யோஜிம்போ- மெய்காப்பாளன்

-அகிலன் லோகநாதன்

பல ஆண்டுகளாக சாமுராய்களாக வாழ்ந்து திருடர்களாகவும் பழிவாங்கும் ரொனின்களாகவும் மாற்றப்பட்டவர்களில் ஒருவனே யோஜிம்போ. நாடோடியாக பயணிக்கும் சஞ்சிரோ தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு செல்லும் வழியை ஒரு குச்சியை காற்றில் வீசிஎறிந்து அது சுட்டிக்காட்டும் திசையில் பயணிக்கிறான். குரோசாவாவின் இத்திரைப்படம் டாஷியல் ஹாமெட்டின் "ரெட் ஹார்வெஸ்ட்" குற்ற நாவலின் தழுவல் என்று கூறப்படுகிறது , இத்திரைப்படத்தின் பாதிப்பில் உலகம் முழுவதும் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பிட தகுந்தது செர்ஜியோ லியோனின் " A Fistfull of dollars" ஆகும். 

Akira Kurosawa on the set of Yojimbo (1961) : r/Moviesinthemaking

சாமுராய்கள் இராணுவத் திறன்கள் மற்றும் ஸ்டோயிசத்தில் ஆழ்ந்த பயிற்சியும் , ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் முந்தைய கட்டுபாடுகளிலிருந்து அமைதியான ஒரு ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கியது . இலட்சிய சாமுராய் எழுதப்படாத நடத்தை நெறிமுறையைப் பின்பற்றிய போர் வீரனாக இருக்க வேண்டும். பல சாமுராய்களும் ஜென் பௌத்தத்தின் போதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஈர்க்கப்பட்டனர் . அந்த சமயத்தில் அவர்களுடைய வரலாற்று வாசிப்பில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

டோகுகாவா காலத்தின் முடிவில் பெருகிவரும் சாமுராய் குடும்பங்கள் வறுமையை அனுபவித்தன. அரசின் முதல் நிலை உதவித்தொகையில் வாழ்ந்த சாமுராய்களின் பொருளாதார நிலை அரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.1871 இல் நிலப்பிரபுத்துவம் அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டபோது சாமுராய் வர்க்கம் அதன் சிறப்புரிமை நிலையை இழந்தது
சாமுராய் வில் மற்றும் அம்புகள், ஈட்டிகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற பல ஆயுதங்களைப் பயன்படுத்தினார், ஆனால் அவர்களின் முக்கிய ஆயுதம் மற்றும் சின்னம் வாள். இறுதியில் ஜப்பானின் நிலப்பிரபுத்துவ சகாப்தம் 1868 களில் முடிவுக்கு வந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு சாமுராய் வர்க்கம் ஒழிக்கப்பட்டது.மாஸ்டர்லெஸ் சாமுராய்கள் ரோனின் என்று அழைக்கப்பட்டனர். 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி மக்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்

சாமுராய் என்ற வார்த்தையை தோராயமாக "சேவை செய்பவர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். ஒரு சாமுராய் தனது எஜமானரின் மரணம் அல்லது வீழ்ச்சி அல்லது அவரது எஜமானரின் ஆதரவை இழந்துவிடுதல் ஆகியவற்றால் மாஸ்டர்-லெஸ் ஆக மாறி விடுகிறான். தன்னுடைய எஜமானரின் இழப்பிற்கு பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்களே 47 ரோனின்கள்.

ரோனின் என்று அறியப்படாத எந்த சாமுராய்களும் சக சாமுராய் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தால் இழிவாக பார்க்கப்பட்டனர். சில ரோனின்கள் வாடகைக்கு அல்லது மெய்க்காப்பாளர்களுக்கான வாள்களாக மாறினர் மற்றும் குற்றவியல் வாழ்க்கையில் இறங்கினர், பலர் கொள்ளைக்காரர்களாக அல்லது மோசமான கும்பல்களில் சேர்ந்தனர். ரோனின் என்ற வார்த்தையின் அர்த்தம் "அலைகின்ற மனிதன்" என்பதாகும். எனவே அவர்கள் அலைந்து திரிபவர்கள் என குறிப்பிடலாம். இந்தச் சொல் அந்த சமயத்தில் மிக இழிவாக பார்க்கப்பட்டது.

