Aabobo-ஒரு சுயாதீன சினிமா சமூகம்

“Instead of telling our valuable stories, we seek safety in abstractions, speaking to each other about our opinions, ideas, and beliefs rather than about our lives. Academic culture blesses this practice by insisting that the more abstract our speech, the more likely we are to touch the universal truths that unite us. But what happens is exactly the reverse: as our discourse becomes more abstract, the less connected we feel. There is less sense of community among intellectuals than in the most ‘primitive’ society of storytellers.”
― Parker J. Palmer

Aabobo ஒரு ஆச்சிரியக்குறி!
ஒரு கதகதப்பான வட்டம்.
ஒரு தீயை தூண்டுவதற்கான நெருப்புதத்துகள்களின் முயற்சி
ஒரு எறியும் புதிய ஆன்மாவை தூண்டும்
பழைய ஆன்மாவை உயிர்த்தெழச் செய்யும்
சினிமா பற்றியதே அது
ஆனால் வெறும் சினிமா மட்டும் அல்ல
ஒரு சுயாதீன கலைஞனின் போராட்டம்
வெறும் சுயாதீன கலைஞனின் போராட்டம் மட்டும் அல்ல
இது வெறும் கலைத்தாகத்தை பற்றி மட்டும் அல்ல
இது அனைத்தையும் ஒன்றாக இணைத்து பயணிப்பதாகும்
இது எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பதாகும்,

இவை அனைத்துக்கும் முன் aabobo-க்கு நம்மை எதுவரை எங்கு கொண்டு
செல்லப்போகிறது என்றுதெரியாது !
நம் நோக்கம் ஒரு சமூகமாய் இணைந்து ,அவரவர்கள் இசைந்து இதயப் பூர்வமாக விரும்பியதை முழு அதிகாரத்துடன் செய்யவும். சுயாதீன சினிமாவை ஒரு கலைஞனாக மட்டுமின்றி ஒரு பார்வையாளனாக முன்னின்று ஒரு படைப்பை கேள்விக்கு உட்படுத்துவதனாலும் விமர்சனம் செய்யவதனாலும் தங்களின் கருத்துக்களை முன் வைப்பதனால் சுயாதீன சினிமாவின் வளர்ச்சி மேம்படும்.

சுயாதீன சினிமாவின் அணுகும் முறை இதனால் ஒரு புதிய வடிவத்தை பெற்று
உயிர்ப்புடன் பயணிக்கும். சுயாதீன சினிமா கலைஞர்கள் பெருமளவில் தனித்தே போராடுகிறார்கள். எழுத்தாளர்கள்,கவிஞர்கள், ஓவியர்கள், மேடை கலைஞர்கள், நடன கலைஞர்கள, ஏன் பிரதான சினிமாவில் கூட சமூகங்கள் உள்ளன. அங்கு அவர்களின் கலைப் படைப்பை பற்றி விவாதிக்கவும், உதவி செய்யவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், ஒரு மாலைப் பொழுதில் சினிமாவின் முக்கியப்புள்ளிகள் தேநீருடன் மற்ற கலைஞர்களுடன் செலவிடுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவுகிறார்கள். 

ஆனால் சுயாதீன சினிமா கலைஞர்களுக்கு இதுபோன்று ஒரு சூழ்நிலையும் சமூகமும் இந்நாள் வரையில் இல்லை.

எது சுயாதீன சினிமா என்று விவரிக்கவும் விளக்கவும் கடினமாக உள்ளது என்ற
வாதம் இதற்கு உதவாது, சுயாதீன சினிமா என்றால் என்ன? சுயாதீன
கலைஞர்களை எப்படி அடையாளம் காண்பது ? இது மிகவும் கடினம் என்றால்,
ஒரு ஊடகமாக ஒரு பகிரப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்கு ஒருவர் எவ்வாறு
ஒரு சமூகமாக ஒன்றிணைய வேண்டும்?

சுயாதீன சினிமாவின் வளர்ச்சிக்காகவும்,சுயாதீன சினிமாவைப் புறம்தள்ளுவதைத் தடுக்கவும் ஒரு சிறிய முன்னெடுப்பாகவே aabobo-வை நானும் வைபவ் ராஜ் குப்தாவும் தொடங்கி இருக்கிறோம். இது போன்ற இயக்கங்களின் போதமையினால் நாங்கள் தவித்திருக்கிறோம். பல ஆண்டுகளாக தனித்த போராட்டத்தையும் பயணத்தையும் எதிர்நோக்கியுள்ளோம். அதன் வலிகள் மிகவும் இறுக்கமானது. ஒரு தனிமனிதனின் விரக்தி நிறைந்த பாதை அது.
சுயாதீன சினிமாவில் எங்களுக்கான வழிகளை நாங்கள் பெரும் மன
அழுத்தத்துடன் போராடி அமைத்துக்கொண்டுள்ளோம். இனியும் அந்த நிலை
இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சுயாதீன சினிமாவுக்காக பயணிப்போம்.

