The Skin I Live in

ரோஜர் எபெர்ட்

ஒரு பெத்ரோ அல்மதோவர் படத்துடன், சிற்றின்பகரமான பாலியல் வக்கிரம், நேரற்றதான கதைசொல்லல் திருப்பங்கள், கடந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைந்திருக்கிற திரைக்கதையை எதிர்பார்க்கலாம். இவையனைத்தும் கம்பீரமான கலை மற்றும் ஆடை வடிவமைப்புகளுடன், பிரகாசமான வண்ணங்களில், அல்மதோவரால் கேன்வாஸில் வரையப்படும். 2011-ல் வெளியான அவரது திரைப்படம் ” The Skin I Live in”  இதிலிருந்து நம்மை ஏமாற்றவில்லை. நான் பொதுவாக அல்மதோவரின் கவர்ச்சிகரமான, செக்ஸியான இருண்மையில் மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், இந்தப் படம் வினோதத்தைத் தூண்டுகிறது. 


இப்படம் எதைப்பற்றியதென்றால், பைத்தியக்காரத்தனமான விஞ்ஞானி, உடல் பாகங்கள், திருகப்பட்ட பழிக்குப்பழி, தனிப்பட்ட கைதிகள் மற்றும் மறைக்கப்பட்ட பழிவாங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையிலான, கிளாசிக்கல் திகில் படங்களை ஆக்கிரமித்த பேசமுடியாத விஷயங்களின் பளபளப்பான, மென்மையான மற்றும் ஆடம்பரமான பதிப்பாகும். வழக்கமாக இதுபோன்ற திரைப்படங்கள் போதுமான அளவிற்கு, ஸ்டைலிஸ்டிக்கான முறையில் உயர்த்தப்படுகின்றன, இதில் ஒருவித முகாம் நகைச்சுவையும் முரண்பாடாக இணைந்திருக்கிறது.

முகாம், அல்மதோவருக்குத் தெரியவில்லையென்றாலும், இங்கே அவர் தனது வினோதமான கதையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்ட, உணர்ச்சியின் ஆழத்தை கதையின்போக்கில் தொடர்ந்து பராமரிக்கிறார். ஆமாம், கதையில் ஒரு பைத்தியக்காரத்தனமான விஞ்ஞானி: புத்திசாலித்தனமான டாக்டர்.ராபர்ட் லெட்ஜர்டாக, அண்டோனியோ பந்த்ராஸ் அரிய தீவிரத்துடன் நடித்துள்ளார். ராபர்ட் தனது இதயத்தில் சொரியும் கண்ணீரை, விஞ்ஞான உதவியின் மூலமாகத் துடைக்க முயற்சிக்கிறார். கடந்தகாலக் காயம் ஒன்று அவர் மனதில் ஆறாத ரணமாய் பதிந்திருக்கிறது. விஞ்ஞானம் தனது தொழிலாகவும் இருப்பதால், அதன் மூலமே அந்த ரணத்திற்கு விடைதேட முயற்சிக்கிறார். படத்தில் கதையின் ஆரம்பத்தில் ராபர்டின் கடந்தகாலம், அதில் அவர் அடைந்த காயம் என எதுவும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஒரு சஸ்பென்ஸ் பாணியில் கதை பயணிக்கிறது. கதையின் போக்கில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்கின்றன. ஆரம்பத்தில், ராபர்ட் முன்னெடுத்த விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகளுக்கான காரணம் இறுதியில் நமக்கு விளங்குகிறது. தனது கடந்த கால காயத்தைச் சரிசெய்ய, மற்றவர்களின் உடல்களையும் மனதையும் பயன்படுத்துவதற்கு, தனக்கு அதிகாரம் இருப்பதாக அவர் கருதுகிறார். தன்னை ஒரு கடவுளைப் போல உரிமையுள்ளவராக நினைத்துக்கொள்கிறார்: அவரது வலியைக் குணப்படுத்த பிறரது தியாகங்கள் அவசியம். 