புஷிடோ என்பது ஜப்பானின் போர்வீரர் வகுப்புகளுக்கான நடத்தை நெறிமுறையாக இருந்தது. அதாவது போர்வீரர்களின் வழிமுறை நெறி எனப்பட்டது. சாமுராய் குறியீட்டின்படி, அவரது பிரபு தோற்கடிக்கப்பட்டாலோ அல்லது போரில் கொல்லப்பட்டாலோ, சாமுராய் தன்னைக் கொன்றுவிட வேண்டும் . ஒரு சாமுராய் தனது மரியாதையை இப்படித்தான் பாதுகாத்தார். பழிவாங்கும் கொலைகள் மற்றும் பழிவாங்கல்களைத் தவிர்ப்பதற்கும், சுதந்திரமான போர்வீரர்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதற்கும் இது சமூகத்தின் தேவைக்கு சேவை செய்தது.பாரம்பரியத்தை முறியடித்து, தொடர்ந்து வாழ்வதைத் தேர்ந்தெடுத்த அந்த திறமையற்ற சாமுராய்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகினர்காட்டுகிறது. மிகவும் மரியாதைக்குரிய ரோனின் ஒரு மெய்க்காப்பாளராக அல்லது பணக்கார வர்த்தகர்கள் அல்லது வணிகர்களுக்கு ஒரு கூலிப்படையாக பணியாற்றலாம். 

பல ஆண்டுகளாக சாமுராய்களாக வாழ்ந்து திருடர்களாகவும் பழிவாங்கும் ரொனின்களாகவும் மாற்றப்பட்டவர்களில் ஒருவனே யோஜிம்போ.

Yojimbo (1961) directed by Akira Kurosawa • Reviews, film + cast •  Letterboxd

 நாடோடியாக பயணிக்கும் சஞ்சிரோ தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு செல்லும் வழியை ஒரு குச்சியை காற்றில் வீசிஎறிந்து அது சுட்டிக்காட்டும் திசையில் பயணிக்கிறான். குரோசாவாவின் இத்திரைப்படம் டாஷியல் ஹாமெட்டின் ரெட் ஹார்வெஸ்ட் நாவலின் தழுவல் என்று கூறப்படுகிறது , 

சாமுராய்கள் இராணுவத் திறன்கள் மற்றும் ஸ்டோயிசத்தில் ஆழ்ந்த பயிற்சியும் , ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் முந்தைய கட்டுபாடுகளிலிருந்து அமைதியான ஒரு ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கியது . இலட்சிய சாமுராய் எழுதப்படாத நடத்தை நெறிமுறையைப் பின்பற்றிய போர் வீரனாக இருக்க வேண்டும். பல சாமுராய்களும் ஜென் பௌத்தத்தின் போதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஈர்க்கப்பட்டனர் .

டோகுகாவா காலத்தின் முடிவில் பெருகிவரும் சாமுராய் குடும்பங்கள் வறுமையை அனுபவித்தன. அரசின் முதல் நிலை உதவித்தொகையில் வாழ்ந்த சாமுராய்களின் பொருளாதார நிலை அரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.1871 இல் நிலப்பிரபுத்துவம் அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டபோது சாமுராய் வர்க்கம் அதன் சிறப்புரிமை நிலையை இழந்தது
சாமுராய் வில் மற்றும் அம்புகள், ஈட்டிகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற பல ஆயுதங்களைப் பயன்படுத்தினார், ஆனால் அவர்களின் முக்கிய ஆயுதம் மற்றும் சின்னம் வாள். இறுதியில் ஜப்பானின் நிலப்பிரபுத்துவ சகாப்தம் 1868 களில் முடிவுக்கு வந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு சாமுராய் வர்க்கம் ஒழிக்கப்பட்டது.மாஸ்டர்லெஸ் சாமுராய்கள் ரோனின் என்று அழைக்கப்பட்டனர். 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி மக்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்

சாமுராய் என்ற வார்த்தையை தோராயமாக "சேவை செய்பவர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். ஒரு சாமுராய் தனது எஜமானரின் மரணம் அல்லது வீழ்ச்சி அல்லது அவரது எஜமானரின் ஆதரவை இழந்துவிடுதல் ஆகியவற்றால் மாஸ்டர்-லெஸ் ஆக மாறி விடுகிறான். தன்னுடைய எஜமானரின் இழப்பிற்கு பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்களே 47 ரோனின்கள்.

