நீதிமன்றத்தில் அமைதி

  
ஆவணத்திரைப்படம்  (சிங்களம் )


-குற்றத்தின் துணையை வன்புணர்ந்த நீதி –               

                                                           
                                        
சிங்கள சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனராக விளங்கும் பிரசன்ன விதானைகே யின் (silence in the court நீதிமன்றில் அமைதி) உசாவிய நிஹண்டய் - சிங்கள ஆவணத் திரைப்படம் இலங்கையில் நீதித்துறையினை; அதிர வைத்த, இலங்கையின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் லான திரைப்படமாகும்.

சமுகத்தில் நிலவும் சிக்கல் நிறைந்த பிரச்சினையாக பாலியல் பிரச்சினை நோக்கப்படுகிறது. பாலியல் பிரச்சினைகளும் அது எழும் சூழலும் அதன் விளைவுகளும் கூட வர்க்க அடிப்படையில் வேறுபடுகின்றன. ஒரு பிரச்சனையின் தீவிரம் ஒருவனின் வாழ்வியல்,பண்பாடு,பொருளாதார,வர்க்க நிலப்பாட்டுக்கமைய வேறுபடுகிறது. ஒருவருக்கு மிகக்காதாரனமாய் தெரியும் விடயம் இன்னொருவருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன் நீதிபதி ஒருவரால் இரண்டு பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்ட்டதாகக் கூறப்படும் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படம் இது.

இத்திரைப்படம் வெளியிடப்படும் முன்னரே இலங்கையின் அரசியல்;, நீதித்துறை யில் பலமான அதிர்வை ஏற்படுத்தியிருந்தது .
மகிந்தவின் ஆட்சி காலமென்றால் இப்படத்தின் வெளியீடு நிகழ்ந்திருக்கவே முடியாது. வெளியிடப்படுவதற்கு வெளிச்சொல்ல முடியாத ஆனால் மிக உறுதியான தடைகள் , நீதிபதி லெனின் ரத்னாயக்க சார்பான வேண்டுகோள்கள் இருந்த போதும் படத்திற்கான தடையை நீக்க நீதித்துறை நிர்ப்பந்திக்கப்பட்டது .எந்த வித பாசாங்குமின்றி மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
இது போதனையையோ புத்திமதியையோ , வழிக்காட்டலையோ கவர்ச்சியான கதைமாந்தரையோ காட்சியாக்க முனையவில்லை. சமுகத்தில் மிகச்சாதாரணமாக நாம் காணும் அடிமட்ட மனிதர்களை , அவர் தம் வாழ்வியல் நெருக்கடிகளை சவால்களை , புன்னகை குறையாத புத்தனின் முகத்தோடு வாழும் இனங்காணமுடியா சமுக விரோதிகளை அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளது.
கதை இதுதான் 
(படம் திலக்ஷினி நந்தசிரியின் குரல்வழி உரையின் ஊடாக பயணிக்கிறது )

