ஈப்அலேஊ!- ஷோமாஎசாட்டர்ஜி

என்னைப்போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை படங்களைப்பார்ப்பதில் செலவிட்டிருந்தாலும் கூட, உங்களை ஒரு உண்மையான ஆச்சரியத்திற்கு அழைத்துச்செல்லும் படங்கள் இன்னும் உள்ளன. அந்தப்படங்கள் பல்வேறு கூறுகளிலிருந்து உருவாகலாம் - கதை தேர்வு, கதை சொல்லும் முறை, உள்ளடக்கம் மற்றும் வடிவம் அந்தக்கதையில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் பலவிஷயங்கள். ஈப்அலேஊ! அத்தகைய தொருபடம். இந்த ஜனவரியில் கொல்கத்தாவில் நடந்த ஒருதிரைப்படவிழாவில் இந்தப்படத்தை நான் பார்க்கநேரிட்டபோது, இதற்குமுன் இந்தப்படத்தைபற்றி நான் எதுவுமே கேள்விப்பட்டதில்லை. அதன் இயக்குனரான
பிரதீக்வத்ஸ் தேசியவிருது பெற்ற ஆவணப்படமான “எவெரி ஓல்ட் மேன் வித் எனார்மஸ் விங்ஸ்” (Theold man with enormous wings(2017) இல், ஒரு வயதான முன்னாள் பாடிபில்டர் மனோகரைப்பற்றிய படத்தை எடுத்துள்ளார் என்ற ஒருவிஷயத்தைத்தவிர, வேறெதையும் நான் அறிந்திருக்கவில்லை. பிரதீக் மும்பையைச்சேர்ந்த ஒரு சுயாதீனத்திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர். புனேவில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஃப்.டி.ஐ.ஐ)வில் திரைப்பட இயக்கப்பிரிவில் பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு’ஜியோமாமி மும்பை திரைப்பட விழாவில்’சிறந்த படத்திற்கான கோல்டன் கேட்வே(Golden Gatewa) விருது வென்ற ஈப்அலேஊ! இந்த ஆண்டு தொடக்கத்தில் பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது. கடந்த வாரம் ஆன்லைன் வீஆர்ஒன்: ஒரு உலகளாவிய திரைப்பட விழா (We are one: A global film festivalமுயற்சியின் ஒரு பகுதியாகவும் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் என்ற முறையில் பிரதீக், இப்படம் சார்ந்து சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இந்தப்படம் எதை பற்றியது?

பகடி என்ற போர்வைக்குள்ளிருந்து வர்க்கச்சிக்கலைப்பற்றி ஆராயமுயன்றேன். இந்தப்படம் டெல்லியில் குடியேறிய, ஒரு புலம் பெயர்ந்த இளைஞனின் மோசமான பயணத்தை பின் தொடர்ந்து செல்கிறது. அவன் குரங்கு விரட்டியாக ஒரு ஒப்பந்த வேலையைப்பெறுகிறான், அங்கு குரங்குகள் எழுப்பும் ஒலி போலவே தானும் பிரதிபலித்து, அவற்றை அங்கிருந்து விரட்டுவதே அவனுடைய வேலை. அங்கு குரங்குகள் பொதுமக்களுக்கும், உள்ளூரில் உள்ள அலுவலகங்களுக்கும் மற்றும் முக்கியமான மனிதர்களுக்கும் பெரும் தொல்லையாகவே இருக்கிறது. லாங்கர்களைப் (langurs – நீண்டவால் கொண்ட ஆசிய குரங்கு) பிடிப்பதற்குத்தடை விதித்ததிலிருந்து குரங்குகள் மிகவும் ஆக்ரோஷமாக மாறிவிட்டன. இதற்கிடையில், இந்த புலம் பெயர்ந்தவரின் பயணத்தையும் மோசமான வாழ்வாதாரச்சூழ்நிலையையும் இந்தப்படம் காட்சிப்படுத்தியுள்ளது.


