’தல்லுலா’ – தாய்மை குறித்த விசாரணை

சியன் ஹடர், எழுதி இயக்கியுள்ள 'தல்லுலா' திரைப்படம் பெண்களின் தாய்மையின் சிக்கல்களையும், ஆண்களின் கண்களுக்கு தெரியாத அருவமான அவர்களின் அழுத்தங்களையும் பதிவு செய்கிறது. இது அவருடைய முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய தாயால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரு வயது குழந்தையின் பாதுகாப்பிற்கான போராட்டமாக இத்திரைப்படம் அமைகிறது. ஹடர், 'பெவர்லி ஹீல்ஸ்' தங்கும் விடுதியில் குழந்தை பணியாளராக பணியாற்றியிருக்கிறார். பொருளாதார வசதியற்ற அந்த காலகட்டத்தில் குழந்தைகளின் உலகம், அவர்களை வளர்க்கும் விதங்கள் மிகவும் அக்கறையற்ற மற்றும் முறையான பராமரிப்பில்லாமல் இருந்ததாக குறிப்பிடுகிறார். குழந்தைகளின் மீதான அன்பும், வளர்ப்பு குறித்த சிந்தனையற்றவர்களாக இருந்துள்ளார்கள்.


கவனிப்பின்றி கிடக்கும் ஒரு குழந்தையை கடத்திச்செல்வதால் ஏற்படும் சிக்கலினால், மூன்று பெண்களுடைய வாழ்க்கையின் பாதிப்புகளையும், ஏற்படும் மாற்றங்களுக்கான உணர்வையும் இத்திரைப்படம் கடத்துகிறது. தல்லுலாவாக நடித்திருக்கும் எலியட் பேஜ் ஒரு வேனில் பயணித்து ஊர் சுற்றும் பெண்ணாவாள். தனிப்பட்ட முறையில் பெண்கள் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான வாழ்கைமுறையும், தான் அன்புடன் நேசித்தவர்கள் விட்டுச்செல்லும் போது ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகள் மிகவும் சிக்கலானது. வெளிவட்டங்களில் மிக சாதாரணமான நெறிமுறைகளை பின்பற்றியும் உள்வட்டங்களில் நேர்மாறான வாழ்க்கையை பின்பற்றும் வாழ்க்கைமுறையிலிருந்து வளரும்தன்மைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. உள்ளுணர்விலிருந்து விலகிச் செல்லும் வகையிலும் அதை சிதறடிக்கும் வாழ்க்கை முறையினால் ஏற்படும் பாதிப்புகளை நெருங்குகிறது. பாதுகாப்பற்ற உறவு சிக்கல்கள் எவ்வாறு வாழ்க்கையை நகர்த்துகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.


இத்திரைப்படம் உருவாகும் பொழுது ஹடர் மூன்று மாத கருவுற்ற பெண்ணாக இருந்துள்ளார். ஹடர், தன்னுடைய 20 வயதில் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது சில பெண்கள் தாய்மை உணர்வற்ற நிலையில் குழந்தைகளை வளர்த்துள்ளார்கள். சில பெண்கள் தாயாகவே தகுதி அற்றவர்களாக இருந்துள்ளார்கள் என ஹெடர் விமர்சிக்கிறார். அவ்வகையான பணக்கார பெண்களிடம் குழந்தைகள் மீதான புறக்கணிப்பு இருந்தது. எப்போதும் பெண்கள் மீது தாய்மை உணர்வின் மரியாதை செலுத்தவதை விடவும் அதன் மீதான விமர்சனங்களையும் தவறுகளையும் உளவியலுடன் பொருத்திப் பார்ப்பது அவசியமாகும். ஏனெனில், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அழுத்தங்கள் அவர்களை இன்னும் உள்ளுணர்வு சிதைந்த இடத்திற்கு எடுத்துச்செல்ல வழிவகை செய்வதாக அமைகிறது. சில பெண்கள் செய்யும் தவறான அணுகுமுறைகள் வளரும் குழந்தைகளை எவ்வளவு பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை ஹடர் பதிவு செய்கிறார்.
இயக்குனர் ஹடர், இந்த கதாபாத்திரத்தை தாய்மை உணர்வுடன் கூடிய பரிதாபத்தை ஏற்படுத்தாமல் அணுகியுள்ளார். ஹடரின் சொந்த வாழ்க்கையில் குழந்தைகளை பராமரிக்க இயலாமல் இருக்கும் தாய்மார்கள் மீது பரிதாபம் கொண்டிருந்தார். ஆனால், இந்த கதையை குறித்து எழுதும் பொழுது பரிதாபம் காட்டுவது தீர்வாக அமையாது. அவர்களுக்குள் இருக்கும் அன்பிற்கான இடத்தை வெளிக்கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில், குழந்தையை காணமல் போனதற்கு பிறகு கரோலினுடைய உணர்ச்சிகள் தன்னுடைய தவறை உணருபவையாக இருக்கின்றன . தன்னுடைய குழந்தையை மீண்டும் ஒரு முறை கண்டு கொண்டால் போதும் என்பதையே கரோலின் எதிர்பார்ப்பவளாக இருக்கிறாள்.


