காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் அத்தியாயம் 1 - பகுதி 6

அத்தியாயம் 1 - பகுதி 6

அனைத்து தகவல்கள் போல, மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஓவியங்கள் தங்கள் சுயத்தை, தொடர்ந்து பரப்பபடும் மற்ற அனைத்து தகவல்களை எதிர்த்து நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக, மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அசல் ஓவியத்தை மேற்கோள் காட்டிய ஓர் படிமம், மற்ற படிமங்களுக்கு ஆதார குறிப்பாக மாறுகிறது. ஓரு படிமத்தின் பொருள், அதன் அருகில் உடனடியாக என்ன காண்கிறோம் என்பதைப் பொறுத்து அல்லது அதற்கு பின்பு உடனடியாக என்ன வருகிறது என்பதைப் பொறுத்து மாற்றமடைகிறது. இத்தகைய அதிகாரம் வைத்திருக்கிறது அது, எந்த முழு பின்னனியில் அது தோன்றுகிறதோ அப்படியாகவே விநியோகிக்கப்படுகிறது.
கலை படைப்புகளை மறு உருவாக்கம் செய்யலாம். கோட்பாட்டளவில் யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்தவும் முடியும். பெரும்பாலும், கலை சார்ந்த புத்தகங்கள், பத்திரிக்கைகள், திரைப்படங்கள் அல்லது தங்க முலாம் பிரேம்களுடன் அறைகளில் இன்றும் மறு உருவாக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றது. எதுவும் மாறவில்லை என்ற மாயையை அதிகரிக்க, தனது தனிப்பட்ட குறைவற்ற அதிகாரம் கொண்ட கலை, பிற வடிவங்களான அதிகாரத்தை நியாயப்படுத்துகிறது. கலை, சமத்துவமின்மையை உன்னதம் போல் செய்கிறது மற்றும் படிநிலைகளை பரபரப்பானாதாக செய்கிறது. உதாரணமாக, நேஷனல் கல்ச்சுரல் ஹெரிடேஜ் என்ற இந்த முழு கருத்தாக்கம், கலை அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி, இன்றைய சமூக அமைப்பு மற்றும் அதன் முன்னுரிமைகளை மகிமைப்படுத்துகிறது.

மறு உருவாக்கம் செய்யப்பட்டவை, அதன் இருப்பு எதை சாத்தியமாக்குகிறதோ அதை மறைக்கவோ மறுக்கவோ அரசியல்ரீதியாகவும் வணிகரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் தனிநபர்கள் அவற்றை வித்தியாசமாக பயன்படுத்துகிறார்கள்.
பெரியவர்கள் மற்றும் சிலநேரங்களில் சிறுவர்கள் தங்கள் அறையில் ஒர் பலகை அல்லது அட்டை வைத்திருப்பார்கள். அதில் சில காகித துண்டுகள், கடிதங்கள், ஓவியங்களின் மறு உருவாக்கங்கள், செய்திதாள் கத்திரிப்புகள், அசல் வரைப்படங்கள், தபால் அட்டைகள் ஆகியவற்றை ஒட்டி அல்லது குத்தி வைப்பார்கள். ஒவ்வொரு பலகையிலும் இருக்கும் அனைத்து படிமங்களும் ஒரே மொழியை சேர்ந்தவையே, மற்றும் அனைத்தும் ஏறக்குறைய அதற்க்குள் சமமானதே ஆகும். ஏனென்றால், அவை அறையில் வசிப்பவரின் அனுபவத்தைப் பொருந்தும் வகையில் மிகவும் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். தர்க்கரீதியாக, இந்த பலகைகள் அருங்காட்சியங்களுக்கு மாற்றாக இருக்க வேண்டும்.

இதன் மூலம் என்ன சொல்லவருகிறோம்? முதலில் என்ன சொல்லவில்லை என்பதை உறுதியாக தெரிந்துக்கொள்வோம்.