இது போன்று தனித்துவமான கருத்து கொண்டபடத்தை எடுப்பதற்கு உந்துதலாக இருந்த காரணி எது?

இந்தக் கதைக்களத்திற்கு வழிவகுத்த ஒரேயொரு உந்துதல் காரணியை மட்டும் சுட்டிக்காட்ட முடியுமா? என்று தெரியவில்லை. பலகாரணிகள் உள்ளன. இது கல்வி நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்பு, மதமற்றும் தேசிய அடையாளங்களை பற்றி கூறும் ஒரு கலவை - 2015 முதல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மற்றும் கையாளும் அமைப்புகளின் கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொண்டுள்ள விஷயங்களின் உச்சம்தான் இதற்கான உந்துதல் என்று கூறலாம். என் எழுத்தாளர் சுபாம் (Shubham) மற்றும் முழு படக்குழுவினரும் நானும் சேர்ந்து, இந்தக்காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் எப்படி உருவாக்குவது என்ற விவாதத்தில், அவை நம் கதாபாத்திரங்களை எவ்வாறு வரையறுக்கின்றன அல்லது மறுவரையறை செய்கின்றன அல்லது எப்படி சமாளிக்கின்றன அல்லது இந்த சூழ்நிலைகளை சமாளிக்கவில்லை என்பதைக்காட்ட முயற்சித்தோம். நீங்கள் அவற்றை நுட்பமாக காணலாம், அவற்றை நீங்கள் யதார்த்தமாகக்காணலாம் அல்லது அவற்றை நீங்கள் சர்ரியலாகக்கூடகாணலாம், இது போன்ற செயல்பாடுகளின் வழியே தான் நாம் இப்போது பார்க்கும் முழுப்படமும் உருவானது. என்னைப்பொறுத்தவரை எனது கதாபாத்திரங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவோ அல்லது நன்குபடித்தவர்களாகவோ அல்லது என்னைப்போன்று அறிவுடனோ இருக்கவிரும்பவில்லை, அவ்வாறு செய்வதனால் உண்மையான கதாபாத்திரத்தின் சாரம் ஆழ்மனதில் இருந்து விலகிச்சென்றுவிடும். இந்த கதாபாத்திரங்கள் அன்றாடம் சந்திக்கும் மாற்றத்தையும், சவாலான சூழ்நிலைகளையும் எவ்வாறு எதிர்நோக்குகிறார்கள் என்ற அனுபவத்தையே நாங்கள் முன்வைக்க விரும்பினோம்.

ஈப்அலேஊ, ஒரு நிஜவாழ்க்கை குரங்கு- விரட்டியின் உண்மையான கதையை அடிப்படையாகக்கொண்டுள்ளது, அந்தக்கதையைப்பற்றி...