கரோலினாக நடிகை டாமி பளேன்சர்ட் (tommy blanchard) நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் அமெரிக்கவினுடைய வசதிபடைத்த பெண்களின் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன என்பதையும், சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை பகடியாக வெளிக்காட்டுகிறது. குழந்தையின் அழுகைக்கும் அடிப்படை தேவைகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கும் அபத்தத்தை கரோலினடமிருந்து தல்லுலா காண்கிறாள். டாமியினுடைய நடிப்பு சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் உள்ளடக்கியது. அவருடைய ஆழ்ந்த உடைந்த சோகம், ஆழ்மனதில் இருந்த பாதிப்பு யாவையும் கரோலின் கதாபாத்திரத்திற்கு உதவின என டாமி குறிப்பிடுகிறார்.

தனக்கு தாய்மை உணர்வு ஏற்படவில்லை. அதற்காக நான் காத்திருந்தேன். ஆனால் என்னுடைய தனிமையைத்தான் உணர முடிந்தது என மார்கோவிடம் கூறுகிறாள். இதன் மூலம் தாய்மை உணர்வின் இன்னொரு சிக்கலை புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தையின் பிரிவின் இடைவெளியில் அதை உணரும் பொழுது அவளுடைய தவறை உணருகிறாள். பரபரப்பான வசதிமிக்க ஆடம்பர உல்லாசங்களில் உணர்வுகளை அடைய காலங்களின் ஈர்ப்புவிசை தேவைப்படுகிறது.


ஹடர் இந்த கதாபாத்திரத்தை பற்றி கூறும்பொழுது, 'இது போன்ற கதாபாத்திரத்தின் நிகழ்கால வடிவங்கள் சிலரை காயபடுத்துபவையாக இருக்கலாம். ஆனால் அவற்றின் நியாயமற்ற தன்மையும், இறுதியில் அவர்களுடைய பாதிப்பை வெளிப்படுத்துவதும் புரிந்து கொள்பவையாக இருக்கும்' என்கிறார். மேலும் அவள் தன் தவறை ஒப்புக்கொண்டு வருந்தும் நிலைக்கு வருவது பாதிப்பை சரி செய்வதற்கும் உணர்வதற்கும் சரியான இடமாக அமையலாம்.
ஹடரின் கரோலின் கதாபாத்திரம் பணக்கார பெண்ணாகவும் தன்னுடைய அழகில் கவனம் செலுத்தக்கூடிய தாயாக இருக்கிறாள். ஹடர் இந்த கதாபாத்திரத்தை தாய்மை உணர்வுடன் கூடிய பரிதாபத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறார். ஹடரின் சொந்த வாழ்க்கையில் குழந்தைகளை பராமரிக்க இயலாமல் இருக்கும் தாய்மார்கள் மீது பரிதாபம் கொண்டிருந்தார். ஆனால், இந்த கதையை குறித்து எழுதும் பொழுது பரிதாபம் காட்டுவது தீர்வாக அமையாது. அவர்களுக்குள் இருக்கும் அன்பிற்கான இடத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். ஏனேனில், குழந்தையை காணமல் போனதற்கு பிறகு அவளுடைய உணர்ச்சிகள் தன்னுடைய தவறை உணருபவையாக இருக்கின்றன . தன்னுடைய குழந்தையை மீண்டும் ஒரு முறை கண்டு கொண்டால் போதும் என்பதையே கரோலின் எதிர்பார்ப்பவளாக இருக்கிறாள்.