தங்க நகை செய்யும் பட்டறையில் தங்கத்தில் மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படும் நபரை சிறையிலிடுகிறார் நீதிபதி.
கணவன் சிறையில் இருக்கும்போது அவரை பார்க்கவும் பிணை விடுதலை பற்றி பேசவும்  நீதிமன்றத்துக்கு வரும் இரண்டு குழந்தைகளின் தாயான கைதியின் மனைவி (எம்.கமலாவதி )சட்டத்தரணியின் வேண்டுகோளின் படி சேம்பர் ற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள் .  ‘ஊழல் விசாரணை ஒன்றை நடத்தும் போது அவளது கணவனை விடுதலை செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அதற்கு உதவுவதாகவும்’ அதற்குறிய ஆவணங்கள் மற்றும் ரகசிய வாக்குமூலம் ஒன்று பதிவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தன்னோடு வருமாறும் அழைக்கிறார்.ின்னர் காரில் ஏறச்சொல்லி கம்பளையில் உள்ள வாடிவீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார். முதலில் அதிர்ச்சியடைந்த போதும், தயங்கி தயங்கி செல்லும் ஏழைப்பெண் தனது கணவன் விடுதலைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு மௌனமாய் இருக்கிறாள். பின் நீதிபதியால் பாலியல் துஸ்பிரயோகத்துக் உற்படுத்தப்படுகிறாள். இவ்வாறு தொடர்ச்சியாக அவள் நீதிபதியின் பாலியல் இச்சைக்கு பலியாகிறாள். ரு தடவை சிறைக்குச் சென்று கணவனை கண்டு நடக்கும் விடயத்தைக் கூறுகிறாள். கொதித்துப் போன கணவன் ( சந்தன புஷ்பருவான்) அவளை இழிவாக ஏசுகிறான். கோபத்தை அடக்க முடியாமல், “நான் வெளியே வந்தவுடன் உன்னைக் கொன்று விட்டே மறுவேலை பார்ப்பேன்” என ஆத்திரத்துடன் கூறுகிறான்.மறுமுறை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று கணவனை சிறையில் சந்திக்கிறாள். வெறுப்போடும் கோபத்தோடும் இருக்கும் கணவனிடம் குழந்தைகளுக்கு விசமூட்டிவிட்டு தானும் விசமருந்தி சாகப் போவதாக கூறுகிறாள். சுதாகரித்துக் கொண்ட கணவன் “ இது போன்ற பைத்தியக்காரத்தனமான வேலைகளை செய்ய வேண்டாம்” என்றும், “போனது போகட்டும் அதைப்பற்றி யோசிக்காதே..! நான் மறக்கிறேன்” என ஆறுதல் கூறி அனுப்புகிறான்.         அடுத்த நீதிமன்ற அமர்வுக்காக காத்திருக்கிறான். சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் நாளில் இரண்டு பொலித்தீன் பைக்கற்றுக்களில் சிறைச்சாலை மலக் குழியிலிருந்து எடுத்த மலத்தை நிரப்புகிறான். கசியாதவாறு பொலித்தீன் பைக்கற்றில் நன்கு கட்டி ஆடைகளோடு சுற்றி எடுத்து வருகிறான். சிறைக்காவலர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சிலரை பரிசீலிப்பதில்லை. (இவனும் 4 ஆண்டுகளாக சிறைக்காவலர் நம்பிக்கையில் இருந்தவன்)
நீதி மன்றத்துக்கு வந்து தனது நேரத்துக்காக காத்திருக்கிறான். நீதிமன்றம் தொடங்குகிறது. நீதிபதி ‘லெனின் ரத்நாயக்க’ வந்திருக்கிறார்  பைக்கற்றிலிருந்த மலநீர் லேசாக கசிகிறது. நீதிமன்றமெங்கும் துர்மணம் வீசுகிறது. ஏல்லோரும் முகத்தை சுளிக்கின்றனர். காவல்துறை சிப்பாய்கள் எங்கிருந்து மணம் வருகிறது என தேடுகிறார்கள். கையும் களவுமாக பிடிபடுகின்றான் புஷ்பருவான் .  இனியும் பொறுக்க முடியாது என முதல் மலப் பைக்கற்றை எடுத்த நீதிபதி முகத்தில் எறிகிறான். முகத்தில் பட்டு சிதறுகிறது. நிலை தடுமாறுகிறது நீதிமன்றம். இரண்டாவதை எடுக்கிறான் பொலிஸ் பாய்ந்து பிடித்துவிடுகிறது. மல்லு க்கட்டி விடுவித்து அதையும் எறிகிறான். அது கையிலேயே வெடித்து நீதிமன்றத்தில் அனைவரின் மேலும் பட்டுத் தெரிக்கிறது.. மீண்டும் கைது செய்யப் படுகிறான். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. 

இயலாமையில் இருக்கும் ஒரு எளிய மனிதன் அதிகாரத்திலும் பதவியிலும் உயர் பாதுகாப்பிலும் இருக்கும் சமூகவிரோதி ஒருவனை தண்டிக்கக்கூடிய நுட்பத்தை உலகுக்கு பதிவு செய்கிறான், நீதி மன்றமெங்கும் சிதறும் மனித மலமே நீதித்துறை இதுவரை எதிர்கொண்ட கடுமையான விமர்சனமாகும். நீதிமன்ற காட்சிகள் புகைப்படங்கள் மூலமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் குறித்த பகுதியின் காட்சிப்படுத்தல்கள். பாதிக்கப்பட்ட மனிதன் சார்பாக நிற்கும் சுதந்திரத்தையும் உறுதியையும் ரசிகனுக்கு வழங்கியுள்ளன.

