கலைஞனுக்கென்று ஒரு தனி பீடம் இல்லை. கமல்ஹாசன் - நேர்காணல் (ஃப்ரண்ட் லைன்)

கமல் ஹாசன். 59 வயதில், 54 வருடங்கள் சினிமா உலகில் பங்குவங்கித்த அவர், தற்காலத்தின் பல்துறை சிகரம் ஆவார். அவரின் சினிமா பயணம் பேரொலியுடன் துவங்கியது: ஆறே வயதில், முதல் திரைப்படமான களத்தூர் கண்ணமாவிற்காக குடியரசு தலைவரின் தங்க பதக்கம் விருதை பெற்றார். ஃப்ரண்ட் லைன் இதழுக்காக அவரது அலுவலகத்தில் அளித்த இந்த நேர்காணலில், சினிமா மீது ஆர்வம் கொண்ட ஒரு சிறந்த கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு சிந்தனையாளராக சினிமா அடிப்படையிலான சமூக, அரசியல் மற்றும் கருத்தியல் பிரச்சனைகள் குறித்தும் தனது கண்ணோடத்தை பகிர்கிறார்.
இந்திய சினிமா 100 வருடங்கள் எட்டியுள்ளது. அந்த நூற்றாண்டில் பாதிக்கு மேல் நீங்களும் பங்கு வகித்துள்ளீர். உங்கள் பார்வை எங்களுக்கு முக்கியமானதாகும். கடந்து வந்த ஆண்டுகளில் இந்திய சினிமா எப்படி பரிணமித்துள்ளது?

பள்ளி முதல் நாள், முதல் தடுப்பூசி, விருத்தசேதனம்... காது குத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூறுவது போலாகும். குழந்தைகளுக்கு இவை உண்மையிலியே அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றே ஆகும். ஆனால் இவை நினைவுகளாகும். எனது முதல் நினைவே சினிமாதான். நான் உண்மையிலியே சினிமாவின் ஒரு குழந்தையாவேன்.

புதியதொழில்நுட்பம்அல்லதுகெட்டநடிப்பினால்நான்அனாதையாகவில்லைஎன்றுமகிழ்ச்சிஅடைகிறேன். நல்லஇயக்குநர்கள்எனக்குஉதவிசெய்திருக்கிறார்கள்எனநினைக்கிறேன். எனது அபிப்பிராயத்தில், சினிமா மரியாதை பெற்று, பின்னர் இழந்தது.

தொடர்ந்து நடக்கும் இது, ஒரு அரசியல் வடிவமாகும் என நினைக்கிறேன். சினிமா சார்ந்த மக்கள் வெற்றி அடையும் போது, அரசியல்வாதிகள் சினிமாவை கேலி செய்ய தொடங்கினார்கள். இதில் சினிமா செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. மேல் தட்டு மக்கள் இது ஒரு நவீன கலை என முதலில் நம்பினார்கள். காந்தி எனது ஆதர்சம் என்றாலும், சினிமாவிற்கு மிகப் பெரிய அநீதி இழைத்தவர் அவர். ஏனெனில் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், சினிமாவை வெறுத்தார்.

பெரியார் ?

பெரியாரும், அவருக்கும் சினிமா பிடிக்கவில்லை. மிகப் பெரிய சமுதாய பணி செய்த இருவருமே எனது ஆதர்சமே ஆனாலும், இருவருமே சினிமா ஒரு அத்தியாவசியமான சேவை இல்லை என்றே கருதினார்கள். அதனால்தான் சினிமாவை அப்படி நினைத்திருப்பார்கள் போலும். சினிமா மீது முல்லாகளுக்கு இருக்கும் அதே அணுகுமுறையே காந்திக்கும் இருந்தது. தந்தி, தடுப்பூசி போன்றவற்றை ஏற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவை ஏற்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாகும்.

ஆனால் திராவிட இயக்கம் சினிமாவை பயன்படுத்திக்கொண்டது....

