத் திரைக்கு மாற்றுவது என்று தெரிந்திருப்பதுதான். திரைப்படத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் ஒரு கதையைக் காட்சியியல் ரீதியாக (விஷுவலாக) சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். திரைக்கதை எழுதுகிற பொழுது வார்த்தைகளால் அடிக்குறிப்புகள், காட்சி சார்ந்த குறிப்புகளை எழுதி வைத்திருப்பார்கள். அல்லது பிம்பங்களாக குறித்திருப்பார்கள். இதன் மூலம் எழுத்திலிருந்து திரைக்கு தகவல் தொடர்பு நடப்பது எளிதாகிறது.தொழில் வல்லுனர்கள் இதை அறிந்திருக்கிறார்கள்.

எனவே காண்பி, சொல்லாதே!

இந்த அருமையான தொழில்முறை ஸ்டோரிபோர்டு எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இத்தகைய சரிபார்க்கப்பட்ட ஸ்டோரிபோர்டுகள் DGAவால் வெளியிடப்பட்டன, இவற்றில் ஹாரி பாட்டர், ஸ்டார் வார்ஸ், இன்செப்சன், கிளாடியேட்டர், ஜுராசிக் பார்க், மவுலின் ரூஜ் மற்றும் பல சிறந்த படங்களின் ஸ்டோரிபோர்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோரிபோர்டு எடுத்துக்காட்டுகள் பற்றிய அறிமுகம்:

ஸ்டோரிபோர்டுகள் படைப்பூக்க ரீதியிலான திரைப்பட உருவாக்கத்தைக் கட்டாயப்படுத்துகின்றன.
ஒரு ஷாட் அல்லது காட்சிக்கு எப்போதாவது ஒரு சிறந்த ஐடியா இருந்ததா?

 உங்கள் மனதில் எல்லாமே சரியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன, ஆனால் நீங்கள் மனதில் வைத்திருக்கிற நுட்பங்கள், காட்சியமைப்புகள் திரையில் கச்சிதமாக வெளிப்படுகிறதா? பார்வையாளர்களுக்கு நீங்கள் மனதில் உருவகப்படுத்தியிருக்கிற காட்சியின் உணர்வு சரியாகக் கடத்தப்படுகிறதா?

ஸ்டோரிபோர்டுகள் தொழில்முறை திரைப்படத் தயாரிப்பாளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் குழுவுடன் காட்சி யோசனைகள் சார்ந்து தெளிவான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், காட்சியமைப்பு சார்ந்த விளக்கங்களை ஒரு குழு மற்றொரு குழுவுடன் விளக்குவதற்கும், தொடர்புகொள்வதற்கும் பயன்படுத்துகின்றன. குகை மனிதர்கள் தங்கள் எண்ணங்களை, பார்த்த காட்சிகளை, ஸ்டோரிபோர்டுகள் கொண்டு அடுத்த சந்ததியினருக்கு உணர்த்திவிட்டுச் சென்றனர். பண்டைய எகிப்தியர்கள் ஸ்டோரிபோர்டுகளைப் பயன்படுத்தினர். 

அவைகள் நன்றாக வேலை செய்வதற்குச் சில காரணங்களைக் கொண்டிருக்கின்றன. ஸ்டோரிபோர்ட் உருவாக்கும் பணிகள் வலிமிகுந்ததாகத் தோன்றினாலும், திரைப்பட உருவாக்கத்தில் அவை பெருமளவு உதவி செய்கின்றன. மேலும்,ஸ்டோரிபோர்ட் உருவாக்கத்தில் பல புதிய (மற்றும் தொழில்முறை) திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவனிக்காத இன்னும் சில நுணுக்கமான காரணங்கள் உள்ளன.

உங்களிடம் பெரிய பட்ஜெட் இல்லை, எனவே எளிமையாக, உங்களுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடியவற்றை மட்டுமே கொண்டு, படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றலாம், கிடைப்பவற்றைக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. அந்தச் சிந்தனை உங்கள் திட்டத்திற்கு(புரொஜக்டிற்கு) தீங்கு விளைவிக்கும், ஏனெனில் நீங்கள் உங்கள் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்துகிறீர்கள். வரம்பெல்லைக்கும், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டும் வேலை செய்யவேண்டும் என்று உங்கள் கற்பனைத் திறனை நீங்களே சுருக்கிக்கொள்கிறீர்கள். இது தானாகவே திரையிலும் பிரதிபலிக்கிறது. மேலும், இது உங்கள் காட்சியியல் ரீதியாகச் சிந்திக்கும் visualise செயல்திறனைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் பிரம்மாண்டம் என்பது கதைசொல்லலின் பாணியும், காட்சியமைப்பும்தான். ஃப்ரேமின் பின்புலத்தில் வருகிற விலையுயர்ந்த செட்களோ, அலங்காரப் பொருட்களோ அல்ல. எனவே, நீங்கள் காட்சியியல் பிரம்மாண்டத்தைக் கொண்டுவர ஸ்டோரிபோர்ட் உதவுகிறது.

ஆகவே, குறைந்த பட்ஜெட் பற்றியும், அது தருகிற வரம்புகளைப் பற்றியும் சிந்தித்து உங்கள் மதிப்புமிக்க ஆற்றலை வீணாக்காதீர்கள். அந்த ஆற்றலை, காட்சியியல் ரீதியாகக் கதைசொல்ல உதவக்கூடிய ஸ்டோரிபோர்ட் உருவாக்கத்திற்குப் பயன்படுத்துங்கள்.

அவற்றை வரைவதற்கு, ப்ரீ புரொடக்‌ஷனில் சிறிதுநேரம் செலவிடுவதை உறுதிப்படுத்துங்கள். ”உங்களுக்கு நன்றாக ஓவியம் வரையத்தெரியவில்லையென்றால், அல்லது நீங்கள் ஒரு ஓவியக் கலைஞராக இல்லாவிட்டால், குச்சி மனிதர்களைக் கொண்டு ஸ்டோரிபோர்ட் வரையுங்கள்” என்ற ஆலோசனையை நீங்கள் அடிக்கடிக் கேட்டிருப்பீர்கள். 

குச்சி மனிதர்களைக் கொண்டு வரைவதென்பது ஒரு அடிப்படை நிலை. நீங்கள் எப்பொழுதும் அந்த அடிப்படை நிலை என்ற அந்த துவக்கநிலையிலேயே தேங்கி நிற்க வேண்டாம். இணையத்தில் ஸ்டோரிபோர்ட் வரைவதற்கென உள்ள (உதாரணத்திற்கு:Studiobinder) மென்பொருட்களையும், செயலிகளையும் பயன்படுத்துங்கள். இன்னும் துல்லியமான ஸ்டோரிபோர்ட்களை உருவாக்குங்கள். எனவே, எப்பொழுதும் குச்சி மனிதர்களைக் கொண்டுமட்டுமே ஸ்டோரிபோர்ட் வரைதலே போதுமானது என்ற வாதத்தில் நான் உடன்படவில்லை. இதனைக் கடுமையாக எதிர்க்கிறேன். 

நீங்கள் வரைவது ஒரு அசிங்கமான ஸ்டோரிபோர்டாகயிருந்தாலும், அதை வரைவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் முதலில் ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அடுத்தடுத்து, அசிங்கமான பின்புறக் காட்சி, முன்புறத்தில் வரக்கூடிய பொருட்கள், அசிங்கமான கதாபாத்திரங்கள் என வரையவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். சிந்தனைமிக்க ஷாட் மற்றும் கம்பொஸிஷனையும் வரையவேண்டும். 

