பெல் அடிச்சாச்சு - திரைக்கதை

திரைக்கதையைப் படித்துவிட்டு, கொடுக்கப்பட்டிருக்கும் அந்த குறும்படத்தையும் அவசியம் பாருங்கள். திரைக்கதை எழுத இந்த உத்தி கொஞ்சம் பயன்படும் என்று நினைக்கிறேன்.
SCENE - 1
LOCATION - குமார் வீடு
DAY / NIGHT - DAY
INT / EXT - EXT
CHARACTER - குமாரின் தாய். குமார்

SHOT - 1

TOP ANGLE SHOT
மேலிருந்து CAMERA கீழே வருகிறது, அங்கே ஒரு பெண் தன் வீட்டின் முற்றத்தை பெருக்கிக் கொண்டிருக்க CAM TILT DOWN.

SHOT - 2

FULL SHOT
குமாரின் தாய் வீட்டு முற்றத்தை பெருக்கிக் கொண்டிருக்க
CAMERA PANING LEFT TO RIGHT

தாய் : குமாரு ,,,,

அப்படியே பெருக்கிக் கொண்டு மீண்டும் திரும்பியவாறு கூப்பிடுகிறாள்,

தாய் : டேய் குமாரு ,,,

CAMERA Paning to Right to tiltup வெறுப்பில் பெருக்கிக் கொண்டே அழைக்கிறாள்,

தாய் : எந்திரிடா ,,,

SHOT - 3

TOP ANGLE SHOT
குமார் உள்ளே பாயில் தூங்கிக் கொண்டு இருக்கிறான்,

SHOT - 4

MID SHOT
குமாரின் தாய் முற்றத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறாள்
CAMERA LEFT TO RIGHT PAN

SHOT - 5

MID SHOT
குமார் பாயில் தூங்கிக் கொண்டிருக்கிறான்,
TILT UP
தாய் முகத்தை முந்தானையால் துடைத்தவாறு நுழைந்து,,

தாய் : எந்திரிடா,,, எந்திரிடானு
சொல்லிட்டே இருக்கேன்ல,,,
என்றவாறு வெளியேறுகிறாள்,

SHOT - 6

CLS
குமார் தூக்க கலக்கத்தில் கண்களை மூடியவாறு எழுந்து

குமார் : இன்னிக்கு ஞாயிற்றுக்கிழம்மம்மா,,,
SCHOOL இல்லமா,,,
என்று கலைந்த குரலில் கூறுகிறான்,

SHOT - 7

MID SHOT
தாய் வாயிலில் நீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு. அவன் இருக்கும் இடத்தைப் பார்த்து ,,,
தாய் : டேய் இன்னிக்கு திங்கக்கிமை
ஒழுங்கா எந்திரிச்சுரு,,,
என்று கூறிவிட்டு மீண்டும் தண்ணீர் தெளிக்கிறாள்,
SHOT - 8

CLS
குமார் தூக்க கலக்கத்திலேயே தலையை சொறிந்து கொண்டு
குமார் : ப்ச்,,,, ம்ம்ம்,,,
என முனகியவாறே எழுந்து வெளியே செல்கிறான்,

- LEAD –

SHOT - 9

MID SHOT
குமார் தூக்க கலக்கத்திலேயே தலையை சொறிந்தவாறு கண்களை மூடியவாறு CAM-ஐ நோக்கி வந்தவாறே,,,

குமார் : அம்மா,,, இன்னைக்கு யாருமே வரமாட்டாங்கமா,,,

- LEAD -

SHOT - 10

STEADY CAM SHOT
வெளியே தலையை சொறிந்தவாறே வர. தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த தாய். பாத்திரத்தை கீழே வைத்துவிட்டு அவனை நோக்கி தலையில் தட்டியவாறு

குமார் : ஸ்ஸ்
தாய் : என்னடா? உனக்கு யாருடா சொன்னது. போ,,,,
என்று முறைத்துவிட்டு வீட்டினுள் செல்கிறாள்,

SHOT - 11

MS
உள்ளே வந்து பீரோவை திறக்க VOICE OVER ...

குமார் : அந்த டீச்சர் தான்மா, சொன்னாங்க,,,
தாய் : ம்க்கும்,,,
அந்த டீச்சரே உங்கிட்ட வந்து சொன்னாங்களா?
என்றவாறு பீரோவினுள் எதையோ தேடுகிறாள்,

SHOT - 12

CLS - வாளி
தண்ணீர் நிரம்பிய வாளியில் கைகளால் நீரை எடுத்து அலசியவாறே,,,

குமார் : ரொம்ப தலவலிக்குதும்மா ,,,
என்றபடி அலசுகிறான்,

SHOT - 13

MS
தாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்,

தாய் : சரி. சரி டீ போட்டுத் தரேன், குடிச்சுட்டு கிளம்பு,
என்றபடி மிண்டும் எதையோ தேடுகிறாள்,

SHOT - 14

MID SHOT
இருளான அறையின் பகுதியில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் சாமிப்படத்தின் அருகே நின்று