ஆம். திராவிட இயக்கம் சினிமாவை பயன்படுத்திக்கொண்டது. ஆனால், சினிமா வெற்றிகரமானதாக மாறிய போது, அவர்களை வெற்றியடைய செய்ததை அவர்களே கேலி செய்ய துவங்கினர். திராவிட இயக்கம் வெற்றி பெற பயன்பட்ட அனைத்துமே கிண்டல் செய்யப்பட்டன. அடுக்கு மொழி கிண்டல் செய்யப்பட்டது, கருவிகள் கிண்டல் செய்யப்பட்டது. திராவிட அரசியல் உத்தி காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பின், வடக்கிலிருந்தும் மையத்திலிருந்தும் அவை வந்தன. அது அரசியல் தான். ஆனால் ஒன்று மற்றொன்றை பாதிக்கிறது. நான் அரசியல்வாதி இல்லை. நான் ஒரு கலைஞன் மட்டுமே. குழந்தையாக 1960 நடுபகுதிககளில், சினிமாவை பாரபட்சமாக பார்ப்பது மீண்டும் துவங்கியதை பார்க்க முடிந்தது.

இது ஒரு முரண்பாடு இல்லையா? சினிமா அதன் மரியாதையை இழந்து விட்டது ஆனால் அது மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறது.

அது பிரபலமாகும். பிரபலாமாகியே தீரும். ஏனெனில் அது மிகவும் வலுவான ஒரு ஊடகமாகும். சினிமா தொழில் நுட்ப வல்லுநர்கள் வரையறுக்கும் விகிதத்துக்குள்ளே அது இல்லை என நான் நினைக்கிறேன். புத்திசாலிதனமாக, பிரிட்டிஷ் அரசு மற்றும் ஷியாம் பெனிகல் அவர்களும் சினிமாவை "அசையும் படிமங்கள்" என்றே அழைத்தார்கள்.

அது அப்படியே மாற போகிறது. மற்றும் நமது அனைத்து அமைப்புருவாக்கமும் மாறும். நாம் சினிமாவை அணுகும் முறை மற்றும் அதன் பயன்பாடு மாறும். ஒரு விதத்தில், நாம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறோம், கலைஞனுக்கென்று ஒரு தனி பீடம் இல்லை. ஆன்டி வேர்ஹல் சொன்னது போல "புகழ் பெற, தங்களுக்கான 15 நிமிடங்கள் அனைவருக்கும் கிடைக்கும்"

இன்றைய இணைய காலகட்டத்தில், அனைவரும் தங்களது சொந்த சினிமாவை உருவாக்க முடியும். ஆய்வு மற்றும் உங்கள் சொந்த கற்பனையை பயன்படுத்தி உங்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பெருநிறுவனங்கள் மூலம் தனிப்பட்ட நிகழ்ச்சிகளாக உருவாக்குவதே கேளிக்கையின் எதிர்காலமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சூது கவ்வும் மற்றும் அட்டக்கத்தி போன்ற படங்களை எடுத்த புதிய தமிழ் இயக்குநர்கள், நீங்கள் குறிப்பிட்டது போன்ற படங்களை எடுக்கிறார்களா...?

நாம் இன்னும் கோடம்பாக்கம் மற்றும் சினிமா என்ற அடிப்படையிலே பேசுகிறோம். அந்த வேலியை ஏற்கனவே சினிமா தாண்டிவிட்டது என நான் நினைக்கிறேன்.

வர்த்தககாரணங்களுக்காகவும்மற்றும்அமைப்புருவாக்கவசதிக்காகவும்நாம்அப்படிஅழைக்கிறோம். ஏற்கனவேஅதுசாதாரணமனிதனின்கையில்தான்உள்ளது...

யார்வேண்டுமானாலும்எழுத்தாளராகமற்றும்இயக்குநராக முடியும். கள் இறக்கல் குறித்தான விருது பெற்ற சந்தோஷ் சிவனின் திரைப்படம், நாம் மறந்த மிக முக்கியமான ஆவணப்படமாகும். சினிமாவின் முக்கிய அம்சத்தை நாம் மறந்துவிட்டோம். சினிமா புறக்கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டு வருகிறது. அது இப்போது அறிவியலுக்கு நிகரான ஒரு கலையாகும். அதனால் தான் அது வெற்றி பெரும். அது மேலும் மேலும் அறிவியல்பூர்வமாக மாறிக்கொண்டிருக்கிறது, அதை நாம் எளிமை படுத்த முயற்சிக்கிறோம், மற்றும் மேலும் மேலும் அதுப்போன்று செய்ய முயற்ச்சிக்கிறோம்.