பெண்களைப் பற்றிய நேர்மையான அல்லது நேரிடையான சித்தரிப்புகளில் முரண்கள் இருக்கின்றன. உண்மையில் பெற்றோர்கள் தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய சுதந்திரம் என்னவாக இருந்தது என்பதை குறித்த கேள்வியை கேட்க மறுத்துள்ளார்கள். அவர்களுடைய குழந்தைகளின் நலனும் குழந்தைகளை நேசிப்பதும் மட்டுமே உலகம் என்ற பாசாங்கான உணர்ச்சியை அவர்களுக்கு அளிக்கின்றனர். தன்னுடைய சொந்த சுதந்திரத்தை சிதைப்பது மட்டுமில்லாமல் குழந்தைகளின் சுதந்திரம் குறுகிய வட்டத்துக்குள்ளாக்கப்படுகிறது.


தாய்மை என்பது மட்டுமே பெண்களுக்கான அடையாளமாக கற்பிதம் செய்யப்படுகிறது. தல்லுலா, தான் தாய் ஆவதை விரும்பவில்லை. ஆனால் தன்னை நாடும் குழந்தையின் உணர்வை தாங்கத்தொடங்குகிறாள். தாய்மை என்பது ஒரு நடத்தையாகும். குழந்தைகளை வளர்க்கும் பாங்குள்ள எவரும் தாய்மை உணர்வுடன் குழந்தைகளை வளர்க்க இயலும். உயிர்கள் என்ற அடிப்படையில் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால், தன் குழந்தையை வெறுப்பது, பராமரிக்க தவறுவது, பாரபட்சம் காட்டுவது யாவும் தாயினுடைய பிறழ்வாக கருதப்படும். தாய்மையின் கற்பனாவாத பொதுதன்மைக்குள் பெண்களை அடக்குவதன் மூலம் இந்த சிக்கல்கள் அடையாளப்படுத்தப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. நிகழ் கால சூழ்நிலையின் உளவியல் பிறழ்வுகள் அல்லது மன சிக்கல்கள் தாய்மையை சுற்றியும் அமைகின்றன.


தல்லுலா, தன்னுடைய காதலன் நிக்கோ (Evan Jonigkeit) சொல்லாமல் விட்டுச்சென்ற பிறகு நிக்கோவினுடைய அம்மாவின் வீட்டிற்குச் செல்கிறாள். அவளுடைய அம்மா மார்கோ மூர்னி அவருடைய கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் விவாகரத்து வாங்க மனமில்லாமல் தனியாக வசிப்பவர். மார்கோ மூர்னியாக அல்லிசன் ஜேனி(allison janney) நடித்துள்ளார். குடும்ப ஒற்றுமை குறித்த வரலாற்று பார்வையில் ஆராயும் உதவி பேராசிரியராக இருக்கும் மார்கோ தன்னுடைய குடும்ப உறவில் ஏற்பட்டுள்ள குடும்ப சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். தன்னுடைய மகன் மீதும் கணவன் மீதும் உள்ள அன்பு அவரை விவாகரத்து வாங்காமல் சரிசெய்யும் மனப்போக்கையே கொண்டுள்ளார். கல்வி ரீதியான திறன்கள் இருப்பின் உறவுகளின் பிரிவால் ஏற்படும் பாதிப்பும் தனிமையும் தல்லுலாவை அரவணைக்க காரணமாக இருக்கிறது. பெண்ணியம் பற்றிய அவருடைய வகுப்பில், சமூக சூழ்நிலையில் ஒரு பெண் தனித்து ஏன் வாழக்கூடாது? என்ற கேள்வியை எழுப்புகிறாள். இவை சமூகம் நோக்கிய கேள்வியாகவே ஹடர் வைப்பதாக கருதலாம்.