ரோனின் என்று அறியப்படாத எந்த சாமுராய்களும் சக சாமுராய் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தால் இழிவாக பார்க்கப்பட்டனர். சில ரோனின்கள் வாடகைக்கு அல்லது மெய்க்காப்பாளர்களுக்கான வாள்களாக மாறினர் மற்றும் குற்றவியல் வாழ்க்கையில் இறங்கினர், பலர் கொள்ளைக்காரர்களாக அல்லது மோசமான கும்பல்களில் சேர்ந்தனர். ரோனின் என்ற வார்த்தையின் அர்த்தம் "அலைகின்ற மனிதன்" என்பதாகும். எனவே அவர்கள் அலைந்து திரிபவர்கள் என குறிப்பிடலாம். இந்தச் சொல் அந்த சமயத்தில் மிக இழிவாக பார்க்கப்பட்டது.

The Life of Akira Kurosawa - Part 7: New production company and the end of  an era (1959–1965) • Akira Kurosawa Information

புஷிடோ என்பது ஜப்பானின் போர்வீரர் வகுப்புகளுக்கான நடத்தை நெறிமுறையாக இருந்தது. அதாவது போர்வீரர்களின் வழிமுறை நெறி எனப்பட்டது. சாமுராய் குறியீட்டின்படி, அவரது பிரபு தோற்கடிக்கப்பட்டாலோ அல்லது போரில் கொல்லப்பட்டாலோ, சாமுராய் தன்னைக் கொன்றுவிட வேண்டும் . ஒரு சாமுராய் தனது மரியாதையை இப்படித்தான் பாதுகாத்தார். பழிவாங்கும் கொலைகள் மற்றும் பழிவாங்கல்களைத் தவிர்ப்பதற்கும், சுதந்திரமான போர்வீரர்களை புழக்கத்தில் இருந்து அகற்றுவதற்கும் இது சமூகத்தின் தேவைக்கு சேவை செய்தது.பாரம்பரியத்தை முறியடித்து, தொடர்ந்து வாழ்வதைத் தேர்ந்தெடுத்த அவர்கள் திறமையற்ற சாமுராய்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகினர். மிகவும் மரியாதைக்குரிய ரோனின் ஒரு மெய்க்காப்பாளராக அல்லது பணக்கார வர்த்தகர்கள் அல்லது வணிகர்களுக்கு ஒரு கூலிப்படையாக பணியாற்றலாம். 

சஞ்சிரோவின் தனித்துவமான உடல்மொழி அதன் பிண்ணனி இசை மற்றும் வாள் சுழற்றும் முறை ஆகியவை இத்திரைப்படத்தில் குறிப்பிடத்தக்கது. அவனுடைய உடல்மொழி தான் எப்படி பட்டவன் என்பதையும் அவனுடைய மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. சஞ்சுரோ ஊருக்குள் நுழையும் பொழுது ஒரு தந்தையும் மகனும் சண்டையிடுவதை காண்கிறான். அவனுடைய தந்தை விவசாயத்திற்கு அழைப்பதும் அவன் சூதாட்ட கும்பலுடன் இருக்க போவதாக கூறுகிறான். சூதாட்டத்தின் முலம் தொழில் செய்யும் உஷிடோராவிற்கும், விருப்பமில்லாத பெண்களை கொண்டு விபச்சார தொழில் நடத்தும் சீபே விற்கும் இடையில் இருக்கும் தொழில் போட்டியே இவ்வூரை சீரழிக்கிறது என்பதை சஞ்சிரோ உணர்கிறான். 