திரைப்படம் எடுத்தல் என்பது இனி கடவுள் கொடுத்த வரம் என்று பார்க்கத் தேவையில்லை. நீங்கள்திரைப்படம்எடுக்கஆசைப்படலாம், அதற்கான பயிற்சியையும் பெறலாம். நீங்கள் மிக சிறந்த படங்களை எடுக்காமல் போகலாம். ஆனால் அது உங்களால் முடியாதது இல்லை. விசித்திரமான டி.என்.ஏ தான் ஒருவரை திரை கலைஞராக மாற்றுகிறது என்று சொல்வதை விட, திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் விருப்பமே திரை கலைஞராக மாற்றியது என்று சொல்ல வேண்டும். பந்தயம் மற்றும் இனப்பெருக்கம் மீது தீவிர உணர்ச்சிக்கொண்டு வாழ்க்கையையே அதில் கழிக்கும் போது, சினிமாவும் அது போன்று எடுக்க முடியும்.

ஸ்டுடியோ கலாச்சாரத்திலிருந்து வெளியேறி தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்கு 1970களின் நடுபகுதியில் பாரதி ராஜா, மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திராவால் ஆரம்பிக்கப்பட்டது. சினிமாவை மக்களுக்கு நெருக்கமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். இந்த போக்கு நின்றது அல்லது தடைப்பட்டது. ஏன்?

எப்போதும் அது போன்ற முயற்சிகளுக்கு தடங்கல் இருக்கும். இது வணிக தலையீடாகும். அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள், அது பெரிய நாடு, ஆனால் முழுவதும் வணிகமயமானதாகவே உள்ளது. போர்களும் வணிகத்திற்காகவே நடக்கிறது. அதே காரியம் அனைத்து துறையிலும் நடக்கிறது. நான் வணிக் சமூகத்தினை கேலி செய்ய முயற்சிக்கவில்லை. வர்த்தக சமூகம் இதை எளிமைப்படுத்த வேண்டும் என செயல்படுகிறது. மாதிரியை பிரதியெடுக்க அவர்களுக்கு ஒரு கடத்துப் பட்டை தேவைப்படுகிறது. ஆனால் சினிமா அதுவல்ல. அது அப்படி இருக்கவும் கூடாது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சகலகலா வல்லவன் மற்றும் முரட்டு காளை திரைப்படங்களினால் வந்த மாற்றம்.?

ஆம். எங்கும், அவர்கள் இதை நன்றாக உள்ளது என... ஏனெனில் உங்களுக்கு தெரியும், இதில் நான்கு பாடல்கள், ஐந்து சண்டைகள், கொஞ்சம் கதை உள்ளது. என்னிடம் ஸ்டுடியோ உள்ளது. நான் இதை கட்டியுள்ளேன். என்னிடம் 200 வீரர்கள் மற்றும் ஆடைகள் உள்ளது. அதை பயன்படுத்தி அதே போல் இன்னொரு படம் எடுக்கலாம். ஆதலால் அவர்கள் எந்த ஒரு புரட்சியிலும் பங்குவகிக்க முடியாது. அவர்கள்எப்போதுவேண்டுமானாலும்திரும்பிவருவார்கள். எனதுபரிசோதனை முயற்சி குறைந்தது, ஏனெனில் நான் அதில் முதலீடு செய்துள்ளேன். அது இனி மேல் வானம்பாடி அல்ல. களை எடுத்து சீரமைப்பதை சினிமா துறை இன்னும் செய்யவில்லை. அதனால் தான் சினிமா துறை பாதிக்கப்படுகிறது. இங்கு அரசாங்கம் தலையீடலாம். மிகவும் அபத்தமான விஷயம் என்னவெனில், 57 ஆண்டுகள் பழமையான சினிமாட்டோகிராபி சட்டம் எதிர்த்து சண்டை போடும் இந்த நேரத்தில் அரசு அதை கவனிக்க துவங்கியுள்ளது.