குடும்ப அமைப்பில் இருக்கும் ஆண்-பெண் உறவுகள் பொதுவாக, பாலியல் தன்மை களுக்காக மட்டுமல்லாமல் வழங்குதல், பெறுதல், பகிர்தல், பராமரிப்பு, குழந்தைகளை பேணுதல் போன்ற ஒழுங்கு முறையிலான உறவுமுறையை வலியுறுத்துகிறது. ஆனால், தற்கால சமூக விழுமியங்களை உற்று நோக்குகையில் மணம் முடிப்பதில் பெண்களின் சிக்கல்கள் வெளிப்படையாக பேசப்படுபவையாக இல்லை. அவர்களின் உணர்வுகள் சமூகத்தால் ஒதுக்கி தள்ளப்படுபவையாக இருக்கின்றன. தற்காப்பு ஒன்றை கருத்தை அடிப்படையாக கொண்டு முற்றிலுமான பெண்கள் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தும் வகையிலேயே தல்லுலா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் அங்கேயும் ஹிமாலயா செல்ல வேண்டும் என்ற தன்னுடைய விருப்பம் நிக்கோவால் மறுக்கப்படுகிறது. கடந்த காலத்தில் அவளுடைய அம்மா தனித்து விட்டுச்சென்ற பிறகு அவளுடைய காயங்களை ஆற்ற தொடர் பயண ஓட்டத்தை மேற்கொள்கிறாள். ஆனால், இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாயை சந்திக்க வேண்டும் என்கிறான் நிக்கோ. மீண்டும் தான் அவனுடைய குடும்ப அமைப்புக்குள் செல்வதை விரும்பவில்லை. நிக்கோ, "ஹிமாலய சென்ற பிறகும் உன்னுடைய பயணம் நிற்க போவதில்லை" என்கிறான். முப்பரிமாண பெண்களின் வாழ்க்கை ஆண்-பெண் உறவில் பெண்களின் வட்டம் எவ்வாறு சுழல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வசதிப்படைத்த மேட்டிமைதன்மை, அழகு, தன்னுடைய கணவன் வெளிநாட்டில் இருப்பதால் மற்ற ஆணுடன் ஏற்படுத்தும் தொடர்பின் தோல்வியும் கரோலினை பாதிப்படைய செய்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தை பெற்று வாழ்பவளாக இருக்கிறாள். இயல்பு நிலையிலிருந்து அதிக பதட்டத்திற்கும் குடிபழக்கத்தினால் படபடப்பான உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாகவும் தெரிகிறாள். அவளுடைய அனைத்து சமநிலையின்மைக்கும் அவளுடைய குழந்தை தீர்வாக இருப்பதை உணரவில்லை. தல்லுலாவின் வருகைக்கு பின்னர் அவளுடைய இருப்பு கேள்விக்குட்பட்டு பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.


ஒரு பெண்ணாக இருப்பதற்கும் அதை வெளியே இருந்து பார்ப்பதற்கும் இடையே சமூகத்தில் ஒரு துண்டிப்பு இருக்கிறது. பார்வைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இருவேறு பரிமாணங்கள் முற்றிலும் வேறுபாடு உடையவை. கடந்த காலத்தை விட்டுவிட முடிந்தால் பெண்கள் ஆழமான சிக்கல்களுக்கு நடுவே போராட நேரிடும் என்பதை தல்லுலா பதிவு செய்கிறது. தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றவற்றில் காணும் பெண்களின் பொதுமைப்படுத்தப்பட்ட தன்மை இங்கு எல்லோருடைய வாழ்க்கையோடும் ஒன்றி போகாதவொன்றாக காண முடிகிறது.