சஞ்சிரோ ஊருக்குள் வந்த பிறகு அவ்வூரை பற்றி அறிய விரும்புகிறான். அப்போது ஒருவனுடைய வெட்டப்பட்ட கையை கவ்வியபடி ஒரு நாய் ஓடி வருகிறது. இந்த இடத்தில் நாயினுடைய பிண்ணனி இசையை குறைத்து சஞ்சுரோவின் முகபாவனை மூலம் அதன் தீவிரத்தையும் அதன் பாதிப்பையும் சஞ்சுரோ உணர்வதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது

உணவு விடுதிக்கு செல்லும்போது அங்குள்ள வயதான முதியவர் கோஞ்சி உஷிடோரா மற்றும் சீபேவின் ஆட்களை பற்றியும் அவர்களுடையேயான பிரச்சனைகளையும் விரிவாக கூறுகிறான். இந்த நகரம் அமைதியுற வேண்டுமானால் இவர்களை அழிக்க வேண்டுமென முடிவெடுக்கிறான். ஆனால் அதை தனியாக செய்ய இயலுமா? என்று கோஞ்சி கேட்கிறான். அது முடியாது. நான் மட்டும் தனியாக செய்ய போவதில்லை என்று புதிய உத்திகளை சிந்திக்கிறான். 

சஞ்சிரோ பயன்படுத்தும் யுக்திகள் மிக முக்கியமானவை. இருவரையும் அழிக்க வேண்டுமானால் ஒருவரை ஒருவர் சண்டையிட செய்ய வேண்டும். இறுதியில் யார் மீதமிருக்கிளார்களோ அவர்களை தனித்தனியாக பிரித்து அழிக்க வேண்டும் என்ற உத்தியை பயன்படுத்துகிறான். ஆனால் தான் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். 

.சஞ்சிரோவை கேலி செய்த உஷிடோராவின் ஆட்களில் மூன்று பேரை மிக எளிதாக வீழ்த்துகிறான். தன்னுடைய போர் திறன் மூலம் சீபேவினுடைய குழுவில் தன்னை இணைத்துக் கொள்ள இயலும் என்ற திட்டத்தை பயன்படுத்துகிறான். சீபேவினுடைய குழுவின் தன்னை கொல்லும் திட்டத்தை சஞ்சுரோ அறிகிறான். தன்னையும் கொன்று தனக்கு வழங்கப்பட்ட பணத்தையும் எடுத்துக் கொள்வது தான் சீபேவின் திட்டம். 

ஆனால், சண்டை யானது ஆரம்பிக்கிற நிலையில் சஞ்சிரோ தனக்கு இதில் விருப்பமில்லை என விலகுகிறான். இதில் சஞ்சுரோ யார் பக்கமாவும் நின்று யாரையும் எதிர்க்க விரும்பவில்லை. மாறாக தன் விருப்பத்தின் பேரில் விலகி அவர்களின் பதற்றத்தையும் பயத்தையும் பின்வாங்கி ஓடும் கோழைத்தனத்தையும் கண்டு மகிழ்கிறான். இருவரும் மாறி மாறி சண்டையிட வேண்டுமென விரும்புகிறான். 

On the set of Sanjuro (Akira Kurosawa, 1962) | Japanese film, Toshiro  mifune, Akira film

அவ்வூரின் அப்பாவி விவசாயியின் மனைவி மற்றும் குழந்தை உஷிடோராவின் கட்டுபாட்டில் இருப்பதை கண்டு உஷிடோராவை ஏமாற்றி அவனுடைய ஆட்கள் ஆறுபேரை கொல்கிறான். ஆனால் அக்குடும்பம் காட்டும் பரிதாபமான நன்றியை சஞ்சுரோ ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

உஷிடோராவின் குழுவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு துப்பாக்கியுடன் யுனசுகி வருகிறான். விவசாயி குடும்பத்தை தப்பிக்க வைத்த உண்மையை அறிந்த உஷிடோரா யுனசுகி மூலம் அவனை அடித்து துன்புறுத்துகிறான். சஞ்சுரோ தற்காப்பிற்காக சண்டையிடாததை படம் முழுவதும் காணலாம். உணவு விடுதி முதியவர் கோஞ்சியின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து செல்கிறான். நகைச்சுவை கதாபாத்திரங்களுடன் கட்டமைக்கிறான். 