உங்கள் பதிப்பகத்துறை, புத்தகத்தின் ஒரு நகலை இக்காலகட்டத்திலும் அரசுக்கு அனுப்ப வேண்டும். என்ன ஒரு முட்டாள் தனம் இது. அரசாங்கம் பார்க்க வேண்டுமெனில், இணையத்தில் அதை பார்க்கலாம் அல்லவா. ஏன் மரங்களை வெட்ட வேண்டும்?. அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது.

தணிக்கை முறை..?

நாம் குழுந்தைகளுக்காக திரைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டோம், ஏனெனில் வணிக சமரசத்திற்க்காக அனைவருக்குமான படங்களையே உருவாக்குகிறோம். பெரியவர்களுக்கான கேளிக்கையை குழந்தைகள் படத்தில் கொடுக்கிறோம் மற்றும் குழுந்தைகளின் தர்க்கத்தை பெரியவர்களுக்கான படத்தில் இடம் பெறுகிறது.

இன்றை இணைய உலகில், ஆபாச எழுத்து/படம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும். இணைய தேடும் பொறிகள் மேலும் மேலும் சக்தி வாய்ந்ததானது, அதன் காரணம் அறிவியல் அல்ல, அதற்கு காரணம் சதை. அனைவரும் இரகசியமாக ஒன்றல்ல இராண்டு முறை தேடுகின்றனர். உலக மக்கள் தொகையின் கணக்கை பார்த்தால், இந்த எண்கள் மிக வேகமாக உயர்ந்து கொண்டே வரும் ஒன்று என புரியும். நிச்சயம் வேறு சில காரணிகளும் இதை செழுமைப்படுத்தியது. ஆனால் இதை தூண்டியது, சதையை பார்க்க வேண்டும் என்ற சாதாரண தேவை தான். இது மிக பழமையான தொழிலாகும், யாராலும் ஒழிக்க முடியாது. இது இப்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ளது. இன்னும் சட்டப்பூர்வ அங்கிகாரம் கிடைக்கவில்லை.

நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ஒரு குறிப்பிட்ட வயது குறைந்தவர்களுக்கு மது விற்க்கப்பட மாட்டாது என சொல்லுவது போல் பெரியவர்களுக்கான கேளிக்கை/பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். வயது வந்தோரை வயது வந்தோராக நடத்த வேண்டும். நான் காமம் குறித்து மட்டும் பேசவில்லை, அரசியல் குறித்தும் தான் பேசுகிறேன். அரசியல் சுதந்திரம் இங்கு இருக்க வேண்டும். பெரியார் காலத்தில் இருந்த சுதந்திரம் கமல் ஹாசனுக்கு இல்லை. நீங்கள் தைரியமானவராக இருந்தாலும், உங்களுக்கு சுதந்திரம் இல்லை. ஏன், வீரமணி அவர்களுக்கு கூட அது இல்லை.

நமது எல்லைகளை மிக இறுக்குமாக வைத்துள்ளோம். ஏனெனில் அனைவருக்கும் உரிமை/குரல் இருக்கிறது என நினைத்து அனைவரும் எந்த காரணத்துக்காக இருந்தாலும் குரல் கொடுக்கலாம் என்ற நிலையே உள்ளது. வாய்ப்பூட்டு போட்டவர்களாக நாம் இருக்கிறோம். என் திரைப்படம் தெனாலியின் போக்கு, இலங்கை தமிழர்களின் துயரங்களை குறித்தது. நுட்பமான முறையில் நான் இதை எடுத்தேன். மெட்ராஸ் கபே ஒரு சாராரின் கதையை காட்டியது. நான், இலங்கை தமிழர் பிரச்சனையின் மற்றொரு சாரரின் நிலையை படமாக எடுக்க முயன்றால், என்னை எடுக்க விடமாட்டார்கள். அந்த விஷயத்தில், இலங்கை பிரச்சனை சார்ந்து எந்த படத்தையும் இங்கு எடுக்க இயலாது. இங்கு, கருத்து சுதந்திரம் இல்லை. எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் பெரியார் அனுபவித்த கருத்து சுதந்திரம், திரைப்பட கலைஞனான எனக்கு இங்கு இல்லை.