இதுவே ‘Aabobo’வின் எளிய நோக்கமும் செயல்படும், இதைவிட பெரிய நிகழ்ச்சி
நிரலைக் கொண்டிருக்கவில்லை.

பணம், நெட்வொர்க்கிங், வேலைக்குச் செல்வது, தொழில் வாய்ப்புகள் ஆகியவை ‘அபோபோ’வில் இல்லாததால் தெளிவாகத் தெரிகிறது.

நாம் விரும்புவதெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு கிராமத்தில் சந்தித்து தீ முட்டி
ஒரு சமூகமாகக் கூடி நமது படைப்புகள் படங்கள் பற்றி கலந்துரையாடல்
செய்வதும், நம் கருத்தை கலந்தாய்வு செய்யவதே நமது நோக்கம். இவ்வாறு நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களை விவாதித்தும் பகிர்ந்தும் நம்முடனான
ஒற்றுமையைப் பறைசாற்றி லயித்து, அடுத்த சந்திப்பு வரையில் நமது
போராட்டங்களை உற்சாகத்துடன் எதிர்நோக்கவும் சுயாதீன கலைஞர்களாக நம் பயணத்தைத் தொடர்வதற்கான புகலிடமாக aabobo அமையும்.


லோகோ-வில் காணப்படும் கைரேகைகள் அனைத்தும் aabobo -வில் இருக்கும்
ஒவ்வொருவருடையதாகும். aabobo ஒரு படர்ந்து விரியும் சமூகமாகும். இதன்
பிறகு வந்து சேரும் ஒவ்வொருடைய கைரேகைகளும் இதில் சேர்க்கப்படும்,
அவர்களும் இந்த பயணத்தில் ஒரு பங்காகவே பார்க்கப்படுகிறது. நீயே
சமூகத்தை வடிவமைக்கிறாய் ஏனென்றால் நீ தான் சமூகம்.

சுயாதீன சினிமா உயித்திருக்கவும் சுயாதீன கலைஞர்கள் ஒன்றுகூடவும்
கலையை அனைவரின் மனங்களுக்கு எடுத்துச் செல்லவும் .மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்தி மாலை வேளையில் Studio Veda in Aaramnagar, Versova, Mumbai-இல் நமது சுயாதீன குறும்படங்கள், ஆவணப் படங்கள், உலக சினிமா நினைவுகூரல் ,முழு நீள சுயாதீன படம் திரையிடல் நடைபெறும் இந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்து விவாதிக்கும் வெளியாக அமையும் , நமது கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த நிகழ்விற்கு அனைவரையும் வரவேற்கிறோம். aabobo-வில் ஒரு அங்கமாகவும் சேர்ந்து பயணிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது, போராடும் கலைஞனின்
முடிவில்லா காதலாக இருக்கும் இந்த சுயாதீன சினிமாவும், சுயாதீன
கலைஞனான உங்களின் கைரேகை மட்டுமே ! 

இந்த சமூகத்திற்காக உங்களின் கலைவழி பங்கினை சிறிது கொடுத்து, அதே சமூகத்தில் இருந்து சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்.

சுயாதீன படங்கள் திரையிடல் மற்றும் இன்று, இதற்காக தனியே யூடூப்பில்
சேனல் அமைக்கப்பட்டுள்ளது . இயக்குனர்களுக்கு மட்டுமின்றி இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதாவது ஒளிப்பதிவாளர், ஒலி வடிவமைப்பினர், உதவி இயக்குனர், லைட் மேன் , ஸ்பாட் பாய்ஸ், என அனைவரையுமே ஒன்று சேர்த்து விவாதிப்பதே இதன் நோக்கம். தங்கள் கைரேகையை பங்களிப்பவர்களுடன் சுயாதீன சினிமாவுக்கான பாதை உருவாகின்றன. எனவே ஒவ்வொரு அபோபோ- வின் சந்திப்பின் முடிவிலும் நாம் அனைவரும் ஒன்றாகிவிடுகிறோம்.

அந்தக் குறிப்பிட்ட மாலையில் சிறிய சமூகமாக உருவாகும் நாம், இதைத் தாண்டி ஒரு கலை நிறைந்த வாழக்கையை வாழப் பயணப்படுகிறோம்.

ஒரு சிறிய ஆனால் தீவிரமான குழு எந்தவொரு பணப் பரிவர்த்தனையும்
இல்லாமல் அபோபோவை ஒன்றாக இணைக்க அயராது உழைக்கிறது. இந்த
அணியில் சம்பத் சிங் ரத்தோர், வைபவ் முஞ்சல், சோரப் முஞ்சல், பூமிகா துபே,
விமலேஷ் கோடேஸ்வர், சராரப் கோயல், ஹுசைஃபா அலி, சோனாலி பரத்வாஜ்
ஆகியோர் அடங்குவர்.