குரோசாவினுடைய படங்களில் மறுபிறப்பை பற்றியும் பேய்களை பற்றிய காட்சிகளை காண இயலும். காப்பாற்றி சுடு காட்டிற்கு வந்தபிறகு இரத்தம் வழியும் முகத்தோடு எழுந்து நிற்கிறான், நீ பார்ப்பதற்கு உண்மையான பேயை போலவே இருக்கிறாய் என்கிறான் கோஞ்சி. உடனே சஞ்சுரோ பிணம் போல கீழே சாய்கிறான். சுடுகாட்டில் விழுந்து மறுவாழ்வு கிடைத்து குணமடைகிறான் சஞ்சுரோ. கிட்டதட்ட மறுபிறவியை அல்லது ஒரு ரோனின் இறப்பின் மீதான வாழ்வின் நிச்சயமற்ற தன்மையாகவும் இதை குறிப்பிடலாம். 

சஞ்சிரோவை தப்பிக்க வைத்ததற்காக கோஞ்சியை பிடிக்கின்றனர். யுனசுகியை வீழ்த்துவதற்கு கைவாளை காற்றில் அலைந்து கொண்டிருக்கும் இலையின் மீது எறிந்து பயிற்சி செய்கிறான். யுனசுகி தன் நம்பிக்கை முழுவதும் துப்பாக்கியின் மீதே கொண்டிருக்கிறான். சஞ்சிரோவின் ஒரு கை எப்பொழுதும் அவனுடைய வாளினை பிடித்த படியே இருக்கும். இருகைகளும் உடைக்குள் இருப்பது அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையை வெளிப்படாத வண்ணமாக கருதலாம். 

படம் முழுக்கவே நேர்த்தியான ஓவியம் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 
கோஞ்சியினை காப்பற்ற வரும் சஞ்சிரோவின் இறுதிக் காட்சி அமைதி மற்றும் அழகியல் சிறப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிண்ணனி யில் வீசும் கடுமையான காற்று அக்கட்சியில் சஞ்சிரோவின் தீவிரத்தன்மையை காட்டுகிறது. 

Distracted Film on Twitter | Japanese film, Akira film, Akira Yojimbo (1961) - IMDb

இவ்வூரின் கலாச்சார தன்மையை பல்வேறு மனிதர்களின் வழியாகவும் அவர்களின் உடைகளின் வழியாகவும் காணமுடிகிறது. சவப்பெட்டி செய்யும் தொழிலாளி, சண்டைகளின் நேரத்தை ஊருக்கு அறிவிப்பவன் மற்றும் போதுமான போர் திறன் இருந்தும் ரோனின்கள் அம் மக்களால் அங்கீகரிக்கப்படாமல் அவமதிக்கபட்டு போதுமான வாழ்வாதாரம் கிடைக்காமல் இருந்து பாதிப்படையும் சீபேவின் ஆள் என பல பதிவுகளை காணலாம். 
இறுதியில் இந்த நகரம் இனி அமைதியாக இருக்கும் என்று கூறி அங்கிருந்து விடை பெறுகிறான். ரோனின்கள் நிலையான இடத்தை விரும்பாததும் நாடோடிகளாக இருப்பதும் காணமுடிகிறது. சஞ்சிரோ வேறொரு இடத்தை எவ்வாறு அணுகுவான் என்பது தெரியாது. அகிரா குரோசாவாவின் இயக்கம், கசுவா மியாகோவின் ஒளிப்பதிவு மற்றும் மாசரு சாடோவின் இசை நேர்த்தியான சாமுராயின் வாழ்க்கையை காண செய்திருக்கிறது. 

சஞ்சிரோவின் தனித்துவமான உடல்மொழி அதன் பிண்ணனி இசை மற்றும் வாள் சுழற்றும் முறை ஆகியவை இத்திரைப்படத்தில் குறிப்பிடத்தக்கது. அவனுடைய உடல்மொழி தான் எப்படி பட்டவன் என்பதையும் அவனுடைய மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. சஞ்சுரோ ஊருக்குள் நுழையும் பொழுது ஒரு தந்தையும் மகனும் சண்டையிடுவதை காண்கிறான். அவனுடைய தந்தை விவசாயத்திற்கு அழைப்பதும் அவன் சூதாட்ட கும்பலுடன் இருக்க போவதாக கூறுகிறான். சூதாட்டத்தின் முலம் தொழில் செய்யும் உஷிடோராவிற்கும், விருப்பமில்லாத பெண்களை கொண்டு விபச்சார தொழில் நடத்தும் சீபே விற்கும் இடையில் இருக்கும் தொழில் போட்டியே இவ்வூரை சீரழிக்கிறது என்பதை சஞ்சிரோ உணர்கிறான். 