சகிப்புதன்மையின்மை ...?

ஆம். சகிப்புதன்மையின்மை. கலாச்சார பழக்கம்.

சமூக ஊடங்களிலும், இந்த சகிப்புதன்மையின்மை தெளிவாக தெரிகிறது. மக்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றனர்.?

யாரோ ஒருவருடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவர் தவறு என நிரூபிக்கவும். யாரோ ஒருவரை தவறு என நிரூபிக்க, ஒரு உயிரை எடுக்க வேண்டாம். பகுத்தறிவாளர் நரேந்திர தப்போலகர் போன்ற மனிதரின் கொலை இந்தியாவின் மிக பெரிய அவமானாகும்.

இந்தகுழப்பம்மற்றும்ஒழங்கற்றநிலைமத்தியில், தமிழ் நாடு தப்பித்தது என்று மிகவும் பெருமைப்படுகிறேன். வடக்கு பாதித்தது.

பெரியார் போன்றவர்களால் உருவாக்கிய பாரம்பரியமே அதற்கு காரணாம். சுயமரியாதை இயக்கம்.?

அதன் தயாரிப்பே நான். நான் எங்கே பிறந்தேன்? நான் பிறந்தது முதல் என் காதுகளில் சுப்ரபாரதம் ஒலித்துக் கொண்டே இருந்தது. எனது பத்து வயது வரை தினமும் இரண்டு மணி நேரம் பிரார்த்தனை செய்வேன். எனது சகோதரர், மாமா மற்றும் தந்தை என மூவரின் மேலும் பெரியார் செய்த தாக்கமே காரணம். அவர்கள் அவரை திட்டுவார்கள், விமரிசிப்பாகள், ஆனால் அவரது ஞானத்தை கண்டு அகமகிழ்வார்கள். எதிர் மூகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். நான் எதிர் மூகாமிலிருந்து வந்தவன். நான்வேறுவிதமாகஎன்னைஎப்போதும்காட்டிக்கொண்டதில்லை. அதுபோன்றஒருவாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறேன். என் சினிமா பெரியார் கருத்தியல் சார்ந்து தொடர்ந்து பேசும்.

பிராச்சாரத்திற்காக மக்கள் இந்த ஊடகத்தை பயன்படுத்த, நான் எனது நம்பிக்கையை வெளிப்படுத்த பயன்படுத்த முடியும். ஆனால்நான்யாரையும்மாற்றவிரும்பவில்லை.

பிரபலமான உங்களது தசாவதாரம் திரைப்பட வசனம், "கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை. கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே நான் சொல்லுகிறேன்" மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வணிகமயமான இந்த காலக்கட்டத்தில், எந்த அளவிற்கு உங்களால் இதை செய்ய முடிகிறது.?

தப்போலகரின் கொலை, நம்பிக்கை இழக்க செய்யலாம். ஆனால் மாற்றுக்கருத்து பேசுவதை அது என்னை தடுக்க இயலாது, தமிழ்நாட்டிற்கு நன்றி, அந்த உண்மைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கு பல விஷயங்கள் தவறாக உள்ளன, அடையார் மற்றும் கூவம் நதி உட்பட. பல விஷயங்களை இன்னும் நாம் சரி செய்யவில்லை.

நான் அற்புதங்களை நம்புபவனில்லை. ஆனால் மாயாஜாலத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஏனெனில் நீங்கள் ஏதாவது ஒன்றை பார்க்க மறக்கும் போது அந்த மாயம் நடைப்பெறும். அதுவே சினிமா. ஃபிரேம்களுக்கு இடையே நீங்கள் பார்பதே அது... மங்கலானவற்றை நீங்கள் பார்க்க முடியாது. அந்தமந்திரமேசினிமாவைஉருவாக்குகிறது.