திடீரென்று புதிய ஐடியாக்கள் உங்கள் தலையிலிருந்து முளைவிடுகின்றன;

ஷாட்டின் பின்னணியில் சில ஈஸ்டர் முட்டைகளை மறைத்துவைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அல்லது கதையின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் சரியான சமச்சீர்தன்மை வேண்டும் அல்லது ஒரு பிம்பத்திலிருந்து இன்னொரு பிம்பத்திற்கு, ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மேட்ச் கட் (Match cut) செய்ய விரும்புகிறீர்கள். இவை சிறந்த சினிமா இலக்கணங்கள், இவை பெரும்பாலும் ஸ்டோரிபோர்டிங்கின் தயாரிப்பு. துல்லியமான ஷாட் கம்பொஸிஷன் மற்றும் தனித்துவமான தயாரிப்பு வடிவமைப்பு பற்றி நான் நினைக்கும்பொழுது டிம் பர்டன் மற்றும் வெஸ் ஆண்டர்சன் படங்கள் நினைவுக்கு வருகின்றன. 

Image result for director tim burton
Figure 7 Tim Burton

தற்போதுள்ள உலகில், அதுவரை நீங்கள் காணாத படங்களை, அவ்வியக்குனர்கள் திரையில் உலவவிடுகின்றனர். அத்தகைய சிறப்புமிக்க பிம்பங்களைத் திரையில் ஒளிபரப்புகின்றனர். அவர்கள் மனதில் மட்டுமே இருந்த அந்தத் தனித்துவமான உலகத்தை அவர்கள் தங்கள் துறையினருடன் இணைந்து கட்டியெழுப்புகின்றனர். தன்னுடன் பணியாற்றுகிற சக துறையினரிடம் தன் மனதில் உள்ள பிம்பங்கள் குறித்து விளக்கி, அதற்கேற்றபடி அவர்களிடம் வேலை வாங்கி, தான் நினைத்ததுபோன்ற காட்சியமைப்பைத் திரைக்குக் கொண்டுவந்தார்கள்.

அத்தகைய விஷுவலைஸ் திறனை அவர்கள் எவ்வாறு பிறருக்குப் புரியவைத்தனர் என்று நினைக்கிறீர்கள்?
அவர்கள் ஸ்டோரிபோர்டுகளைப் பயன்படுத்தினர்.

எனவே, எப்பொழுதுமே ஸ்டோரிபோர்ட் உருவாக்கத்தில் இணைவதை மெத்தனமாக அணுக வேண்டாம்.  அடுத்ததாக, பிரபலமான திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்டோரிபோர்ட் உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்து, ஆராய்ந்து, உங்கள் கனவை, உங்கள் தலையிலிருந்து எவ்வாறு பெரிய திரைக்கு எடுத்துச் செல்லலாம் என்பதைக் குறிப்பெடுங்கள்;
 

Alien (ஏலியன்)


காட்சி: மருத்துவமனைக் காட்சி

ஸ்டோரிபோர்டிற்காக, ரிட்லி ஸ்காட் இங்கே குச்சி மனிதர்களை வரையவில்லை. மேலும் அவர் ராயல் கலைக் கல்லூரியில் படித்தபோது சில மெல்லிய ஸ்டோரிபோர்டிங் திறன்களைப் பெற்றிருப்பார். அதனால்தான், அவரால் இத்தகையத் துல்லியமான ஸ்டோரிபோர்டினை வரையமுடிந்திருக்கிறது, நம்மால் முடியாது என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். காட்சியைச் சரியாக உள்வாங்கி, அதற்குத் தேவையான விஷயங்களை வரைகிறபொழுது, தானாகவே, இத்தகைய ஸ்டோரிபோர்ட் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஏலியன் திரைப்படத்தில், ஒரு மனிதனின் முகத்தைக் கவ்வியிருக்கிற, ஜந்துவை மருத்துவமனையில் சோதனையிடுகிறார்கள். அப்பொழுது, அந்த ஏலியனின் கைகளை கூரிய ஆயுதத்தால் அறுக்கிறபொழுது, ஜந்துவின் உடலிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறுகிறது. ஆனால், அது மிகவும் சக்திவாய்ந்த அமிலத்தின் ஒத்தபண்புகளைக் கொண்டிருக்கிறது. அத்திரவம் தரையில் விழுந்தவுடன் தரை பொத்தல் ஆகிறது. தரைத்தளம் அரிக்கப்பட்டு, அதிலிருக்கிற இரும்புக் கம்பிகளையும் அரித்துவிடுகிறது. இங்கு இயக்குனர், அந்த அமிலத்தின் தன்மையையும், ஏலியன்களின் அபாயத்தையும் இன்னும் தீவிரமாகக் காட்சிப்படுத்தவும், பார்வையாளர்களுக்கு உணர்த்தவும் விரும்புகிறார். ஏனெனில், எப்பொழுதுமே எதிரி பலமானவனாக இருக்கிறபொழுதுதான், கதை இன்னும் பலப்படுகிறது. ஒரு பலமான எதிரியைக் கதாநாயகன் எப்படி வீழ்த்தப்போகிறான் என்பதில்தான் சுவாரஸ்யம் கூடுகிறது. எனவே, இங்கு அமிலத்தின் சக்திவாய்ந்த தன்மையை இவ்வாறு காட்சிப்படுத்துகிறார். அதாவது தரையில் விழுந்த அமிலம், அதற்கடுத்து பல அடுக்குகளைக் கடந்து, தரையைத் துளைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு, மூன்றாவது மாடியின் தரையில் அந்த அமிலம் விழுந்ததென்றால், அது இரண்டாவது மாடி, முதல் மாடி என அடுத்தடுத்த தளங்களையும் கடந்து செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், அமிலத்தின் தன்மையைச் சோதித்தறியும் கருவி, அமிலத்தின் செரிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தும் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தச் சோதனைக் கருவியையும், அந்த அமிலம் பொசுக்கிவிடுகிறது எனில், ஏலியனின் அபாயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய எதிரியின் பலத்தை அறிந்துகொள்ளுங்கள் என்று விளக்குவதாக இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கென உருவாக்கப்பட்ட ஸ்டோரிபோர்டுகளைக் கவனியுங்கள். 

Film Storyboard Examples - Movie Storyboard Sample - Ridley Scott - Alien - StudioBinder


குறிப்பு: “முட்டையின் உள்ளே செயல் அழகாக இருக்கிறது”

”இது ஒரு அற்புதமான பாதுகாப்பு இயந்திரநுட்பத்தைப் பெற்றுள்ளது…. மூலக்கூறு அமிலம் மற்றும் ஸ்டோரிபோர்ட்”

There Will Be Blood
காட்சி: Oil Derrick Scene

காட்சியில் பின்புலத்தில் வருகிற பொருட்களும், அமைப்பும் மிக மிக முக்கியம். அவைதான், காட்சியின் மையமான உணர்வுகளைக் கடத்தத் தோதாகயிருக்கின்றன. எனவேதான், திரைப்பட இயக்குனர்களும், படைப்பாளிகளும் காட்சியின் பின்னணிச்சூழல் குறித்து அதிகம் யோசிக்கிறார்கள். அப்படியாக மிகவும் மெனக்கெட்டு உருவாக்குகிற பின்னணிச் சூழல் கொண்ட காட்சி, திரையிலும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கிறது. அதிகமான ரிவெர்ஸ் ஷாட் (Reverse Shot) கொண்டு எடுக்கப்பட்ட There Will Be Blood படத்தின் உதாரணத்தைக் கவனியுங்கள். 