உணவு விடுதிக்கு செல்லும்போது அங்குள்ள வயதான முதியவர் கோஞ்சி உஷிடோரா மற்றும் சீபேவின் ஆட்களை பற்றியும் அவர்களுடையேயான பிரச்சனைகளையும் விரிவாக கூறுகிறான். இந்த நகரம் அமைதியுற வேண்டுமானால் இவர்களை அழிக்க வேண்டுமென முடிவெடுக்கிறான். ஆனால் அதை தனியாக செய்ய இயலுமா? என்று கோஞ்சி கேட்கிறான். அது முடியாது. நான் மட்டும் தனியாக செய்ய போவதில்லை என்று புதிய உத்திகளை சிந்திக்கிறான். 

சஞ்சிரோ பயன்படுத்தும் யுக்திகள் மிக முக்கியமானவை. இருவரையும் அழிக்க வேண்டுமானால் ஒருவரை ஒருவர் சண்டையிட செய்ய வேண்டும். இறுதியில் யார் மீதமிருக்கிளார்களோ அவர்களை தனித்தனியாக பிரித்து அழிக்க வேண்டும் என்ற உத்தியை பயன்படுத்துகிறான். ஆனால் தான் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். 

சஞ்சிரோ ஊருக்குள் வந்த பிறகு அவ்வூரை பற்றி அறிய விரும்புகிறான். அப்போது ஒருவனுடைய வெட்டப்பட்ட கையை கவ்வியபடி ஒரு நாய் ஓடி வருகிறது. இந்த இடத்தில் நாயினுடைய பிண்ணனி இசையை குறைத்து சஞ்சுரோவின் முகபாவனை மூலம் அதன் தீவிரத்தையும் அதன் பாதிப்பையும் சஞ்சுரோ உணர்வதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. 

சஞ்சிரோவை கேலி செய்த உஷிடோராவின் ஆட்களில் மூன்று பேரை மிக எளிதாக வீழ்த்துகிறான். தன்னுடைய போர் திறன் மூலம் சீபேவினுடைய குழுவில் தன்னை இணைத்துக் கொள்ள இயலும் என்ற திட்டத்தை பயன்படுத்துகிறான். சீபேவினுடைய குழுவின் தன்னை கொல்லும் திட்டத்தை சஞ்சுரோ அறிகிறான். தன்னையும் கொன்று தனக்கு வழங்கப்பட்ட பணத்தையும் எடுத்துக் கொள்வது தான் சீபேவின் திட்டம். 

ஆனால், சண்டை யானது ஆரம்பிக்கிற நிலையில் சஞ்சிரோ தனக்கு இதில் விருப்பமில்லை என விலகுகிறான். இதில் சஞ்சுரோ யார் பக்கமாவும் நின்று யாரையும் எதிர்க்க விரும்பவில்லை. மாறாக தன் விருப்பத்தின் பேரில் விலகி அவர்களின் பதற்றத்தையும் பயத்தையும் பின்வாங்கி ஓடும் கோழைத்தனத்தையும் கண்டு மகிழ்கிறான். இருவரும் மாறி மாறி சண்டையில் வேண்டுமென விரும்புகிறான். 

அவ்வூரின் அப்பாவி விவசாயியின் மனைவி மற்றும் குழந்தை உஷிடோராவின் கட்டுபாட்டில் இருப்பதை கண்டு உஷிடோராவை ஏமாற்றி அவனுடைய ஆட்கள் ஆறுபேரை கொல்கிறான். ஆனால் அக்குடும்பம் காட்டும் பரிதாபமான நன்றியை சஞ்சுரோ ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. 