சிந்திக்க தவறும் போதே அற்புதங்கள் நிகழும். யார் வேண்டுமானாலும் மாயாஜாலம் உருவாக்க முடியும். பகுத்தறிவு சிந்தனையாளர்களை எனக்கு பிடிக்கும், ஏனெனில் அவர்கள் மற்றவர்களை மாற்றமாட்டார்கள். கல்வியென்ற மிக நிதானமான செயல்முறையின் வழியே மாற்றம் நிகழ வேண்டும்.

ஆனால் இனவாத கருத்துக்களை எளிதாக பரப்ப முடிக்கிறது, ஏனெனில் புராணம் மற்றும் வரலாற்றுக்கு இடையேயான வேறுபாட்டை அவர்கள் மறைக்கிறார்கள்.?

நம் வரலாறு என்ன?, இராமாயணமா அல்லது எழுதப்பட்ட ஒன்றா? என்பதே பிரச்சனை. இராமாயணம் என்பது புராணக்கதை. எல்லாம் கலந்துவிட்டது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டி காட்டி, இங்கு தான் இராமன் நின்றான் என்பார்கள். இராமனின் பெரிய கால்தடங்களையும் காட்டுவார்கள். சிறவனாக கன்னியாகுமரி சென்ற போது, பெரிய ஜோடி கால்தடங்களை காட்டினார்கள். நான் அப்போது பக்தி மார்க்கத்தில் இருந்தேன். இது இராமனின் கால் தடம் என அவர்கள் சொன்னார்கள். அது மிக பெரியதாக இருந்தது, இது இராமனா அலல்து இராட்சசனா என்று அவர்களை கேட்டேன். பகுத்தறிவின் வழி எனக்கு அங்கே தான் துவங்கியது.

அன்பே சிவம் குறித்து, முற்றிலும் வேறுபட்ட தளத்தில் இருந்த்தது. தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான திரைப்படம்.?

மக்கள் என்னை மறைவிட கம்யூனிஸ்ட் என நினைக்கிறார்கள். சமூக தீமைகளுக்கு முதலாளித்துவம், சோசலிசம் அல்லது பகுத்தறிவு என எந்த கோட்பாடோ கொள்கையோ முழுமையான பதில் கிடையாது. அனைத்திலும் பணி நடந்துக்கொண்டே இருக்கும். கார்ல் சாகன் கூற்று படி, மனித மூலையானது தொடர்ந்து பணி நடந்துக்கொண்டிருக்கும் ஒன்றாகும். பரிணாம செயல்பாட்டில் நாம் இன்னும் தூரம் செல்ல வேண்டும். நமது மூளை பகுதியில் நாம் முழுமையாக இன்னும் பரிணமிக்கவில்லை. மக்களுக்குஅதிர்ச்சிதரும் வித்த்தில் நான் ஏதாவது சொல்ல முடியும். ஸ்பார்ட்டாகஸ் வெற்றி பெற்றிருந்தால், திரு.கிறிஸ்து மற்றும் திரு.மார்க்ஸ் தேவையற்றவர்களாக இருப்பார்கள். அவரது புரட்சி வெற்றி பெற்றிருந்தால், உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையே மாறியிருக்கும். மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதியிருப்பார், ஆனால் அது வேறு புத்தகமாக இருந்திருக்கும். கிறிஸ்து, முன்பு போல் மனிதராகவே இருந்திருப்பார். ஆனால் அவர் வேறு விஷயங்களை பேசியிருப்பார், ஏனெனில் வேறுவிதமான அநியாயங்கள் சமூகத்தில் நிகழ்ந்திருக்க கூடும்.

தலையீடு தேவையில்லை என்ற நிலைக்கு நாம் விடுவித்து இருப்போம். வேறொரு தலையீடு தேவைப்பட்டிருக்கும்.

உங்கள் படங்களில் எப்போதும் நகைச்சுவை கீற்று இருந்தாலும், முழு நீல நகைச்சுவை படங்களில் நடித்தது ஒரு ஆச்சரியமூட்டும் மாற்றமாகும்.?