இந்நிலைப்பாட்டிலிருந்துதான், அவரது ஒவ்வொரு செய்கைகளும் நடைபெறுகின்றன. படத்தின் துவக்கக் காட்சியில், ஸ்பெயினின் நகரமான டோலிடோவில் உள்ள தனது பெரிய மாளிகையில் வேராவை (vera - Elena Anaya) சிறைப்பிடித்து அடைத்துவைத்திருப்பது காட்டப்படுகிறது. அப்பெண்ணிற்கு அனைத்து ஆடம்பரமான விஷயங்களும் கிடைக்கின்றன. அவளால் ஒப்பனை செய்துகொள்ள முடிகிறது. சாப்பிடுவதற்கு நல்ல உணவுகள் கிடைக்கின்றன. சொகுசு வாழ்க்கைக்குரிய உயர்தரப் பொருட்கள் இருப்பினும், அவளுக்குத் தேவைப்படுகிற சுதந்திரம் மட்டும் அங்கு இல்லை. அந்தப் பெண் ஒரு அமானுஷ்யமான உடை அணிந்திருக்கிறாள். ஆரம்பத்தில் படம் பார்ப்பவர்களுக்கு இது பலவிதமான கேள்விகளை எழுப்பக்கூடும். ஏனெனில், தனது தோலின் வண்ணத்திலேயே, பாதம் முதல் கன்னம் வரையில் முழுவதும் மறைக்கப்பட்டிருப்பது போன்ற உடையை அணிந்திருக்கிறாள். சுருக்க உடையைப் போல, அது அவள் உடல் முழுவதையும் மறைத்திருக்கிறது. அவள் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களின் அடுக்கு உள்ளது. அவள் படிக்கிறாள். தன் மன அமைதிக்காக யோகா, தியானம் போன்றவற்றை அன்றாடம் மேற்கொள்கிறாள். தொலைக்காட்சி பார்க்க முடியும். ஆம், அவளுடைய சுதந்திரத்தைத் தவிர, அங்கு எல்லாமே இருக்கிறது. அவள் முற்றிலுமாக அந்த மருத்துவரால் கண்காணிக்கப்படுகிறாள்.அவள், அம்மருத்துவருடைய நோயாளி அல்ல, அவனுடைய கைதி. தன்னை விடுவித்துக்கொள்ள, இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்று அவள் நம்புகிறாள்: ஒன்று தற்கொலை, அல்லது, மருத்துவரைக் கட்டாயப்படுத்தியாவது தன் காதல் வலையில் விழவைப்பது. அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதை அறியும் அளவுக்கு அவள் நாசீஸவாதத்துக்குரியவள், அம்மருத்துவரை மயக்குவதென்பது அவளுக்கு மாபெரும் சவால். 

திரைப்படத்தை மேலும் புரிந்துகொள்ள, கதையின் பின்பகுதிகள் சிலவற்றைக் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ராபர்டின்(மருத்துவர்) இளம் மனைவி, ஒரு கார் விபத்தில், பயங்கரமாக எரிந்துபோனார். ஆனால், உயிர் இருக்கிறது. முகமும், உடலும் தீயால் சிதைந்துபோயிருக்கிறது. முக மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சிறந்தவர் ராபர்ட். (கதையின் வரலாற்றில் ஒன்பதில் மூன்று நிகழ்வுகளை இங்கே சொல்லிவிட்டேன், மற்றும் எதுவும் எனக்கு அதிக திருப்தியைத் தரவில்லை.) நான் ஆரம்பத்தில் வேரா-தான் ராபர்டின் மனைவி என்று நினைத்துவிட்டேன், ஆனால் இல்லை, அவள்(மனைவி) இறந்துவிட்டாள், வேரா கடத்தப்பட்டு இங்கு கொண்டுவந்து சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். 


வீட்டுச்சிறையில் வைத்திருப்பதுபோல, அவள் கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறாள். மருத்துவர் அவளை, ஒரு கலைப்படைப்பை, ஒரு ஓவியத்தைப் பார்ப்பதுபோல, பெரிய அகலத் திரைகொண்ட தொலைக்காட்சியில், நெருக்கமாக உற்றுப் பார்க்கிறார். ஒரு முழுமையான பெண்ணை உருவாக்க, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கான நோக்கம் தெரிகிறது. அவரது ஆராய்ச்சிகள் அதைத் தெளிவாக முன்வைக்கின்றன. தனது ஆராய்ச்சியில் தீயால் பாதிக்கப்படாத, மனிதத் தோலை கண்டுபிடிக்கிறார்.
 
ஆய்வக வேலை, குளோனிங், வாழும் பன்றிகளின் ரத்தம் மற்றும் புதிதாக வளர்ந்த தோலின் மென் அடுக்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ விவரங்கள் படத்தில் அதிகம் உலவுகின்றன. சில காட்சிகள் ஒரு ஆவணப்படத்திலிருந்து வரலாம். அறுவை சிகிச்சையின் இத்திட்டம் மிகவும் மோசமான ஒரு சதித்திட்டத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. ராபர்ட்டிற்கு தெரிந்ததைவிட பார்வையாளர்களுக்கு அதிகம் தெரியும் – எடுத்துக்காட்டாக, அவரது தாய் மற்றும் அவரது சகோதரருக்கான அடையாளங்கள். இது உங்களுக்கான அல்மதோவர்: அந்த நபர்கள் யார், அல்லது இதெல்லாம் ராபர்டிற்கு தெரியுமா? என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. அல்மதோவர், திரைப்படத்திற்கான அந்தக் கலவையை கெட்டிப்படுத்துகிறார். 