தல்லுலாவின் குழந்தை வளர்ப்பு நிலையில், தாய்மை என்பது ஒரு உணர்வு நிலையாகும். அது குழந்தையை பெற்றால் தான் வரும் என்ற பொதுத்தன்மை கேள்விக்குட்பட வேண்டியது. தாய்மை உணர்வு பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மாற்று பாலினத்தாருக்கும் ஒன்றான உணர்வாகும். நிக்கோ குழந்தையை விட்டுவிட்டு வெளியேற சொல்லும்பொழுது அவளுடைய உணர்வு குழந்தையை குறித்ததாக இருக்கிறது. குழந்தையின் கதறல் தல்லுலாவின் தாய்மையை தேடுவதாகவே இருக்கிறது.


மார்க்கோவை பொறுத்தவரையில் குடும்ப அமைப்பை பற்றி வரலாற்று ரீதியில் நூட்கள் எழுதும் பெண்ணாக இருக்கிறாள். ஆனால் அவளுடைய தனிமை, கணவன் மற்றும் மகனின் வரவு மீது எதிர்பார்ப்பை கொண்டதாக இருக்கிறது. செல்ல பிராணியாக வளர்க்கும் ஆமையின் இறப்பு அதிக அழுத்தத்திற்கு எடுத்து செல்கிறது. அதே சமயத்தில் தல்லுலாவின் வரவு அவளை அந்த இடத்தை இட்டு நிரப்பி அவளுடைய உண்மையான நிலைமை அறிந்த பிறகும் அவளுக்கு ஆதரவு தருபவளாக இருக்கிறாள்.