குமார் : அம்மா,,, போய்ட்டு வரேம்மா,,,
என்றபடி வெளியேற எத்தனிக்கிறான்,

SHOT - 15

MID CLOSE SHOT
தாய் ஏதோ வேலை செய்தவள், அவனைப் பார்த்துவிட்டு
தாய் : டேய், டேய்,,,
அப்பா படத்த தொட்டுக் கும்பிட்டு போ,,,
என்கிறாள்,

SHOT - 16

MID SHOT
வெளியே செல்ல முயன்ற குமார் மீண்டும் திரும்பி எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தொட்டுக் கும்பிட்டு விட்டு பள்ளி செல்ல வெளியேறுகிறான்,

- CUT TO-
SCENE - 2
LOCATION - பள்ளி செல்லும் வீதி
DAY / NIGHT - DAY / MOR
INT / EXT - EXT
CHARACTERள் - குமார். பள்ளிச் சிறுவர்கள்
SHOT - 1

FULL SHOT
குமார் பள்ளிச் சீருடையில் புத்தகப் பையுடன் வீதியில் நடந்து வருகிறான்,
LEFT TO RIGHT PANING குமார் நடந்து செல்கிறான்,

SHOT - 2

LOW ANGLE SHOT
பள்ளி வளாகத்தின் பெயர் பலகை

SHOT - 3

MLS
குமார் பள்ளி வளாகத்தினுள் நுழைகிறான், CAM TILT UP குமார் சிறுவர்கள் நிறைந்த வளாகத்தினை பார்க்கிறான்,
SHOT - 4

CLS TO LEG
பிய்ந்த செருப்புகளுடனான காலுடன் குமார் MOVE ஆவது,

SHOT - 5

FOLLOWING SHOT
குமார் பள்ளியின் உள் சறுக்கு விளையாட்டு உபகரணத்தின் முன் செல்வது,,,

SHOT - 6

STEADY CAM SHOT
சறுக்கு உபகரணத்தில் குமார் ஏறுகிறான்
- LEAD –

SHOT - 7

SCS - LONG SHOT
சரக்கு உபகரணத்தில் குமார் சறுக்கி கீழே வந்து விளையாடி விட்டு வேறு இடத்திற்கு செல்கிறான்,

SHOT - 8

POINT OF VIEW SHOT - குமார்,
குமாரின் பார்வையில் விளையாடும் சிறுவர்களின் முகங்கள் தென்படுவது,

SHOT - 9

FOLLOWING SHOT
குமார் நடந்து சென்று மாடிப்படிகளில் ஏறுகிறான், சிறுவன் ஒருவன் அவனை பின்னே இருந்து அழைத்தவாறு,,,

சிறுவன் : டேய்,,, டேய்,,, டேய்,,,

குமார் திரும்புகிறான் -
- LEAD -

SHOT - 10

SUGGESSTION SHOT
ஏதும் புரியாமல் (REACTION) அவனைப் பார்க்க அவன்,

சிறுவன் : பெல் அடிச்சிருச்சு, சீக்கிரம் குடுடா,,,

குமார் REACTION -
- FADE OUT - BLACK SCREEN -

VOICE OVER : வேகமா குடுடா. பெல் அடிச்சுருச்சு,
தாய் : குமாரு! டேய்! குமாரு,,,

SHOT - 11

FADE IN, LOW ANGLE SHOT
குமார் தூங்கிக் கொண்டிருக்க தாய் அவனை எழுப்பிக் கொண்டிருக்கிறாள்,

தாய் : எழுந்திருடா. நேரமாச்சு
டேய்,,,

என்றுவிட்டு பாத்திரம் எடுக்க செல்கிறாள்,,,

SHOT - 12

TOP ANGLE SHOT
குமார் முழித்துக் கொள்கிறான்,

தாய் : ப்ச்,,, எந்திரிடா,,,

SHOT - 13

MID SHOT
சோம்பலை முறித்தவாறு முகத்தினை தடவிக் கொண்டே குமார் எழுகிறான், தாய் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறாள்,

SHOT - 14

MLS
தாய் குடிசையிலிருந்து பாத்திரங்களோடு வருகிறாள்,

SHOT - 15

CLS
குமார் தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்தவாறு இருக்க,,,

தாய் : இன்னைக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லாம,,,

DIALOUGE LEAD - LEAD –

SHOT - 16

LONG SHOT
தாய் பாத்திரத்தில் சமைத்தபடியே

தாய் : ஒழுங்கா எந்திரிச்சு கிளம்பு,
என்றவாறு சமைத்துக் கொண்டே இருக்க, குமார் எழுந்து வெளியே வர,,, தாய் கோபத்துடன் திரும்பி

- LEAD -

தாய் : நேரமாச்சுனு சொல்றேன்,,,,
என்று அவனைப் பார்த்துவிட்டு மீண்டும்,,,

தாய் : போ,,,
என்றுவிட்டு தன் வேலையில் ஈடுபடுவது,,,

SHOT - 17

MLS
குமார் முகத்தினை வாளி நீரில் அலசுவது....