Image result for there will be blood oil
Figure 8 There Will Be Blood

பூமிக்கடியிலிருந்து எரிவாயு எடுப்பதற்காக, பூமியைத் துளைக்கிறார்கள். துளையினுள் செலுத்தப்படும் அடர்த்தியான கயிறு ஆட்டம் காண்கிறது. உடனே வேலையாட்கள் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடுகின்றனர். இச்செயல்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கிருந்து தப்பிக்க எழுகிறான். அதற்குள், துளையினுள் இருந்து சூறாவளி வேகத்துடன், புகை மேலெழுகிறது. அவை மரப்பாலங்களை உடைத்தெறிகின்றன. எதிர்பாராத அந்த இயற்கையின் தாக்குதலில் அச்சிறுவன் தூக்கியெறியப்படுகிறான். மயக்கமுறுகிறான். அடர்ப்புகை சற்று தணிந்து, துளையிலிருந்து கருமையான நிறத்தில் எண்ணெய் (அல்லது ஏதேனும் எரிவாயு) பல அடி உயரத்திற்குப் பீய்ச்சியடிக்கிறது. எதற்காக பூமியைத் துளையிட்டார்களோ அது கிடைத்துவிட்டது. ஆனால், அந்தச் சிறுவன்தான் எதிர்பாராமல் அந்த இடருக்குள் மாட்டிக்கொண்டான். எனவே, பையனைக் காப்பாற்ற அங்கு விரைகின்றனர். அந்தக் கருமையான எண்ணெய் சற்று நேரத்திற்குள் தீப்பிடித்துவிடக்கூடும். எனவே, அதற்குள் அந்தச் சிறுவனைக் காப்பாற்றியழைத்துவர முயற்சிக்கின்றனர். காட்சியமைப்பு மற்றும் இசையின் மூலம், அந்தப் பதற்றத்தை படிப்படியாக அதிகப்படுத்துகின்றனர். எனவே, இக்காட்சியை ஒருமுறை இணையத்தில் பார்த்துவிட்டு, பின்பு அதற்கு எப்படி ஸ்டோரிபோர்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று, இரண்டையும் வைத்து ஒப்பீடுசெய்து, ஸ்டோரிபோர்ட் சார்ந்த படிப்பினையை மேலும் அதிகப்படுத்துங்கள்.  

இக்காட்சிக்கான ஸ்டோரிபோர்டினை இங்கே பார்க்கலாம். 
பால் தாமஸ் ஆண்டர்சனின் There Will Be Blood படத்திற்காக P.K.மெக்கார்தி வரைந்த ஸ்டோரிபோர்ட்கள் இவை…

Storyboard Examples - Storyboard Ideas - Film Storyboad Template - Storyboard Format - There Will Be Blood - StudioBinder

”நீங்கள் உங்கள் பையனைக் கைவிடலாம், ஆனால் ஸ்டோரிபோர்டைக் கைவிட வேண்டாம்.” என்பதை இவ்வரைபடங்கள் உணர்த்துகின்றன.

ஸ்டோரிபோர்டில் குறிப்பிடுகிற சிறிய குறிப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள். Dolly Movement பற்றியும், கதாபாத்திரத்திற்கு எவ்வளவு அருகில் கேமரா இருக்க வேண்டும் என்பது பற்றியும் தீர்க்கமான காட்சியமைப்பை ஸ்டோரிபோர்டிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். மேலும், பின்னணிச் சூழலானது இதில் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. எரிவாயு வெடிப்பு போன்று சிக்கலான காட்சியமைப்புகளைப் படம்பிடிக்க, இந்த ஸ்டோரிபோர்ட்களின் பங்களிப்பு பெருமளவில் துணைநிற்கிறது.


Jurassic Park (ஜுராஸிக் பார்க்) 
காட்சி: Raptor Attack Scene

ஸ்டோரிபோர்ட் ஃப்ரேம்களிலேயே கொடுக்கப்படுகிற குறிப்புகள், ஒவ்வொரு புதிய ஷாட்டிலும் உங்களை வழிநடத்த உதவுகின்றன. ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டிய காட்சியை, பல ஷாட்கள் பயன்படுத்தியும் எடுக்கலாம். பெரும்பாலும், உங்களுக்குப் போதிய நேரம் கிடைக்கிறபொழுது, இவ்வாறு தாமதிக்கலாம். அடுத்து, பல ஷாட்கள் கொண்டு எடுக்கவேண்டிய காட்சியைத் தகுந்த விதத்தில் டைரக்ட் செய்து ஒரே ஷாட்டிலும் வெளிப்படுத்த முடியும். 

ஜுராஸிக் பார்க் படத்தில், கட்டிடத்தினுள் இரண்டு குழந்தைகளோடு கதாநாயகனும் சிக்கிக்கொள்ள, அவர்களை வேட்டையாட நினைக்கிற டைனோசர்களும் அங்கு சுற்றித் திரிகின்றன. அக்காட்சிக்கான ஸ்டோரிபோர்டுதான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.


Image result for steven spielberg jurassic park scene


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க் படத்திற்காக டேவில் லோவெரி வரைந்த ஸ்டோரிபோர்ட்கள்.


Storyboard Examples - Storyboard Ideas - Film Storyboad Template - Storyboard Format -Jurassic Park Storyboard - StudioBinder

குறிப்பு: “கேமராவை நோக்கி கால் மற்றும்….”

ஆஹ்ஹா, ஹ்ஹா, ஆஹ்ஹா, நீங்கள் இன்னும் அந்த மந்திர வார்த்தையை உச்சரிக்கவில்லை. அதுதான் ஸ்டோரிபோர்ட்.

மற்றொரு அகாதமி விருதுவென்ற படத்திற்கான ஸ்டோரிபோர்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு முன்பு, ஜோர்டான் பீலே போன்று எப்படி ஸ்டோரிபோர்டில் மாஸ்டராகத் திகழ்வது என்பது பற்றிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள். 

Get Out படத்திற்கான ஸ்டோரிபோர்ட் கொடுக்கப்படுகிறது. உங்கள் காட்சியின் இலட்சியத்தை முழுமையாகத் தொடர்புகொள்ளும் ஸ்டோரிபோர்டினை உருவாக்குவதற்கு படிப்படியான பணிப்பாய்வுகளை இது வழங்குகிறது.

ஸ்டீபன் கிங் இவ்வாறு கூறினார், “உண்மையானவற்றைச் சமாளிப்பதற்கு எங்களுக்கு உதவுவதற்காக, நாங்கள் பயங்கரங்களை (Horror) உருவாக்குகிறோம்”.
திகில் திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான சிறந்த விற்பனை நிலையங்களாக, சந்தை மதிப்பு கொண்டவைகளாக இருந்தபோதிலும், அவை சமூகங்களைப் பாதிக்கும், சமூக மற்றும் கலாச்சார அச்சங்களை ஆராய்வதற்கான சிறந்த வகையினமாகவும் இருக்கின்றன. 


Image result for stephen king
Figure 9 ஸ்டீபன் கிங்

சமீபத்திய ஞாபகக்குறிப்புகளிலிருந்து இதற்கு மிக வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ஜோர்டான் பீலே இயக்கிய Get-Out (கெட் அவுட்) திரைப்படமாகும்.
இந்தக் கட்டுரையில், பீலேவின் ஸ்டோரிபோர்டு உருவாக்கம் மற்றும் ஷாட் பட்டியல் தேர்வுகள், எவ்விதமாக திகில்வகைப் படத்திற்கான மனநிலையை/ உணர்வை மேம்படுத்துகின்றன என்பதை ஆராயப்போகிறோம். நாம் இங்கே பார்ப்பது, கட்டாய ஷாட் பட்டியல் மூலம் கதையை முன்னேற்றுவதும், கதையை அடுத்தடுத்து நகர்த்துவது மட்டுமல்ல, கதைகளின் கருப்பொருட்களையும்(தீம்) எப்படி மேம்படுத்துகின்றன? என்பதைக் குறித்தும் அலசப்போகிறோம்.
 
சரி, தொடங்குவோம்!

திகில் திரைப்படங்கள் வேகக்கட்டுப்பாட்டைப் பற்றியவை.

அவற்றில் ஒரு சீரான தாள-லயம் பின்பற்றப்படும். ஒவ்வொரு திரைப்படமும் ஸ்டோரிபோர்ட் செய்தபிறகே, படம்பிடிக்கப்பட வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. இயக்குனர்களிடத்தில் ஸ்டோரிபோர்ட் உருவாக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் கூடாது. அது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த விஷயம். ஆனால், ஸ்டோரிபோர்ட் உருவாக்கிக்கொள்வதினால் ஏகப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்றே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, ஸ்டோரிபோர்ட் என்பது கட்டாய நடைமுறை அல்ல, நன்மை பயக்கும் காரணி என்பதற்கான பரிந்துரை மட்டுமே!