ஆம், மஹிந்தர்நாத் (Mahinder Nath)தான், படம் அடிப்படையாகக்கொண்டுள்ள உண்மை கதாபாத்திரம். இப்படத்திலும் அவர் ஒரு முக்கியமான துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லுடியன்ஸ் (புதுதில்லி நகரத்தைத்திட்டமிட்ட ஆங்கிலக்கட்டிடக்கலைஞர் சர் எட்வின் லேண்ட்சீர் லுடியன்ஸ்(1869-944)) டெல்லியின் இதயத்தில் பணத்தை வைக்கும் அவரைப் (மஹிந்திர்நாத்) பற்றிய ஒரு விநோதனமான அம்சத்தை அறிந்தேன்,. அவர் செய்து வருகிற விசித்திரமான வேலையைப்பற்றியும் நான் தெரிந்து கொண்டேன். குரங்கு விரட்டி வேலையைச்செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட 25 வழக்கத்துக்குமாறான இளைஞர்களில் மஹிந்தரும் ஒருவர். இந்த வேலைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவரும் வெறித்தனமாக வேலைத்தேடும் இளைஞர்கள், இந்த வேலைக்கான தகுதி திறமை முன்னனுபவம் எதுவும் இல்லாத போதிலும், அரசாங்க அலுவலகங்களின் சுற்றுப்புறங்களுக்குள் குரங்கு விரட்டிகளாக பணியாற்ற ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியிலமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால், இந்த வேலை எந்தவொரு பாதுகாப்பு, விடுப்பு, மருத்துவ சலுகைகள் அல்லது எந்த வொருநிரந்தரத்தையும் அவர்களுக்கு வழங்காது. அவர்கள் தாமதமாக வந்தால் அல்லது சரியாக வேலை செய்யாவிட்டால் ஒப்பந்தக்காரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். மஹிந்தர் ஒருகுறிப்பிட்ட சமூகத்தைச்சேர்ந்தவர், அங்கு அவர் குரங்குகளை, அவற்றின் இயற்கையான எதிரியான லாங்கர்களிடமிருந்து பிரித்துவைப்பதற்கான வேலையில் நீண்டகாலமாக பணியாற்றியவர். எங்கள் திரைக்கதை ஆலோசகர் சுபாம், வித்தியாசமான வேலையுடன் இந்த விசித்திரமான மனிதனின் உலகிற்குள் நுழைந்து கதவுகளைத்திறந்தார், அது எங்களுக்கான ஒரு சிறிய சாளரத்தைத்திறந்துவிட்டது போல இருந்தது, பின்னர் படத்தின் படப்பிடிப்பைத்தொடங்கும்போது அது இன்னும் பெரிதாகியது. மேலும் மெதுவாக படம் ஒருவடிவம் பெறத்தொடங்கியது. இந்தகதையை ஒரு ஆவணப்படம் அல்லது ஒரு மாக்யூமெண்ட்ரியாகத் (mockumentary) தயாரிக்கலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், நாங்கள் இதில் முழுமையாக இறங்கும் போது, அதை ஒரு எள்ளி நகையாடக்கூடிய புனைகதைத்திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தோம். அதை மிகவும் உண்மையாகப்படைத்திருக்கிறோம் அப்போது தான் அது சரியான முறையில் செயல்படும். மஹிந்தருடன் நாங்கள் அதிக நேரம் செலவிட்டோம், அவருடன் சுற்றித்திரிந்தோம், குரங்குகளின் தினசரி வாழ்க்கைச்சுழற்சியைக்அறிந்துகொண்டோம், அவை எவ்வாறு செயல்படுகின்றன, வினை புரிகின்றன, தொடர்பு கொள்கின்றன, இவையனைத்தும் அவற்றின் குணாதிசயங்களை யதார்த்தமாகப்படமாக்க உதவியது. பொறுமை அதிகமாகத்தேவைப்பட்டது ஒவ்வொருகாட்சிக்கும் அதிகமான காத்திருப்பு தேவைப்பட்டது; அது மீன் பிடித்தலைப்போன்று, அதிகமான காத்திருப்பு தேவைப்படும் ஒரு செயல். மற்றும் பல பரந்த காட்சிகளைப் (wide shots)பயன் படுத்தாமல் இருந்தோம், குரங்குகளை ஒரு ‘ஆளுமையாக’பதிவு செய்ய நாங்கள் விரும்பினோம். அதற்கேற்றவகையில் படம்பிடிக்க, அதற்குரிய லென்ஸ்களைப் பெறவிரும்பினோம்.

Figure 1langur
உங்கள் படம் எங்களுக்குக்கொஞ்சம் தெரிந்த ஒரு டெல்லியின் முற்றிலும் மாறுபட்ட சமூக-கலாச்சாரப்பார்வையை வழங்குகிறது. தவிர, உங்கள் கதாநாயகன்பீகாரில் இருந்து புலம்பெயர்ந்தவர். இவ்வாறான அடுக்குகள் உங்களுக்குப்படத்திற்கு எந்த வகையில் உதவின?

