திரைமொழி - 9

இதோ கீழே, எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடிய எளிமையான ஸ்டோரிபோர்ட் முறைகள் இருக்கின்றன. இவைகள் எப்படி வேண்டுமானாலும் சேர்க்கப்பட்டு, ஒரு இறுதி ஷாட்டையோ ஸீனையோ இயக்குநரின் விருப்பப்படி விளக்க உபயோகப்படலாம். நமது ஸீனில், ஒரு பெண் தெருவில் இறங்கி ஓடுகையில் ஒரு காரின் பாதையில் வருவதைப்பற்றிய ஸ்டோரிபோர்ட் இருக்கிறது. இதில், இருப்பதிலேயே மிக எளிய தகவல் தரும் முறையான, அம்புக்குறிகளையும் எழுத்துகளையும் பயன்படுத்தி, திரையில் ஷாட்டில் இடம்பெறும் நடிகரின் அசைவுகளின் திசை சொல்லப்படுகிறது. இதேபோல, கேமராவின் மூவ்மெண்ட்டும் உணர்த்தப்படுகிறது. இந்த முறை மிகவும் பழையதாகத் தெரிந்தாலும், எடிட்டிங் அனுபவம் பெற்ற ஒரு இயக்குநருக்கு இந்த போர்டை படித்து அறிந்துகொள்ளும் திறன் உண்டு.
அடுத்து, இரண்டுவிதமான எளிமையான படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முதல் படம் – aerial ஷாட்டை விளக்குகிறது. கேமராவின் இடம் மற்றும் ஷாட்டில் action நடக்கும் திசை ஆகியவை இதில் சொல்லப்படுகின்றன. இதற்கு அடுத்து இருக்கும் படங்களில் டாப் ஆங்கிளில் இல்லாமல், சமநிலையில் கேமராவின் உயரம் விளக்கப்படுகிறது. ஒரு லொகேஷனில் ஷாட்கள் படமாக்கப்படுவதற்கு இதுபோன்ற படங்கள் மிகவும் உதவுகின்றன. இருப்பதிலேயே பொருட்களையும் சாதனங்களையும் மக்களையும் அங்குமிங்கும் நகர்த்த சிறந்த வழிகளை இவை விளக்குகின்றன. உதாரணத்துக்கு, ஏரியல் ஆங்கிளை விளக்கும் ஒரு படத்தில், உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஷாட்டில் டாலி ட்ராக்கை (Dolly track – கேமராவை நகர்த்த உதவும் சிறிய தண்டவாளம் போன்ற அமைப்பு) அமைத்தால், உணவு இடைவேளையின் போது கார்களை அங்கிருந்து வெளியே எடுப்பது சிரமம் என்பது விளக்கப்படலாம். இதுபோன்ற படங்களில் கேமராவை எங்கே வைப்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டாலும், ஷாட்டின் சைஸ் மற்றும் அந்த ஷாட்டில் நிகழும் உணர்வுபூர்வமான விஷயங்களின் விபரம் மற்றும் ஷாட்டில் நிகழும் கதாபாத்திரம்/பொருட்களின் அசைவு பற்றிய விபரங்கள் மிகக் குறைவு. இவற்றை Schematic drawings என்று அழைப்பர்.
எனவே, ஒரு வழிமுறை – Stick figures என்று அழைக்கப்படும் படங்கள். இவற்றில், மனித உருவங்களைப் போன்ற சில கோட்டுச் சித்திரங்கள் வரையப்பட்டு, ஒரு ஷாட்டில் கதாபாத்திரங்களின் நகர்வு மற்றும் அதில் நிகழும் action நடக்கும் திசை ஆகியன விளக்கப்படுகின்றன. கீழேயுள்ள படங்களில், இவற்றின் இரண்டு விஅகைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த கோட்டுச் சித்திரங்களில், கேமராவின் உயரம் இருக்காது. இருந்தாலும், இந்த நான்கு படங்களிலும் எத்தனை செய்திகள் சொல்லப்படுகின்றன என்று கவனியுங்கள். இவற்றை ஒரு நிமிடத்துக்குள்ளாகவே வரைந்துவிட முடியும். கூடவே, ஒவ்வொரு இந்த ஃப்ரேம்கள் எப்படி கட் ஆகின்றன என்பதும் எளிதாகவே சொல்லப்படுகிறது. ஒரு ஷாட்டில், இயக்குநர் இதுபோன்ற படங்களை வைத்துக்கொண்டே அதன் அளவுகளை எளிதாக அமைக்கலாம்.