ஸ்டோரிபோர்ட், ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு திரைக்கதையை மிகவும் திறம்பட காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. முழு திட்டத்துடனும் (புரொஜக்ட்), காட்சியின் தனித்தனி தருணங்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. திகில் திரைப்படங்களில், பொருத்தமான ஷாட் பட்டியலை உருவாக்குவது, அந்த ஜானரின் முக்கியக்கூறுகளில் ஒன்றான வேகக்கட்டுப்பாட்டினை – ரிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

திகில் திரைப்படங்களைப் பொறுத்தவரை, காட்சிகளில் சஸ்பென்ஸை உருவாக்குவது மட்டுமே இலக்கு என்றில்லாமல், ஒரு குறிப்பிட்ட தகவலை எப்போது? எப்படி வெளிப்படுத்த வேண்டும்? என்பதையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் இது பார்வையாளர்களுக்கு முக்கியமான கதை விவரங்களில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
கெட் அவுட் படத்தில் வருகிற ஒரு காட்சியை இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். க்றிஸ், மூழ்கவைக்கிற அமானுஷ்ய சூழலுக்குள் நுழைவதைப் பார்ப்போம். இது கிட்டத்தட்ட விண்வெளி போன்ற பின்புலத்தைக் கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் க்றிஸ் உலாவுகிறான். கிட்டத்தட்ட மிதக்கிறான் என்றே சொல்லவேண்டும். 

Keener 1 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software
Figure 10 மிஸ்ஸி ஆர்மிட்டேஜ், Get out(2017)
Related image
Figure 11 க்றிஸ், Get out(2017)

சிறந்த திகில் திரைப்படங்களில் வேகக்கட்டுப்பாடு ஷாட் தேர்வோடு கைகோர்த்துச் செல்கிறது. கெட் அவுட்(2017)

இங்கே, கதாபாத்திரத்தின் உணர்ச்சிநிலையை வலியுறுத்த க்ளோஸ் அப் ஷாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஷாட், பரந்த நிலையிலிருந்து கதாபாத்திரத்தைத் துண்டித்து தனித்து முக்கியத்துவப்படுத்துகிறது. அடையாளங்காட்டுகிறது. 

அடுத்து, இந்த ஷாட்டை மேலும் வலிமையாக்குவதுபோன்று, சக்திவாய்ந்த கேமரா நகர்வு ஒன்றும் நடைபெறுகிறது. மற்றும் ஜோர்டான் பீலேவைப் பொறுத்தவரை, மிஸ்ஸி ஆர்மிட்டேஜ் இந்தத் தருணத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதைக் காண்பிப்பதே, அவரது நம்பிக்கை. 

How to Master A StoryBoard like Jordan Peele Get Out - Chris Crying Sequence Storyboard - StudioBinder Film Production Software - 2

ஆனால், துரதிருஷ்டவசமாக க்றிஸைப் பொறுத்தவரை, எதிரே அமர்ந்திருக்கும் அவளுடைய குரலின் நிலையான தொனியும், டீக்கப்பைத் தட்டுவதன் லயத்திலிருந்தும் தவிர்க்க முடியாமலும், அந்தத் தருணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத நிலையிலும் வைத்திருக்கிறது. 

நெருக்கமான மற்றும் வேகக்கட்டுப்பாடு மிஸ்ஸியின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. அவள், “இப்போது தரையில் மூழ்கிவிடு” என்று சொல்லும்வரை, க்றிஸ் உதவியற்றவனாக, அவளையே வெறித்துப் பார்க்கிறான்.

அங்கிருந்து, கீழேயுள்ள உதாரணத்தில் நாம் காண்பதுபோல, பீலே, சட்டென மூழ்கிய இடத்தின் உள்ளேயிருந்து காட்சிப்படுத்தும் கண்ணோட்டத்திற்கு ஷாட்டினை உடனடியாக மாற்றுகிறார். 


Sunken Place 1 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

திரைப்படத்தில் நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இங்கு க்றிஸின் உதவியற்ற தன்மையைக் காட்சிப்படுத்த வேண்டும். அது க்ளோஸ் அப் ஷாட்டினால் நடக்காது. ஏனெனில், க்ளோஸ் அப்பில், க்றிஸின் முகம் மட்டுமே தெரியும். அவனுக்கு அருகில் யாருமே இல்லை என்பதை வெளிப்படுத்த முடியாது. மேலும், அதுவரை, ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபர், அடுத்த நொடியில் யாருமற்ற தனிமையில் மிதந்துகொண்டிருக்கிறான் என்ற உணர்வினைக் க்ளோஸ் அப் ஷாட்டினால் உணர்த்தமுடியாது. எனவேதான், கெட் அவுட் படத்தின் இயக்குனரான ஜோர்டான் பீலே, வைட் ஷாட்டினைப் (Wide Shot) பயன்படுத்துகிறார். க்றிஸ்-க்கு உதவிசெய்ய, அவனைச் சுற்றி யாருமே இல்லை, என்பதை வைட் ஷாட்டின் மூலம் வெளிப்படுத்துகிறார். மேலும், இந்த வைட் ஷாட் மூலம், க்றிஸ் மட்டும் அந்தரத்தில் மிதக்க, அந்தப் பெண்ணோ நிலையாக அமர்ந்திருப்பதும் காட்சிக்குள் தெரிகிறது. 

அந்த அமானுஷ்யமான மூழ்கிய இடத்திலிருந்து காட்சிப்படுத்த பீலே, வைட் ஷாட்டிற்கு உடனடியாக மாறுகிறார் மேலும், காட்சியின் வேகத்தை வினாடிக்கு 200 ப்ரேம்களாகவும் குறைக்கிறார். அது சார்ந்த விவரங்களை, பிம்பத்தின் ஓரத்திலேயே நாம் காணமுடியும். 

நீங்கள் ஒரு பரந்தகோண (வைட் ஷாட்)ஷாட்டைப் பயன்படுத்தும்பொழுது, (கேமராவின்) முன்புறத்திற்கு அருகில் உள்ள பொருட்கள் பெரிதாகத் தோன்றும். ஃப்ரேமின் பெரும்பான்மையான இடத்தை அவை எடுத்துக்கொள்ளும். அதேவேளையில், பின்னணியில் உள்ள பொருட்கள் மிகச்சிறியதாகத் தோன்றும். 

இது ஒரு காட்சியின் தோற்றத்தை/பரிமாணத்தை மேம்படுத்துகிறது. இல்லையெனில் தட்டையான மேற்பரப்பில் முப்பரிமாண தரத்தைச் செலுத்துகிறது. 
இங்கே, மிஸ்ஸி ஆர்மிட்டேஜ் மற்றும் அவள் தங்கியிருக்கிற அறை போன்றவை வெகுதூரம் செல்கின்றன. அதேநேரத்தில், க்றிஸின் முடங்கிப்போன உடல் பார்வையாளரை நோக்கி நகர்கிறது.

இதைப் பொறுத்தமட்டில், வைட் ஷாட், திகில் திரைப்படங்களுக்கான மிக சக்திவாய்ந்த இரண்டு கூறுகளைப் பயன்படுத்துகிறது: 
இருட்டினால் ஏற்படுகிற பயம்.  
அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்ட அச்சவுணர்வு.

இரண்டுமே இந்த ஷாட்டில் முழுமையாக உள்ளது. க்றிஸ் தனது யதார்த்தத்தையும், அதுவரை உடனிருந்த பாதுகாப்புணர்வையும் தவறவிட்டுவிட்டார். அத்தோடு அறியப்படாத படுகுழியில் விழுந்திருக்கிறார். இதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவருமே ஷாட்டில் இருக்கின்றனர்.

Sunken Place 2 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

இதை மறந்துவிடாதீர்கள். சிறந்த திகில் திரைப்படங்கள் காட்சிகளின் உணர்ச்சிகளை உயர்த்த, அசாதாரண பயத்தைப் பயன்படுத்துகின்றன. கெட் அவுட் (2017)

குறிப்பிட்டுள்ளபடி, ஷாட்டை பரந்த கோணத்திற்கு விரிவாக்குவதோடு, ஜோர்டான் பீலே, ஃப்ரேம் வீதத்தை, வினாடிக்கு 200 ஃப்ரேம்களாக அதிகரிக்கிறார். கேமரா இயக்கத்தின்படி, அதிகமான ஃப்ரேம் வீதம் மெதுவான இயக்கத்திற்கு வழிவகுக்கும். அதாவது ஸ்லோமோஷன்(Slowmotion).