படத்திற்கு தனிப்பட்ட ஒருகோணம் உள்ளது. நானே ஒரு இரண்டாம் தலைமுறை பிஹாரியாக, டெல்லியில் குடியேறியவன். படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து சூழ்நிலையையும் நான் நன்கு அறிவேன். என் தந்தை மிகவும் இளமையாக இருந்த போது டெல்லியில் புலம் பெயர பீகாரில் இருந்து வந்தார். டெல்லிக்கு புலம் பெயர்ந்த நான், எனது முழு வளர்ச்சியும், எல்லா நேரங்களிலும் என்னை வேட்டையாடும் அது குறித்த கேள்விகளால் சிக்கலாகும். நான் இன்னும் புலம் பெயர்ந்தவனா? அல்லது நான் இப்போது டெல்லியை பூர்வீகமாகக்கொண்டுள்ளேனா? நீங்கள் வாழும் உள் உலகத்துக்கும், அங்குள்ள உலகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? இவை என்னைத் தூண்டும் கேள்விகள், பலவழிகளில், இவையனைத்தையும் எனது கதாநாயகனுடன் பொருத்தி அவரது கதையை விவரிக்க முயற்சிக்கிறேன்...

படம் இப்படியான வடிவத்தை பெற்றது எப்படி?

நாங்கள் திரைக்கதையை முழுவதுமாக வடிவைமைத்த பின்னர் படப்பிடிப்பிற்க்குச்சென்றோம். படப்பிடிப்புத்தளத்தில், டெல்லிக்கு புலம் பெயர்ந்த ஒருவரின் வாழ்க்கையையும், அவர் தனது வாழ்க்கையைப்பகிர்ந்து கொள்ளும் மக்களின் வாழ்க்கையையும் உதாரணமாக அவரது கர்ப்பிணி சகோதரி, அவரது கணவர், அவர் மீது ஈர்ப்பு கொண்டுள்ள பெண்போன்ற இன்னும் பல கதாபாத்திரங்களோடு சொல்லப்படுகிறது. காவல் துறையினரின் கேமியோக்கள், சிறைச்சாலை பற்றிய பார்வை மற்றும் படத்தின் பலமுக்கியகூறுகள், இந்தநகரத்தில் புலம்பெயர்ந்தவரின் வாழ்க்கையைக்கட்டுப்படுத்தும் சக்திகளின் செயல்களையும் இவர்களின் உயிர்களைத்துச்சமாகநடத்தும் அவர்களின் அதிகாரத்தொனியையும் ஆராய்வதை நோக்கமாகக்கொண்டோம், குறிப்பாக ஒரு சிறிய மனிதனின் உயிரைப்பிடிக்க முயற்சிக்கும் பெரிய அமைப்பு. இந்த ஆண்டில், அனாமிகா ஹக்ஸர்(Anamika Haksar) மட்டுமே தனது அதிர்ச்சியூட்டும் படமான கோட் கோ ஜலேபி கிலேன் லே ஜாரியா ஹூன் (Ghode Ko Jalebi Khilane Le Jaa Riya Hoon - 2018) படத்தில் டெல்லியை புதிய முறையில் சித்தரித்திருந்தார். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் கூறுவேன் - காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் டெல்லி அதன் ஏழைகளை உலோக மற்றும் தகரதாள்களுக்கு பின்னால் போட்டுமறைக்கமுயன்ற ஒரு மோசமான நகரம். டெல்லி அதன் புலம்பெயர்ந்தவர்களின் உழைப்பால் கட்டப்பட்ட ஒரு நகரம், ஆனால் அவர்களின் இருப்பைக்கூட ஏற்றுக்கொள்ள மன மில்லாமல் அவர்களை ஒரு அவமானமாகக்கருதுகிறது.