இதே நேரத்தில் தனக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்ய குறித்த பெண் நீதிச் சேவை ஆணைக்குழு, சட்டத்தரணிகள் சங்கம் (செல்கிறாள்) என்பவற்றில் தொடர்ச்சியாக பலனளிக்காத நிலையில் 'ராவய' பத்திரிக்கை ஆசிரியர் விக்டர் ஐவனின் வீடுதேடி சென்று தன் கதையை எடுத்துரைக்கிறாள். இலங்கையில் அரசியல் தளத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ள பத்திரிக்கை 'ராவய' பிரச்சனையை யையும் ஆதாரங்களையும் ஆவண ரீதியில் தேடிக்கொண்டு நீதிபதி லெனின் ரத்நாயக்க தொடர்பாக எழுதத் தொடங்குகிறது.  

“கைதியின் மனைவியை வன்புணர்ந்த நீதிபதி” “ என்ற தலைப்பில் 
 1997 ஆகஸ்ட் 17 இல் ராவய வில் எழுதத் தொடங்குகிறார். விக்டர் ஐவன். நீதிபதிக்கெதிராக நிற்க சட்டத்தரணிகள் தயங்குகின்றனர். பின்னாளில் இலங்கையின் உயர் நீதி மன்ற நீதியரசராயிருந்த திரு.சரத்.என் சில்வா வின் தலையீட்டில் அந்த வழக்கு வருந்தத்தக்க விதத்தில் மௌனிக்கச் செய்யப்படுகிறது {இதனை விக்டர் ஐவன் “முடிக்கப்படாத போராட்டம்” “ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார் .இதன் பின்னர் சுமார் இருபது வருடங்கள் கழித்து இக்கதையை தேடிஎடுத்து திரைப்படமாக்கியிருக்கிறார் பிரசன்ன விதானகே .இக்கதையில் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்ணும் இறுதிக்காட்சியில் இதுவரை நீதி கிடைக்கா முகத்துடன் ரயிலில் பயணிப்பதாக காட்டப்படுகிறது.}.ாதிக்கப்பட்டப்பெண் தன கணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற இயலாமையில் ஆத்திரத்தில் நம்பியவர்களின் துரோகத்தால் ஏமாற்றப்பட்ட மனதோடு வீதிகளில் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு இன்னொரு ஏழு வயது ஆண்குழந்தையை அழைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அலையும் காட்சி மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. பிரச்சனையின் எந்த முனையும் தெரியாமல் தன தாயின் வேகமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் எக்கி எக்கி ஓடும் காட்சி ரசிகர்களைக் கட்டிப்போடுகிறது.எந்த பிரச்சனையும் தெரியாமல் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுபடும் அறியாமையில் உழலும் ஒரு கவனிப்பாரற்ற சமுகத்தின் குறியிடாக நீள்கிறது.. பாலியல் சுரண்டல்களுக்காகும் முதல் பெண்நுடனான் உடலுறவுக்காட்சி முழுதாய் திரையில் விவரிக்கப்படுகிறது .அடுத்தடுத்த காட்சிகள் பிற தொடர்புறும் காட்சிகளோடு சொல்லப்படுகிறது.. சமுகத்தின் மனசாட்சியை குதரும் விதமாக இக்காட்சிகள் விரிகின்றன திரையில் வரும் கதாப்பாத்திரங்கள் ,கதைக்களங்கள் ,என்பன உண்மையான பெயரிலேயே வருகின்றன.ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் நமது கால உலகில் ஒரு அப்பாவி கிராமப்பெண் உயர்ந்த மனிதர்களின் அற்ப உணர்வுகளையும் , தனது தேவைக்கும் உலகின் நடத்தைக்கும் இருக்கும் இடைவெளியை விளங்கிக்கொள்ள முடியாமலும் படும் அவலம் பேசா மொழியிநூடாக நகர்ந்து மனதை வலிக்கச் செய்கிறது. து இவ்வாறிருக்க படத்தில் வரும் இன்னொரு பெண் , குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபராவார்..ஜி.கே.மெனிக்கே என்ற பெண்ணை ஒரு சட்டத்தரணியூடாக தன சேம்பர் க்கு அழைத்து அங்கு பாலியல் பலாத்காரம் செய்கிறார். அதன் பின்னர் அவள் சுகவீனமடைகிறாள்.மறு நாள் சிறையிலிருந்து அவளை தனிவாகனம் ஒன்றின் மூலம் யாருமறியாத இடத்திற்கு அழைத்துச் சென்று இவ்விடயத்தை வெளியில் சொல்லி விட வேண்டாமென்று துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகிறார். பின்னர் அவளோடு உடலுறவு கொள்கிறார்.இந்த கிளைக்கதையும் இதர சில குற்றச்சாட்டுக்களும் கதையோடு இணைந்து பயணிக்கின்றன.தைக்கு உணர்வு ரீதியாக துணை செய்யும் இசையை கிருஷ்ணமூர்த்தி வழங்கியுள்ளார். பெரும்பாலான இடங்களில் பின்னணியில் ஒலிக்கும் பத்திரிகை அச்சியந்திதிர ஓட்டத்தின் சத்தமும், தட்டச்சு இயந்திர சத்தமும் கதைக்கு ஒரு சீரியஸ் தன்மையை தருகின்றன.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும் பெரும்பாலான சிவில் அமைப்புக்கள் இதற்கு குரல் கொடுத்து வருவதும் பிரசன்ன விதானகே என்ற சமுக நீதியை வேண்டி நிற்கும் மக்கள் கலைஞனின் தைரியமான கடும் உழைப்பின் முயற்சியினாலேயே .                     
                                              