பொதுவாக, ஒரு காட்சியின் உணர்ச்சி தீவிரத்தை நீடிக்கச்செய்ய, அல்லது வலியுறுத்த இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. க்ளோஸ் அப், மிஸ்ஸியின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பரந்த கோணத்தால் வழங்கப்பட்ட தூரம் க்றிஸின் விரக்தியைக் கூட்டுகிறது. 

இந்த அந்நிய உலகம், அவனது பயங்கர உணர்ச்சியை, அச்சத்தை இன்னும் பெருக்குகிறது. ஆனால், பீலே, இக்காட்சியை ஒரு எளிய பரந்த கோணத்தோடு மட்டும் முடித்துக்கொள்ளவில்லை. இல்லை, இன்னும் தீவிரமான பரந்த கண்ணோட்டத்திற்குச் செல்வதன் மூலம், க்றிஸின் சிக்கலான சூழ்நிலையை மேலும் வலியுறுத்துகிறார். அதிகப்படியான தூரத்திலிருந்து க்றிஸின் தனிமையுணர்வை அச்சவுணர்வோடு வெளிப்படுத்துகிறார்.

Sunken Place 3 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

இந்த ஷாட்டைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு என்ன தோன்றும்?

க்றிஸின் நிலைமை இதற்கு முன்னர் கவலைக்குரியது என்று நினைத்திருந்தால், இப்போது அது இன்னும் மோசமானதாகத் தெரிகிறது. விண்வெளியில் சிக்கிய ஒரு குப்பையைப் போல அல்லது இவரை மட்டும் விண்கலத்திலிருந்து இறக்கிவிட்டு, அவ்விண்கலம் பூமிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதைப் போல தோன்றுகிறார். அல்லது, கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் சிக்கிக்கொண்ட பூச்சியாகத் தோற்றமளிக்கிறார்.

மயிர்க்கூச்செறியும் இடங்கள் சிறந்த திகில் திரைப்படங்களின் மற்றொரு அடையாளமாகும். மேலும், இந்த எக்ஸ்ட்ரீம் வைட் ஆங்கிள்(Extreme Wide Angle), இந்தக் குளிர் வெற்றிடத்தின் மகத்தான தன்மையைக் காட்டுகிறது, இது பயம் – காரணியை மேம்படுத்துகிறது.

ஆனால், பீலே, பார்வையாளர்களைத் தூரமாகத் தனிமைப்படுத்த விரும்பவில்லை. எனவே, அவர் பரந்த கோணத்திலிருந்து, நெருக்கமான கோணத்தில் வைத்து க்றிஸைக் காட்சிப்படுத்தும் இடத்திற்கு மாறுகிறார். இந்த ஸ்டோரிபோர்ட், சுற்றுச்சூழலின் திகிலூட்டும் தன்மையையும், க்றிஸின் முழுமையான குழப்பத்தையும் பயத்தையும் உணர அனுமதிக்கிறது. 
 
StudioBinder Production Management Software

பயங்கரத்தன்மையை அதிகரிக்க, ஜோர்டான் பீலே., பரந்த கோணத்திற்கும் நெருக்கமான கோணத்திற்கும் இடையில், ஒரு கோணத்தில் க்றிஸைக் காட்சிப்படுத்துகிறார். 

காட்சியின் தோற்றத்தை ஸ்டோரிபோர்ட் பலப்படுத்துகிறது.

விரைவில் க்றிஸ், தற்போது விண்வெளியின் அடிப்பகுதியில் சுற்றுகிறார். அதைக் காட்சிப்படுத்தும் விதத்தில் கேமராவின் கோணம் மற்றும் ஷாட் மாறுகிறது. பீலே, இந்தப் புதிய கட்டத்தை ஒரு பரந்த கோணத்தில் நிறுவுகிறார், ஆனால், பின்னர் மிஸ்ஸியின் பார்வையிலிருந்து ஒரு எக்ஸ்ட்ரீம் வைட் ஷாட்டிற்கு மாறுகிறார். 

க்றிஸின் அவநம்பிக்கையான சூழ்நிலையை இது நினைவூட்டுவதோடு, இந்தக் கேமரா நுட்பம் இப்போது மிஸ்ஸியின் சக்தியைப் பற்றிய பெரிய பிம்பத்தையும் நமக்கு வழங்குகிறது. 

Sunken Place 5 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

அப்படியெனில், இந்த ஷாட் பிரதானமாக, மிஸ்ஸியின் வலிமையைக் காட்சிப்படுத்துவதற்காகத்தான் பயன்படுகிறது. அடுத்து, முன்னெப்போதையும்விட, க்றிஸ் ஒரு காலத்தில் (அல்லது சற்றுமுன்) கொண்டிருந்த பாதுகாப்பு, இப்போது தொலைதூர நினைவமாக மாறியிருக்கிறது. அல்லது என்றுமே அதை மீண்டும் அடைய முடியாததாகவும் உள்ளது, என்ற நிலையை இந்த ஷாட் உணர்த்துகிறது.

கீழேயுள்ள எடுத்துக்காட்டில் உள்ளதுபோல, பீலே சுற்றுச்சூழலை நிறுவுவதற்கு மட்டுமல்லாமல், கதாபாத்திர உணர்ச்சியின் விரிவாக்கமாகவும் செயல்பட , கேமரா கோணத்தைப் பயன்படுத்துகிறார். 

இந்த எக்ஸ்ட்ரீம் வைட் ஷாட்டில், மிஸ்ஸி இப்போது க்றிஸ் எட்டிவிட முடியாத உயரக்கோபுரத்தில் இருக்கிறார். இந்த ஷாட்டிலிருந்து, க்றிஸைக் கைப்பற்றியவர் அல்லது சிறைபிடித்தவர் என்ற நிலையில் மிஸ்ஸி நிலைகொள்கிறார். அதேபோல, அவரிடம் பிடிபட்டவராக, கைதியாக தன் பாத்திரத்தினை க்றிஸ் உறுதிப்படுத்துகிறார். 

Keener 2 - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

மிஸ்ஸியின் சக்தியை முன்னிலைப்படுத்த ஜோர்டான் பீலே எக்ஸ்ட்ரீம் வைட் ஆங்கிளைப் பயன்படுத்துகிறார். Get out (2017)

 கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவுநிலையை/ தொடர்பைக் காட்சிப்பூர்வமாகப் பார்ப்பதற்கு ஸ்டோரிபோர்ட் உதவுகின்றன.

பார்வையாளர்களுக்கு ஒரு சகஜமற்ற உணர்வைச் சேர்த்தபிறகு, ஜோர்டான் பீலே, காட்சியை மூழ்கிய இடத்திலிருந்து மீண்டும் மிஸ்ஸி ஆர்மிட்டேஜ் வீட்டிற்கு மாற்றுகிறார். 
மிஸ்ஸி மற்றும் க்றிஸ் இருவரின் பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட்களுக்கு மத்தியில் க்ளோஸ் அப் போன்று நெருக்கமான ஷாட்களைப் பயன்படுத்துவதன் மூலம், காட்சியின் தீவிரமும் விரக்தியும் எப்போதும் தக்கவைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட தருணத்துடன் மட்டும் தொடர்புடையது அல்லாமல், அந்தக் குறிப்பிட்ட புராஜக்ட் (திரைப்படம்) முழுவதும் ஆராயப்பட்ட இன அநீதியைச் சுற்றியுள்ள வர்ணனையையும் சேர்க்கிறது. 