SHOT - 18

MID CLOSE SHOT - TO - LEG
தாய் வீட்டினை பெருக்கிக் கொண்டிருப்பது,,,

SHOT - 19

MID SHOT
எரிந்து கொண்டிருக்கும் தந்தை படத்தின் விளக்கினை தொட்டு வணங்குவது,,,

SHOT - 20

MID SHOT
பெருக்கிக் கொண்டிருக்கும் தாய்,,,

குமார் : அம்மா போய்ட்டு வரான்மா,,,
VOICE OVER
அவனை பார்ப்பது (REACTION)

SHOT - 21

MID SHOT
குமார் வெளியே செல்வது ,,,,
FADE OUT

SCENE - 3
LOCATION - பள்ளி
INT / EXT - EXT
DAY / NIGHT - DAY
CHARACTERள் - குமார். பள்ளிச் சிறுவர்கள்
SHOT - 1

LOW ANGLE SHOT
பள்ளியின் பெயர் பலகை தெரிய (TILT UP) குழந்தைகள் பள்ளியின் உள்ளே செல்வது,

SHOT - 2

CLOSE SHOT TO HANDS
குமாரின் கை. பள்ளிச் சிறுவனின் கையிலிருக்கும் பணத்தை வாங்குவது,,,

சிறுவன் : டேய். டேய்,,,, டேய்,,,

SHOT - 3

CLS TO பள்ளிச் சிறுவன்,,,
அவசரமாக (REACTION)

சிறுவன் : பெல் அடிச்சிருச்சு வேகமா குடுடா,,,,
- LEAD -

SHOT - 4

CLS TO HAND
பணத்தினை குமாரின் கை வாங்குகிறது,,,

SHOT - 5

பள்ளியில் குழந்தைகளின் இயக்கம். தமிழ் மொழி வாழ்த்து பாடப்படுகிறது,

VOICE OVER : நீராருங் கடலொடுத்த ,,,

SHOT - 6

TOP ANGLE SHOT
வாங்கிய கைய மெதுவாக எடுக்க
CAM MOVE LEFT TO RIGHT பாக்கெட்டில் பணத்தை போடுவது,,,

VOICE OVER : நிலமடந்தை கெழிலொழுகும்,,,
சீராரும் ,,,,

- LEAD -

SHOT - 7

CRANE SHOT - FADE IN
குமார் தனியே நிற்க,,,

VOICE OVER : வதனமென. திகழ்பரவ
கண்டமதில்,,,,

- FADE OUT -

SHOT - 8

FADE IN - CRANE SHOT
பள்ளியின் இயக்கம்
V O : எக்கணமும் அதிசிறந்த திராவிட
நல் திருநாட்டில்,,,
FADE OUT

SHOT - 9

FADE IN
MLS -
குமார் குனிந்து தன் சுண்டல் பாத்திரத்தினை எடுக்க
யஞ : தக்க சிற பிறை நுதலும்,,,,

FADE OUT

SHOT - 10

LONG SHOT - FADE IN
குமார் சுண்டல் பாத்திரத்தோடு பள்ளியை பார்த்தவாறே செல்வது,
V O : தரித்தனரும் திலகமுமே,,,

FADE OUT

SHOT - 11

FADE IN
LOW ANGLE SHOT
குமார் பள்ளியை ஏக்கத்துடன் பார்த்தவாறே நடந்து செல்வது

V O : மே,,,,

SHOT - 12

LONG SHOT
குமார் பள்ளியை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு நடந்து செல்ல ,,,,
V O : அத்திலக வாசனைபோல்
அனைத்துலகும் இன்பமுற ,,,,
(LEAD)

SHOT - 13

LONG SHOT
குமார் சுண்டல் பாத்திரத்துடன் தூரத்தே நடந்து செல்கிறான்,
V O : ற,,,
SHOT - 14

MLS
குமார் சுண்டல் பையுடன் செல்வது, காற்றில் அவன் பாத்திரத்தில் இருந்த பத்திரிகைகள் காற்றில் பறந்து. வீதியில் விழ அவன் தொடர்ந்து சென்று கொண்டிருக்க,,,
V O : எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அனங்கே,,
(LEAD)

SHOT - 15

TOP ANGLE SHOT
பத்திரிகைகள் சிதறிக் கிடக்க
CAM LEFT TO RIGHT PANNING
குறிப்பிட்ட பத்திரிகை (CAM
பார்வையில் இருக்க)

SHOT - 16

DISSOLVE SHOT - CLS
ஆரம்பக் கல்வி அனைத்து சிறார்களின் அடிப்படை உரிமை எனும்
(பத்திரிகை) தெரிவது,,,

V O : வாழ்த்ததுமே,,, வாழ்த்ததுமே...

நன்றி: எஸ். யு. அருண் ( இயக்குனர் )

இந்த குறும்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=2kHfFdO_jUE