படம் பெரும் பாலும் பொது இடங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளது அதில் நீங்கள் சந்தித்த சவால்கள் மற்றும் அதை எவ்வாறு சமாளித்தீர்கள் ?

லுடியென்ஸிலும் அதைச்சுற்றி உள்ள இடத்திலும் படம் சுறுசுறுப்பாக படமாக்கப்பட வேண்டும், அதிகார இருக்கையில் இருப்பவர்களின் அனுமதிகள் மிக முக்கியமானவை, மேலும் எந்த ஒரு தலையீடுகளாலும் எங்கள் படப்பிடிப்பு தடுக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில், இந்த படம் சட்டரீதியான எந்த இடையூறுகளையும் சந்திக்காமல் இருக்க முயற்சி செய்தோம். வேறு சில அனுமதிகளை மீறியும் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதைத்தவிர நாங்கள் படமெடுக்கும் இடத்தையும் நேரத்தையும் கருத்தில் கொள்வது மிகவும் அவசியமாக இருந்தது , அது எங்கள் அனைவருக்கும் தலைவலியாக மாறியது. இத்தனை இடர்பாடுகளிலும் தொடர்ந்து எங்கள் படப்பிடிப்பு பணிநிகழ்ந்தது மற்றும் அதன் வழிகளைக்கேள்விக்குள்ளாக்கவும், எங்களுக்குத்தேவைப்படும்போது மேம்படுத்தவும் செய்தோம். ஆனால் நான் மீண்டும் சொல்கிறேன், எங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிகளால் மட்டுமே இதைச்செய்தோம்.

குரங்குகளுடனான படப்பிடிப்பு என்பது நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு மிகவும் சவாலாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?

நிச்சயமாக. பொது இடங்களில் நாங்கள் குரங்குகளுடன் படமெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் இது தொடர்ந்து எங்களை ஒருவித பதட்டத்துடனே வைத்திருந்தது, எப்படி படம் பிடிப்பது என்பதிலேயே நிறைய புதிய சவால்களை சந்தித்தோம், ஒருகிளையில் ஒரு குரங்கு அமர்ந்திருக்கும் இடத்தை கேமரா அடையும் நேரத்தில் அந்த குரங்கு வேறு ஒரு கிளைக்கு தாவிவிடும், ஆனால் கேமராவோ முந்தைய கிளையில் இருக்கும். பின்னர் படிப்படியாக, நாங்கள் அனைத்தையும் உள்வாங்கி, நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டாக அதைப்பார்க்கத்தொடங்கினோம், தொடர்ந்து எங்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் குரங்குகளுடன் போட்டியிட்டோம்.


படத்தின் கதாநாயகன் அஞ்சனி ஒரு குரங்குதுரத்துபவர், அந்தகதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஷார்துல் பரத்வாஜை(Shardul Bhardwaj) தேர்ந்தெடுத்தது பற்றி?

அவர் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார், ஒரு பாத்திரத்தை மட்டும் வெறுமனே ஏற்று நடித்திருக்கிறார் என்று நம்புவது கடினம்.
ஷர்துல் அடிப்படையில் நாடகக்கலைஞர் (தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்), அவர் பல ஆண்டுகளாக மேடையில் நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் எஃப்.டி.ஐ.ஐ. யில் நடத்திய ஒரு பட்டறையிலும் அவர் பங்கேற்றுள்ளார். நான் ஒரு நடிகரைத்தேடிக்கொண்டிருந்தேன், அவர் வெறும் பாதிக்கப்பட்டவனைப்போல நடிக்காமல் உண்மையில் ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் பல இன்னல்களும் பிரச்சனைகளுடன் வாழும் மனிதனின் மன நிலையை வெளிப்படுத்தும் ஒருவரை நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆரம்பத்தில்அவர்அந்தகதாபாத்திரத்தில்நடிக்கத்தொடங்கியபோதுநான்அவரைஉடல்மொழியோடுஅதிகம்இயக்கவில்லை. படத்தில் நாம் சித்தரிக்கும் அவரது கதாபாத்திரம் யதார்த்த உலகின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம் , அவர் உண்மையில் அற்புதமாக வேலை செய்திருக்கிறார். இது ஒரு நடிகராக அவரது இயற்கையான தன்மைக்கு எதிரான பண்புகளை மிகவும் கோரிய பாத்திரம். நாங்கள் தான் அதைக் கோருகிறோம் என்பதை நான் சேர்க்க வேண்டும், ஆனால் அவர் எங்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிட்டார்.