தான் நேசிக்கும் கணவன் கடந்த எட்டு வருடங்களில் ஒரு முறை கூட தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை என்பது ஆண்களின் புரிந்து கொள்ளாத மற்றும் பெண்களை நிராகரிக்கும் தன்மையை சுட்டிக்காட்டுகிறது. பெண்களை உடலுறவு குறித்தும் அவர்களின் விருப்பங்களை குறித்து பேச அனுமதிக்காத ஆதிக்க சூழலில் இவ்வாறான வெளியில் அறியாத உள சிக்கல்கள் இருக்கின்றன. கணவனிடம் சண்டையிட்ட பிறகு எழும் மனக்குமுறலில் தல்லுலா விடம் மார்கோ இதை பகிர்ந்து கொள்கிறாள். தன்னுடைய விடுதியின் பாதுகாப்பளனுடன் உறவு கொள்ள நினைத்த போதும் அவளுடைய ஆழமான நினைவுகள் அதை மறுக்கிறது.
தல்லுலாவின் வேனில் வசிக்கும் சுதந்திரமான வாழ்க்கை முறையின் அடுத்த தடத்தை பதிக்க நினைக்கையில் அது காதலனால் குழைக்கப்படுகிறது. மனிதர்களிடமிருந்து விலக நினைக்கும் தல்லுலா, நிக்கோ சென்றபிறகு வாழ்வாதார சிக்கல்களை தரக்கூடியதாக இருக்கிறது. தனக்கான பாதுப்பையும் அடிப்படை ஆதாரங்களான உணவு,உடை, இருப்பிடம் குறித்து தேடுபவையாக மாறுகிறது. குழந்தையின் உறவு அவளை எரிச்சலுட்டவதாக இல்லை. மாறாக அவளால் அந்த குழந்தைக்கு எவ்வாறு உதவ முடியும் என்ற அனுபவமற்ற காரணமாக மட்டுமே இருக்கிறது.
நேர்மறையான பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், மரியாதையும் நம்பிக்கையும் இளம் வயதில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அங்கீகாரமும் ஆதரவும் அவர்களுக்கு முக்கிய காலகட்டங்களில் தேவையான ஒன்றாக இருக்கிறது. பெண்கள் பெற்றோர்களையும் தங்கள் மகன் மகள்களையும், காதலன் அல்லது கணவன் போன்ற உறவுகளின் தேவை என்ன? என்ற கருத்துக்கள் மற்றும் அவர்களை நாடி இருப்பதற்கான உறவு சிக்கல்களையும் அன்பின் வெளிப்பாடாக பதிவு செய்யப்படுகிறது. மேலும் அமெரிக்கா போன்ற உயர் ஆடம்பர வசதிகளுக்கான தேவையின்மை அதன் மூலம் அவர்கள் போதைக்கு உள்ளாக்கப்படுவதன் பாதிப்புகள் புரிதலுக்குட்படுகிறது. உறவுகளை கவனத்தில் கொள்ளாததும் குழந்தைகளை பராமரிக்கும் விதங்களும் சமூக கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கப்படும் முறைகளில் உள்ள தவறுகளை ஒப்புக் கொள்வதில்லை. தாய்மை பற்றிய நேர்மறையான கருத்துகளும் உரையாடல்கள் நிகழ்கிற போது தவறான உணர்ச்சிகளால் சிக்குண்டுள்ள பெற்றோர்களின் பிரச்சனைகளையும் ஆராய வேண்டும். மூன்று வெவ்வேறு பெண்களின் உணர்ச்சிகள் குழந்தைகளின் 
இல்லாமை என்பதால் தாய்மையை அடைய முயற்சிக்கின்றன.
பொருளாதார ரீதியாக சுயாதீனமாக இத்திரைப்படத்தை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ஹடர். மேலும், நடிகர்கள் மற்றும் தயாரிப்புக்கான சிரமங்களுக்கு வருத்தப்படுவதை விட சரியான காரணங்களுடன் சரியான காலகட்டத்தில் படம் வெளியானது. நெட்ப்ஃளிக்ஸ் நிறுவனம் 'தல்லுலா'- திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஹடர் இதை பற்றி கூறும்பொழுது அனைத்து சிரமங்களுக்கு பின்னர் ஏமாற்றமாகவும் வருத்தங்களுடன் இருக்கும்பொழுதும் இந்த கதையின் ஆழத்தையும் வரவேற்பையும் காணும்பொழுது என் வாழ்க்கை பயணத்தின் மிகப்பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த திரைப்படம் கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால் இவ்வளவு ஆழமாக இருந்திருக்க முடியாது என்கிறார். இதற்க்கு முன்பு அவர் இயக்கிய 'மதர்' என்ற குறும்படத்தின் முழுநீள வடிவமே 'தல்லுலா'.
 
இறுதியில் ஆண்- பெண் உறவிற்கான பிரிதலில் இருக்கும் சிக்கல்கள் பெண்கள் பார்வையில் பார்க்க முடிகிறது. தனிமை, தற்காப்பின்மை போன்ற உணர்வுகள் இயல்பாகவே நெருடல் செய்யக்கூடியவையாக இருக்கின்றன. தல்லுலா, மார்கோவிடம் தன்னுடைய பயணத்தை பற்றி பேசும்போது புவியானது புவியீர்ப்பு என்ற மையமான விசையை கொண்டிருப்பது போன்றே உறவுகளை கொண்டிருக்கிறோம் என்கிறாள். கடந்த கால வாழ்க்கையையும் நினைவுகளையும் விட்டு நாம் பிரிவொமானால் அந்த பிரிவினுடைய தனிமையும் யதார்த்தத்தையும் இத்திரைப்படம் காட்சிபடுத்துகிறது.

மாய- யதார்த்தவாத காட்சியாக இறுதியில் மார்கோ உயர எழும்ப தொடங்குகிறாள். ஆனால் புவியீர்ப்பு விசை ஒன்று இல்லை என்றால் இயல்பாக எந்த பொருளும் இப்புவியில் நிலைபெற முடியாது. ஒழுங்கான படிநிலைகள் மாறும். அதுபோலவே உறவுகள்,அதன் மீதான உண்மையான அன்பும் என்பதை இயக்குனர் ஹெடர் வலியுறுத்துகிறார்.