’வன்புணர்வு’ படத்தின் மையமான கருதுகோள்களில் ஒன்றாக உள்ளது. தன் மகளை வன்புணர்வுக்குள்ளாக்கியது இவர்தான், என ராபர்ட் ஒருவரை நினைத்துக்கொள்கிறார். ஆனால், அது முற்றிலும் தவறான நிலைப்பாடு. பைத்தியக்கார விஞ்ஞானிகள் அனைவருமே, உண்மையுள்ள ஊழியர்களைக் கொண்டிருக்கவேண்டிய நிலையின்படி, வயதான வீட்டுக்காப்பாளராக மரிலியா (மரிசா பரேடஸ்) வருகிறார். மேலும், புலி வேஷமிட்ட ஜீகா (ராபர்டோ அலமோ), மருத்துவரின் வீட்டிற்கு வந்து, தான் போலீசால் தேடப்பட்டுவரும் நபர் என்றும், எனவே, நீங்கள்தான் எனக்கு அடைக்கலம் தரவேண்டுமென்றும் வீட்டுக்காப்பாளரிடம் விளக்குகிறார்: கார்னிவலின் போது மட்டுமே, அவர் புலிவேடமிட்டு நகரத்தின் வழியாகச் செல்லமுடியும்.  

Image result for The skin i live in

ராபர்ட், தன் மகளை வன்புணர்வுக்கு உள்ளாக்கியது இவர்தான் என தவறாக நினைத்துக் கடத்தி, அடித்தளத்தில் சிறைபிடிக்கப்பட்ட வைசெண்ட் (ஜான் கார்னெட்). இது மிகவும் மிருதுவாகத் தெரிகிறது. சில இயக்குனர்கள், அல்மதோவரைப் போலவே மகிழ்ச்சியுடன் வண்ணங்களை, குறிப்பாக சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு காட்சியும் அதிர்வுறும் வகையில் வெளிப்படும். பேரார்வமும் உணர்ச்சியும் இருக்கிறது, ஆனால் வேதியியல் ஒருங்கிணைவு இல்லை: வேரா, உண்மையில் மருத்துவரைக் காதலில் மயக்கிவிடுவார் என்று நாம் நம்புகிறோம் என்றாலும், அவருக்கான அவரது உணர்வுகள் பாலியல் ரீதியாக அல்ல, உளவியல் மனநிலையிலிருந்துதான் தோன்றுகின்றன. அவள் அங்கிருந்து வெளியேறுவதற்காக,மேற்கொள்கிற தந்திரம். செய்தித்தாளில் தனது முந்தைய அசல் படத்தைப் பார்ப்பதனால், வேராவின் மனதில் தப்பித்து வெளியேறும் எண்ணம் துரிதப்படுகிறது. அவர் ஏதோவொன்றை நிரூபிக்க விரும்புகிறார். ராபர்டின் உணர்ச்சி இயந்திரம் காமம், பொறாமை அல்லது கோபத்தால் உண்டானது அல்ல, மாறாக மற்றவர்களை அவரது விஞ்ஞான விளையாட்டுகளுக்கான பொம்மைகளாகக் கருதவேண்டியதன் அவசியத்தின் எரிபொருளாக இருப்பதை நாம் கண்டறியும்போது, அவரது சீரழிவின் முழு ஆழமும் படத்தின் எதிர்பாராத இறுதிக் காட்சிகளில் வெளிப்படுகிறது. 


ராபர்ட் ஒரு கேடுநிலைகொண்ட பாத்திரம். மற்றவர்களின் உணர்வுகள் அவருக்கு எந்தவித அர்த்தத்தையும் கொடுக்காது. அதில் அவர் அக்கறைகொள்வதில்லை. அல்மதோவரின் செல்வச்செழிப்பான கேன்வாஸில், அவர் மேலோட்டமான அழகை வெளிப்படுத்தினாலும், மையத்தில் அழுகியிருக்கிறார். அல்மதோவர் சொல்ல விரும்பியதைச் சரியாக வெளிப்படுத்திய பெருமை, இந்தப் படத்திற்கு உண்டு, ஆனால், நான் அதை முழுக்க உள்வாங்கினேனா? எனத் தெரியவில்லை. 

இப்படத்திற்கு நான் மூன்று நட்சத்திரங்கள் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த மூன்று நட்சத்திர மதிப்பீடு என்பது, படத்தில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிற நடிப்பிற்கும், கைவினைத்திறனை போற்றுவதற்கும், கதையைப் பற்றிய அமைதியின்மைக்கும், அதிருப்திக்கும் இடையிலான சமரசமாகும்.