எந்தெந்த திரைப்படவிழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது?

இந்தப்படம் பிங்கியாவோ சர்வதேச திரைப்படவிழாவின் (Pingyao International Film Festival, 2019) சர்வதேசப்போட்டி பிரிவில் 2019 ஆம் ஆண்டில் விழாவின் துவக்கப்படமாக திரையிடப்பட்டது மற்றும் இந்த பிரிவில் இந்திய திரைப்படமாக இது ஒன்று மட்டுமே இருந்தது . உடனடியாக, இந்த படம் ஜியோமாமி மும்பை திரைப்படவிழாவில் அதன் இந்தியா பிரீமியருக்கு வந்தது, அங்கு கோல்டன் கேட்வேவிருது (சிறந்த இந்திய திரைப்படம்) மற்றும் இளம்விமர்சகர் விருது, படத்தின் முன்னணி நடிகருக்கான ஸ்பெஷன் மென்ஷன் (Special Mention) விருதுடன் அளிக்கப்பட்டது. மேலும், இது தர்மஷாலா சர்வதேச திரைப்படவிழாவில் துவக்கப்படமாக திரையிடப்பட்டது, பின்னர்,இதுஹாங்காங்ஆசியதிரைப்படவிழாவில்புதியதிறமைவிருதுபிரிவின்ஒருபகுதியாககாட்டப்பட்டது. பெர்லினேல் 2020 படத்தின்ஐரோப்பியபிரீமியரைக்குறித்தது. இந்த திரையிடல்கள் மற்றும் விருதுகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன, ஏனென்றால் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பார்வையாளர்களிடையே நமது படம் அங்கீகரிக்கப்பட்டுவருவதற்கான அடையாளங்கள் இவை. அதே நேரத்தில், ஒரு திரைப்படத்தயாரிப்பாளராக, படத்தின் திரையரங்கு வெளியீட்டையும் செய்யநான் நம்புகிறேன், அதுவே இந்த படம் பரந்த பார்வையாளர்களைச்சென்றடைய உதவும்.

கடைசியாக ஒரு கேள்வி, எப்படி அல்லது ஏன் இது போன்ற ஒரு புதிரான தலைப்பை வைத்தீர்கள்?

இந்த விசித்திரமான தலைப்புக்கு முன் எங்களுக்கு வேறு ஒருதலைப்பு இருந்தது, அதுசரியாக பொருந்தும் என்றும் நம்பினோம். ஆனால் இந்த விசித்திரமான தலைப்பு உங்களுக்கு அபத்தமானதாகவும், முட்டாள் தனமாகவும் தோன்றினால் அதுகதைக்கு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும், நீங்கள் படத்தை உன்னிப்பாகப்பார்த்தால் படத்தின் கதை மற்றும் கதாநாயகன் முட்டாள் தனமாகவும், அபத்தமாகவும் தோன்றுவார்கள். அது வேகதை யின் உண்மையான சாரம், இது அதனுடைய சர்ரியலிஸ்டிக் தன்மையையும் கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில், எனது முழு குழுவும் படத்தின் இந்த தலைப்பு படத்தினுடைய உணர்வை வெளிப்படுத்துகிறது என்று நம்பினோம். இதன் பொருள் என்ன என்பதை ஒருவர் அறிய கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.