Image result for Jordan Peele uses a close-up shot to focus on Chris' response. Get Out (2017)

[க்றிஸின் எதிர்வினையைக் கவனத்திற்குட்படுத்துவதுபோல, ஜோர்டான் பீலே இங்கு க்ளோஸ் அப் ஷாட் பயன்படுத்துகிறார். Getout(2017)]

Image result for Jordan Peele uses POV to highlight character relationships. Get Out (2017)

[கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவுநிலையை வெளிப்படுத்துவதற்காக ஜோர்டான் பீலே பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட்டினைப் பயன்படுத்துகிறார். Getout (2017)]
இங்கே க்றிஸின் பயங்கரத்தையும், காட்சியின் கட்டுப்படுத்தப்பட்ட கிளாஸ்ட்ரோபோபிக் உணர்வையும் நாம் அனுபவிக்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் பிரதான தகுதியாகக் கருதப்படுவது உணர்வுநிலைக் கடத்தல்தான். திரையில் கதாபாத்திரங்கள் அனுபவிக்கிற உணர்ச்சிநிலையை அதே ரீதியில் பார்வையாளர்களுக்கும் கடத்திவிட்டால் அதுவே பெரிய வெற்றி. அப்படியாகச் சரியான உணர்வுநிலையைக் கடத்துவதற்காகத்தான் இந்தக் காட்சியமைப்பு மற்றும் ஷாட் டிவிஷன்கள் எல்லாம் பயன்படுகின்றன. 
சிறந்த திகில் திரைப்படங்களைப் போலவே, அவரது பக்கவாதம் நமது பக்கவாதமாக மாறுகிறது. ஏதும் செய்வதற்று முடங்கிப்போகிற அவரது நிலை, பார்வையாளர்களாகிய நமக்கும் தொற்றிக்கொள்கிறது. சிறைச்சாலையின் எடையை பார்வையாளர்களாகிய நாமும் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

ஆனால், மிஸ்ஸி முன்னால் நகரும்பொழுது, பீலே நம்மை மூழ்கிய இடத்திற்கே திரும்ப அழைத்துச்செல்ல முடிவுசெய்கிறார். மிஸ்ஸியின் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நாம் தலைக்குமேலே ஓவர்ஹெட் மீடியம் ஷாட்டிற்கு மாறுகிறோம். 

நெருக்கமாக இன்னும் அணுகமுடியாத நிலையில், மிஸ்ஸி, க்றிஸை இகழ்ந்து பேசுவதாகத் தெரிகிறது. தப்பிப்பதற்கான அவரது விருப்பம் பயனற்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

Image result for Jordan Peele’s camera mimics the movements of his characters. Get Out (2017)

Jordan Peele’s camera mimics the movements of his characters. Get Out (2017)

க்றிஸை நிரந்தரமாக இருளில் விட்டு வெளியேற மிஸ்ஸி தயாராகும்பொழுது, ஜோர்டான் பீலே நாம் காட்சியை வேறொரு பரிமாணத்திலிருந்து பார்ப்பதற்கு ஏற்ப ஓவர் தி ஷோல்டர் ஷாட்டிற்கு மாற்றுகிறார். 

Related image
Jordan Peele uses an over-the-shoulder shot to mimick Chris' perspective. Get Out (2017)

இருள் நம் இருப்பின் ஒரு மூலையில், மரண பயத்துடன் இணைகிறது. ஷாட் மற்றும் ஸ்டோரிபோர்ட் தேர்வுகள் மூலம் க்றிஸ், பார்வையாளர்களுடன் சேர்ந்து, இது அவர் தப்பிக்கக்கூடிய இருள் என்பது நிச்சயமற்றது என்று உணர்த்துகிறது. 

ஆனால், அதிர்ஷ்டவசமாக க்றிஸுக்கு இருள் என்பது குறுகிய காலம்தான், சிறிது நேரத்திற்குப் பிறகு இருள் விலகுகிறது. க்றிஸ் விரைவில் தன் படுக்கையிலிருந்து விழித்தெழுகிறார். 


Chris Wakes - How to master storyboards like Jordan Peele - Get Out - StudioBinder Production Management Software

[சிறந்த திகில் திரைப்படங்கள், மரண பயத்தை, தங்களுக்குக் கிடைத்த அனுகூலமாகப் பயன்படுத்துகின்றன. Get out(2017)]

மரணபயம் தான் திகில் திரைப்படங்களுக்கான அடிப்படை. எத்தகைய கஷ்டங்கள் இடர்ப்பட்டாலும் உயிர்பிழைத்தாக வேண்டும். அந்த ஓட்டத்திற்கான பாதையில், உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வேட்கையில், காண்பதை எல்லாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அது சஸ்பென்ஸைக் கொடுக்கிறது. எந்நேரத்தில் என்ன நடக்கும்? என்று அடுத்த நொடி சுவாரஸ்யத்துடன் கதை நகர்கிறது. மரண பயம் இதற்கான அடிப்படையாக இருந்து பார்வையாளர்களைத் திகில் அனுபவத்துடன் தொடர்ந்து படம் பார்க்க வைக்கிறது. 

இப்போது மீண்டும் காட்சிக்கு வருவோம். படுக்கையிலிருந்து எழுந்த க்றிஸ், படபடக்கும் இதயத்துடிப்புடன், நெஞ்சு அதிர தன் அனுபவத்தைப் பிரதிபலிக்கிறார். இது உண்மையானதா? இல்லையா?

எல்லாமே, கனவுதானா? என்ற குழப்பமான சூழ்நிலையிலிருந்து யோசிக்கிறார். மீண்டும், ஜோர்டான் பீலே, வேகக்கட்டுப்பாட்டின் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார். ஒரு சகஜநிலைக்கு நம்மைக் கொண்டுவருகிறார். இதனால், க்றிஸ் விழித்தெழுகிற நேரத்தில், அவருடன் நாம் பாதுகாப்பாக, படுக்கையறையில் இருக்கிறோம். அந்தப் பாதுகாப்பிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

ஆம் பாதுகாப்பானது, ஆனால் எவ்வளவு காலத்திற்கு?

மடக்குதல்

ஒழுங்கான ஷாட் மற்றும் ஸ்டோரிபோர்ட் உருவாக்கம் காரணமாக, ஜோர்டான் பீலே ஒரு திகில் படம் என்னவாகயிருக்கும் என்ற நமது எதிர்பார்ப்புகளை புரட்ட முடிகிறது. அடுத்தடுத்து நகர்த்த முடிகிறது. நிச்சயமாக, இந்த வகைக் கதைகளால், நாம் பொழுதுபோக்கவும் விரும்புகிறோம்.


Related image
Figure 12 Jordan Peele
 
ஆனால், அதற்கும் மேலாக பீலே, தனது கதாபாத்திரங்களின் உளவியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகச் சங்கடங்களையும் ஆழமாக எடுத்துக் காண்பிக்கிறார். இதில் அவர் வெற்றியும் பெறுகிறார். 

ப்ரேம் ஸ்டோக்கர், ”தனித்திருக்கும் தெரியாதவருக்குள், நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார். கெட் அவுட் திரைப்படம் காண்பிக்கிற உலகம் நம்மைப் பயமுறுத்துவதாக இருக்கலாம், ஆனால், ஒரு வழிகாட்டியாக பீலே உடன் வருகிறபொழுது, நீங்கள் அதற்குள் இன்னும் ஆழமாக மூழ்குவதற்குத் தயாராக இருக்கிறீர்கள். இத்தகைய சிறந்த பலனை ஜோர்டான் பீலே அடைவதற்கு, ஸ்டோரிபோர்ட் மிக முக்கியக் காரணமாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. 

நீங்களும், உங்கள் சொந்த ஸ்டோரிபோர்டை உருவாக்க விரும்புகிறீர்களா? ஸ்டுடியோ பைண்டர் போன்ற தளத்தில் பதிவு செய்து, உங்கள் புராஜக்டிற்கான ஸ்டோரிபோர்டினை இலவசமாகவே உருவாக்கத் துவங்குங்கள். 

 

மீண்டும், திரைப்படங்களுக்கான ஸ்டோரிபோர்ட் மாதிரிகளுக்குச் செல்வோம். 