உஷிடோராவின் குழுவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு துப்பாக்கியுடன் யுனசுகி வருகிறான். விவசாயி குடும்பத்தை தப்பிக்க வைத்த உண்மையை அறிந்த உஷிடோரா யுனசுகி மூலம் அவனை அடித்து துன்புறுத்துகிறான். சஞ்சுரோ தற்காப்பிற்காக சண்டையிடாததை படம் முழுவதும் காணலாம். உணவு விடுதி முதியவர் கோஞ்சியின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து செல்கிறான். 

குரோசாவினுடைய படங்களில் மறுபிறப்பை பற்றியும் பேய்களை பற்றிய காட்சிகளை காண இயலும். சுடு காட்டிற்கு வந்தபிறகு நீ பார்ப்பதற்கு உண்மையான பேயை போலவே இருக்கிறாய் என்கிறான். உடனே சஞ்சுரோ பிணம் போல கீழே சாய்கிறான். சுடுகாட்டில் விழுந்து மறுவாழ்வு கிடைத்து குணமடைகிறான். கிட்டதட்ட மறுபிறவியை அல்லது ஒரு ரோனின் இறப்பின் மீதான நிச்சயமற்ற தன்மையாகவும் இதை குறிப்பிடலாம். 

சஞ்சிரோவை தப்பிக்க வைத்ததற்காக கோஞ்சியை பிடிக்கின்றனர். யுனசுகியை வீழ்த்துவதற்கு கைவாளை காற்றில் அலைந்து கொண்டிருக்கும் இலையின் மீது எறிந்து பயிற்சி செய்கிறான். யுனசுகி தன் நம்பிக்கை முழுவதும் துப்பாக்கியின் மீதே கொண்டிருக்கிறான். சஞ்சிரோவின் ஒரு கை எப்பொழுதும் அவனுடைய வாளினை பிடித்த படியே இருக்கும். இருகைகளும் உடைக்குள் இருப்பது அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையை வெளிப்படாத வண்ணமாக கருதலாம். 

DVD: Mifune - The Last Samurai review -

கோஞ்சியினை காப்பற்ற வரும் சஞ்சிரோவின் அமைதி மற்றும் அழகியல் சிறப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிண்ணனி யில் வீசும் கடுமையான காற்று அக்கட்சியில் சஞ்சிரோவின் தீவிரத்தன்மையை காட்டுகிறது. 

இவ்வூரின் கலாச்சார தன்மையை பல்வேறு மனிதர்களின் வழியாகவும் அவர்களின் உடைகளின் வழியாகவும் காணமுடிகிறது. சவப்பெட்டி செய்யும் தொழிலாளி, சண்டைகளின் நேரத்தை ஊருக்கு அறிவிப்பவன் மற்றும் போதுமான போர் திறன் இருந்தும் ரோனின்கள் அம் மக்களால் அங்கீகரிக்கப்படாமல் அவமதிக்கபட்டு போதுமான வாழ்வாதாரம் கிடைக்காமல் இருந்து பாதிப்படையும் சீபேவின் ஆள் என பல பதிவுகளை காணலாம். 

Mifune: The Last Samurai | FARALLON FILMS

இறுதியில் இந்த நகரம் இனி அமைதியாக இருக்கும் என்று கூறி விடை பெறுகிறான். ரோனின்கள் நிலையான இடத்தை விரும்பாததும் நாடோடிகளாக இருப்பதும் காணமுடிகிறது. சஞ்சிரோ வேறொரு இடத்தை எவ்வாறு அணுகுவான் என்பது தெரியாது. அகிரா குரோசாவாவின் இயக்கம், கசுவா மியாகோவின் ஒளிப்பதிவு மற்றும் மாசரு சாடோவின் இசை நேர்த்தியான சாமுராயின் வாழ்க்கையை காண செய்வதன் மூலம் மனிதர்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. 

அகிரா குரோசாவா, "தன்னுடைய எல்லா படங்களிலும் ஒரு கருப்பொருள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் நான் எடுத்திருக்கும் ஒரே தீம் " மக்கள் ஏன் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்பதுதான் என தன்படங்களைப் பற்றி கூறுகிறார்.