அசல் கலை படைப்புகளை அனுபவிக்க இனி ஏதுமில்லை என சொல்லவில்லை. இன்றும் நிலைத்திருக்கிறது என்ற பிரமிப்பு இருக்கிறது. அசல் கலை படைப்புகளை பொதுவாக அருங்காட்சியங்க பட்டியல்கள், வழிகாட்டிகள், வாடகை கேசட்டுகள், இது போன்று இன்னும் சில வழிமுறைகளிலேயே அணுகுகிறோம், இவற்றின் மூலம் அணுகுவது மட்டும் ஒரே வழியல்ல என்பதே நமது கருத்து. கடந்த கால கலை படைப்புகளை பழங்கால நாட்டத்துடன் பார்ப்பதை நிறத்தினால், அந்த படைப்புகள் புனித சின்னமாக இருக்காது. எனினும் அவை மறு உருவாக்கம் செய்யபட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி ஒரு போதும் மாறாது. அசல் கலை படைப்புகள் இப்போது தேவையில்லை என சொல்லவில்லை.
அசல் ஓவியங்கள் அமைதியானதாக இருக்கும் ஆனால் அதன் தகவல் ஒரு விதத்தில் அப்படி இருக்காது. சுவரில் தொங்கவிடப்பட்ட ஒரு மறு உருவாக்க ஓவியம், அந்த விதத்தில் ஒப்பானது கிடையாது, அசலில் அமைதியும் அசைவின்மையும் ஊடுருவியிருக்கிறது. அந்த ஓவியத்தில், ஓவியரின் உடனடி சைகைகளின் தடயங்களை பின் தொடரலாம். ஓவியர் வரைந்த காலத்துக்கும் ஒருவர் தனது சொந்த செயல் மூலம் இப்போது பார்பதற்குமான நேர இடைவேளையை இது அடைத்துவிடுகிறது. இந்த சிறப்பான பொருளில், அனைத்து ஓவியங்களும் சமகாலத்தவையே. இதுவே அவற்றின் சாட்சியத்தை நிருப்பிக்கிறது. அவற்றின் வரலாற்று தருணம் நம் கண் முன்னே உண்மையாகவே இருக்கிறது.

செசேனே (Cezanne), ஓவியரின் பார்வையிலிருந்து இதே போன்ற ஒர் அவதானிப்பை முன்வைத்தார். "உலகின் வாழ்க்கையில் ஒர் நிமிடம் செல்கிறது! அதன் யதார்த்தத்தில் அதை வரைவதற்கும், அதற்காக அனைத்தையும் மறக்கவும்! அந்த நிமிடமாக மாறி, உணர்வுப்பூர்வமாக..., நாம் பார்ப்பவற்றை படிமமாக கொடுக்க, நம் காலத்துக்கு முன் தோன்றிய அனைத்தையையும் மறந்துவிடு...".

நம் முன் இருக்கும் ஓவியத்தின் வரையப்பட்ட கணம் குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்பது கலையிடம் நம் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பொறுத்தது. இன்றைய நிலையில் நம் எதிர்பார்ப்பு என்பது, ஏற்கனவே ஓவியங்களின் அர்த்தத்தை மறு உருவாக்கங்கள் மூலம் நாம் எப்படி அனுபவித்தோம் என்பதைப் பொறுத்தே உள்ளது.

அனைத்து கலையையும் தன்னிச்சையாக புரிந்துக்கொள்ள முடியும் என கூறவில்லை. தொன்மையான கிரேக்கவரின் தலையை பத்திரிக்கை மறு உருவாகத்திலிருந்து கத்திரித்து வைத்து கொள்வதை சில தனிப்பட்ட அனுபவத்தை நினைவூட்டுவதாக கூறவில்லை. அதை முற்றிலும் வேறான படங்களுடன் பலகையில் குத்திவைப்பதன் மூலம் அந்த தலையின் முழு அர்த்தத்தை யுகிக்க முடியும்.

தொடரும்...