ஸ்டோரிபோர்டுகள், படம் எந்தப் பாதையில் செல்கிறது? அதன் இலக்கு என்ன? போன்ற முக்கியமான கருதுகோள்களைப் பிறருக்குத் தொடர்புகொள்வதற்கு மட்டுமல்லாமல், காட்சியமைப்பு சார்ந்தும், காட்சிமொழி சார்ந்தும் நீங்கள் எடுக்கிற சொந்த முடிவுகளைப் பற்றியும் பகுப்பாய்வு செய்வதற்கு உதவியாக இருக்கிறது. ஒரு ஷாட்டிலிருந்து இன்னொரு ஷாட்டிற்கான வெட்டு(கட்)க்களையும், அவை ஒன்றுக்கொன்று எப்படியெப்படி விளையாடுகின்றன? என்பதையும் நீங்கள் இதன்மூலம் காணலாம். 

ஃப்லிம்மேக்கிங் என்பது உங்கள் படைப்பு வெளியீட்டை முன்னேற்றுவது பற்றியது, மேலும் ஸ்டோரிபோர்டுகள் உங்களை ஒரு படைப்பு இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கும், நல்ல யோசனைகளையும், கெட்டவற்றையும் வடிகட்ட உதவுகின்றன. கூடுதலாக, அவை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காண்பிக்கக்கூடிய வேடிக்கையான நினைவுச் சின்னங்கள், அல்லது அந்த ஸ்டோரிபோர்டுகளுக்கு ஃப்ரேமிட்டு, சுவற்றில் அலங்காரமாகத் தொங்கவிடலாம். படம் சார்ந்த காட்சியமைப்பை மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் கொள்வதற்காக அந்த ஸ்டோரிபோர்டு ஃப்ரேம்கள் பயன்படும். சுவற்றில் மாட்டியிருக்கிற ஸ்டோரிபோர்டுகளைப் பார்க்கிறபொழுது, படத்தின் காட்சியமைப்பு சார்ந்த சித்திரங்கள் மனதில் பதியும். உங்களின் படைப்பாற்றல் மேம்பட்ட பின்னர், நன்றி கூறுவீர்கள்.

4.மெளலின் ரூஜ் (Moulin Rouge)
காட்சி: வைரங்கள் பெண்ணின் சிறந்த நண்பர்கள்.

Related image

ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு நடுவில் ஒரு பெண் பாட்டுப்பாடி நடனமாடுகிறார். அக்காட்சிக்கான ஸ்டோரிபோர்ட் தான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டோரிபோர்டில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது திசை அம்புகளின் பயன்பாடு. 


Storyboard Examples for Film - Storyboard Ideas - David Russell - Moulin Rouge Storyboard - StudioBinder
Figure 13 Storyboards by David Russell for Baz Luhrmann’s Moulin Rouge

கதாபாத்திரங்களின் கண்கள் திசை அம்புகளாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்களின் கண்கள் எங்கே பார்க்கின்றன? என்பதைப் பொறுத்து அடுத்த ஷாட், கட் ஆகிறது. பின்பு, அவ்விரு கதாபாத்திரங்களுக்கிடையேயான பரிமாற்றம், தொடர்புநிலை விளக்கப்படுகிறது. 

சபீன் அந்தரத்திலிருந்து வெளியே வரும்பொழுது, அதற்குப் பயன்படுத்தியிருக்கிற POV ஷாட், கதாபாத்திரங்களையும் (பார்வையாளர்களையும்) நோக்கிக் குதிப்பதுபோல உள்ளது. மொத்தக்காட்சியும், க்ளோஸ் அப் காட்சிகளிலிருந்து வைட் ஷாட்டிற்கு நகர்கிறது. 

இப்படத்தின் இயக்குனர், Baz Luhrmann, காட்சியில் நிறைய கோண மாற்றங்களைப் பயன்படுத்துகிறார். ஸ்டோரிபோர்டின் கடைசி ஸ்லைடைப் பாருங்கள். லோ ஆங்கிள் ஷாட்டிலிருந்து அப்பெண்ணைக் காட்சிப்படுத்துகிறார். 

5.) Transformers

Scene: Blackout’s Rampage

இயந்திரங்களின் தேவை, அன்றாட மனிதப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. வாகனம் ஓட்டுகிறோம். ஆனால், அவைகளெல்லாம் மனிதர்கள் போன்ற தோற்றத்தில் ஆயுதங்கள் ஏந்தி மனிதர்களை அழித்தால் என்ன ஆகும்? அதுபோன்ற கதையமைப்பைக் கொண்டதுதான் மைக்கேல் பே-யின் ட்ரான்ஸ்பார்மர் திரைப்படம். 

Image result for transformer movie Scene: Blackout’s Rampage


ஒரு ஹெலிகாப்டர், தன் வடிவத்தை இழந்து, ஒரு இயந்திரமனிதன் போன்ற தோற்றம் கொண்டு, அங்கிருப்பவர்களை வேட்டையாடுகிறது. பெருவெடிப்புகள் நிகழ்கின்றன. இக்காட்சிக்காக Ed Natividad வரைந்த ஸ்டோரிபோர்டினைத்தான் பார்க்கிறீர்கள்.

Film Storyboard Examples - Ed Natividad - Michael Bay - Transformers - StudioBinder


நிச்சயமாக இது, மைக்கேல் பே படத்திற்கான ஸ்டோரிபோர்ட் என்பது அதன் துல்லியத்தன்மையிலிருந்து தெரிகிறது.

6. Inception
Scene: ஹால்வே சண்டைக் காட்சி - Hallway Fight Scene

பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆதர்ஷமான இயக்குனராக இருப்பவர் க்றிஸ்டோபர் நோலன். அவரது கதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும், புதிய தோற்றத்திலும் இருக்கும். இன்செப்ஷன் படத்தையே எடுத்துக்கொண்டாலும், கனவுக்குள் ஒரு கனவு, என காட்சியமைப்புகள் பின்னப்பட்டிருக்கும். படத்தில், மனிதர்கள் யதார்த்த வாழ்க்கையில் நடக்கிற சூழலுக்கேற்ப, கனவிலும் அதன் பிரதிபலிப்புகள் நடக்கின்றன. 

Image result for inception rotating room

வாகனத்தில் செல்கிறபொழுது, அவ்வாகனத்தின் அசைவுகளுக்கேற்ப கனவிலும் அசைவுகள் நடப்பதாகக் காட்சி. அப்படியான ஒரு திருப்பத்தில், எதிரிகள் துரத்துகிறபொழுது, வாகனம் சுழன்றடித்து நிற்கிறது. அதே தன்மை, கனவிலும் பிரதிபலிக்கிறது. காட்சியின் படி, ஒரு அறையில் கனவு நடக்கிறது என்றால், நிஜத்தில் வாகனத்தில் அமர்ந்துகொண்டு கனவு காண்பவர்கள், வாகனம் சுழல்வதற்கு ஏற்ப, கனவின் அறைகளும் சுழல்கின்றன. அதற்குள் கனவின் கதாபாத்திரங்கள் போரிடுகின்றன.
சுழலும் அறையை எப்படி வரையமுடியும்? மேற்கூரை விசிறி, நீங்கள் அதைச் சார்ந்திருப்பதற்கு உதவுகிறது. பல ஸ்லைடுகளின் வாயிலாக, அந்த அறை எவ்வாறு ஒரே மாதிரியாக வரையப்பட்டிருக்கிறது? என்பதைக் கவனியுங்கள்.


Film Storyboard Examples - Gabriel Hardman - Inception - Christopher Nolan - Storyboard Ideas - StudioBinder

கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் திரைப்படத்திற்காக, கேப்ரியல் ஹார்ட்மேன் வரைந்த ஸ்டோரிபோர்ட்கள்.

இதில், ஸ்டோரிபோர்டில் காட்சி எண்கள், எப்படிக் குறிக்கப்பட்டிருக்கின்றன? என்பதைக் கவனியுங்கள். 
“உங்கள் நினைவிலிருந்து, ஸ்டோரிபோர்டுகளை ஒருபோதும் மீண்டும் உருவாக்க வேண்டாம்… எப்போதும் புதிய இடங்களை உருவாக்கவும்.”