பிரசன்ன விதானகே
சமூகத்தின் மீது ஆழமான அன்பு கொண்ட எளிமையான ஒருவர். சமூகத்தில் குறுகிய நோக்கத்துக்காக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை குறுகிய காலத்தில் பரந்தளவில் திரைக்கு கொண்டுவருபவர் . இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் தனித்தனியாக பேசப்படும்.போர்க்காலத்திலும் சரி போருக்குப் பின்னும் சரி பிரசன்னா விதானகே யின் படங்கள் மிக எளிமையாக விளிம்பு நிலை மக்களின் மன உணர்வுகளை ஆசமாக பதிவு செய்வதை இலக்காக கொண்டுள்ளது. இவரின் படங்கள் தமிழ் மக்க
ளின் சாதாரண மன உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்துள்ளன. இலங்கையின் வியாபரச்சூழலை யும் தனது நோக்கினையும் அடைவதில் கலை நேர்த்தியையும் கலை நேர்மையையும் தொய்வில்லாதபடி கொடுப்பதற்கு அதிக சிரத்தை எடுத்து கொள்கிறார்.

57 நிமிடம்

நெறியாள்கை -திரைக்கதை -பிரசன்னா விதானகே

தயாரிப்பாளர் HD பிரேமசிறி

ஒளிப்பதிவு MD மகிந்தபால
 
இசை கிருஷ்ணமூர்த்தி 

படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் 
                                                                                                   
ஒரு முன்னோட்ட திரையிடலின் போது தமிழ் ரசிகர்களின் பெரும்பாலோனோர்கள் “இந்தப் பெண் தான் நாங்கள். இது எங்களின் கதை. நீதிக்கும் நியாயத்துக்கும் ஒவ்வோரிடமாய் ஏறி இறங்கும் எங்களின் கதை” என்று உணர்ச்சி பொங்க பேசினார்கள். “சிங்களச்   சமுகத்தில் ஒடுக்கப்படும் மக்களும் நாங்களும் ஒரே நிலையில் தான் இருக்கிறோம்”. கருத்துக்களை கேட்டு பின் சொன்னார்.. இந்த கதை “உங்கள் மனதை தொட்ட போதே வெற்றி யின் முதல் படியை பெற்று விட்டது.மிகுதி அந்த பெண்ணுக்கும்,அவள் போன்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் போதே கிடைக்கும் ‘