மேலே உள்ள படங்களில் அம்புக்குறிகளை வரைவதன்மூலம், இயக்குநர் பார்க்க விரும்பும் கேமரா மூவ்மெண்ட்டையும் உணர்த்தலாம். அது- கீழே:
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், அம்புகளை வைத்து வரையப்பட்டுள்ள இன்னும் சில படங்கள் இருக்கின்றன. கேமராவின் நகர்தலையோ அல்லது ஷாட்டில் உள்ள நடிகர்களின் அசைவையோ அல்லது இரண்டையுமோ உணர்த்த இவை பயன்படுகின்றன. அம்புகளை வைத்து, நகரும் காரின் சிக்கலான பாதையையோ அல்லது ஒரு சீக்வென்ஸில் கேமராவின் பாதையையோ எளிதில் சொல்லிவிட முடியும். இதுபோன்ற அம்புக்குறிகளை மிகக் குறைவான பயிற்சியிலேயே வரைந்துவிடமுடியும்.
Arrowheads என்ற இன்னொரு வகை அம்புக்குறிகள் கீழே உள்ள படத்தில் உள்ளன. பலவகையான ஆங்கிள்களை இவை உணர்த்துகின்றன. இந்த ஆங்கிள்களை படங்களில் உணர்த்த, ஒர் இயக்குநர் இதுபோன்ற அம்புகளை தனது ஆர்ட் டைரக்டரிடம் தயார்செய்து தரச் சொல்லலாம்.
சில சமயங்களில், வரையப்படும் ஃப்ரேமையே ஒரு அம்புக்குறி போல மாற்றி, ஒரு சீனில் நிகழும் கேமராவின் நகர்தலை விளக்கலாம். அதேபோல், Overlapped frames என்று அழைக்கப்படும் – ஃப்ரேம்களை ஒன்றின் மேலாக மற்றொன்றை வரைவது – வழிமுறையும் இதற்கு உபயோகப்படுகிறது. இந்த ஃப்ரேம்களின் இடையே உள்ள கோடுகள் வரையாமல் விடப்பட்டால், கேமரா நின்று, அதன்பின் மறுபடி நகர்கிறது என்று ப்பொருள் கொள்ளலாம். கீழே இதைப்பற்றிய படங்களை கவனிக்கலாம்.
மேலே நாம் பார்த்த Stick Figures நினைவிருக்கிறதா? இவற்றில் கேமராவின் ஆங்கிளை எப்படி காண்பிப்பது? படங்களில் உள்ள கதாபாத்திரங்களை, முப்பரிமாண சதுரங்களின் உள்ளே அமைத்தால் கேமராவின் ஆங்கிள் புலப்படும். கீழே உள்ள படங்களில், இந்த சதுரங்கள் இல்லை என்றால் கேமராவின் உயரம் புலப்படாது என்பதை கவனியுங்கள். அதிலேயே இருக்கும் அடுத்த படத்தில் முதல் படத்தில் இருப்பவைகளை லோ ஆங்கிளிலும் ஹை ஆங்கிளிலும் முறையே காண்பித்திருப்பதையும் காணலாம். இவற்றில் காரையும் ஒரு சதுரம் போல காண்பித்து, அதன்மூலம் உயரம், ஆங்கிள் ஆகியவைகளை விளக்கியிருப்பதை உணரமுடியும். இதுபோன்ற மிக எளிமையான படங்களில் கூட, சதுரங்கள் மூலம் கேமரா எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு எந்தவித வரையும் அனுபவமும் இல்லை என்றாலும்கூட, இதைப்போன்ற படங்களை வரைதல் மிக எளிதும் கூட. இங்கும் கூட, ப்ரொடக்‌ஷன் டிஸைனரிடம் இயக்குநர் பேசி, சில அடிப்படை சதுரங்களை தயார் செய்துகொண்டு அவற்றை படங்களில் உபயோகிக்கமுடியும்.
இதுபோன்ற எளிய படங்களில் கனபரிமாணத்தை (Volume) சேர்த்துக்கொண்டால், இப்படங்கள் மேலும் பல செய்திகளை சொல்கின்றன. உதாரணமாக, இங்கு கீழே இருக்கும் படங்களில், இயக்குநர் முயற்சி செய்யும் பல ஷாட்கள் இருக்கின்றன. இவற்றில் அவருக்கு சிறந்ததாகத் தோன்றும் ஷாட்டையே உபயோகித்துக்கொள்வார்.