7. Gladiator

காட்சி: புலிகளுக்கு மத்தியில் சண்டை

வன விலங்குகளை வைத்துக் காட்சிகளை விரைவாக எடுக்க நினைக்கிறபொழுது, அதற்கு முன் ஒத்திகையும், ஸ்டோரிபோர்டுகளும் மிகுந்த அளவில் உதவிகரமாக இருக்கின்றன. அரசர், அரியணையில் அமர்ந்துகொண்டு, கீழே இரண்டு போர்வீரர்களுக்கு மத்தியில் சண்டையிடச் செய்து, சுற்றிலும் குடிகள் ஆர்ப்பரிக்க வேடிக்கை நடக்கிறது. 

Image result for gladiator tiger fight scene

சண்டையின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க, கொலைச்செயல், ரசனை என்ற பெயரில் அரங்கேறுகிறது. இரண்டு போர்வீரர்களுக்கு நான்கு பக்கங்களிலிருந்தும், நான்கு புலிகள் திறந்துவிடப்படுகின்றன. எனினும், அவற்றைச் சிப்பாய்கள் சங்கிலியால் இறுக்கிப் பிடித்திருக்கின்றனர். ஆனால், போர்வீரர்கள் புலிகளின் பக்கத்தில் நகர்ந்தால், அவர்கள் புலிகளுக்கு இரையாக நேரிடும். 

இப்படியான ஒரு காட்சிதான் க்ளேடியேட்டர் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. 

Storyboard Examples for Film - Sylvain Despretz - Ridley Scott - Gladiator - StudioBinder

ரிட்லி ஸ்காட்டின் க்ளேடியேட்டர் திரைப்படத்திற்காக சில்வைன் டெஸ்பிரெட்ஸ் வரைந்த ஸ்டோரிபோர்டுகள்தான் இவை. 

சினிமாவிலும் இலக்கணங்கள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், அவ்விதிகளை உடைத்துப் படம் எடுப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படி விதிகளை உடைத்து, புதிய விதிகளுடன் திரைப்படம் எடுக்கிறபொழுது, அது திரையில் சரியாகப் பரிணமிக்குமா? என்ற சந்தேகம் இருக்கவே செய்யும். எனவே, அதற்குமுன்பே ஸ்டோரிபோர்டின் வாயிலாக அவற்றைச் சரிபார்த்துக்கொள்வது சிறந்தது. 

பெரிய 180டிகிரி விதி இறுதியில் உடைக்கப்படுகிறது. இந்த ஸ்டோரிபோர்டுகளில் நிகழ்வுகளின் தெளிவான சங்கிலி இருக்கிறதா? புத்திக்கூர்மையுடன் கேமராவின் நிலையைத் தேர்ந்தெடுத்த விதம் காட்சியில் ஆழத்தையும், பல்லடுக்குகளையும் தோற்றுவிக்கிறது. 

உண்மையான புலிகளுடன் பயிற்சி செய்வதை விட, ஸ்டோரிபோர்டுகளைக் கொண்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது சரியானது. வேடிக்கையாகவும் இருக்கும். 
இந்த ஸ்டோரிபோர்டுகள் எல்லாம் காட்சியாக உருப்பெறுகையில் என்னவிதமான தோற்றத்தில் இருக்கும்? என்பதை அறிய விரும்பினால், அப்படங்களைத் தேடிப் பாருங்கள். அதுவே, உங்களுக்குப் பெரிய பயிற்சியாக இருக்கும். 

”நாம் ஒன்றாக ஸ்டோரிபோர்டில் இருந்தால், உயிர்வாழ ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது…”

8. Pacific Rim

இந்த ஸ்டோரிபோர்டில் நிறைய வைட் ஷாட்கள் இல்லை. கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியில் செல்வதற்குக் கவனமான திட்டமிடல் வேண்டும். 
Film Storyboard Examples - Movie Storyboard Sample - Guillermo del Toro - Pacific Rim - StudioBinder

கில்லர்மோ டெல் டோராவின் பசிபிக் ரிம் படத்திற்காக ராப் மெக்கல்லம் உருவாக்கிய ஸ்டோரிபோர்டுகள். 
எதிர்மறை இடம் ஒளியாக எப்படிச் செயல்படுகிறது, என்பது மிகவும் அருமையாக இருக்கிறது. 

ஷாட் டிவிஷனுடன் முழு ஸ்டோரிபோர்டையும் காண, ஸ்டோரிபோர்டினை ஸ்லைடு ஷோ (slide show) பயன்முறையில் இயக்கவும், கீழே பாருங்கள்:


Image result for pacific rim story board

”ஸ்டோரிபோர்டுக்காக, நாம் ஒரு பாதையைத் தெளிவாக்க முடியும்.”

9. Buffy The Vampire Slayer 

காட்சி: நரகத்தின் வாய் (Mouth of Hell)

இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கிற சம்பவங்களானது, ஒரே காட்சியில் மாறி மாறி இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. காட்சியில் சஸ்பென்ஸைக் கூட்டுவதற்கும், ஒரு சுவாரசியமான காட்சியாகப் பார்வையாளர்களுக்குப் பரிமாறவும் இதுபோன்ற வழிமுறைகளை இயக்குனர்கள் கைக்கொள்கிறார்கள். இதுபோன்ற இணையொத்த செயல்கள் நடக்கின்றன. இவற்றை ஸ்டோரிபோர்டுகளில் கொண்டு வரவேண்டும். வைட் ஷாட் பயன்படுத்துகிறபொழுது காட்சியில் இன்னும் அதிக ஆழம் கிடைக்கிறது. எந்தவொரு எபெஃக்டிற்கும், தீவிரமான தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கும் ஸ்டோரிபோர்டுகள் சிறந்தவை. 


Film Storyboard Examples - Movie Storyboard Sample - Charles Ratteray - Joss Whedon - Buffy the Vampire Slayer - StudioBinder
Figure 14 Storyboards by Charles Ratteray for Joss Whedon’s Buffy the Vampire Slayer

இப்படத்தின் இயக்குனர் JossWhedon தான், அவெஞ்ஜர்ஸ் படத்தின் இயக்குனரும் ஆவார். இதுபோன்ற தீர்க்கமான பட உருவாக்க முறைகளை அவர் பின்பற்றுவதனால்தான், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது, என்பதை, இப்போது நீங்கள் கவனிக்கத் துவங்கலாம். 


10. Star Wars: A New Hope



விண்வெளி தொலைவில் உள்ளது, மிகமிக தொலைவில் உள்ளது. 


படத்தின் டைட்டில் வருகிற சீக்வென்ஸிற்கு, ஜார்ஜ் லூகாஸ் ஸ்டோரிபோர்டினை உருவாக்கியிருக்கிறார். C3PO இவற்றில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அந்த இறுதிஷாட் எப்படி வரவேண்டும் என்று லூகாஸுக்குத் தெரியும். 


Storyboard Examples for Film - Storyboard Ideas - George Lucas - Star Wars A New Hope - StudioBinder
Figure 15 Storyboards by George Lucas for Star Wars: A New Hope

பல காட்சி இலக்குகள் திரையில் வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டன. 


Image result for star wars storyboard into scene
Figure 16 Star wars படப்பிடிப்புத்தளம்...

விண்வெளியில் நிகழ்கிற கதையெனில், அவை பெரும்பாலும் விஷுவல் எபெக்ட்ஸ் (Visual Effects) கொண்டுதான் காட்சியமைப்புகள் நிறைவேற்றப்படும். எனவே, முறையான ஸ்டோரிபோர்டு செயல்முறையை நீங்கள் பின்பற்றுகிறபொழுது, எவ்விதச் சிக்கலும் இல்லாமல் உங்களால் படப்பிடிப்புத் தளத்தில் காட்சிகளை வெளிக்கொண்டு வரமுடிகிறது. 
நன்றி: Studiobinder