பலவீனமானவர்கள் மற்றும் கவலையுற்றவர்கள் நகைச்சுவையாளர்களாகிறார்கள். நகைச்சுவைக்கு வர்த்தக மதிப்பு அதிகம் உள்ளது என நான் நம்புகிறேன். நகைச்சுவையாளர்கள் அரங்கு கோமாளி போன்றவர்கள், சிரிக்கவும் மற்றும் சிந்திக்கவும் வைப்பார்கள்.

பெரியார்மற்றும்காந்தியிடம்நகைச்சுவையின் ஆன்மாவை நான் கண்டேன்.

தவிர்க்க இயலாத கேள்வி : நீங்களும் ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பதில்லை என ஏன் முடிவெடுத்தீர்கள்? நீஙகள் இருவரும் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றவை.?

செயல்படுவதில் இருவருக்கும் சொந்த வழிகள் இருந்தன. இது வணிகம் சார்ந்த விஷயம் மட்டுமே. ஒருவர் சம்பளத்தை இருவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர். ஒரு நூறு ரூபாய் தாளை இரண்டாக கிழித்து எங்களுக்கு சம்பளம் தருவது போன்றது அது.

நவீன தமிழ் இலக்கியத்தில் திரைப்படத்திற்கான பல வளங்கள் உள்ளது. திரைப்படங்களில் பெரியளவில் ஏன் அவற்றை பயன்படுத்தபடவில்லை.?

திரைப்படம் தயாரித்தல் தமிழ் சினிமா துறையில் முறையற்றதாக இருக்கிறது. கேரள சினிமா இலக்கியத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. நாவல்களில் இருந்து தழுவிய படங்கள் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஹாலிவுட்டின் மங்கலான பிரதிபலிப்பே இங்கு உள்ளது. பிரதிபலிப்பார்கள், பின்பு தொடர்ந்து கடைந்தெடுப்பார்கள். நாம் எவ்வளவு அசலானவர்கள் என அது காட்டுகிறது. பலர் கமல் நகல் எடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். பல சிறந்த திரைப்படங்கள் அசலானவை அல்ல. எது அசலானவை. நாம் வெளியிலிருந்து மக்களை கொண்டு வர வேண்டும். நான் ஏன் சிறந்த எழுத்தாளர்களை கொண்டாடுகிறேன்.? தமிழ் சினிமாவும் அந்த தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கெடுக்க வேண்டும்.

சுஜாதாவிடன் பேசி தமிழ் சினிமாவில் அவரை கொண்டுவந்ததில் எனக்கு ஒரு பங்கு உண்டு. பாலகுமாரனை நாங்கள் கொண்டுவந்தோம். தமிழர்கள் தமிழ் நாவலகளை படிக்க வேண்டும். தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கட்டாயம் தமிழ் மற்றும் அதன் இலக்கியங்களை படிக்க வேண்டும். பாரதி ராஜா ஒரு ஊடகத்தின் மூலம் வந்தார், அதை புரிந்துக்கொண்டு அதன் உள் சென்றார். உங்களுக்கு சரியான கல்வி வேண்டும். கே.பாலசந்தர் போன்றவர் என்றும் படிப்பதை நிறுத்தியதில்லை.

சினிமா என்பது பல்துறை சார்ந்த ஊடகம், இதற்கு வரையரை விதிக்க முடியாது. இது மிக அதிகமாக பல்துறை சார்ந்து இருக்கிறது. அறிவியல், சர்க்கஸ், இதழியல் என அனைத்து பொருட்களையும் கொண்டது. சினிமா, நூறு வருடங்கள் தொடர்ந்து வரும் ஒரு தலையங்கம் போன்றது.
திரைப்படத்துறையில் மாற்றத்தை எப்படி கொண்டு வர இயலும்.?

வெளிப்படைத் தன்மையே மாற்றத்தைக் கொண்டு வரும்.

நாம் எங்கு துவங்க வேண்டும்?

எனக்கு வரி பாக்கி ஏதுமில்லை. நான் கருப்பு பணத்தை தொட மாட்டேன். நாங்கள் பரிணமிக்க சில காலம் எடுத்தது. நமது வரியை நாம் செலுத்த வேண்டும்.

சினிமாவை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைப்பதில் உங்கள் பார்வை என்ன?

தொழில் நுட்பம் மட்டும் அதை செழுமைப் படுத்தாது. திரைப்பட கல்லூரிகள் தொடங்க மக்களிடம் நாம் பேசி வருகிறோம். அவசர கல்வி பயனற்றது. சினிமாவிற்கும் அது பொருந்தும். பாலு மகேந்திரா இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். அவர் புனே திரைப்பட கல்லூரியில் பயின்றவர். சினிமா கலைஞன் ஒரு சினிமா கல்லூரியை திறக்க வேண்டும். நான் ஏ.வி.எம் நிறுவனத்திடமும் இது குறித்து கூறியிருக்கிறேன். பொழுதுபோக்குதுறைமுன்னேறுகிறதுஎனமக்கள்மெதுவாகநம்பதுவங்கினார்கள். நாம்100 ஆண்டுகள் கடந்துவிட்டோம். குகை வாழ்க்கை அருமையாக இருந்தது. நாம் வேகமாக முன்னேறி செல்வதற்கு இதுவே சரியான நேரமாகும்.

உங்கள் அரசியல் என்ன? இரசிகர் மன்றங்களின் பின்னனியிலேயே இந்த கேள்வி, சில சந்தர்ப்பங்களில் நடிகர்களின் அரசியல் ஆசையை பூர்த்தி செய்ய முக்கிய பங்காக இரசிகர் மன்றங்கள் இருந்தது.

நான் அரசியல் தன்மை கொண்டவனா என்பது எப்போதும் கேட்க்கப்படும் ஒரு நிலையான கேள்வி. நான் சமூக தன்மை கொண்டவன் என்பதே அதற்கு என் பதில். அதனால் தான் என் இரசிகர் மன்றங்கள் சமூக சேவை நிறுவனங்களாக மாற்றப்பட்டது. விசித்திரமானகட்டமைப்புகொண்டதுஅது. நான்தலைவன், என் இரசிகர்கள் என் வழிகாட்டுதலின் படி வேலை செய்வார்கள். குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் பேரில் நாங்கள் செயல்படுகிறோம்.

தோராயமாக கணக்கிட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில், நாங்கள் சமூக சேவைக்காக 20 கோடிகள் செலவு செய்துள்ளோம். அர்ப்பணிப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட கண்களை தானம் செய்ய பதிவு செய்துள்ளோம், நாங்கள் இறந்த பிறகு, எங்கள் கண்கள் தகுதியானவர்களுக்கு பொருத்த படும். எனது உடலை அறிவியலுக்கு தானமாக கொடுக்க பதிவு செய்திருக்கிறேன், என்னை பின்பற்றி பலர் அதை செய்தனர்.

பிரச்சனையில் உள்ள கிராமப்புற இரத்த வங்கிகளின் குறைநிரப்ப நாங்கள் பணி செய்கிறோம். 35,000 மேற்ப்பட்ட இரத்தம் கொடையாளர்கள் எங்களிடம் உண்டு. பெரு நகரங்களினுள் சுருக்கி கொள்ளாமல், கிராமபுற பகுதிகளுக்கு இரத்த தான நிகழ்வுகளை விரிவாக்கம் செய்துள்ளோம், அங்கு தான் அதிக தேவை உள்ளது. முப்பதி மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது இந்த இரத்த தான நிகழ்வு, இதில் நாங்கள் முன்னோடியாக இருப்பதாக தெரிகிறது.
ப்ரண்ட்லைன் (Frontline), இந்திய சினிமா நூற்றாண்டு சிறப்பிதழில் வெளிவந்த சில கட்டுரைகள், இந்த இதழிலும், அடுத்த இதழிலும் தமிழில் மொழியாக்கம் செய்து பேசாமொழியில் வெளியிடவிருக்கிறோம். இதற்கான அனுமதியை வழங்கிய ப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியர் திரு. விஜயஷங்கர் அவர்களுக்கும், ப்ரண்ட் லைன் நிர்வாகத்திற்கும் பேசாமொழி தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி: ப்ரண்ட்லைன்(Frontline)